கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (12.08.2021) முதல் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி குறித்த அறிவுரைகள்(ICT Training - Instructions to Hi-Tech Lab Incharge and PG Assistants)...



>>> இன்று (12.08.2021) முதல் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி குறித்த அறிவுரைகள்...



கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 11-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில் 11-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 3 - அறிவியல் தொழில்நுட்பம் - நோயும் மருந்தும் - https://youtu.be/YV_znSrhH-s



 💥 ஆங்கிலம் - Unit 3 - Supplementary –The Three Questions - https://youtu.be/mHmDleRoaJA



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - இரு எண்களுக்கு இடையேயுள்ள விகிதமுறு எண்களைக் காணுதல் - பகுதி 2 -  https://youtu.be/b7Vuc0BVP60



💥 அறிவியல் - அலகு 2 - இயற்பியல் - விசையும் அழுத்தமும் - பரப்பு இழுவிசை, பாகியல் விசை, உராய்வு - https://youtu.be/rWt01uvo_6c



💥 சமூக அறிவியல் - அலகு 2 - வரலாறு - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை - பாகம் 4 -  https://youtu.be/gd4fQ9HuLiI


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 11-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard) கணக்கு பாடக் காணொளிகள்(Maths Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 11-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு கணக்கு(Mathematics) பாடக் காணொளிகள்...



💥 ஆறாம் வகுப்பு - அலகு 3 – விகிதம் மற்றும் விகிதசமம் - பகுதி 3 -  https://youtu.be/4b9YMkbyCVQ?t=4908



💥 ஏழாம் வகுப்பு -  அலகு 1 – எண்ணியல் - இரு முழுக்களின் பெருக்கல், வகுத்தல் - https://youtu.be/Vxd_oICsffM?t=1934



கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 11-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு (I -V Standard) வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்(Maths Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 11-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கணக்கு(Mathematics) பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - அலகு 2 – எண்கள் - பகுதி 1 - https://youtu.be/pCTP_NlsVRc



💥 இரண்டாம் வகுப்பு - அலகு 3 – அமைப்புகள் - பகுதி 3 - https://youtu.be/_ySPTRSAX-Y



💥 மூன்றாம் வகுப்பு - அலகு 3 – அமைப்புகள் - https://youtu.be/dJVVjYUTvT4



💥 நான்காம் வகுப்பு - அலகு 4 – அளவைகள் - நீளம் - https://youtu.be/0ZqDqc-WTkg



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 2 – எண்கள் - கூட்டல், கழித்தல் மற்றும் பெருக்கல் - https://youtu.be/dJVVjYUTvT4?t=3280



தமிழ்நாடு முதல்வருக்கு ஜாக்டோ ஜியோவின் 14 கோரிக்கைகள்(JACTTO GEO demands to Tamilnadu CM)...

 




ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் :


* 1.4.2003 க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு , பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.


* இழந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காக கடந்த செப்டம்பர் 2017 , ஜனவரி 2019 ஆகிய காலங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்ட காலங்களை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக , முந்தைய ஆட்சியாளர்களால் பழிவாங்கும் நடவடிக்கையாக பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களை மீண்டும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய பணியிடத்திலேயே பணியமர்த்திட வேண்டும்.


* கடந்த ஜாக்டோ - ஜியோ போராட்டக் காலத்தில் , ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்கள் மீது காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகள் இதுநாள்வரை இரத்து செய்யப்படாததால் , விருப்ப ஓய்வு மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கு மிகப் பெரும் தடையாக உள்ளது. காவல் துறையால் புனையப்பட்ட பொய் வழக்குகளை உடனடியாக இரத்து செய்திட வேண்டும். 


* கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் கடந்த அதிமுக அரசு மூன்று தவணை அகவிலைப்படியினை முடக்கியது. தற்போது ஒன்றிய அரசு அதன் ஊழியர்களுக்கு ஜூலை 2021 முதல் 11 விழுக்காடு அகவிலைப்படியினை அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படியினை தமிழக அரசு உடனடியாக ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும்.


*  கொரோனா நோய்த் தொற்றினைக் காரணம் காட்டி , சரண் விடுப்பினையும் கடந்த ஆட்சியாளர்கள் இரத்து செய்துள்ளனர். சரண் விடுப்புச் சலுகையினையும் உடனடியாக வழங்க வேண்டும். 


* இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.


* முதுநிலை ஆசிரியர்கள் , அனைத்து ஆசிரியர்கள் , அரசுப் பணியாளர்கள் , கண்காணிப்பாளர்கள் , தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் , களப் பணியாளர்கள் , பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் , ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். 


* கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு ( CAS ) உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.


* சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு , அங்கன்வாடி , வருவாய் கிராம உதவியாளர்கள் , ஊராட்சி செயலாளர்கள் , ஊர்ப்புற நுாலகர்கள் , MRB செவிலியர்கள் , கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் , தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள் , செவிலியர்கள் , பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.


* 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.


*  2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள்முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும்.


* அரசாணை எண் 56 ல் இளைஞர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கின்ற வகையில் பகுப்பாய்வு குழு அமைக்கப்பட்டு , அக்குழு அரசிடம் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மேலும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் 100 மற்றும் 101 ஐ இரத்து செய்திட வேண்டும். 


* 5000 அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை உடனடியாகக் கைவிட்டு , சமூக நீதியினைப் பாதுகாத்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* 3500 அரசு தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும் 3500 சத்துணவு மையங்களை மூடுவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.


* அங்கன்வாடி மையங்களில் LKG / UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை இரத்து செய்ய வேண்டும்.


* பள்ளிக்கல்வித் துறை இயக்குநராக பணியேற்கும் அலுவலர் அரசுப் பணியில் ஆசிரியர் / மாவட்டக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் / இணை இயக்குநர் ஆகிய நிலைகளில் பணியாற்றி , கல்வித் துறையில் அனுபவ முதிர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இயக்குநராக நியமிக்கும் நடைமுறையானது கடந்த 150 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு , இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே , இதனை மாற்றி மீண்டும் பணிமூப்பு - கல்வித் துறையில் பெற்ற கள அனுபவ அடிப்படையின் வரும் அலுவலரையே பள்ளிக்கல்வி இயக்குநராக பணியமர்த்த வேண்டும்.


>>> Click here to Download JACTTO-GEO Letter to Tamilnadu Chief Minister...



EMIS Portal - Teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் (Vaccination details update) பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள்...



 தற்போது EMIS Portal  teachers login ல் தடுப்பூசி போட்ட விபரம் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.


✳️அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய பயனர் பெயர் (User name) மற்றும் கடவுச்சொல்லைப் ( Password ) பயன்படுத்தி எமிஸ் வலைத்தளத்தைத் திறந்து தடுப்பூசி போட்ட ( Covid vaccination details ) விவரங்களை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Vaccination details update செய்யும் வழிமுறைகள்:


✳️ Go to Emis Web site.

EMIS login>ஆசிரியர் தங்களுடைய username / Password>dashboard ல் > My profile ஐ கிளிக் செய்யவும். அவற்றில் தோன்றும் vaccination details பதிவு செய்து Save கொடுக்கவும்.


✳️அனைவரும் இப்பணியை விரைந்து முடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


செப்டம்பர் 1ந் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்...

 *செப்டம்பர் 1ந் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


*பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு முதற்கட்டமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


*முதற்கட்டமாக ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்களை சுழற்சி முறையில் வரவழைத்து பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...