கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (03-08-2022) ராசி பலன்கள் (Rasi Palan), நட்சத்திர பலன்கள் (Today's (03-08-2022) Zodiac Predictions, Nakshatra Predictions)...



மேஷம்

ஆகஸ்ட் 03, 2022



மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : ஆலோசனைகள் கிடைக்கும்.


பரணி : காரியசித்தி உண்டாகும். 


கிருத்திகை : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 03, 2022



வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். குழந்தைகளின் வழியில் கலகலப்பான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் வேகத்தை விட விவேகம் அவசியம். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 03, 2022



கால்நடை தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செல்வச்சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். மனை மீதான கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : கவனத்துடன் செயல்படவும்.


திருவாதிரை : முயற்சிகள் கைகூடும். 


புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும். 

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 03, 2022



தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




புனர்பூசம் : வரவு மேம்படும்.


பூசம் : புத்துணர்ச்சி உண்டாகும். 


ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 03, 2022



வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். வியாபாரம் ரீதியான வெளியூர் பயணங்களால் செல்வாக்கு மேம்படும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : செலவுகள் உண்டாகும். 


பூரம் : இழுபறிகள் குறையும்.


உத்திரம் : மாற்றம் ஏற்படும். 

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 03, 2022



சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : உதவி கிடைக்கும்.


அஸ்தம் : லாபம் மேம்படும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 03, 2022



எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வேலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிலும் திருப்தியற்ற சூழல் அமையும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




சித்திரை : மாற்றமான நாள்.


சுவாதி : புரிதல் அதிகரிக்கும். 


விசாகம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 03, 2022



புதிய செயல்பாடுகளில் உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குழப்பம் நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.


அனுஷம் : தீர்வு கிடைக்கும்.


கேட்டை : சேமிப்பு அதிகரிக்கும். 

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 03, 2022



மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். அரசு தொடர்பாக எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் படிப்படியாக குறையும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மூலம் : தெளிவு பிறக்கும். 


பூராடம் : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திராடம் : தடைகள் குறையும். 

---------------------------------------






மகரம்

ஆகஸ்ட் 03, 2022



தந்தைவழி தொழிலின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவியின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




உத்திராடம் : அனுகூலமான நாள்.


திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும். 


அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 03, 2022



எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடம் பேசும் பொழுது பேச்சுக்களில் அதிகாரங்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவுபெறும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




அவிட்டம் : பொறுமை வேண்டும்.


சதயம் : அதிகாரங்கள் அதிகரிக்கும். 


பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 03, 2022



சுபகாரியம் தொடர்பான பேச்சுக்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : சுபகாரியம் கைகூடும்.


உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். 


ரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2022 - School Morning Prayer Activities...


   திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: நன்றியில் செல்வம்


குறள் : 1005

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடியுண் டாயினும் இல்.


பொருள்:

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை


பழமொழி :

Every bird loves to hear itself singing.

தம் புகழைத் தாமே பாடாதார் இல்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 


2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்


பொன்மொழி :


ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்....விவேகானந்தர்


பொது அறிவு :


1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது? 


விட்டமின் கே . 


2.இம்மியூனிட்டி என்றால் என்ன ? 


எதிர்பாற்றல்.


English words & meanings :


kitch·en·ware - utensils like pot and pan used in the kitchen. Noun. சமையலறை பாத்திரங்கள். பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


சிவப்பு திராட்சையில் பிளவனாய்டுகள் உள்ளன. இவற்றில் காணப்படும் ரெஸ்வெராட்ரோல் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் சிறுநீரக வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அடிக்கடி சிவப்பு திராட்சை எடுத்து வருவது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உதவும்.





NMMS Q 38:


அடுத்தடுத்து வரும் மூன்று முழுக்களின் கூடுதல் 39. அதில் இரண்டாவது எண்_______


 விடை: 13


நீதிக்கதை


முதலையும்,நண்டும்


ஒரு காட்டை ஒட்டி ஒரு சிறு நதி ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு முதலையும் ஒரு நண்டும் இருந்தன. அவை இரண்டும் நதியில் இருந்த மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன. மற்ற சில விலங்குகளும் தண்ணீர் அருந்த வருவதுண்டு.


கோடைகாலம் வந்ததது. நதியில் நீர் வரத்தும் குறைய மீன்களே இல்லாத நிலை வந்தது. தண்ணீர் குறைந்ததால், முதலைக்கு பயந்து விலங்குகள் தண்ணீர் அருந்தவும் வருவதில்லை. உண்ண எதுவும் இல்லா நிலையில், ஒரு நாள், முதலை நண்டிடம், நீ விலங்குகளிடம் சென்று நான் இறந்து விட்டதாகச் சொல்.


அதை நம்பி ஏதேனும் விலங்குகள் வந்தால் அதை அடித்து நாம் உண்ணலாம் என்றது. நண்டும் அப்படியே செய்ய. நரி ஒன்று முதலையை உண்ணலாம் என ஆசையுடன் நண்டுடன் வந்தது.


செத்தது போலக்கிடந்த முதலையைப் பார்த்ததும் நரிக்கு சந்தேகம் வந்தது. உடனே தன் மூளையை உபயோகித்து முதலை செத்தது போலத்தெரியவில்லையே! அப்படி இறந்திருந்தால் அதன் வால் ஆடுமே என்றது. இதைக் கேட்டவுடன் முதலை தன் வாலை ஆட்டியது. அதைப் பார்த்த நரி, நண்டிடம் செத்த முதலை எப்படி வாலை ஆட்டும். நீங்கள் இருவரும் பொய் சொல்கிறீர்கள் என கூறிவிட்டு ஓடியது. அறிவில்லாத முதலையும், நண்டும் ஏமாந்தது.


இன்றைய செய்திகள்


03.08.22



◆ஸ்டார்ட் அப் தமிழ்நாடு திட்டத்தால் வட்டார அளவில் புத்தொழில் நிறுவனங்கள் உருவாவதன் மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளது  என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


◆ரெட் அலர்ட்: நீலகிரி, கன்னியாகுமரி விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை.


◆காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைய உள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்ததும் அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.


◆மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரிய அனுமதியின்றி முகக்கவசம், பிபிஇ கிட் உபகரணங்கள் தயாரிக்க தடை.


◆அல்-காய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


◆திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் என்சிசி வீரர்கள், வீராங்கனைகள் 22 பதக்கங்களை வென்று சாதனை.


◆அண்டோரா நாட்டில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில் தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார்.


◆காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் - பளுதூக்குதலில் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்.


Today's Headlines


◆Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan has said that the start-up Tamil Nadu project is likely to create over 3 lakh jobs by creating a regional level.


◆Red Alert: Nilgiris, Kanyakumari rushed National Disaster Rescue Force.


◆The 2nd airport of Chennai will be built at Paranthur near Kanchipuram. Union Minister of State for Aviation VK Singh said that the Ministry of Civil Aviation will begin the preliminary work.


◆Prohibition of producing facial and PPE kit equipment without the permission of the Central Drug Control Board.


◆It is reported that Ayman al-Zawahiri, the leader of the al-Qaeda organization, was killed. Reuters news agency reported that the US forces in Afghanistan were killed.


◆NCC players won 22 medals in the state-level shooting competition in Trichy.


◆Master Iniyan, Grand Master of Tamil Nadu won in the international chess competition in Andora.


◆Commonwealth Games: One more medal for India - Harjinder Kaur won the bronze medal.



TNSED Schools App வழியாக ஆசிரியர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை (How to Apply for Teachers Leave through TNSED Schools App)...



>>> TNSED Schools App வழியாக ஆசிரியர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் முறை (How to Apply for Teachers Leave through TNSED Schools App)...






எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில் வளரறி மதிப்பீடு FA(b) 05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின் செயல்முறைகள் (Formative Assessment FA(b) of Ennum Ezhuthum in Classrooms on Fridays - Assessment from 05.08.2022 - Proceedings of Director of Elementary Education & Director of SCERT) ந.க.எண்: 2411/ ஈ2/ 2020, நாள்: 01-08-2022...



>>> எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் வெள்ளிக்கிழமைகளில்  வளரறி மதிப்பீடு FA(b)  05.08.2022 முதல் மதிப்பீடு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநர் & SCERT இயக்குநரின்  செயல்முறைகள் (Formative Assessment FA(b) of Ennum Ezhuthum in Classrooms on Fridays - Assessment from 05.08.2022 - Proceedings of Director of Elementary Education & Director of SCERT) ந.க.எண்: 2411/ ஈ2/ 2020, நாள்: 01-08-2022...






அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பெரியோர்களின் திருவுருவப் படங்கள் - அரசாணை (நிலை) எண்: 457, நாள்: 04-06-2006 (Portraits of Chiefs and Elders permitted to be placed in Government Offices and Buildings - G.O. (Ms) No: 457, Dated: 04-06-2006)...

 


>>> அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பெரியோர்களின் திருவுருவப் படங்கள் - அரசாணை (நிலை) எண்: 457, நாள்: 04-06-2006 (Portraits of Chiefs and Elders permitted to be placed in Government Offices and Buildings - G.O. (Ms) No: 457, Dated: 04-06-2006)...







பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: நன்றியில் செல்வம்


குறள் : 1002

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு.


பொருள்:

யாருக்கும் எதுவும் கொடுக்காமல், தன்னிடமுள்ள பொருளால் எல்லாம் ஆகுமென்று, அதனைவிடாமல் பற்றிக் கொண்டிருப்பவன் எந்தச் சிறப்புமில்லாத இழி பிறவியாவான்


பழமொழி :

Don't bargain for fish that is still in the water.

கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 


2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்


பொன்மொழி :


வாழ்க்கையில் நிறைய

பிரச்சனைகளை சந்தித்த

பின் அறிவையும் சில

இழப்புக்களை பார்த்த

பின் அதிக அடக்கத்தையும்

உணர்கிறோம்..!


பொது அறிவு :


1.மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் என்ன? 


ரிப்ஸ் .


 2.மூளையில் உள்ள நியூரான்களின் எண்ணிக்கை யாது?


1400.


English words & meanings :


jan·gling - to produce a harsh sound. Verb. கடூர சத்தம் உருவாக்குதல். வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பெரும்பாலான பெர்ரி பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் காணப்படுகிறது. இது வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

சிறுநீரக செல்கள் மீது பாதுகாப்பை வழங்குகிறது. ப்ளூ பெர்ரி பழங்களில் பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ் பரஸ் போன்ற பண்புகள் உள்ளன. க்ரான் பெர்ரி பழங்கள் சிறுநீர் பாதையை தொற்றுக்களில் இருந்து காப்பாற்ற உதவுகிறது.


NMMS Q 37:


ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கின் நான்கில் ஒரு பங்கின் ஏழில் ஒரு பங்கு 20 எனில் அவ்வெண் _______. 


விடை: 1680


ஆகஸ்ட்  02


ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்


ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.


பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்

பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.


பிங்கலி வெங்கைய்யா


பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.


நீதிக்கதை


நான்கு பொம்மைகள்


நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக நான் என்ன சின்னக் குழந்தையா? இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு. நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன், இதில் என்ன விஷயம் இருக்கிறது என்கிறார்.


முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி. அதனுடன் ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார். சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது. சிற்பி மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித்தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள் என்கிறார்.


இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார். இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது. இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார். பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார். இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.


சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார். அப்போது இதில் யார் தான் சிறந்த மனிதர் என்று அரசன் கேட்கிறார். என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார். அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார். இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.


மூன்றாம் முறை வரவே இல்லை. சிற்பி நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் நம்பகமானவர்கள்". அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச வேண்டுமோ அங்கு பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார். நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும். மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்


இன்றைய செய்திகள்


02.08.22


📍மதுரை மண்டல கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்: 14,430 இடங்களுக்கு 73,260 பேர் போட்டி.


📍நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நீதிமன்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.


📍தொழில் ஆலோசகர், சமூக அலுவலர் பதவிகளில் உள்ள 16 காலி பணியிடங்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 26-ம்தேதி கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.


📍இடம்பெயர்ந்த பழங்குடி மக்களுக்களுக்கான நிவாரணம் குறித்த விவரம் மத்திய அரசிடம் இல்லை என்ற தகவலை மத்திய பழங்குடியினர் துறை இணை அமைச்சர் மக்களவையில் வெளியிட்டார்.


📍புவியைக் கண்காணிக்கும் ‘மைக்ரோசாட்-2ஏ’ செயற்கைக்கோள்: எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் செலுத்த இஸ்ரோ திட்டம்.


📍கடந்த ஜூலை 29 ஆம் தேதியன்று பூமி 24 மணி நேரத்திற்கு முன்னரே தன்னைத் தானே சுற்றும் ஒருநாள் சுழற்சியை முடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


📍காமன்வெல்த் ஜூடோ போட்டி : சுசிலா தேவி இறுதி சுற்றுக்கு தகுதி - இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி.


📍காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டி : இந்தியாவின் அமித் பங்கால் காலிறுதிக்கு முன்னேற்றம்.


📍காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.


Today's Headlines


📍Madurai Regional Arts, Science Colleges Counseling Begins: 73,260 Candidates for 14,430 Seats


 📍The Madras High Court has warned that if the court order to remove water encroachments is not implemented within 10 days, it will have to order the Chief Secretary to appear in person.


 📍The Tamil Nadu Public Service Commission has announced August 26 as the last day to apply online for the 16 vacant posts of Career Counselor and Social Officer.


 📍Union Minister of State for Tribal Affairs released the information in the Lok Sabha that the central government does not have the details of the relief for the displaced tribal people.


 📍Earth observation satellite 'Microsat-2A': ISRO plan to launch by SSLV rocket.


 📍Last July 29 Scientists reported that the Earth completed its one-day rotation around itself 24 hours earlier on that date.






 📍Commonwealth Judo Tournament: Susila Devi qualifies for finals - India assured of another medal


 📍Commonwealth Boxing Tournament: India's Amit Pangal advances to quarter-finals


 📍India's Achinda Shuli lifted 313 kg and won the gold medal in the Commonwealth Weightlifting Championships.


Today's (02-08-2022) Wordle Answer...

                          

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (02-08-2022) Wordle Answer: COYLY










இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...