கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக் கல்வி ஆசிரியர் (D.El.Ed.,) பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் (Instructions for applying for Diplomo in Elementary Education (D.El.Ed.,) )...



தொடக்கக் கல்வி ஆசிரியர் (D.El.Ed.,) பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் (Instructions for applying for Diplomo in Elementary Education (D.El.Ed.,) )...


💥 இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் ஜுலை 4ஆம் தேதியில் காலை 10 மணிக்கு https://scert.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகும். 


💥 2022-23-ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டயப் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கின்றன.


💥 தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பிற்குச் சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும். மேலும், பொதுப்பிரிவினர் (குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/ ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC / BCM / MBC / SC SCA ST) பிரிவினர் குறைந்தபட்சம்  45 விழுக்காடு (540/1200 - 270/600) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.


💥 விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு (தமிழ் / ஆங்கிலம்/ தெலுங்கு/ உருது) விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை 12ஆம் வகுப்பு வரை மொழிப்பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயாமாகப் பயின்றிருக்க வேண்டும்.


💥 31-07-2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும். ஆதரவற்றோர் (Orphans), கணவரால்  கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது / பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31-07-2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் ஆதி திராவிடர்/ பழங்குடியினருக்கு 31-07-2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். 


💥 சிறப்பு இட ஒதுக்கீடு: மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது.


💥 விண்ணப்பத்தினை https://scert.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 09.07.2022 அன்று மாலை 05.00 மணிக்குள் உரிய கட்டணத்துடன் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



தொடக்க நிலை - 4 & 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Spoken English Guide for Primary Children - Mission 2025...



>>> தொடக்க நிலை - 4 & 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான Spoken English Guide for Primary Children - Mission 2025...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) திட்டம் - Check List...



>>> எண்ணும் எழுத்தும் (Ennum Ezhuthum) திட்டம் - Check List...




"பள்ளிக் கல்வியில் ஊராட்சி மன்றங்களின் பங்கும் பொறுப்பும்" என்ற தலைப்பில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி கையேட்டினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வெளியிட்டார் (Education Minister Anbil Mahesh has released a training guide for village panchayat Presidents on "The Role and Responsibility of Panchayat Councils in School Education")...

 "பள்ளிக் கல்வியில் ஊராட்சி மன்றங்களின் பங்கும் பொறுப்பும்" என்ற தலைப்பில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி கையேட்டினை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வெளியிட்டார் (Education Minister Anbil Mahesh has released a training guide for village panchayat Presidents on "The Role and Responsibility of Panchayat Councils in School Education")...


‘பள்ளிக் கல்வியில் ஊராட்சி மன்றங்களின் பங்கும் பொறுப்பும்’ என்ற தலைப்பில், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாமை மறைமலை நகரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கிவைத்தார்.


‘பள்ளிக் கல்வியில் ஊராட்சி மன்றங்களின் பங்கும் பொறுப்பும்’ என்ற தலைப்பில் நடைபெறு்ம் இந்த2 நாள் பயிற்சி முகாம் தொடக்கவிழா பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லாஉஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, பயிற்சி கையேட்டை வெளியிட்டார்.



 


மேலும், ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில், பள்ளிக்கல்வித் துறையுடன் ஊரக உள்ளாட்சித் துறை இணைந்து செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, 20 நபர்கள் கொண்ட ஒவ்வொரு பள்ளி மேலாண்மைக் குழுவிலும் 2 ஊராட்சி மன்றத்தினர் உறுப்பினராக உள்ளனர். இந்த மேலாண்மைக் குழுவுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த பயிற்சி அமையும்.

 


இதன்மூலம் மாநில, மத்திய அரசுகளின் திட்டம் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிந்துகொண்டு, அவற்றை தங்களது பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு கிடைக்க செய்ய முடியும். மாணவர்களின் கல்வி தரமும் உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




பணி நீட்டிப்புக் காலத்தில் ஆசிரியர் & தலைமையாசியர் பணி புரிவதற்கான கருத்துருப் படிவம் (Proposal Format for Teacher & Headmaster to apply Extension of Service after Retirement) & Certificate of Physical Fitness for Re-employment on Superannuation)...



>>> பணி நீட்டிப்புக் காலத்தில் ஆசிரியர் & தலைமையாசியர் பணி புரிவதற்கான கருத்துருப் படிவம் (Proposal Format for Teacher & Headmaster to apply Extension of Service after Retirement) & Certificate of Physical Fitness for Re-employment on Superannuation...


பணி நிறைவு பெறும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் கல்வியாண்டு இறுதி வரை பணிநீட்டிப்பு (Extension) உண்டு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (26-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஜூன் 26, 2022



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : தேவைகள் நிறைவேறும்.


கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 26, 2022



சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வீடு மற்றும் மனை சார்ந்த செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.


ரோகிணி : முயற்சிகள் கைகூடும். 


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------






மிதுனம்

ஜூன் 26, 2022



வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய சிந்தனைகளை மாறுபட்ட முயற்சிகளின் மூலம் செய்து முடிப்பீர்கள். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




மிருகசீரிஷம் : காலதாமதமான நாள்.


திருவாதிரை : வரவு கிடைக்கும்.


புனர்பூசம் : புதுமையான நாள்.

---------------------------------------





கடகம்

ஜூன் 26, 2022



தடைபட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புத்துணர்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.


பூசம் : நெருக்கடிகள் குறையும்.


ஆயில்யம் : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 26, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். புரிதல் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : சுறுசுறுப்பான நாள். 


பூரம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திரம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------





கன்னி

ஜூன் 26, 2022



வியாபார பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதுவிதமான தேடல் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.


அஸ்தம் : தேடல் அதிகரிக்கும்.


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜூன் 26, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




சித்திரை : சேமிப்பு குறையும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும்.


விசாகம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------






விருச்சிகம்

ஜூன் 26, 2022



மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவும், சுறுசுறுப்பும் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்கள் தொடர்பான வாய்ப்புகள் கைகூடும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : தெளிவு உண்டாகும். 


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------





தனுசு

ஜூன் 26, 2022



ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் உள்ள புதிய யுக்திகளை அறிந்து கொள்வீர்கள். வேலை நிமிர்த்தமான வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மூலம் : பிரச்சனைகள் குறையும். 


பூராடம் : மாற்றமான நாள்.


உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 26, 2022



பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அலுவலக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். அமைதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.


திருவோணம் : உதவி கிடைக்கும்.


அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 26, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகன மாற்றம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். புதுமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.


சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------






மீனம்

ஜூன் 26, 2022



கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சியில் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். குழப்பம் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




பூரட்டாதி : திருப்திகரமான நாள்.


உத்திரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


ரேவதி : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------


ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (Teachers have extensions throughout the academic year after Retirement - Director of Elementary Education Announcement)...



 ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு  - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (Teachers have extensions throughout the academic year after Retirement - Director of Elementary Education Announcement)...


CEOs, 

Teachers on completion of 60 years will continue to work till the end of academic session. GO will be issued soon. Please allow teachers to continue.


தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை :

60 வயது முடிந்து கல்வி ஆண்டு இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு வழங்கிட உத்தரவு.


விரைவில் அரசாணை வரும் என்பதால் Superannuation தொடர அறிவுரை...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...