கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

“செயற்கைக்கோள் வழி இணையம் - ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியர்கள் முன்பதிவு செய்ய வேண்டாம்” - மத்திய அரசு...

 “செயற்கைக்கோள் வழி இணையம் - ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்தியர்கள் முன்பதிவு செய்ய வேண்டாம்” - .மத்திய அரசு...


உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தின் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய இணைப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


இந்தநிலையில், இணைய இணைப்பின் பீட்டா வெர்ஷன் சேவையைப் பெற முன்பதிவு செய்யலாம் என ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச்சூழலில் இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.



இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமாக இணையச் சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங் உரிமம் வாங்கவில்லை எனவும், செயற்கைக்கோள் மூலமான தகவல் தொடர்பு சேவைகளை வழங்க, இந்திய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு இணங்குமாறும், அதுபோன்ற சேவைகளைத் தருவதையும் அதற்காக முன்பதிவு செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறும் அந்த நிறுவனத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


எனவே இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங் சேவைக்கு முன்பதிவு செய்யவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ள 2774 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம் (மாவட்டம் & பாடம் வாரியாக) - (Details of 2774 Post Graduate Teacher Vacancies to be filled temporarily by the Parent Teacher Association in Government Higher Secondary Schools - District & Subject wise Vacancies)...



>>> அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ள 2774 முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம் (மாவட்டம் & பாடம் வாரியாக) - (Details of 2774 Post Graduate Teacher Vacancies to be filled temporarily by the Parent Teacher Association in Government Higher Secondary Schools - District & Subject wise Vacancies)...

பணிவரன்முறை, தகுதிகாண்பருவம், தேர்வுநிலை, சிறப்புநிலை கோரும் விண்ணப்பப்படிவங்கள் (மாதிரி) & இணைக்கப்படவேண்டியவை (Regularisation, Probation, Selection Grade, Special Grade - Application Forms (Sample) & Attachments to be attached)...



>>> பணிவரன்முறை, தகுதிகாண்பருவம், தேர்வுநிலை, சிறப்புநிலை கோரும் விண்ணப்பப்படிவங்கள் (மாதிரி) & இணைக்கப்படவேண்டியவை (Regularisation, Probation, Selection Grade, Special Grade - Application Forms (Sample) & Attachments to be attached)...


சென்னை IITயில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப்படுவதை உறுதி செய்யுமாறு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம்(Letter from the Minister of Higher Education Thiru.Ponmudy to ensure that "Tamilthai Vazhthu" is sung at all events including the Graduation Ceremony at IIT Chennai from now on)...

 சென்னை IITயில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் அனுப்பியுள்ளார்.



சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:1219, நாள்: 27-11-2021 (Rs.5,000 reward for hospitalization of road accident victims - Announcement by the Ministry of Road Transport and Highways - Tamilnadu Government Press Release No: 1219, Date: 27-11-2021)...



>>> சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 பரிசு - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்:1219, நாள்: 27-11-2021 (Rs.5,000 reward for hospitalization of road accident victims - Announcement by the Ministry of Road Transport and Highways - Tamilnadu Government Press Release No: 1219, Date: 27-11-2021)...

GPF Missing Credit - 2015-16 ஆம் நிதியாண்டு முடிய 11547 சந்தாதாரர்களின் 50549 சந்தா தொகை (Missing Credit) விடுபட்டுள்ளது - உரிய நடவடிக்கைகளை DDO மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:001068/எச்/இ3/2021, நாள்: 18-11-2021...



>>> GPF Missing Credit - 2015-16 ஆம் நிதியாண்டு முடிய 11547 சந்தாதாரர்களின் 50549 சந்தா தொகை (Missing Credit) விடுபட்டுள்ளது - உரிய நடவடிக்கைகளை DDO மேற்கொள்ளுதல் குறித்த பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:001068/எச்/இ3/2021, நாள்: 18-11-2021...

இன்றைய (28-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 28, 2021




குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மனம் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் உற்சாகம் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



அஸ்வினி : கலகலப்பான நாள்.


பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.


கிருத்திகை : உற்சாகம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 28, 2021




எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். காலதாமதமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கிருத்திகை : இழுபறியான நாள். 


ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். 

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 28, 2021




பிறமொழி பேசும் மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் கற்பனை திறன் வெளிப்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : அனுகூலமான நாள். 


திருவாதிரை :  ஈடுபாடு அதிகரிக்கும். 


புனர்பூசம் : புதுமையான நாள். 

---------------------------------------





கடகம்

நவம்பர் 28, 2021




தொழில் வளர்ச்சிக்கான எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். மனதிற்குப் பிடித்த விதத்தில் வீட்டை மாற்றி அமைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நட்பு வட்டம் விரிவடையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



புனர்பூசம் : ஒத்துழைப்பு மேம்படும்.


பூசம் : சேமிப்புகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 28, 2021




உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். வியாபாரம் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் செல்வாக்கு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


 

மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


உத்திரம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 28, 2021




குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கல்வி பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். பேசும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். நிம்மதியான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



உத்திரம் : ஆதரவு கிடைக்கும். 


அஸ்தம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 28, 2021




எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உண்மை நிலையை அறிந்து சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : திறமைகள் வெளிப்படும்.


சுவாதி : நெருக்கடிகள் குறையும். 


விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 28, 2021




கலை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். விதவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். புதுவிதமான பயணங்கள் சாதகமாக அமையும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் மந்தத்தன்மை ஏற்படும். தெய்வீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்குகள் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



விசாகம் : முன்னேற்றமான நாள். 


அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------






தனுசு

நவம்பர் 28, 2021




கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் திருப்தி ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். திருப்பணி சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மின்சாரம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். நன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : நெருக்கம் அதிகரிக்கும். 


பூராடம் : நம்பிக்கை மேம்படும்.


உத்திராடம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 28, 2021




சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படுதல் நல்லது. கலை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும். 


திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும். 


அவிட்டம் : கவனம் வேண்டும். 

---------------------------------------





கும்பம்

நவம்பர் 28, 2021




உறவினர்களின் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரட்டாதி : தடைகள் விலகும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 28, 2021




வாழ்க்கைத்துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இளைய சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். பதற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



பூரட்டாதி : புதுமையான நாள். 


உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும். 


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

    திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வச...