கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Canara Bank - SNA Account Login செய்யும் முறை - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval - Vendor Payment - Payment Approval - Steps...

 


>>> Canara Bank - SNA Account Login Details - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval -  Vendor Payment - Payment Approval - Steps...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



1 முதல் 3 ஆம் வகுப்பு, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு குறுவளமையக் கூட்டம் (CRC) முதன்மை ஏதுவாளர்களுக்கான (Chief Facilitator) மாநில அளவிலான பயிற்சிக்கு ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தல் & 26.11.2022 அன்று குறுவளமைய (CRC) கலந்தாலோசனைக் கூட்டம் 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்தும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு Spoken English சார்ந்தும் நடைபெறவுள்ளது - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (26.11.2022 Cluster Resource Center Discussion Meeting (CRC) will be held for Class 1 to 3 based on Ennum Ezhuthum and Class 4 and 5 based on Spoken English - Proceedings of SCERT Director) ந.க.எண்: 01625/ ஊ1/ 2022, நாள்: 10-11-2022...



>>>  1 முதல் 3 ஆம் வகுப்பு, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு குறுவளமையக் கூட்டம் (CRC) முதன்மை ஏதுவாளர்களுக்கான (Chief Facilitator) மாநில அளவிலான பயிற்சிக்கு ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தல் & 26.11.2022 அன்று குறுவளமைய (CRC) கலந்தாலோசனைக் கூட்டம் 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்தும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு Spoken English சார்ந்தும் நடைபெறவுள்ளது - SCERT இயக்குநரின் செயல்முறைகள் (26.11.2022 Cluster Resource Center Discussion Meeting (CRC) will be held for Class 1 to 3 based on Ennum Ezhuthum and Class 4 and 5 based on Spoken English - Proceedings of SCERT Director) ந.க.எண்: 01625/ ஊ1/ 2022, நாள்: 10-11-2022...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2022 - ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAM (AISSEE - 2023)...



>>>  சைனிக் பள்ளிகள் நுழைவுத் தேர்வு - அறிவிப்பு - ALL INDIA SAINIK SCHOOLS ENTRANCE EXAM (AISSEE - 2023) - Public Notice, Dated: 21-10-2022...



>>> விண்ணப்பப் படிவம் (Application Form Link)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அன்பான பெற்றோர்கள்,


 சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு 6 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு 2023...


 ஆன்லைன் விண்ணப்பத்தை முடிந்தவரை விரைவாக நிரப்பவும்....


 வயது தகுதி:


  VI நுழைவுத் தகுதி:

 

 01-04-2011 முதல் 31-03-2013 வரை பிறந்தவர்கள்.. 


 IX நுழைவுத் தகுதி:

 

 01-04-2008 முதல் 31-03-2010 வரை பிறந்தவர்கள்


பயிற்சி மையத்திற்குத் திரும்பி வரும்போது விண்ணப்பப் படிவத்தை விண்ணப்பித்து அதன் பிரிண்ட் அவுட்டை எடுத்து வரவும்...


 குழந்தைகளின் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவது பெற்றோர்களின் பொறுப்பு...



*ஸ்கேன் செய்ய வேண்டிய ஆவணங்கள்:

 1.மாணவரின் புகைப்படம்.(CANDIDATE'S PHOTOGRAPH) 


 2. கட்டைவிரல்  அச்சு . (THUMB IMPRESSION) 


 3.கையொப்பம்.(SIGNATURE) 


4.குடியிருப்பு சான்றிதழ்.( DOMICILE CERTIFICATE) 


 5.பிறப்புச் சான்றிதழ்.( BIRTH CERTIFICATE) 


 6.பிரிவு சான்றிதழ் (SC/ST/OBC). [CATEGORY CERTIFICATE SC/ST/OBC]



ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு...

https://examinationservices.nic.in/examsys22/root/Home.aspx?enc=WPJ5WSCVWOMNiXoyyomJgNJ12TgFb0How7vAp8qobtHBJock6OdAUHq3EwQOM9KO


பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு...


இந்தியாவில் உள்ள 100 சைனிக் பள்ளிகளில் (CBSE) இரண்டு மட்டுமே தமிழகத்தில் உள்ளது.


*1. அமராவதி நகர் - சைனிக் பள்ளி (1962)*

*6-ஆம் வகுப்பு (80boys + 10girls)* & 9th std seats time of admission


*2. வேதா சைனிக் பள்ளி தூத்துக்குடி(2022)*

*6-ஆம் வகுப்பு (80boys + 10girls)* & 9th std seats may be 90 students.


அடுத்த கல்வியாண்டிற்கு (2023-2024)...


6 மற்றும் 9ஆம் வகுப்பு 

சேர்க்கைக்கு *"ALL INDIA ENTRANCE EXAM -2023"* நடைபெறுகிறது.

75% tamilnadu students + 25% other states students.


வாய்ப்பை மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.


சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% சதவீதம் குறைப்பு - நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை - செய்தி வெளியீடு எண்: 1978, நாள்: 09-11-2022 (10% percentage reduction in electricity charges for small, micro and medium enterprises - Tamil Nadu Government action in response to the request of the enterprises - Press Release No: 1978, Date: 09-11-2022)...

 சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% சதவீதம் குறைப்பு - நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை - செய்தி வெளியீடு எண்: 1978, நாள்: 09-11-2022 (10% percentage reduction in electricity charges for small, micro and medium enterprises - Tamil Nadu Government action in response to the request of the enterprises - Press Release No: 1978, Date: 09-11-2022)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



வாக்காளர் (Voter's) பட்டியலில் பெயர் சேர்த்தல் / திருத்துதல் / இடமாற்றம் / ஆதார் எண் இணைத்தல் முகாம் - தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1976, நாள்: 09-11-2022 (Name Addition / Correction / Transfer / Aadhaar Number Linking Camp in Electoral Roll - Required Documents and Forms - Tamil Nadu Government Press Release No: 1976, Dated: 09-11-2022)...



>>> வாக்காளர் (Voter's) பட்டியலில் பெயர் சேர்த்தல் / திருத்துதல் / இடமாற்றம் / ஆதார் எண் இணைத்தல் முகாம் - தேவையான ஆவணங்கள் மற்றும் படிவங்கள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1976, நாள்: 09-11-2022 (Name Addition / Correction / Transfer / Aadhaar Number Linking Camp in Electoral Roll - Required Documents and Forms - Tamil Nadu Government Press Release No: 1976, Dated: 09-11-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2022 - School Morning Prayer Activities...

 


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.11.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்:அறத்துப்பால் 

இயல்:பாயிரவியல் 

அதிகாரம்:அறன் வலியுறுத்தல் 

குறள் : 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.  

பொருள்:


பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்



பழமொழி :

Better do a thing than wish it to be done.


தன் செயலைத் தானே செய்தல் அழகு.



இரண்டொழுக்க பண்புகள் :


1. அன்பையும் மரியாதையும் பிறருக்கு தயங்காமல் கொடுப்பேன் 


2. மகிழ்ச்சி என்னும் பெரிய பழத்தை விட நம்பிக்கை என்னும் சிறிய விதை பெரிதாக வளர்ந்து அநேக பழங்கள் கொடுக்கும் எனவே நம்பிக்கை விதை செல்லுமிடமெல்லாம் விதைப்பேன்.


பொன்மொழி :


நேரம் என்பது ஒரு மாயை. --ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


பொது அறிவு :


1. ஷட்டில் காக் விளையாட்டில் பயன்படுத்தும் பந்துகளில் எந்தப் பறவையின் இறகுகள் பயன்படுத்தப்படுகின்றன? 


வாத்து இறகு. 


2. ஐஸ் கட்டிகளை தெர்மாகோலில் வைப்பது ஏன்? 


தெர்மாகோல் வெப்பத்தையும் குளிரையும் அரிதில் கடத்தி.


English words & meanings :


Vitrics - study of glass materials. Noun. கண்ணாடி பொருட்கள் குறித்த அறிவியல்


ஆரோக்ய வாழ்வு :


முலேத்தி, எந்த கலவையிலும் உட்கொண்டால், இருமல், சளி, தொண்டை புண் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளிலிருந்து பரந்த நன்மைகள் மற்றும் நிவாரணம் கிடைக்கும். முலேத்தி குச்சிகளை எந்த கலவையும் இல்லாமல் உட்கொள்ளலாம். வேரின் ஒரு துண்டை மென்று சாப்பிடுவது இருமலில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது மற்றும் தொண்டையை சுத்தப்படுத்துகிறது.



NMMS Q :


சமணத்தின் தொடக்க காலத்தில் சமணத்துறவிகள் சமணத்தின் ___________உறுதிமொழிகளைக் கடுமையாக பின்பற்றினர்.


 விடை ஐந்து


நீதிக்கதை


பூனையும் எலியும்


ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனை வந்ததும் எலிகளால் முன்புபோல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. 


கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு, மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கிவிட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும், காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்து சாப்பிட்டது. 


நீதி :

எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்ப்பது தவறு.


இன்றைய செய்திகள்


10.11.22


* மேட்டூர் அணை உபரி நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிட கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.


* சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


* கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தமிழக மருத்துவத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.


* தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


* குரூப் 2 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சியின் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.


* நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் தலைநகர் டெல்லி, வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நில அதிர்வு உணரப்பட்டது.


* மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மிக மோசமாக காற்று மாசுபாடு நிலவும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிஹார் மாநிலத்தின் கதிஹார் முதல் இடத்தில் உள்ளது.


* இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


* தைவானுடன் தொடரும் பதற்றம்: போருக்குத் தயாராக ராணுவத்துக்கு சீன அதிபர் உத்தரவு.


* ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் நடைபெறும் தேதி, இடம் அறிவிப்பு.


* ஐசிசி டி20 தரவரிசை:  பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.


* பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இரட்டையர் பிரிவில் ரஷியா-பெல்ஜியம் ஜோடி சாம்பியன்.


Today's Headlines


* In the case which requested the government to direct the extra water from Mettur dam to lakes and ponds - High Court asked the government about the steps taken


* For the small-scale industries, the TN government canceled the electric bill claimed for the current usage during the peak period of the day.


* The private medical colleges which collect more fees than the norms, approval will be canceled - warning by the Ministry of Medicine.


* In the Southern East part of the Bengal Sea a low-level atmospheric pressure is formed. This information is from Chennai Metrology Department.


In the Nepal earthquake, 6 people were killed. An echo of the earthquake is felt in India's capital and the North Eastern state of Manipur.


* The Central Pollution Control Board has released a list of cities with the worst air pollution.  Bihar's Katihar tops the list.


 * Statistics show that most foreigners living in England and Wales are Indians.


* Tensions with Taiwan continue: Chinese president orders military to prepare for war


* IPL 2023 Mini Auction Date, Venue Announcement


* ICC T20 Ranking:  India's Suryakumar has retained the top spot in the batsmen rankings.


 * Women's Tennis Championship: Russia-Belgium pair champion in doubles.

 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (10-11-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 10, 2022




பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் லாபம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


பரணி : ஆர்வம் உண்டாகும். 


கிருத்திகை : லாபம் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

நவம்பர் 10, 2022




சிக்கனத்துடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் நினைத்த தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிபுரியும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



கிருத்திகை : தேவைகள் பூர்த்தியாகும். 


ரோகிணி : மதிப்பு அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : கவலைகள் நீங்கும்.

---------------------------------------




மிதுனம்

நவம்பர் 10, 2022




வியாபாரத்தில் பொருளாதார சிக்கல்கள் குறையும். ஆடம்பர பொருட்களால் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் குறையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களின் மூலம் விரயம் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு  


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : சிக்கல்கள் குறையும்.


திருவாதிரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.


புனர்பூசம் : விரயம் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

நவம்பர் 10, 2022




சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணிகளில் புதுவிதமான சூழல் அமையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். 


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.


ஆயில்யம் : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------




சிம்மம்

நவம்பர் 10, 2022




புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான சில பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழல் அமையும். நட்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்



மகம் : ஆர்வம் உண்டாகும்.


பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





கன்னி

நவம்பர் 10, 2022




வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வாகனங்களால் வீண் செலவுகள் நேரிடலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.  மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



உத்திரம் : வாய்ப்புகள் அமையும். 


அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சித்திரை : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------




துலாம்

நவம்பர் 10, 2022




எதிலும் அவசரமின்றி விவேகத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : விவேகத்துடன் செயல்படவும். 


சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும். 


விசாகம் : பொறுமையுடன் செயல்படவும். 

---------------------------------------




விருச்சிகம்

நவம்பர் 10, 2022




ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உயர்கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.  செய்கின்ற முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்



விசாகம் : முடிவு கிடைக்கும்.


அனுஷம் : அனுபவம் உண்டாகும். 


கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

நவம்பர் 10, 2022




நெருக்கமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூராடம் : ஆதாயகரமான நாள்.


உத்திராடம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 10, 2022




வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நிறைவான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.


திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




கும்பம்

நவம்பர் 10, 2022




மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதுமையான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.


சதயம் : பொறுப்புகள் கிடைக்கும். 


பூரட்டாதி : முயற்சிகள் சாதகமாகும்.

---------------------------------------




மீனம்

நவம்பர் 10, 2022




உணர்வுப்பூர்வமாக செயல்படுவதை விட அறிவுப்பூர்வமாக செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியான சில பணிகளை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முயற்சி மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : மேன்மையான நாள்.


உத்திரட்டாதி : முடிவு கிடைக்கும்.


ரேவதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 2 - SA Marks - 1 to 5th Std - Input in TNSED App - Guidelines - DEE Proceedings

    2024-25ஆம் கல்வி ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பிற்கான இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பெண்கள் - TNS...