கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளிகளில் மாணவ மாணவியர் நலன் கருதி தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டியவை குறித்து கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள்(Additional SOP - Headmasters should follow for the Safety of students in schools - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்:07-09-2021...
TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...
TPF / GPF ACCOUNT SLIP DOWNLOAD செய்யும் வழிமுறை...
வலைதள முகவரி:
http://www.agae.tn.nic.in/onlinegpf/
Username : TPF Number
Suffix : PTPF
Date of Birth : DD/MM/YYYY
மேற்கண்ட linkஐப் பயன்படுத்தி 2014-15 , 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20, 2020-21 வருடங்களுக்கான TPF A/C Slip னை download செய்து கொள்ளலாம்.
தற்போதைய முறையில் பதிவு செய்யப்பட்ட Mobile Number க்கு 4 இலக்க OTP வருவதால் அவ்வெண்ணினை பதிவு செய்வதன் மூலமாகவே Account Slip Download செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
யாருக்கேனும் பதிவு செய்த Mobile Number இல்லாத பட்சத்தில் AG office னை 044- 24324500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் TPF Number, மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய Mobile Numberஐ அலுவலக வேலை நேரத்தில்(10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்.
அடிப்படை கணினி பயிற்சி(Basic ICT Training) 4ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்(Samagra Shiksha SPD Proceeding) ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 08-09-2021...
அடிப்படை கணினி பயிற்சி(Basic ICT Training) 4ஆம் கட்டமாக 14.09.2021 முதல் 20.09.2021 வரை 5 நாட்கள் நடைபெறுதல் - இதுவரை பயிற்சியில் பங்கேற்காத தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 6,7 மற்றும் 8ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் நடைபெறும் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்(Samagra Shiksha SPD Proceeding) ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்: 08-09-2021...
கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி(First Graduate) என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி(First Generation Graduate) என்று நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு...
கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் பயன்பெற முதல் பட்டதாரி(First Graduate) என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை பட்டதாரி(First Generation Graduate) என்று நிபந்தனையில் மாற்றம் செய்யப்படும் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு...
பாடப் புத்தகங்கள், மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் முதல்வரின் படங்களைப் பயன்படுத்தக்கூடாது - உயா்நீதிமன்றம் உத்தரவு...
பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்வரின் படங்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயா் நீதிமன்றம், எதிா்காலத்தில் இந்த விஷயத்தில் அரசு அதீத கவனம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவா் ஓவியம் ரஞ்சன் என்பவா் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்க வேண்டும்.
இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கக்கூடாது. எனவே, ஏற்கெனவே அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது. அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிா்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவா்களின் படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.
இவ்வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், ஏற்கெனவே செலவழித்த பணத்தை வீணாக்காத வகையில், முந்தைய முதல்வா்கள் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் மாணவா்களுக்கு அந்த புத்தகங்கள் தீா்ந்துபோகும் வரை தொடா்ந்து பயன்படுத்தப்படும்.
எதிா்காலத்தில் இதுபோன்ற பாடப் புத்தக பைகளில், தனது புகைப்படங்கள் வெளியிடப்படுவதை முதல்வா் விரும்பவில்லை என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வாக்களிக்கும் உரிமை இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பைகளில் முதல்வா்கள் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. எந்தவொரு அரசியல்வாதியும் தனிப்பட்ட நலன்களுக்காக, பொது நிதியை தவறாகப் பயன்படுத்த முடியாது. எதிா் காலத்தில் இதுபோன்ற நடைமுறை தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
விளம்பரப் பதாகைகள், பிற பொருட்களில் அரசியல் தலைவா்களின் விளம்பர நோக்கங்களுக்காக பொது நிதி செலவழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தீவிர அக்கறையும், எச்சரிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வேண்டியதில்லை.
இருப்பினும், முதல்வரின் புகைப்படங்கள் செய்தித்தாள்கள், விளம்பரப் பதாகைகள், விளம்பரங்களில் இடம்பெறலாம். ஆனால் பாட புத்தகங்கள், எந்த கல்வி சாா்ந்த பொருட்களிலும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவில் குறிப்பிட்டனா்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Magizh Mutram - House System Handbook Manual - Tamil Nadu Government School Education Department Released
மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...