கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், வேலூர், தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மலைசுழற்சி முறை(Hill Rotation) குறித்த அரசாணை (நிலை) எண்: 404, நாள்: 25-05-1995ன் படி மாறுதல் (Transfer) வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (DEE Proceedings) ந.க.எண்: 756/டி1/2021, நாள்: 11-01-2022...



>>> ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், வேலூர், தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கான மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு மலைசுழற்சி முறை(Hill Rotation) குறித்த அரசாணை (நிலை) எண்: 404, நாள்: 25-05-1995ன் படி மாறுதல் (Transfer) வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (DEE Proceedings) ந.க.எண்: 756/டி1/2021, நாள்: 11-01-2022...

01-01-2021ன் படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் (BEO to HSHM 3% Promotion Panel List)...



>>> 01-01-2021ன் படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் - பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் (BEO to HSHM 3% Promotion Panel List)...

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வு (NMMS Exam) 2021-2022 விண்ணப்பப் படிவம் (Application)...



>>> தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வு (NMMS Exam) 2021-2022 விண்ணப்பப் படிவம் (Application)...

இன்றைய (12-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 12, 2022




தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : அறிமுகம் ஏற்படும். 


பரணி : சிந்தித்து செயல்படவும். 


கிருத்திகை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 12, 2022




வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கிருத்திகை : சாதகமான நாள். 


ரோகிணி : கவனம் வேண்டும். 


மிருகசீரிஷம் : தாமதமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 12, 2022




கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியான சில விஷயங்களுக்கு புதிய முடிவு எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் புத்துணர்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சிக்கல் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும். 


திருவாதிரை : புத்துணர்ச்சியான நாள். 


புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 12, 2022




உறவினர்களின் மத்தியில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  வியாபாரத்தில் புதுவிதமான யூகங்களும், எண்ணங்களும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும். 


பூசம் : மகிழ்ச்சியான நாள். 


ஆயில்யம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 12, 2022




வியாபார பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களை தீர்ப்பதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். புதுவிதமான சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். திருப்தியான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



மகம் : முன்னேற்றமான நாள். 


பூரம் : உதவிகள் கிடைக்கும். 


உத்திரம் : திருப்தியான நாள்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 12, 2022




உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். எண்ணம் மற்றும் தோற்றங்களில் சிறு சிறு மாற்றங்கள் காணப்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 



உத்திரம் : அனுசரித்து செல்லவும். 


அஸ்தம் : விழிப்புணர்வு வேண்டும். 


சித்திரை : குழப்பமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 12, 2022




திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


சுவாதி : ஒத்துழைப்பு மேம்படும். 


விசாகம் : ஆதரவான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 12, 2022




நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புகழ் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 


அனுஷம் : சிந்தித்து செயல்படவும். 


கேட்டை : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 12, 2022




உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விருத்தி உண்டாகும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




மூலம் : பொறுப்புகள் மேம்படும். 


பூராடம் : இலக்குகள் பிறக்கும். 


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 12, 2022




எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் லாபம் அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். 


  

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.


திருவோணம் : லாபகரமான நாள்.


அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 12, 2022




செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : சோர்வு நீங்கும்.


சதயம் : மேன்மை உண்டாகும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------





மீனம்

ஜனவரி 12, 2022




உடன்பிறந்தவர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆக்கமயமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



பூரட்டாதி : அனுகூலமான நாள். 


உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும். 


ரேவதி : புரிதல் உண்டாகும்.

---------------------------------------


தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் (How to get lost School and College Certificates? Simple instructions)...





உங்கள் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் அரசிடம் இருந்து தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறை இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.


சான்று பெறும் முறைகள்:

மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் படித்ததற்கான சான்றுகள் வழங்கப்படும். அவை மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் பணிக்கு செல்வதற்கு இந்த சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. அரசின் சில நலத்திட்டங்களை பெறுவதற்கும் சான்றிதழ்கள் அவசியமாகும். இந்த முக்கிய சான்றிதழ்களை நாம் பணிகளுக்காக வெளியில் எடுத்து செல்லும்பொழுதோ அல்லது வேறு சில காரணங்களுக்கு பிற இடங்களில் சமர்ப்பிக்கும் பொழுதோ அவை தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.


மேலும் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விட்டாலோ அல்லது எதிர்பாராத விதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ நாம் புதிய சான்று பெற முடியும். முதலில் காவல் நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். அதன் பிறகு புதிய சான்றிதழ் பெற உரிய அலுவலர்களை அணுகி பெற முடியும். தற்போது தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் :

  • இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் புகைப்படமும், இருப்பிட சான்றும் தேவை.


  • அதில் சிட்டிசன் லாகின் மூலம் உள் நுழைய வேண்டும். பிறகு Revenue Department என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • பிறகு புதிய முகப்பு திரை உருவாகும். அதில் Certificate for loss education records due to disasters என்பதை கிளிக் செய்யவும்.

  • படிவத்தில் உங்கள் தகவல்களை நிரப்பி Proceed கொடுக்கவும்.

  • உங்கள் CAN எண்ணை கொடுக்க வேண்டும். இல்லாதவர்கள் புதிதாக உருவாக்க வேண்டும்.

  • பிறகு உங்களது புகைப்படம் மற்றும் இருப்பிட சான்றை ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும்.

  • இணைய வங்கி மூலம் சான்றிதழுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

  • அதிகாரிகள் உங்கள் விவரங்களை சரிபார்த்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வந்து சேரும். அதன் பிறகு தொலைந்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டம் (NMMS) தேர்வுக்கு 12-01-2022 முதல் 27-01-2022 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி: 05-03-2022 - அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியீடு (You can apply for NMMS exam from 12-01-2022 to 27-01-2022. Examination Date: 05-03-2022 - Announcement by the Director of Government Examinations)...



>>> NMMS தேர்வுக்கு 12-01-2022 முதல் 27-01-2022 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதி: 05-03-2022 - அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியீடு (You can apply for NMMS exam from 12-01-2022 to 27-01-2022. Examination Date: 05-03-2022 - Announcement by the Director of Government Examinations)...




எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான *NMMS* தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு  காண தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரங்கள் : 

1. வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல் - *12-01-2022* முதல் *27-01-2022* வரை .

 2. மாணவர்களின் விவரங்களை தேர்வு கட்டணம் *ரூ. 50* சேர்த்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்கள் மூலம் வட்டார கல்வி அலுவலகத்தில்
 *27- 01-2022* ஆம் தேதிக்குள் வழங்கப்படுதல் வேண்டும்.

3. தேர்வுக் கட்டணம் *ரூ. 50* .

4. தேர்வு நாள் : *05-03-2022*

5. விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தளம்

14-01-2022 முதல் 18-01-2022 (பொங்கல் முதல் தைப்பூசம்)வரை 5 நாட்கள் விடுமுறை - அரசாணை (1டி) எண்:14, நாள்: 11-01-2022 வெளியீடு (5 days holiday from 14-01-2022 to 18-01-2022 (Pongal to Thaipusam) - G.O. Released)...

 


பொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து 17-01- 2022 திங்கட்கிழமை அரசு உள்ளூர் விடுமுறை. அதற்கு பதிலாக 29-01-2022 அன்று பணி நாளாக இருக்கும்.


>>> 14-01-2022 முதல் 18-01-2022 (பொங்கல் முதல் தைப்பூசம்)வரை 5 நாட்கள் விடுமுறை - அரசாணை (1டி) எண்:14, நாள்: 11-01-2022 5 days holiday from 14-01-2022 to 18-01-2022 (Pongal to Thaipusam) - G.O.)...


பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட நாளான 17.01.2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியீடு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Jallikattu - Guidelines Released

ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Jallikattu Competition - Guidelines Released  ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்...