கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (07-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

டிசம்பர் 07, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபிட்சம் உண்டாகும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : சுபிட்சம் உண்டாகும்.


பரணி : எண்ணங்கள் ஈடேறும்.


கிருத்திகை : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 07, 2022



மனதில் ஒருவிதமான குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களிடத்தில் கோபமின்றி செயல்படவும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் உழைப்பு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : கோபமின்றி செயல்படவும். 


ரோகிணி : உழைப்பு மேம்படும். 


மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும். 

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 07, 2022



எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும். வெளியூர் நபர்களின் மூலம் தொழிலில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றத்தின் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 




மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


திருவாதிரை : அனுசரித்து செல்லவும். 


புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------



கடகம்

டிசம்பர் 07, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவு எடுக்கவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : காரியங்கள் ஈடேறும்.

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 07, 2022



சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கையான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : முடிவு கிடைக்கும்.


பூரம் : இன்னல்கள் நீங்கும். 


உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------



கன்னி

டிசம்பர் 07, 2022



பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். தந்தை வழியில் உதவி கிடைக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் படிப்படியாக குறையும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : மாற்றம் உண்டாகும்.


அஸ்தம் : விரயங்கள் ஏற்படும். 


சித்திரை : கவலைகள் குறையும்.

---------------------------------------



துலாம்

டிசம்பர் 07, 2022



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். முன்கோபத்தை குறைத்து கொள்வதால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : நம்பிக்கை மேம்படும்.


விசாகம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 07, 2022



எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




விசாகம் : உதவி கிடைக்கும்.


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : முடிவு கிடைக்கும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 07, 2022



குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கிய ஆவணங்களில் கவனம் வேண்டும். இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




மூலம் : ஒற்றுமை மேம்படும்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திராடம் : முடிவு கிடைக்கும்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 07, 2022



குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் அடைவீர்கள். தவறிப்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இணைய வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திராடம் : ஆதாயம் அடைவீர்கள்.


திருவோணம் : நெருக்கம் உண்டாகும். 


அவிட்டம் : திறமை வெளிப்படும். 

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 07, 2022



பெரியவர்களின் ஆலோசனைகளால் நம்பிக்கை உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அவிட்டம் : நம்பிக்கை உண்டாகும்.


சதயம் : நெருக்கடியான நாள்.


பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 07, 2022



பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் உடனிருப்பவர்களால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிடிவாத குணத்தினை மாற்றி கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்


உத்திரட்டாதி : ஆதரவான நாள்


ரேவதி : தீர்வு கிடைக்கும்



திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக பெறுகிற பட்டங்களை வேலைவாய்ப்பிற்கும் பதவி உயர்விற்கும் அங்கீகரித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன - 1. அரசாணை (நிலை) எண்: 107, நாள்: 18-08-2009 2. அரசாணை (நிலை) எண்: 242, நாள்: 18-12-2012 (1. G.O.Ms.No : 107, Dated: 18-08-2009 2. G.O.Ms.No : 242, Dated: 18-12-2012 - G.O.s published in Tamilnadu Open University website that Degrees obtained in Open University are eligible for Employment and Promotion)...



>>> திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக பெறுகிற பட்டங்களை வேலைவாய்ப்பிற்கும் பதவி உயர்விற்கும் அங்கீகரித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன - 1. அரசாணை (நிலை) எண்: 107, நாள்: 18-08-2009 2. அரசாணை (நிலை)  எண்: 242, நாள்: 18-12-2012 (1. G.O.Ms.No : 107, Dated: 18-08-2009 2. G.O.Ms.No : 242, Dated: 18-12-2012 - G.O.s published in Tamilnadu Open University website that Degrees obtained in Open University  are eligible for Employment and Promotion)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஒரு மைல் அற்புதம் - மனத்தடையே காரணம் - ரோஜர் பேனிஸ்டர் - Roger Gilbert Bannister (One Mile Miracle - Reluctance is the reason)...

 


ஒரு மைல் அற்புதம் - மனத்தடையே காரணம் - ரோஜர் பேனிஸ்டர் - Roger Gilbert Bannister (One Mile Miracle - Reluctance is the reason)...


இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள், மனித உடலின் ஓட்டத்திறனை ஆராய்ந்து மனித உடலுக்கு ஓடுவதில் ஒரு எல்லை உள்ளது. மனித உடலின் அமைப்புப் படி ஒரு மைல் தொலைவினை 4 நிமிடங்களுக்குள் ஓடுவது என்பது இயலாதது என்று கூறிவந்தனர். அதனை பெரும்பான்மை சமூகமும் ஏற்றுக்கொண்டது. ஆனால் நரம்பியல் நிபுணரும், ஓட்டப்பந்தய வீரருமான, ரோஜர் பேனிஸ்டர் மனிதனால் ஒரு மைல் தொலைவினை 4 நிமிடங்களுக்குள் கடக்கமுடியும் என்று நம்பினார். 


1954ம் வருடம் மே 6ம் தேதி, ஒரு மைல் ஓட்டத்தை 3.59 நிமிடங்களில் ஓடிக்கடந்தார். அதற்கடுத்து, 46 நாட்களில் ஆஸ்திரேலிய ஓட்டப்பந்தய வீரர், ஜான் லேன்டி என்பவர் ரோஜர் பேனிஸ்டருடைய சாதனையை முறியடித்தார். அதே வருடத்தில் இன்னும் சிலர் 4 நிமிடங்களுக்குள் ஓடிக்காட்டினர். 


அடுத்த பத்து ஆண்டுகளில் பலர், நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைல் தொலைவினை கடந்தனர். தற்போது பல ஆயிரம் ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த சாதனையை புரிந்து அதனை சாதாரணமான விஷயமாக மாற்றிவிட்டனர். தற்போது, மொராக்கோ நாட்டு வீரர், ஹக்கிம் குரோஷி ஒரு மைல் தொலைவினை 3.43 நிமிடங்களில் ஓடிக்கடந்தது உலகச் சாதனையாக இருக்கிறது. 


200 வருடங்களுக்கும் மேல் மனிதனால் சாதிக்கவே முடியாது என்று கூறிய ஒரு செயலை தனிநபர் ஒருவர், "ஏன் முடியாது?" என்று கேள்வி கேட்டார். அதனை தகர்த்தும் காட்டினார். அவர் தகர்த்ததும், உடனடியாக பல பேர் அதனை செய்யமுடிந்தது. 


இது மனவியல் தொடர்பான தடை தானே தவிர, உடல் தொடர்பானது அல்ல. ஒருவேளை பேனிஸ்டர் அன்று அந்த சாதனையை செய்திருக்கவில்லை என்றால் இன்று வரை மனித குலம் முழுக்க, ஒரு மைல் தூரத்தினை 4 நிமிடங்களுக்குள் மனிதனால் ஓடிக் கடக்கமுடியாது என்று நினைத்திருக்கக் கூடும்.


காலங்காலமாக இருந்த மனத்தடையை ஒருவர் உடைத்ததும், மற்றவராலும் அதே செயலை செய்யமுடிகிறது. மனித மனம், பெருஞ்செயல்கள் புரியக்கூடியவை என்பதை பேனிஸ்டர் உணர்த்தியிருக்கிறார். 


ஜெயிக்கவே முடியவில்லை என்றாலும், "யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது" தான்.




தொலைத்தூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - 3 மாதங்களில் ஆசிரியர் நியமன முறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் -உயர்நீதிமன்றம்(Those who have studied through distance education are not eligible for teaching jobs - Reconsider Teacher appointment procedures in 3 months - High Court)...

 3 மாதங்களில் ஆசிரியர் நியமன முறைகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்.. 


தொலைத்தூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - உயர்நீதிமன்றம் கருத்து...





சென்னை: தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியை நித்யா, பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வு முன்பாக இன்று (டிசம்பர் 6) விசாரணைக்கு வந்தது.


அப்போது, தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'ஆசிரியை நித்யா, பி.எட் தமிழில் படித்துப் பின்னர், பி.ஏ. ஆங்கிலம் படித்ததாலும், பி.ஏ.,வை தொலைதூரக் கல்வியில் படித்ததாலும் அவருக்கு ஆங்கில ஆசிரியை பிரிவில் பதவி உயர்வு வழங்க முடியாது' என்று வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆசிரியை நித்யா தமிழ் ஆசிரியை பிரிவில் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.


மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்கள்தான் ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் அல்ல என்று குறிப்பிட்ட நீதிபதி, இட ஒதுக்கீட்டின் கீழ் நியமித்தாலும் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், தற்போது தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணியில் இருப்பது வேதனைக்குரியது என்றும் கூறினார். அதுமட்டுமின்றி தொலைதூரக் கல்வியில் படித்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு 3 மாதங்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



>>> திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக பெறுகிற பட்டங்களை வேலைவாய்ப்பிற்கும் பதவி உயர்விற்கும் அங்கீகரித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள்...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு (PTA) 2022-2023ஆம் ஆண்டிற்கு இணைப்புக் கட்டணம் செலுத்தக் கோருதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (Request for Payment of Affiliation Fee to Tamil Nadu State Parent Teacher Association for the year 2022-2023 - Letter from Commissioner of School Education)...



>>> தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு 2022-2023ஆம் ஆண்டிற்கு இணைப்புக் கட்டணம் செலுத்தக் கோருதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் கடிதம் (Request for Payment of Affiliation Fee to Tamil Nadu State Parent Teacher Association for the year 2022-2023 - Letter from Commissioner of School Education)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்...? போன்ற தகவல்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய பதில்கள் (Documents required to get Genuineness of Teacher Eligibility Test Mark Certificate, Procedures to apply to get Genuineness of Teacher Eligibility Test Mark Certificate and to which officer to apply...? Answers given by Teachers'Recruitment Board)...


>>> ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள், ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் சான்றிதழின் உண்மைத்தன்மை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எந்த அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்...? போன்ற தகவல்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய  பதில்கள் (Documents required to get Genuineness of Teacher Eligibility Test Mark Certificate, Procedures to apply to get Genuineness of Teacher Eligibility Test Mark Certificate and to which officer to apply...? Answers given by Teachers'Recruitment Board)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இன்றைய (06-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

டிசம்பர் 06, 2022




எண்ணிய சில பணிகள் நிறைவேற அலைச்சல்கள் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கனிவான பேச்சுக்களின் மூலம் வியாபார பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


பரணி : சாதகமான நாள்.


கிருத்திகை : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 06, 2022




கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவெடுக்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.


ரோகிணி : தடைகள் குறையும்.


மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

டிசம்பர் 06, 2022




உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும். பத்திரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



மிருகசீரிஷம் : பொறுப்புகள் குறையும். 


திருவாதிரை : நிதானம் வேண்டும். 


புனர்பூசம் : சிந்தனைகள் உண்டாகும். 

---------------------------------------




கடகம்

டிசம்பர் 06, 2022




மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பேச்சுவன்மையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் தனவரவும், ஆதரவும் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : ஆதரவு மேம்படும்.


ஆயில்யம் : சேமிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 06, 2022




ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். கனிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மகம் : இன்னல்கள் குறையும்.


பூரம் : ஆதரவான நாள்.


உத்திரம் : கற்பனைகள் மேம்படும்.

---------------------------------------




கன்னி

டிசம்பர் 06, 2022




மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும்.  அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். குழப்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : துரிதம் உண்டாகும். 


அஸ்தம் : ஆதரவு கிடைக்கும். 


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------




துலாம்

டிசம்பர் 06, 2022




கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். உயர்கல்வி தொடர்பான முடிவுகளை தவிர்க்கவும். சமூக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். முயற்சிகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : ஆர்வமின்றி செயல்படுவீர்கள்.


விசாகம் : அலைச்சல்கள் மேம்படும். 

---------------------------------------




விருச்சிகம்

டிசம்பர் 06, 2022




சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : உதவிகள் கிடைக்கும். 


அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.


கேட்டை : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------




தனுசு

டிசம்பர் 06, 2022




வியாபாரம் ரீதியாக வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு சார்ந்த துறைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையை கையாள வேண்டும். சோர்வு விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 



மூலம் : நட்பு அதிகரிக்கும்.


பூராடம் : திறமைகள் வெளிப்படும்.


உத்திராடம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




மகரம்

டிசம்பர் 06, 2022




வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


திருவோணம் : ஒத்துழைப்பான நாள்.


அவிட்டம் : தடுமாற்றம் உண்டாகும். 

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 06, 2022




வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனை தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பெரியோர்களின் ஆலோசனைகளால் மனதில் தெளிவு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

டிசம்பர் 06, 2022




குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பணிகளில் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திறமைக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



பூரட்டாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...