கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புயல் நேரத்தில் கவனத்தில் கொள்ளவேண்டிய பாதுகாப்புக் குறிப்புகள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெளியீடு (Safety tips to keep in mind during storms - Tamilnadu State Disaster Management Board Release)...


>>> புயல் நேரத்தில் கவனத்தில் கொள்ளவேண்டிய பாதுகாப்புக் குறிப்புகள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெளியீடு (Safety tips to keep in mind during storms - Tamilnadu State Disaster Management Board Release)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.12.2022 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.12.2022 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால். 


அதிகாரம் : விருந்தோம்பல். 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.


விளக்கம்:

வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.


பழமொழி :

yourself first,others afterwards. 


தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள். 


2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்


பொன்மொழி :


நீங்கள் அடிவாங்கத் தயாராக இல்லை என்றால் உங்களால் அழகான சிலையாக மாறவும் முடியாது.


பொது அறிவு :


1.இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?


 டாக்டர் ராஜேந்திர பிரசாத். 


2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்? 


பண்டித ஜவஹர்லால் நேரு.


English words & meanings :


chord - musical tone. noun. இசை தந்தி, இசை குறிப்பு. பெயர்ச் சொல். cord - rope. noun.கயிறு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் சி, பி 6 மற்றும் கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.


NMMS Q


0 கெல்வின் வெப்பநிலை என்பது __________ 


விடை: தனிச் சுழி


டிசம்பர் 09


ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் அவர்களின் பிறந்தநாள்


ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் (Ida Sophia Scudder, டிசம்பர் 9, 1870 – மே 23, 1960) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவராவார். இவர் வேலூரில் உள்ள கிருத்தவ மருத்துவக் கல்லூரியை நிறுவியதற்காக அறியப்படுகிறார்.




1914 இல் நெடு விடுப்பில் ஐடா அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915 இல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிவந்தார், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் விரைவுப்படுத்தினார் இதையடுத்து 1918 இல் பட்டய மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதியானது, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து பெற்றார். 1918 ஆகத்து 12 இல் ஒன்றிய மறைப்பணி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். 1948 இல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் அங்கே மருத்துவம் படிக்கத் தொடங்கினர்.


நீதிக்கதை


குரங்கு அறிஞர்


அறிஞர் ஒருவர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுத நினைத்தார். அவர் அமைதியான இடத்திற்கு செல்லலாம் என்று அரக்கர்கள் இருக்கும் இடத்திற்கு, தெரியாமல் சென்றுவிட்டார். அறிஞரை பார்த்த ஒரு அரக்கன் யார் நீ? என்றான். 


நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடி வந்தேன்! என்றார். இங்கு வந்ததற்கு தண்டனை கொடுப்பேன் என்று சொல்லி அவரை குரங்காக மாற்றிவிட்டான் அரக்கன். 


அவர் அழுதுகொண்டே, ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் குரங்குகளைப் போல் பழங்களைத் தின்றார். பின்பு அவர் நகரத்திற்கு சென்றார். அங்கு பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்த ஒரு கப்பலில் அவர் ஏறினார். அதிலிருந்தவர்கள் சத்தம்க்கூட போட்டனர். குரங்கை வெளியே அனுப்புங்கள் என்று கத்தினர். 


கப்பலின் தலைவன் அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்! என்றார். 


அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் மிகவும் நன்றாக தகுந்த முறையில் எழுதி அனுப்புபவர்க்கு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் செய்தி அறிவிக்கப்பட்டது. 


அனைவரும் செய்தி எழுதினர், அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். எல்லாச் செய்திகளையும் அரசர் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்ததால், அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து வந்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர். 


ஆனால், அரசர் தீர்மானமாக குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு இல்லை. ஏதோ அரக்கர்களால் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் அறிஞரை பழைய நிலைக்கு மாற்றினாள். 


அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றி விஸ்வாசத்தோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார். 


நீதி :

அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.


இன்றைய செய்திகள்


09.12.22


* ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு.


* தென்னங்கன்றுகள், பயறு விதைகள் விநியோகம் தொடக்கம்; கரும்புக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை: ஆணைகளை வழங்கினார் முதல்வர்  ஸ்டாலின்.


* வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் நகரும் வேகம் மணிக்கு 6 கி.மீட்டர் என்பதில் இருந்து 11 கி.மீட்டராக அதிகரித்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர மருத்துவத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.


* விசாரணையை பார்க்கும் வகையில் மொபைல் செயலி 2.0 உச்ச நீதிமன்றத்தில் தொடக்கம்.


* அக்னிபாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கடற்படையினருக்கு ஐஎன்எஸ் சில்காவில் பயிற்சி .


* உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை 2022-ம் ஆண்டின் சிறந்த நபர் என டைம்ஸ் இதழ் கவுரவித்துள்ளது. அவருக்கு ‘உக்ரைனின் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டியுள்ளது.


* 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.


* டிவிசன் ஹாக்கி லீக்: தமிழ்நாடு தபால் துறை அணி அரைஇறுதிக்கு தகுதி.


* உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பார்த்துள்ளனர் - 'பிபா' தலைவர் தகவல்.



Today's Headlines


TET results are published on the website.


 Distribution of coconut saplings and lentil seeds started;  Special incentive of Rs 195 for sugarcane: Chief Minister Stalin issued orders.


 According to the Chennai Meteorological Department, the moving speed of Cyclone Mantus in the Bay of Bengal has increased from 6 kmph to 11 kmph.


 For the first time in India, a post-graduate course in emergency medicine has been started in 23 government medical colleges.


 Mobile App 2.0 Launched in Supreme Court to Watch Trials


 Mariners who were selected under Agnipath Program are undergoing training at INS in Silka


 Zelenskyy, the President of Ukraine, has been honored by Times Magazine as the Person of the Year 2022.  He has been hailed as 'the inspiration of Ukraine'.


 BCCI today released the schedule of international matches to be held in India from January to March 2023.


 Divisional Hockey League: Tamil Nadu Postal Department qualifies for the semi-finals.


 200 crore people watched World Cup soccer match worldwide - 'FIBA' president informs.


மாண்டஸ் புயல் கனமழை காரணமாக 09.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 09.12.2022 due to Mandus Cyclone heavy rain) விவரம்...

 

    


மாண்டஸ் புயல் கனமழை காரணமாக 09.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 09.12.2022 due to Mandus Cyclone heavy rain) விவரம்...

      

🌧  கனமழை காரணமாக நாளை (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... :


⭕  கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை பள்ளிகள்) 

⭕️  கரூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை.    

⭕️  தேனி மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திண்டுக்கல் (கொடைக்கானல், சிறுமலை பகுதி-பள்ளி மற்றும் கல்லூரிகள்) மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  ராமநாதபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  சிவகங்கை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருச்சிராப்பள்ளி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருவண்ணாமலை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  தருமபுரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  நாமக்கல் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  சேலம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  புதுக்கோட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  மயிலாடுதுறை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  பெரம்பலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  அரியலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருவாரூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருப்பத்தூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  சென்னை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  வேலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  விழுப்புரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    

⭕️  புதுச்சேரி / காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை.    



      







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


மாண்டஸ் புயல் காரணமாக ஆறு மாவட்டங்களில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரத்தில் இன்று இரவு அரசு பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


பேருந்து நிறுத்தங்களில் அதிக கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கு உத்தரவு .


அனைத்து துறை அதிகாரிகள் தலைமை அலுவலகத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.



அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 தேதிகளில் சென்னையில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review meeting for all District Chief Educational Officers - to be held at Chennai on 12.12.2022 and 13.12.2022 - Agenda - Proceedings of the Commissioner of School Education)...


>>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 12.12.2022 மற்றும் 13.12.2022 தேதிகளில் சென்னையில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review meeting for all District Chief Educational Officers - to be held at Chennai on 12.12.2022 and 13.12.2022 - Agenda - Proceedings of the Commissioner of School Education)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரியலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத்தன்மை (Genuineness of Teacher Eligibility Certificate issued in Ariyalur District)...

 

>>> அரியலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத்தன்மை (Genuineness of Teacher Eligibility Certificate issued in Ariyalur District)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


புயல் கனமழை காரணமாக 08.12.2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 08.12.2022 due to heavy rain) விவரம்...

    


கனமழை காரணமாக 08.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 08.12.2022 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (08.12.2022) விடுமுறை...


1.திருவாரூர் (பள்ளிகளுக்கு மட்டும்)

2.தஞ்சாவூர்  (பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு)







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இன்றைய (08-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

டிசம்பர் 08, 2022



உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரம் ரீதியான பொருளாதார பிரச்சனைகள் குறையும். பழைய நண்பர்களின் சந்திப்புகளால் இனிமையான தருணங்கள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்களை கூறுவதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




அஸ்வினி : ஆர்வமின்றி செயல்படுவீர்கள். 


பரணி : இனிமையான நாள்.


கிருத்திகை : அனுகூலம் ஏற்படும். 

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 08, 2022



சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒற்றுமையான சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நவீன கருவிகளை வாங்கும் முயற்சிகள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 




கிருத்திகை : ஒற்றுமை உண்டாகும்.


ரோகிணி : முயற்சிகள் ஈடேறும். 


மிருகசீரிஷம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 08, 2022



குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வித்தியாசமான பொருட்சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும். பயனற்ற விவாதங்களையும், எண்ணங்களையும் தவிர்ப்பதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். தனவரவில் சுமாரான சூழல் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும். 


திருவாதிரை : போட்டிகள் குறையும். 


புனர்பூசம் : அமைதி உண்டாகும்.

---------------------------------------



கடகம்

டிசம்பர் 08, 2022



வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூசம் : அனுகூலமான நாள்.


ஆயில்யம் : மந்தத்தன்மை குறையும். 

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 08, 2022



உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மாணவர்களுக்கு கற்றலில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் 




மகம் : கலகலப்பான நாள்.


பூரம் : தெளிவு ஏற்படும்.


உத்திரம் : ஈடுபாடு அதிகரிக்கும். 

---------------------------------------



கன்னி

டிசம்பர் 08, 2022



புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். துணிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.


அஸ்தம் : தன்னம்பிக்கை மேம்படும்.


சித்திரை : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------



துலாம்

டிசம்பர் 08, 2022



குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி அவ்வப்போது தோன்றி மறையும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஆர்வம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு 




சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும். 


விசாகம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 08, 2022



தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். காணாமல் போன சில முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். முயற்சிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அனுஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.


கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 08, 2022



மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வேலை மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செய்கின்ற செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : மாற்றமான நாள்.


பூராடம் : அனுபவம் உண்டாகும்.


உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும். 

---------------------------------------



மகரம்

டிசம்பர் 08, 2022



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சோர்வு குறையும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : சோர்வு குறையும்.


திருவோணம் : ஆதரவான நாள்.


அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 08, 2022



உத்தியோக பணிகளில் வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் அமையும். சகோதரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கடன் சுமைகள் ஓரளவு குறையும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.


சதயம் : மாற்றமான நாள். 


பூரட்டாதி : திருப்தி ஏற்படும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 08, 2022



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : முடிவு கிடைக்கும். 


உத்திரட்டாதி : விமர்சனங்கள் குறையும். 


ரேவதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

-------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...