கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை(Govt Polytechnic Lecturers Vacancies ) நிரப்புவதற்கான தேர்வு தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB ) அறிவிப்பு...

 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1,098 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அக்டோபர் 28,29 & 30 தேதிகளில் நடைபெறும்.


- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...








2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு? (Chance to Renew Employment Office Registration ) - அமைச்சர் அறிவிப்பு...



 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் கணேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2017, 2018, 2019ஆம் ஆண்டு ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாபெரும் ஒரு வாய்ப்பை உருவாக்கியும் தந்தார் எனவும், அந்த பதிவை புதுப்பித்துக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுளளது எனவும் தெதெரிவித்தார்‌.


மேலும் 2014, 2015 ,2016 ஆம் ஆண்டு களுக்கும் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க ஏராளமான இளைஞர்கள் தவறியுள்ளார்கள் என்றும் உறுப்பினரின் சேர்க்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.


பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டு, புதிய அட்டவணை வெளியீடு(Tamilnadu Engineering Admission - 2021 Schedule)...

பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது...


அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கும், கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஆண்டு, 13 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். அதாவது, 1.75 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 1.45 லட்சம் பேர் மட்டும் கட்டணம் செலுத்தியுள்ளனர்.


இவர்களுக்கு, நாளை மறுதினம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 7ம் தேதி கவுன்சிலிங் துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.இந்த தேதியில், நேற்று மாற்றம் செய்யப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய அட்டவணைப்படி, வரும், 14ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 17ம் தேதி முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கை நடக்கிறது.


பின், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கும் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 24ம் தேதி வரை இந்த ஒதுக்கீடு நடக்கிறது.பின், பொது பாடப்பிரிவு மற்றும் தொழில்கல்வி மாணவர்களுக்கு, 27ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. பொது பிரிவுக்கு, அக்., 17; தொழில்கல்விக்கு அக்., 5ல் கவுன்சிலிங் முடிகிறது.அக்., 19 முதல், 23 வரை துணை கவுன்சிலிங்கும்; அக்., 24 மற்றும் 25ம் தேதிகளில், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் பிரிவு ஒதுக்கீடும் நடக்கிறது. அக்., 25ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிகிறது.




கல்விக் கட்டண நிர்ணயம்(School Fees Fixation) - பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம்...



 கல்விக் கட்டணம் தொடர்பாக, தனியார் பள்ளிகள் விண்ணப்பங்களை அனுப்ப, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, சுயநிதி பள்ளிகள் கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், கல்விக் கட்டணம் தொடர்பாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது.


இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் எழுந்த கோரிக்கையை தொடர்ந்து, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி, கல்விக் கட்டண கமிட்டி தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த 9 மாதங்களாக இல்லாத அளவிற்கு சரிந்த ஜூம் செயலியின்(Zoom App) பங்குகள்...



 கொரோனா காலத்தில் ஊழியர்களை ஒருங்கிணைக்க முக்கிய பங்காற்றிய ஜூம் செயலியின் பங்குகள் வெகுவாக சரிந்துள்ளன.


கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் என்பதால் பெரிய  நிறுவனங்கள் ஊழியர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி, வீட்டில் இருந்து பணிபுரிய வைத்தன.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து பணிபுரிய ஆரம்பித்தனர். வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்கள் அலுவலக மானேஜர், அதிகாரிகளுடன் மீட்டிங்  கலந்து கொள்ள ஜூம், கூகுள் மீட், மைக்ரோசாப்ட் டீம்ஸ், ஸ்லாக் போன்ற வீடியோ கம்யூனிகேசன் செயலிகள் பெரிதும் உதவின.


இதனால் ஜூம் உலகளவில் லட்சக்கணக்கான பயனாளர்களை பெற்றது. ஆகவே பங்கு சந்தையில் ஜூம் செயலியின் பங்குகள் மளமளவென உயர்ந்தன. நடப்பு காலாண்டு நிதியாண்டில் ஜூம் செயலின் வருமானம் 1.015 பில்லியன் டாலரில் இருந்து 1.020 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் 31 சதவீதம் அதிகமாகும்.


ஆனால், நேற்று பங்கு சந்தையில் இதன் பங்கு கடந்த 9 மாதங்களாக இல்லாத அளவிற்கு மிக மோசமாக சரிந்துள்ளது. ஒரு பங்கின் விலை 289.50 டாலராக முடிவடைந்துள்ளது.


கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்த ஜூம் செயலின் பங்கு அக்டோபரில் 175 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது அதில் இருந்து பாதியாக குறைந்துள்ளது.


இதற்கு காரணம் பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகத்தில் வந்து வேலை செய்ய தங்களது ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளன. இதனால் ஜூம் மீட்டிங் தேவைப்படாது. ஆகவே, பங்குகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.


இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் சென்றால்தான் ஜூம் செயலின் உண்மையான மதிப்பு தெரிய வரும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தனது மதிப்பை உயர்த்த ஜூம் செயலி நிறுவனம் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


School Calendar - September 2021 Diary...



School Calendar - September 2021 Diary


TENTATIVE


👉🏼1.9.2021 புதன்கிழமை


உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு


👉🏼4.9.2021-சனிக்கிழமை


BEO குறைதீர் கூட்டம் நாள்


👉🏼5.9.2021-ஞாயிறு 


ஆசிரியர் தினம்


டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்


👉🏼 10.9.2021- வெள்ளி


விநாயகர் சதுர்த்தி- அரசு விடுமுறை


சாம உபாகர்மா - RL 


👉🏼ICT TRAINING FOR PRIMARY / MIDDLE SCHOOL TEACHERS - 06.09.2021 TO 11.09.2021 


👉🏼இந்த மாதம் செலுத்த வேண்டிய தொழில் வரி ரூ.1,250/-


குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No.198, Dated; 01-09-2021) வெளியீடு...



 குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை (G.O.Ms.No.198, Dated; 01-09-2021) வெளியீடு...


GROUP INSURANCE SCHEME - Group Insurance Scheme for employees of  Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education  Institutions including employees working under Nutritious Meal Programme,  Panchayat Assistant /part time clerks and other part-time employees like  Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing Consolidated  pay / honorarium -Enhancement of lumpsum payment from Rs.3,00,000/- to Rs.5,00,000/- Orders - Issued.


>>> Click here to Download G.O.Ms.No.198, Dated; 01-09-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...