கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN_ EMIS APP- ல் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்...



TN_ EMIS  APP- ல் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்...


📍 TN_ EMIS  APP- ல் மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வது கட்டாயமாகும் என்பதை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நன்கு அறிவர் .


📍பதிவுகளை Offline- லும்  செய்ய இயலும் . Network  செழுமையான இடங்களில் பதிவுகள் உடனடியாக server  சென்றடைகிறது. அதற்கான Acknowledgement- தான் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட வகுப்புகள் பச்சை நிறத்தில் மாறுவது. அவ்வாறு பச்சை நிறம் வராமல், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிட்டால் , நம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆனால் serverரை சென்றடையவில்லை என்று அர்த்தமாகும். server- ரை சென்றடைவதில்  உள்ள இடர்பாடுகளில் ஒன்று பள்ளி அமைவிடத்தில் எந்த ஒரு Network  வலுவுடன் இல்லாமல் இருப்பது. 


📍இரண்டாவது கைபேசியில் உள்ள ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட பழைய கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவை பதிவுகளை உடனடியாக வெளிச்செல்ல முடியாதபடி தடுத்தல். இந்த சிக்கல் கைபேசியின் இயக்க நினைவாற்றலை (RANDOM  ACCESS  MEMORY) பொறுத்தது. 


📍 பதிவுகள் server சென்றடைந்தாலும், அறிக்கை பகுதிக்கு (REPORT  MODULE ) ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறைதான் பதிவுகள் சென்றடைவதால்', ஒரு மணி நேர இடைவெளியில் server-ரை சென்றடைந்த  பதிவுகள் அடுத்த ஒரு மணி நேரம் வரை அறிக்கையில் இடம்பெறுவதில்லை. இது பள்ளிகளிடையே     நிறைவின்மை ஏற்படுத்துகிறது.


📍01.12.2021 அன்று நடைபெற்ற மதிப்புமிகு ஆணையர் அவர்களின் கூட்டத்திலும் ,இன்று 13.12.2021 நடைபெற்ற  மரியாதைக்குரிய மாநில திட்ட இயக்குநர் அவர்களின்  ஆய்வு கூட்டத்திலும்  வருகை பதிவை ஒவ்வொரு நாளும் நூறு சதவிகிதம் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் :


🎯அந்நாளைய பதிவுகள் மறுநாள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.


🎯எனவே server-க்கு பதிவுகள் சென்றடைவதில்  ஏற்படும் காலதாமத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் மாலைக்குள் SYNC செய்துகொள்ளவேண்டும்.


🎯 *மாலை வரை SYNC  செய்ய அனுமதிக்கப்படுவதால் ,பதிவை மாலையில் மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை.*


🎯 காலையில் வகுப்புகள் துவங்கும்போதே பதிவுகளை ONLINE/OFFLINE இல் முடித்துவிடவேண்டும் .


🎯 *எனவே பதிவேற்றம் செய்யும்போதே பதிவு செய்யும் நேரமும்(PUNCHING  TIME ) பதிவாகும் என்பது முக்கிமானது.* 


🎯தகவல் எந்த நேரத்தில் server சென்றடைந்தாலும் PUNCHING TIME மாறாது.


 🎯தொழில்நுட்ப காரணங்களால் தகவல் சர்வரை அடைவதில்  ஏற்படும் காலதாமதம் புரிந்துகொள்ளப்படும்.   


🎯ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு பெறப்படும் அறிக்கை மறுநாள் சார்ந்த அலுவலர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். 


🎯எனவே அனைத்து பள்ளிகளும் NETWORK ISSUE வை காரணம் காட்டாமல் அன்றய சரியான பதிவுகளை  மேற்கொண்டு 100% ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 District Team,

TIRUPPUR

ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் - (Adi Dravidar Welfare Schools - 2021-2022 Academic Year - General Transfer Counselling Norms for Teachers / Wardens Working in ADW Schools and Hostels - G.O.) அரசாணை (ப) எண்: 162, 16-11-2021 வெளியீடு...



>>> ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு 2021-2022ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு - கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் - (Adi Dravidar Welfare Schools - 2021-2022 Academic Year - General Transfer Counselling Norms for Teachers / Wardens Working in ADW Schools and Hostels   - G.O.) அரசாணை (ப) எண்: 162, 16-11-2021 வெளியீடு...

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி வெளியீடு (Polytechnic Lecturer Exam Question Paper Download - Press Release)...



>>> TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி வெளியீடு (Polytechnic Lecturer Exam Question Paper  Download - Press Release)...

பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்த வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Vellore Chief Educational Officer on the Duties of Physical Education Teachers and Physical Education Directors in schools and the records to be maintained by them) ந.க.எண்: 3226/அ5/2020, நாள்: 13-12-2021...



 >>> பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களின் பணிகள் மற்றும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் குறித்த வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Vellore Chief Educational Officer on the Duties of Physical Education Teachers and Physical Education Directors in schools and the records to be maintained by them) ந.க.எண்: 3226/அ5/2020, நாள்: 13-12-2021...



Safety & Security at school - Flex Board சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் புதிய செயல்முறைகள் - நாள் -13.12.2021...

 


>>> Safety & Security at school - Flex Board சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் புதிய செயல்முறைகள் - நாள் -13.12.2021...


03-01-2022 முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இல்லை - கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (No Shift system for 6th to 12th class students from 03-01-2022 - Corona Prevention Controls Extension till 31-12-2021 - Government of Tamil Nadu Press Release) எண்: 1336 , நாள்: 13-12-2021...

 



03-01-2022 முதல் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறை இல்லை - கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (No Shift system for 6th to 12th class students from 03-01-2022 - Corona Prevention Controls Extension till 31-12-2021 - Government of Tamil Nadu Press Release) எண்: 1336 , நாள்: 13-12-2021...


>>> முதல்வர் அறிக்கை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1336 , நாள்: 13-12-2021...




தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு:


சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.


கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. 


ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். 


அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.


அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.


தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாக பல மாதங்களாக பள்ளிகளுக்கு செல்லாததனால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் ( 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மட்டும் ) , அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.


அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும். 


அனைத்து கடைகளும் , குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு . கடைகளில் , சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது. 


கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது , ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் .

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-12-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.12.21

  திருக்குறள் :


பால்: பொருட்பால் 


இயல் :அமைச்சியல் 


அதிகாரம்: வினைச்செயல்வகை 


குறள் எண்:677


குறள்: செய்வினை செய்வான் செயல்முறை அல்வினை 

உள்ளறிவான் உள்ளம் கொளல் .


பொருள்: ஒரு செயலில் வெற்றி அடைய விரும்புகிறவன், முன்னரே அது போன்ற செயல்களில் ஈடுபட்டு அனுபவம் பெற்றவரின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும்.


பழமொழி :

If you give an inch he will take all


இடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்



இரண்டொழுக்க பண்புகள் :


1. பொய்யுரைத்தால் புகழும் கெடும் எனவே ஒரு போதும் பொய் கூற மாட்டேன்.


2. சோம்பினால் வளர்ச்சி கெடும் எனவே எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முயல்வேன்.


பொன்மொழி :


கடினமாக உழைத்தவர்கள்

எல்லாம் முன்னேறி விடவில்லை.

கவனமாகவும் நம்பிக்கையுடனும்

உழைத்தவர்களே வாழ்க்கையில்

முன்னேறி உள்ளனர்._____ அப்துல் கலாம்


பொது அறிவு :


1. இரத்தம் உறைதலை தடுக்கும் புரதம் எது? 


ஹிபேரின். 


2. இரத்த சுழற்சியை கண்டறிந்தவர் யார்? 


வில்லியம் ஹார்வி.


English words & meanings :



Go along with - agree with something, சிலரோடு சில காரியங்கள் செய்ய ஒத்துக் கொள்வது, 


Fourth Estate - the media and news papers .


ஆரோக்ய வாழ்வு :


பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது. சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். ஜீரணசக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.



கணினி யுகம் :


Alt+0162 - ¢  (Cent symbol) 


 Alt+0163 - £  (British Pound currency)



நீதிக்கதை



கீரிப்பிள்ளை


தேவப்பட்டினம் என்றொரு கிராமத்தில் மாரப்பன் என்றொரு குயவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். பல வருடங்களாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. 


அதனால் ஒரு கீரிப்பிள்ளையை எடுத்து தன் குழந்தையைப் போல் வளர்த்து வந்தனர். ஒரு நாள் குயவனின் மனைவி சுந்தரி கருவுற்றாள். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். 


வெகுகாலம் கழித்து பிறந்த முதல் குழந்தை என்பதால் அக்குழந்தை வெகு செல்லமாக வளர்க்கப்பட்டது. 


ஒருநாள் தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு சுந்தரி குளக்கரைக்குச் சென்றாள். செல்லும் முன் தன் கணவனிடம் குழந்தை தூங்குகிறது அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தையைக் கீரி கடித்துவிடப் போகிறது என்று கூறிவிட்டுச் சென்றாள். 


குயவனுக்கு திடீர் தாகம் ஏற்பட தண்ணீர் அருந்த சமையலறைக்குள் நுழைந்தான். அந்த நேரம் பார்த்து ஒரு கரு நாகம் வந்து குழந்தையின் தொட்டிலின்மேல் ஏற ஆரம்பித்தது. அதைப் பார்த்தக் கீரிப்பிள்ளை அப்பாம்பைத் துண்டு துண்டாகக் கடித்துக் குதறிவிட்டது. 


தண்ணீர் குடத்துடன் வந்த சுந்தரி கீரியின் வாயெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து பதறிப்போனாள். அய்யோ! நம் குழந்தையை கீரிப்பிள்ளை கடித்து விட்டது என்று தவறாக நினைத்து ஆத்திரத்தில் சுந்தரி அக்கீரியின் மேல் நீர்க்குடத்தை தூக்கிப் போட்டாள். 


கீரிப்பிள்ளை அதே இடத்தில் வலி தாங்காமல் செத்தது. சுந்தரி தன் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ என்ற பதற்றத்தில் உள்ளே ஓடிச்சென்றுப் பார்த்தாள். 


குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்தது. பிறகு என்ன நடந்திருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி. தரையில் பாம்பின் உடல் பல துண்டுகளாக சிதறி இருந்தன. அவளுக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. 


அடடா! பாம்பைக் கொன்றுவிட்டு இரத்தத்துடன் இருந்த கீரிப்பிள்ளையைப் பார்த்துக் குழந்தையைத்தான் கடித்து விட்டதோ என்று தவறாக எண்ணி விட்டேனே. அருமையாக வளர்த்த கீரியைக் அவசரப்பட்டுக் கொன்று விட்டேனே! என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். 


சிறுகணநேரத்தில் நடந்து முடிந்து விட்ட இந்த நிகழ்ச்சிகளை கேட்டு அறிந்துக் கொண்ட குயவன் தனது மனைவியை சமாதானப்படுத்தினான். 


நீதி :

பதறிய காரியம் சிதறும்


இன்றைய செய்திகள்


14.12.21


★ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி அரசுப்பள்ளி மாணவி கு.முனீஸ்வரி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழனின் இலங்கை நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.


★ஜனவரி 5-ம் தேதி சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடைபெற உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.


★உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தாமதம்.


★பாரதியார் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி: ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு.


★63 நாடுகளில் ஒமைக்ரான்: டெல்டாவைவிட வேகமாகப் பரவுகிறது; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.


★ஆசிய துடுப்பு படகு சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கம்.


★ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: முதல் போட்டியில் தென்கொரிய அணியை சந்திக்கிறது இந்தியா.


Today's Headlines



 ★ K. Muniswari, a student of Thirupullani Government School near Ramanathapuram has found 10th century Sri Lankan coins of Rajaraja Chola.


 ★ The Speaker has announced that a special session of the Legislature will be held on January 5 at Fort St. George.


 ★ Delay in admission counciling for undergraduate and postgraduate medical students' admission as there is a pending case in the Supreme Court.


 ★ Essay competition for school and college students to celebrate Bharathiyar's birthday: Governor's House announces Rs 3 lakh prize for winners. 


 ★ Omicron in 63 countries: spreading faster than delta;  World Health Organization warning.


 ★ Asian Paddle Boat Championship: 4 more medals for India.


 ★ Asian Champions Trophy Hockey: India meet South Korea in the first match.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...