கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (23-09-2022) Wordle Answer...

                                                                             

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (23-09-2022) Wordle Answer: GLORY











 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.09.2022 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


குறள் பால் : அறத்துப்பால்


குறள் இயல் : இல்லறவியல்


அதிகாரம் : தீவினை அச்சம்


குறள் எண் : 201


குறள்: தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை யென்னுஞ் செறுக்கு.


விளக்கம் : தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.


பழமொழி :

Pluck not where you never planted. 


பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. மகிழ்ச்சி என்பது வேண்டும் வேண்டும் என்று கேட்பதில் இல்லை போதும் என்கிற மனதில் எனவே போதும் என்கிற நிறைவோடு வாழ முயற்சிப்பேன்.


 2. பெற்றோர், ஆசிரியர் மற்றும் பிறரை சரியான முறையில் மகிழ்விப்பதும் மகிழ்ச்சியே. மகிழ்விப்பேன்.


பொன்மொழி :


பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்ந்தே படிக்கிறார்கள்.


பொது அறிவு :


1.நீரில் கரையும் வாயு எது ?


 அம்மோனியா . 


 2.ஆக்ஸிஜனை கண்டுபிடித்தவர் யார்?


 ஜோசஃப் பிரிஸ்டிலி.


ஆரோக்ய வாழ்வு :


வல்லாரையில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது செல்கள் பிறழ்ச்சி அடைந்து புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க ஆன்டி ஆக்ஸிடன்கள் உதவுகின்றன. வல்லாரையை அடிக்கடி சேர்த்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி நோய்கள் நம்மை தாக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.


NMMS Q 67:


Advocate : Law :: Cook : ? 

a) Cookery b) Kitchen c) Food d) Dishes 


 Answer: Cookery


செப்டம்பர் 23


சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் நினைவுநாள்


சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார்.


நீதிக்கதை


கடமையைச் செய், உயர்வை அடைவாய்


கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். 


அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும், கொக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம். கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.


சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக் கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். 


துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ, தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய் வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன். இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதனால்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்து கொண்டேன். 


இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இந்த நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.


அடக்கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம் போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான்.


இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக் கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும், தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.


துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும், இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை.


என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்.


இன்றைய செய்திகள்


23.09.22


*தமிழகத்தில் 1267 பேருக்கு எச்1என்1 ஃப்ளூ காய்ச்சல் உறுதி: 6000 சோதனைக் கருவிகளை வாங்க சுகாதாரத்துறை திட்டம்.


* தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது.


* மத்திய அரசின் 'அரசு மின் சந்தை' தளத்தில் அதிக அளவில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், புதிய தொழில்முனைவோர் ஆகியோரை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


* பின் இருக்கை சீட் பெல்ட்டுக்கும் அலாரம் கட்டாயம் வேண்டும் - மத்திய அரசு வரைவு விதிகள் வெளியீடு.


* பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பாரபட்சம் காட்டவில்லை - மத்திய அரசு தகவல்.


* உலகில் தொற்றா நோய்கள் காரணமாக இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.


* ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், ரஷ்யாவையும், அதன் எல்லைகள் மற்றும் மக்களையும் பாதுகாக்க, அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


* சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்.


* பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா கால் இறுதிக்கு தகுதி.


* இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.


Today's Headlines



*1267 confirmed cases of H1N1 flu in Tamil Nadu: Health department plans to buy 6000 test kits


 * Online application for admission to MBBS and BDS courses in Tamil Nadu started yesterday.


* The Tamil Nadu Treasury and Accounts Commissioner has said that efforts are being made to connect women self-help groups and new entrepreneurs on the central government's 'Government E-Market' platform.


 *Alarm on rear seat belt should also be mandatory - Central Govt issues draft rules.


 *No Discrimination in Reservation to Economically Weaker Sections - Central Govt.


 *According to the World Health Organization, one person dies every two seconds due to infectious diseases.


 *Russian President Vladimir Putin has warned Western countries that they will not hesitate to launch a nuclear attack to protect Russia, its borders and its people if it threatens Russia's security.


 *International squash tournament: 3 Indians advance to semi-finals


* Pan Pacific Open tennis: Spain's Mukuruja qualifies for quarter-finals


* India won the second T20 against England Women by 88 runs.




இன்றைய (23-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

செப்டம்பர் 23, 2022



தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும். மாணவர்களுக்கு கற்றலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதுவிதமான முயற்சிகளும், இலக்குகளும் பிறக்கும். கூட்டு வியாபார பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். 


பரணி : அனுகூலமான நாள்.


கிருத்திகை : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 23, 2022



பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியாக இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல்  அமையும். உத்தியோகத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் 

கிடைக்கப் பெறுவீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 




கிருத்திகை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரோகிணி : இழுபறிகள் குறையும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 23, 2022



புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் ஒத்துழைப்பு உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு மற்றும் குறுந்தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 


திருவாதிரை : கவனத்துடன் செயல்படவும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 23, 2022



குடும்ப உறுப்பினர்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனை சார்ந்த பணிகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 23, 2022



திறமைக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். மனதில் எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வதற்கான சூழல் அமையும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




மகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


பூரம் : தீர்வு காண்பீர்கள்.


உத்திரம் : திறமைகள் வெளிப்படும். 

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 23, 2022



புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். விரும்பிய உணவினை உண்டு மகிழ்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திரம் : மாற்றமான நாள்.


அஸ்தம் : வாய்ப்புகள் அமையும். 


சித்திரை : ஈடுபாடு உண்டாகும். 

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 23, 2022



மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. உத்தியோக பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




சித்திரை : முதலீடுகள் அதிகரிக்கும். 


சுவாதி : மகிழ்ச்சியான நாள்.


விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.  

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 23, 2022



வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலைபாயும் சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். வர்த்தக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு ஏற்படும். உழைப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




விசாகம் : லாபம் மேம்படும். 


அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


கேட்டை : ஆதரவு ஏற்படும். 

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 23, 2022



மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணிகளில் அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றத்தை செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மூலம் : அனுகூலமான நாள்.


பூராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.


உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 23, 2022



வெளியூர் பயணங்களால் மாற்றமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய முயற்சிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுப்பது நல்லது. சிந்தனைகளில் குழப்பமும், செயல்பாடுகளில் விருப்பமின்மையும் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : கவனம் வேண்டும்.


திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


அவிட்டம் : குழப்பமான நாள்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 23, 2022



நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.  


சதயம் : புதுவிதமான நாள்.


பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். 

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 23, 2022



உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 




பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரட்டாதி : இழுபறிகள் குறையும். 


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


TNSED Schools App - Updated on 22-09-2022 - Version: 0.0.44...

 


⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️


🔴 TNSED schools App


* UPDATED ON 22 SEPTEMBER- 2022


* Version: Now 0.0.44


DIRECT LINK.


👇👇👇👇👇👇


https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis





செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் 30-09-2022 அன்று நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல் செயல்முறைகள் (School Management Committee meeting for the month of September will be conducted on 30-09-2022 - State Project Director's Guidance Proceedings) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 22-06-2022...



>>> செப்டம்பர் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு (SMC) கூட்டம் 30-09-2022 அன்று நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் வழிகாட்டுதல் செயல்முறைகள் (School Management Committee meeting for the month of September will be conducted on 30-09-2022 - State Project Director's Guidance Proceedings) ந.க.எண்: 2223/ C7/ பமேகு/ ஒபக/ 2022, நாள்: 22-06-2022...







பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)...



பித்தம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்கள் (Diseases caused by increased bile)...


பித்தம் சிறிது எண்ணெய்ப்பசையுடன் கூடியது, செயலில் கூர்மையானது, சூடானது, லேசானது, துர்நாற்றமுடையது, இளகும் தன்மையுடையது, நீர்த்தது ஆகிய குணங்களைக் கொண்டது. தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் இவற்றை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. உடலுக்குப் பித்தம் பல நன்மைகளைச் செய்கிறது.


உண்ட உணவை சீரணிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப்பாதுகாக்கிறது.


தன் நிலையிலிருந்து பித்தம் சீற்றம் கொண்டு உடலில் அதிகரித்து விட்டால் - தோலில் மஞ்சள் நிறம் உண்டாகுதல், சோர்வு, புலன்களுக்கு வலுவின்மை, உடலில் சக்திக்குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச்சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கம் குறைதல், கோபம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. பித்தம் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை: -


1 பாசகம்: இரைப்பை, சீரணப்பை இவற்றின் நடுவில் இருந்து கொண்டு ஐம்பெரும்பூதங்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், இதனிடம் நெருப்பின் குணம் அதிகமாக இருப்பதாலும், நீரின் குணங்கள் குறைவாக இருப்பதாலும், தன் திரவகுணத்தை விட்டுவிட்டு தன்னைச் சார்ந்த வாயு, ஈரத்தன்மை இவற்றின் காரணமாக உடலுக்கு உதவி புரிகிறது.


அதாவது உடலுக்குச் சூட்டையும், உணவை செரிக்கவும் செய்கிறது. அதனால் இதற்கு `அக்னி 'என்று அழைக்கப்படுகிறது. உணவை செரிக்கச் செய்து அதிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலத்தையும் பிரிக்கிறது. மற்ற இடங்களிலுள்ள பித்தங்களுக்குத் தன்னிருக்கையிலிருந்து கொண்டே, ஊட்டமளிக்கிறது.


2 ரஞ்சக பித்தம்: இது இரைப்பையை உறைவிடமாகக் கொண்டு அங்குள்ள உணவின் நீர்ச்சத்தான பகுதிக்கு செந்நிறத்தை அளிக்கிறது.


3 ஸாதக பித்தம்: இது இதயத்தை தங்கு மிடமாகக் கொண்டு அறிவு, நுண்ணறிவு, தந்நிறைவு, செயல்படுவதில் ஊக்கம் இவைகளைத் தந்து தனக்கு விருப்பமான புலப்பொருள் அடைதல், செயல் இவற்றின் ஈடுபாட்டினால் அதை நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றைச் செய்கிறது.


4 ஆலோசக பித்தம்: இது கண்களில் தங்கி அவற்றிற்குப் பார்க்கும் சக்தியை அளிக்கிறது.


5 ப்ராஜக பித்தம்: சருமத்தை உறைவிடமாகக் கொண்டு சருமத்திற்கு ஒருவித ஒளியைக் கொடுத்து அதை நன்கு விளங்கச் செய்வதால் இதற்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இது எண்ணெய் குளியல், நீராடுதல், மேற்பூச்சு இவற்றைப் பக்குவப்படுத்தி ஊட்டமளித்து ஒளியை வெளிப்படுத்துகிறது.


காரம், புளி, உப்புச்சுவை, புலால் உணவு வகைகளில் மீன், கோழி, நண்டு வகையறா, எண்ணெய்யில் பொரித்த உணவு வகைகள், காபி, டீ, பேல்பூரி, பாணிப்பூரி, சமோஸா, பாஸ்தா, நூடுல்ஸ், சிப்ஸ், குளிர்பானங்கள், கையேந்தி பவனில் விற்கப்படும் சூப், சுண்டல், மதுபானம், பாக்கு, சிகரெட், குட்கா போன்றவை பித்தத்தைத் தூண்டி விட்டு, அதன் சீற்றத்திற்குக் காரணமாகி சுமார் 40 வகையான பித்த நோய்களை ஏற்படுத்துகின்றன. அவை: வருமாறு: -


உடல் முழுவதும் நெருப்பின் அருகில் உள்ளது போன்ற வியர்வையுடன் கூடிய எரிச்சல். உடலில் ஒரு பகுதியில் வியர்வை ஏற்படாமல் உஷ்ணம் தோன்றுதல், உடலில் காட்டுத் தீ போன்ற எரிச்சல், கண் முதலிய பொறிகளில் எரிச்சல், முகம், உதடுகள்,


வாயின் மேல் பாகம் இவற்றில் எரிச்சல், உடலின் உள் எரிச்சல், தோலில் தோன்றும் எரிச்சல், தோளில் எரிச்சல், புகைவது போல ஏப்பம் விடுதல், புளித்த ஏப்பம், கடுமையான உஷ்ணம், அதிகமாக வியர்த்தல், உடல் நாற்றம், புலன்களின் அழற்சி, இரத்தம் கருத்து நீற்றுப் போதல், மாமிசம் கருநிறமடைந்து கெட்ட நாற்றம் வீசுதல்,


தோல், அதனுள் உள்ள மாமிசம் இவற்றின் பிளவு, தோலின் உள்ளும், புறமும் வெடிப்பு, இரத்தக்கட்டி, எரிச்சலுள்ள இரத்தக் கொப்புளம், தோலின் மேல் உண்டாகும் வட்டமான தடிப்பு, இரத்த பித்தம், உடலிலோ, மலத்திலோ பச்சை நிறம் ஏற்படுதல், உடலில் மஞ்சள் நிறம் தோன்றுதல், ரத்தம் நீல நிறமாக மாறுதல்,


கக்கம், தோல், விலா இவற்றில் தோன்றும் வேதனையளிக்கும் கொப்புளம், மஞ்சள் காமாலை, வாயில் கசப்புச் சுவை, வாயில் இரத்தத்தின் நாற்றம், வாயில் கெட்ட நாற்றம், தாகம் அதிகரித்தல், உணவில் போதும் என்ற எண்ணம் தோன்றாமை, வாய் வேக்காடு, தொண்டைக்குள் வேக்காடு, கண் நோய், மலத்துவாரத்தில் வேக்காடு,


ஆண் குறியில் வேக்காடு, உயிருக்கு ஆதாரமான இரத்தம் வெளிவருதல், இருண்டு போதல், கண், சிறுநீர், மலம் இவை பசுமை கலந்த மஞ்சள் நிறமாகுதல், பித்தம் தன்னுடைய இயற்கையான அளவிலிருந்து குறைந்து விட்டால் செயலற்றிருப்பது, குளிர்ச்சி, விட்டு விட்டு ஏற்படும் உடல் வலி, குத்தல், சுவையின்மை, அசீரணம்,


உடலில் சொரசொரப்பு, நடுக்கம், பளு, நகம், கண் இவை வெளுத்துப் போதல் போன்றவை உடலில் காணும். பித்தத்தின் சீற்றத்தினால் ஏற்படும் உபாதைகளை நீக்க - கசப்பான மூலிகை நெய் மருந்தை அருந்தச் செய்தல், பேதி மருந்துகளால் பித்தத்தை மலம் வழியாகக் கழியச் செய்தல், இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்,


வெட்டிவேர், விளாமிச்சைவேர், கரும்புவேர் போட்டு ஊறிய பானைத் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துதல், குளிர்ந்த நீரில் குளித்தல், நெற்றியில் தூய சந்தனத்தை இட்டுக் கொள்ளுதல், காதிற்கு இனிமையாகவும், மிருதுவாகவும், மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதுமான இன்னிசை, அன்பான வார்த்தைகளை கேட்டல்,


பழைய அரிசி, கோதுமை, பச்சைப்பயறு, சர்க்கரை, தேன், புடலை, நெல்லிக்காய், திராட்சை போன்றவை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது. வயிறு நிறையச் சாப்பிடுதல், தயிர், மசாலாப் பொருட்கள், புலால் உணவு, எண்ணெய், எதிர்காற்று, மதுபானம், பகலுறக்கம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தனி இலச்சினை (Logo) வெளியீடு (Release of separate Logo for Chennai Municipal Corporation Schools)...



>>> பள்ளிக்கல்வித்துறையின் செய்தி வெளியீடுகள்...


 சென்னை பள்ளிகளுக்கான இலச்சினை (லோகோ) மற்றும் குறும்படம் வெளியிடுதல் நிகழ்ச்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள மாளிகையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் இலச்சினை, குறும்படத்தை இணைந்து வெளியிட்டு ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை மேயர் பிரியா, "மாணவரின் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசிரியரும் ரோல் மாடலாக இருப்பார். சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வி வழங்குகிறோம் என்ற நோக்கில் இலச்சினை மற்றும் குறும்படம் வெளியிட்டுள்ளோம் என கூறினார்."


தலைமை பொறுப்பு, முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றை மாணவர்களிடம் வளர்க்க பள்ளிகளில் மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எண்ணங்களை வண்ணம் ஆக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிறந்த திட்டங்கள் கொண்டு வரப்படும்" என்றார்.


அமைச்சர் மா. சுப்ரமணியன், ’’பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள். 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சல் காரணமாக எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்."


 

குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால் முதலில் அரசு தான் நிற்கும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை. மேலும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்ற நிலையை உருவாக்க வேண்டாம்" என்றார். அமைச்சர் கே.என் நேரு  ஆசிரியர்களுக்கு போட்டி வைப்பது போல தமிழ்நாடு அமைச்சர்களுக்குள் பெரிய போட்டி நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர்பாபு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கோவில்களில் எல்லாம் ஆய்வு நடத்துகிறார். சுகாதார துறை அமைச்சரின் பணியை கண்டு வியப்படைந்தது உண்டு. சேகர் பாபு எவ்வளவு சாமி கும்பிட்டாலும்,  மா.சுப்பிரமணியன் என்ன ஊசி போட்டாலும் மாநகராட்சி நல்லா வேலை செய்தால் தான் மீண்டும் அமைச்சர் ஆக முடியும் என பழமொழி கூறி கிண்டல் செய்தார். 


119 தொடக்கப்பள்ளி, 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை என மொத்தம் 281 பள்ளிகளில் ஒரு லட்சத்து நான்காயிரத்து 743 மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி பள்ளி ஏழை எளிய நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு உதவிகரமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களை நன்கு தயார் செய்யுங்கள், உங்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நாங்கள் தயார் செய்து தருகிறோம். 


மாநகராட்சிக்கு கலை அறிவியல், பொறியியல் மருத்துவ கல்லூரி வேண்டும் என அதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம். தென் சென்னையில் மருத்துவக்கல்லூரி அமைக்க திட்டமிட்டு வருகிறோம். அதற்கு முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். மாநகராட்சியில் 50 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு மாநகராட்சி கல்லூரியில் 32% இடஒதுக்கீடு கிடைக்கும். அதன் மூலம் மாநகராட்சி மேலும் உத்வேகத்துடன் செயல்படும். 


மாநகராட்சி ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுங்கள், உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு சட்டப்படி உரிய முறையில் மாநகராட்சி செய்து தரும். சென்னை மாநகராட்சி மற்ற மாநகராட்சிக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். முன்னோடி மாநிலமான மஹாராஷ்டிரா மாநகராட்சிக்கு இணையாக நாம் செயல்பட வேண்டும். அரசிற்கு இணையாக ஒரு தனி அரசாங்கம் போல் மாநகராட்சி செயல்படுகிறது. அதனை மேலும் சிறப்புடன் செயல்பட அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை பருவமழைக்குள் மூட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என அமைச்சர் நேரு தெரிவித்தார்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...