கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு - இனி தடுப்பூசி முகாம்கள் புதன்கிழமைகளில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் (Mega Vaccination Camps to be held on Sundays in Tamil Nadu Completed - Now Vaccination Camps will be held on Wednesdays in Government Hospitals - Minister M.Subramanian)...

 தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நிறைவு - இனி தடுப்பூசி முகாம்கள் புதன்கிழமைகளில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் (Mega Vaccination Camps to be held on Sundays in Tamil Nadu Completed - Now Vaccination Camps will be held on Wednesdays in Government Hospitals - Minister M.Subramanian)...





அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் சங்கத் தலைவர் நான்தான் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (I am the President of all Teachers' Federations - Minister Anbil Mahesh Poyyamozhi)...

 அனைத்து ஆசிரியர் சங்கங்களுக்கும் சங்கத் தலைவர் நான்தான் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (I am the President of all Teachers' Federations - Minister Anbil Mahesh Poyyamozhi)...





பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் : அறத்துப்பால்


இயல்: பாயிரவியல்


அதிகாரம்: கடவுள் வாழ்த்து


குறள் : 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.


பொருள்:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் பயன் ஒன்றுமில்லை. எனவே பெரியவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.


பழமொழி :

Measure thrice before you cut once


ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.


 2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது . 


பொன்மொழி :


நல்ல முடிவுகள்.. அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கிறது.


பொது அறிவு :


1.இந்தியாவின் நறுமணத் தோட்டம் என்று அழைக்கப்படுவது எது ? 


 கேரளா. 


 2. அதிகாலையின் அமைதி பூமி என்று அழைக்கப்படுவது எது? 


 கொரியா.


English words & meanings :


u·nan·i·mous - Sharing the same opinions or views. Adj. the doctors were unanimous in their diagnoses. ஒரே கருத்துள்ள


ஆரோக்ய வாழ்வு :


கருப்பு கொண்டைக்கடலையை எண்ணெய் சேர்க்காமல், உப்பு மட்டும் கலந்து வறுத்து எடுப்பதை தான் நாம் உப்புக்கடலை என்று சொல்லுவோம். இந்த உப்புக்கடலை மிகச்சிறந்த, ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். இதில் புரதச்சத்து, டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.


NMMS Q 67:


Wardrobe : Clothes :: Purse : ? 

a) Pocket b) Money c) Zip d) Fare 


Answer : Money


செப்டம்பர் 26


மன்மோகன் சிங் அவர்கள் பிறந்த நாள்


மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். 


1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.


நீதிக்கதை


மன உறுதி


ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப்பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். 


அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார்.


ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும், விவேகானந்தரையும் விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.


அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். சிறிதுகூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது? என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும், சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். 


ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால் தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது, என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டுபயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.


இன்றைய செய்திகள்


26.09.22


* புதுச்சேரி, காரைக்காலில் ஒரே நாளில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து 46 குழந்தைகள் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


* தமிழகத்தில் 3.40 கோடி பேர் கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


* பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: தமிழக டிஜிபி எச்சரிக்கை.


* தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கரோனா - தொற்று அதிகரிப்பதால் மக்கள் அச்சம்.


* நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 4.73 கோடி நிலுவை வழக்குகளால் திணறும் நீதித் துறை: அரியர்ஸ் கமிட்டி அமைக்க சட்டத் துறை வல்லுநர்கள் யோசனை.


* பாதுகாப்பும் கவனமும் அற்ற சிகிச்சையால் ஆண்டுக்கு 26 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


* டீ குடித்தால் டைப் 2 சர்க்கரை நோயை தவிர்க்கலாம்: 10 லட்சம் பேரிடம் சீனாவின் வூஹான் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தகவல்.


* ஜூலியஸ் கோப்பை செஸ் போட்டி: அர்ஜூன் எரிகைசி-கார்ல்சென் இறுதிப்போட்டியில் மோதல்.


* கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.


* "மன்கட்" முறையில் ரன்-அவுட் செய்த தீப்தி - அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து அணியினர்.


Today's Headlines


* Puducherry, Karaikal, after 470 children were infected with viral fever in a single day, 46 children were hospitalized as inpatients.


* 3.40 crore people in Tamil Nadu have not received Corona booster vaccine: Minister M. Subramanian informed.


 *Arrest under National Security Act if disturbing public peace: Tamil Nadu DGP warns.


 * Corona is picking up speed again in Tamil Nadu - people are afraid due to the increase in infection.


 * Judiciary bogged down by 4.73 crore pending cases in courts across the country: Legal experts suggest formation of Arrears Committee.


 * According to the World Health Organization, 26 lakh people die every year due to unsafe and careless treatment.


 * Drinking tea can prevent type 2 diabetes: a study of 1 million people by Wuhan University in China shows.


*  Julius Cup Chess Tournament: Arjun Erikaisi-Carlsen clash in the final.


 * Latvia's Jelena Ostapenko has qualified for the finals of the Korea Open Women's International Tennis Tournament.


 * Deepthi make runs out in "mancut" style - shocked England team.



Today's (26-09-2022) Wordle Answer...

                                                                                

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (26-09-2022) Wordle Answer: BRISK











 

இன்றைய (26-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 26, 2022



புதிய வாகனங்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நினைவாற்றலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோக பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். மனை சார்ந்த செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.


பரணி : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 


கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 26, 2022



புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுயதொழிலில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 26, 2022



பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தாற்போல் வீடு மற்றும் வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். புதிய நபர்களால் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.


திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 26, 2022



தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகளால் மாற்றமான சூழல் அமையும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செய்தொழிலில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : மாற்றமான நாள்.


பூசம் : முன்னேற்றம் உண்டாகும். 


ஆயில்யம் : புதுமையான நாள்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 26, 2022



உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத உதவியின் மூலம் தனவரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




மகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


பூரம் : சோர்வு ஏற்படும்.


உத்திரம் : கருத்து வேறுபாடுகள் மறையும். 

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 26, 2022



ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.


அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 26, 2022



சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மனதில் ஒருவித பதற்றமான சூழல் அமையும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : நன்மை உண்டாகும். 


விசாகம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 26, 2022



வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழல் அமையும். வங்கி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த சூழ்நிலைகள் ஏற்படும்.  சர்வதேச வணிகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : அறிமுகம் கிடைக்கும். 


அனுஷம் : திருப்திகரமான நாள்.


கேட்டை : லாபம் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 26, 2022



கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தின் மூலம் தொழில் சார்ந்த உதவி சாதகமாக அமையும். தூக்கமின்மையினால் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் ஏற்பட்ட இனம்புரியாத பயம் மற்றும் கவலைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மூலம் : முன்னேற்றம் ஏற்படும். 


பூராடம் : உதவி சாதகமாகும்.


உத்திராடம் : குழப்பம் நீங்கும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 26, 2022



நண்பர்களுடனான பேச்சுவார்த்தைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். இளைய சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : அனுகூலமான நாள்.


திருவோணம் : கவனம் வேண்டும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 26, 2022



பிள்ளைகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களிடம் கனிவுடன் செயல்படுவது பிரிவினையை தடுக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானத்துடன் செயல்படவும். போட்டி தொடர்பான செயல்பாடுகளின் மூலம் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். திருப்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அவிட்டம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.


பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். 

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 26, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு உண்டாகும். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


ரேவதி : தனவரவு உண்டாகும்.

---------------------------------------


பள்ளி மேலாண்மைக் குழு செயலி - அனைத்து காணொளிகள் இணைப்புகள் - ஒரே பக்கத்தில் (School Management Committee App - All Videos Links in One Page)...

 


1. பள்ளி மேலாண்மைக் குழு செயலி - உள்நுழைதல் (School Management Committee App - Login)...



2- பள்ளி மேலாண்மைக் குழு செயலி - உறுப்பினர் விவரம் (School Management Committee App - Members Details)...



3- பள்ளி மேலாண்மைக் குழு செயலி - உறுப்பினர்கள் வருகைப்பதிவு (School Management Committee App - Members Attendance)...



4- பள்ளி மேலாண்மைக் குழு செயலி - பிரிவு ஒதுக்கீடு (School Management Committee App - Section Allocation)...



5- பள்ளி மேலாண்மைக் குழு செயலி - தரவுகள் சேகரிப்பு (School Management Committee App - Collection of Data)...



6 - பள்ளி மேலாண்மைக் குழு செயலி - பள்ளி மேம்பாட்டுத் திட்டமிடல் - பகுதி 1 (School Management Committee App - School Development Planning – Part 1)...



7 - பள்ளி மேலாண்மைக் குழு செயலி - பள்ளி மேம்பாட்டுத் திட்டமிடல் - பகுதி 2 (School Management Committee App - School Development Planning – Part 2)...



8 - பள்ளி மேலாண்மைக் குழு செயலி - பள்ளி மேம்பாட்டுத் திட்டமிடல் - பகுதி 3 (School Management Committee App - School Development Planning – Part 3)...



9- பள்ளி மேலாண்மைக் குழு செயலி - தீர்மானங்களை காணுதல்  (School Management Committee App - Finding Resolutions)...



10- பள்ளி மேலாண்மைக் குழு செயலி - பள்ளி மேம்பாட்டுத்திட்ட மதிப்பாய்வு (School Management Committee App - School Development Plan Review)...




பள்ளி மேலாண்மைக் குழு (SMC) செயலி - பள்ளி மேம்பாட்டுத்திட்ட மதிப்பாய்வு (School Management Committee App - School Development Plan Review)...



>>>  பள்ளி மேலாண்மைக் குழு (SMC) செயலி - பள்ளி மேம்பாட்டுத்திட்ட மதிப்பாய்வு (School Management Committee App - School Development Plan Review)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is Tamilnadu government a government in favour of teachers - government employees - pensioners - workers? Or negative government? - Teacher's Federation Questioned

தமிழ்நாடு அரசு, ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - ஓய்வூதியர்கள் -  தொழிலாளர்களின் சாதக அரசா? அல்லது பாதக அரசா? - ஆசிரியர் கூட்டணி கேள்வி  *மத்த...