கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (13-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

டிசம்பர் 13, 2022



உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களில் நிதானம் அவசியமாகும். திட்டமிட்ட பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு சாதகமாக அமையும். சோதனை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : நிதானம் வேண்டும்.


கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------



ரிஷபம்

டிசம்பர் 13, 2022



மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதிய ஆடைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான முயற்சிகள் உண்டாகும். சோர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.


ரோகிணி : ஆதரவு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : வித்தியாசமான நாள்.

---------------------------------------



மிதுனம்

டிசம்பர் 13, 2022



தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வாகன பயணங்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். மனதில் பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 


புனர்பூசம் : நம்பிக்கை மேம்படும். 

---------------------------------------



கடகம்

டிசம்பர் 13, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். புதிய முயற்சிகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்கவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் அமையும். 

---------------------------------------



சிம்மம்

டிசம்பர் 13, 2022



சாதுரியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். தனவரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். வாழ்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : மாற்றம் உண்டாகும். 


உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும். 

---------------------------------------



கன்னி

டிசம்பர் 13, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பாமல் பணிகளை தானே முடிப்பதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழப்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




உத்திரம் : ஆதாயம் கிடைக்கும். 


அஸ்தம் : புதுவிதமான நாள்.


சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------



துலாம்

டிசம்பர் 13, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயகரமான வாய்ப்புகள் அமையும். அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளியுலக அனுபவத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : வாய்ப்புகள் அமையும்.


சுவாதி : ஆதாயகரமான நாள். 


விசாகம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------



விருச்சிகம்

டிசம்பர் 13, 2022



நண்பர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வாழ்க்கை துணைவரின் வழியில் உதவி கிடைக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : மந்தமான நாள்.


அனுஷம் : உதவி கிடைக்கும். 


கேட்டை : குழப்பம் நீங்கும்.

---------------------------------------



தனுசு

டிசம்பர் 13, 2022



வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் கடினமாக தெரியும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : ஆர்வமின்மையான நாள்.

---------------------------------------



மகரம்

டிசம்பர் 13, 2022



கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




உத்திராடம் : புரிதல் மேம்படும்.


திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அவிட்டம் : மரியாதை அதிகரிக்கும். 

---------------------------------------



கும்பம்

டிசம்பர் 13, 2022



பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்து கொள்ளவும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அவிட்டம் : இழுபறியான நாள்.


சதயம் : வாய்ப்புகள் அமையும்.


பூரட்டாதி : ஆசைகள் உண்டாகும்.

---------------------------------------



மீனம்

டிசம்பர் 13, 2022



உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். எண்ணங்களில் தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 




பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி: சேமிப்பு மேம்படும்.


ரேவதி : புத்துணர்ச்சியான நாள்


கனமழை காரணமாக 13.12.2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 10.12.2022 due to heavy rain) விவரம்...

 

 

 கனமழை காரணமாக 13.12.2022 அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 10.12.2022 due to heavy rain) விவரம்...

      

🌧  கனமழை காரணமாக இன்று (13.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்... :



கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவள்ளூர்* மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*காஞ்சிபுரம்* மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*செங்கல்பட்டு* மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.12.2022 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.12.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: விருந்தோம்பல்


குறள் : 84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.


பொருள்:

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.


பழமொழி :

Win or lose, never regret.

வென்றாலும், இழந்தாலும் வருந்தாதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.


 2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன், கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


உங்கள் பிரச்சனைகளைக் கண்டு விலகி ஓடாமல், அவற்றை எதிர்கொண்டால் உங்கள் அனைத்துப் பிரச்சினைகளும் சிறியதாகிவிடும். --வில்லியம் ஹால்சி



பொது அறிவு :


1. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ? 


திருத்தக்க தேவர். 


2. சாக்கிய முனி என்பது யாருடைய மற்றொரு பெயர் ? 


புத்தர்.


English words & meanings :


council - committee,noun. ஆலோசனை குழு. counsel - advice. noun - புத்திமதி. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


வேர்க்கடலையில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இவை இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.


நார்ச்சத்துக்கள் பொதுவாக ஜீரணத்தை எளிதாக்கவும் சாப்பிட்டதும் வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் அதிகமான கலோரிகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.


NMMS Q


Girl : ? :: Boy : Handsome. 


1) Smart. 2) Tall. 3) Fair. 4) Beautiful. 


விடை: Beautiful


டிசம்பர் 13


நா.பார்த்தசாரதி அவர்களின் நினைவுநாள்


நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.[1]


நீதிக்கதை


ஜெகனின் புதுசட்டை


பிரபு என்பவன் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு கொஞ்சம் முரட்டு சுபாவம். கோபம் அதிகம் உள்ளவன். யாராவது ஒருவரிடம் வம்பு செய்துகொண்டே இருப்பான். அவன் ஆசிரியர் ரவி. பிரபுவை பெஞ்சின் மீது ஏறி நிற்கச் சொன்னார். பிரபு முணுமுணுத்துக் கொண்டே நின்றான். 


ஜெகன் என்பவன் கிளாஸ் லீடர். அவன்தான் என்னைப் பற்றி ஆசிரியரிடம் சொல்லியிருப்பான் என்று அவன்மீது கோபமாக இருந்தான். 


பள்ளிக் கூடம் விட்டதும் வெளியே வந்த ஜெகனிடம் டேய் வாத்தியார் கிட்ட என்னைப்பத்தி என்னா சொன்ன என்று கோபமாய் கேட்டு அவன் சட்டையைப் பிடித்து ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஜெகன் கீழே விழுந்தான். மீண்டும் அவனைத் தாக்க முயன்றான். 


ஜெகனின் எண்ணம் எல்லாம் கிழிந்து போன சட்டையைப் பற்றியே இருந்தது. ஜெகன் செத்துப்போன தனது அப்பாவையும், கட்டிட வேலைக்குப் போய் சம்பாதித்து தன்னை படிக்க வைக்கும் தனது அம்மாவையும் நினைத்தான். 


ஜெகன் வெற்று உடம்போடு புத்தகமும் கையுமாய் நடந்து போனது பிரபு மனசுக்கு என்னவோ போல் இருந்தது. 


ஜெகன் ஒருவாரம் பள்ளிக்கு வரவே இல்லை. ஒரு சின்ன குடிசையில் ஜெகனும், அவன் அம்மாவும் வசித்து வந்தனர். அன்று மாலை பிரபு பள்ளியிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஜெகன் கட்டிட வேலைக்கு செங்கல் துக்கி செல்வதைப் பார்த்தான். மெதுவாக அந்த இடத்திற்குச் சென்றான் பிரபு. 


என்னடா ராஜா பள்ளிக்கூடம் போகலையா.....? வேலைக்கு வந்திட்டே... என்று அங்கு வேலை செய்யும் ஒருவர் கேட்டார். போட்டுக்கறதுக்கு சட்டை இல்லை. புதுசா எடுக்கணும். பணம் வேணும். என்றான் ஜெகன். 


ஓஹோ புது சட்டைய போட்டுக்கிட்டு அப்புறம் பள்ளிக்கூடம் போகப் போறீயா? என்று சிரித்தபடி போனார் அவர். இருந்த ஒரே சட்டையையும் நான் கிழித்து விட்டேன். அவன் எப்படி பள்ளிக்கு வருவான்? என்று மனதுக்குள் நினைத்தான் பிரபு. 


அவனது கோபம். அவனுக்கே பிடிக்காமல் போனது. பிரபு தனது பிறந்த நாளுக்காக அப்பா வாங்கி வைத்திருந்த சட்டையை எடுத்துக்கொண்டு ஜெகன் வீட்டிற்குச் சென்றான். 


உள்ள வாடா என்று அன்புடன் அவனை வரவேற்றான் ஜெகன். என் மீது உனக்கு கோபம் இல்லையா என்றான் பிரபு. வீட்டிற்கு வந்தவர்களிடம் யாராவது கோபப்படுவார்களா? என்றான் ஜெகன். 


கோபத்தில் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொல்லி தனது பிறந்தநாள் சட்டையை அவனிடம் கொடுத்தான். 


எனக்கு புதுச்சட்டை ரெடியாகிவிட்டது. உன் அன்புக்கு நன்றி என்றான். பிரபு எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெகன் வாங்கவில்லை. அடுத்தநாள் புதுச்சட்டையுடன் பள்ளிக்கு வந்த ஜெகனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் பிரபு. 


நீதி :

முட்டாள் தனமான கோபம் ஆபத்தானது


இன்றைய செய்திகள்


13.12.22


தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.


செங்கம் அடுத்த பாய்ச்சல் கிராமத்தில் 11-ம் நூற்றாண்டில் கோயிலுக்கு தானம் வழங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செங்கண்மா வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.


கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதில் நாட்டிலேயே முதலிடம் பெற்று தமிழகம் சாதனை படைத்துள்ளது.


கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி திபங்கர் தத்தா நேற்று பதவியேற்றார். இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.


நாட்டில் இதுவரை ரயில் தொடர்பு இல்லாத, 50 ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஊர்களுக்கு ரயில் இணைப்பு கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 9 ஊர்களில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதனால் இந்தியாவை ஐ.நா. கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக கணக்கில் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.


ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள நாற்காலி, காபி இயந்திரம், ப்ரொஜெக்டர் போன்றவற்றை ஏலம் விட எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது அந்நிறுவனத்தின் செலவை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்று எனச் சொல்லப்படுகிறது.


17 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து.


ஆசிய செஸ் போட்டி: தமிழக வீராங்கனை சர்வாணிகா ரேபிட் 6 தங்கம் வென்று சாதனை.


உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன்: ஜப்பான் வீராங்கனை யமாகுச்சி 'சாம்பியன்'.


புரோ கபடி பிளே ஆப் சுற்று இன்று தொடக்கம்: உ.பி.யோத்தாவை எதிர்கொள்கிறது தமிழ் தலைவாஸ்.



Today's Headlines


According to the Chennai Meteorological Department, there is a possibility of heavy rain in 26 districts including Chennai, Chengalpattu, and Kanchipuram in Tamil Nadu.


 23 lakh applications for adding a name to the voter list, correction: Final voter list was released on 5th January.


 According to Senganma Historical Survey, an inscription has been found in the 11th century in the village of Panchal next to Sengam.


 The police are engaged in collecting details of out-of-state workers in Valparai, Coimbatore.


 Tamil Nadu has achieved a record by being the first in the country in implementing a welfare scheme for all.


 In the last 11 years alone, 1.6 lakh people have renounced Indian citizenship and migrated abroad, the central government has said.


 Bombay High Court Chief Justice Dibangar Dutta was sworn in as the new judge of the Supreme Court yesterday.  This has increased the number of Supreme Court judges to 28.


 The central government plans to provide rail connectivity to towns with a population of more than 50,000 people, which still need to be connected by rail.  In this regard, the central government has instructed to study the possibilities in 9 towns in Tamil Nadu.


 India is emerging as a powerful country in the world.  So, India was made the UN.  Russian Foreign Minister Sergei Lavrov has said that he should be considered a permanent member of the Council.


 Elon Musk has apparently auctioned off the chair, coffee machine, and projector at Twitter.  This is said to be one of the company's cost-cutting measures.


 England won the Test series in Pakistan land after 17 years.  


Asian Chess Championship: Tamil Nadu player Sarvanika Rapid wins 6 gold medals.


 Badminton World Finals: Japan's Yamaguchi 'Champion'.


 Pro Kabaddi play-off round begins today: Tamil Thalaivas take on UP Yoda.


6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கு 13.12.2022 முதல் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் வினாடி வினா - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் இணைச் செயல்முறைகள் (Quiz through Hi-Tech Labs for Class 6 & 7 from Tomorrow (13.12.2022) - Joint Proceedings of Commissioner of School Education and Director of State Council for Educational Research and Training No: 6184/ G3/ 2022, Date: 12-12-2022) ந.க.எண்: 6184/ G3/ 2022, நாள்: 12-12-2022...


>>> 6 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கு 13.12.2022 முதல் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் வினாடி வினா - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் இணைச் செயல்முறைகள் (Quiz through Hi-Tech Labs for Class 6 & 7 from Tomorrow (13.12.2022) - Joint Proceedings of Commissioner of School Education and Director of State Council for Educational Research and Training No: 6184/ G3/ 2022, Date: 12-12-2022) ந.க.எண்: 6184/ G3/ 2022, நாள்: 12-12-2022...


2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு (Public Holidays for 2023 - Tamil Nadu Government Announcement)...


>>> 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு (Public Holidays for 2023 - Tamil Nadu Government Announcement)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு (தொடக்க / நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு) விளையாட்டு மற்றும் உடற்கல்வி உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education Regarding Providing sports and physical education equipment to all Government schools (primary / middle / high / higher secondary schools) through Samagra Shiksha) ந.க.எண்: 010311/ எம்/ இ4/ 2022, நாள்: 02-12-2022...


>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு (தொடக்க / நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு) விளையாட்டு மற்றும் உடற்கல்வி உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education Regarding Providing sports and physical education equipment to all Government schools (primary / middle / high / higher secondary schools) through Samagra Shiksha) ந.க.எண்: 010311/ எம்/ இ4/ 2022, நாள்: 02-12-2022...



>>> தொடக்கப்பள்ளிகள் பட்டியல்...



>>> மேல்நிலைப்பள்ளிகள் பட்டியல்...


மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் (Govt school teacher's case seeking "maternity leave" for third delivery - High Court orders)...



 மூன்றாவது பிரசவத்திற்கு "மகப்பேறு விடுப்பு" கோரி அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கும் - உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் (Govt school teacher's case seeking "maternity leave" for third delivery - High Court orders)...


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 


இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டது. பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றதால் விடுப்பு பெற உரிமை உள்ளது. 


விடுப்பு கோரி மனுதாரர் கடந்த ஜூன் 27ம் தேதி ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அவரது  விண்ணப்பத்தை பரிசீலித்து ஜூலை 7ம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...