>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பொறுப்பு மற்றும் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் கவனத்திற்கு,
வட்டார வளமைய அளவில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்:
1)விழிப்புணர்வு முகாம்கள்
2) தன்னார்வலர்களுக்கு போட்டிகள் நடத்துதல்
(பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி விளையாட்டு போட்டி மற்றும் கருத்தரங்குகள்)
இதில் சிறந்த இரண்டு தன்னார்வலர்களை தேர்வு செய்தல்
3) சுவர் விளம்பரம் செய்தல்
கற்போர் மைய அளவில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்:
1)கற்போர்களுக்கு போட்டி நடத்துதல்
மாறுவேட போட்டி கோலப்போட்டி பாடல் போட்டி -இதில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும்
2)களப்பயணம்
வங்கி கிளை -தபால் நிலையம் -ஆரம்ப சுகாதார நிலையம் - மாவட்ட மருத்துவமனை -பேருந்து நிலையம் - ரயில் நிலையம்
3) இதற்கான செயல்முறைகள் மேலே உள்ளது.
செயல்பாடுகளை சிறப்பாக செய்து அதற்கான போட்டோ மற்றும் டாக்குமெண்டேஷன்களை தயார் செய்து அனுப்பவும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
TNSED APP-ல் பதிவேற்றப்படும் 11 வகையான பணிக்கால விடுப்புகள் பற்றிய விவரம்
*Earned Leave (EL) :
தற்போதைய தேதியில் இருப்பில் உள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Unearned Leave with Medical Certificate (ML) :
பணிக்காலத்தைப் பொறுத்தது.
5 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்
5+ முதல் 10 வரை 180 நாள்கள்
10+ முதல் 15 வரை 270 நாள்கள்
15+ முதல் 20 வரை 360 நாள்கள்
20 ஆண்டுகளுக்கு மேல் 540 நாள்கள்.
துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Maternity Leave :
பெண்ணாசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு 2 குழந்தைகளுக்கு மட்டுமே. ஒரு குழந்தைக்கு அரசாணை 84 நாள்.23.08.21-ன்படி இன்றைய தேதியில் 365 நாள்கள் வீதம் 2 குழந்தைகளுக்கு மொத்தம் 730 நாள்கள். புதிய அரசாணை வருவதற்கு முன்னரே 2 குந்தைகளுக்கும் மகப்பேறு விடுப்பு துய்த்திருப்பின் (அது 730 நாள்களுக்குக் குறைவாகவே இருப்பினும்) தற்போதைய நிலுவை '0' ஆகும். முன்னர் ஒரு குழந்தைக்கு மட்டும் விடுப்பு துய்த்திருப்பின் தற்போதைய நிலுவை 365 நாள்கள்.
*Adoption Leave :
பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 270 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Abortion Leave :
பெண்ணாசிரியர்களுக்கு அதிகபட்சம் 42 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Extraordinary Leave without Medical Certificate (Loss of Pay without MC) :
அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் 180 நாள்கள்; அதற்குமேல் எனில் 360 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Extraordinary Leave WITH Medical Certificate (Loss of Pay with MC) :
அதிகபட்ச வரையறை ஏதும் இல்லை. துய்த்த நாள்களை மட்டும் பதிவேற்ற வேண்டும்.
*Unearned Leave on Private Affairs (அரைச்சம்பள விடுப்பு) :
அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் 90 நாள்கள்; அதற்குமேல் எனில் 180 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும். பெரும்பாலும் B.Ed., கற்பித்தல் பயிற்சிக்கு இவ்விடுப்பைப் பயன்படுத்தியிருப்பர்.
*Special Casual Leave :
10 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Special Disability Leave :
விபத்தின் நிமித்தம் உடலுறுப்பு செயலிழப்பு ஏற்படும்போது பயன்படுத்தப்படும் விடுப்பு. அதிகபட்சம் 730 நாள்கள். துய்த்தது போக மீதியுள்ள நாள்களைப் பதிவேற்ற வேண்டும்.
*Leave on Still Born Child birth :
கருவுற்ற 28 வாரங்களுக்குப்பின் / பிரசவத்தின் போது குழந்தை இறக்க நேரிட்டால் இவ்விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.
இன்றைய (19-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
பிப்ரவரி 19, 2023
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். சில மாற்றங்களின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : இழுபறிகள் விலகும்.
---------------------------------------
ரிஷபம்
பிப்ரவரி 19, 2023
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். லாபகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.
---------------------------------------
மிதுனம்
பிப்ரவரி 19, 2023
தனவரவில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடனிருப்பவர்களை பற்றி புதிய கண்ணோட்டம் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். அசதிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
கடகம்
பிப்ரவரி 19, 2023
உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இன்னல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : முயற்சிகள் கைகூடும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
பிப்ரவரி 19, 2023
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படுவதன் மூலம் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மாற்றத்தை ஏற்படுத்தும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். துணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : மேன்மை உண்டாகும்.
உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
கன்னி
பிப்ரவரி 19, 2023
அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கற்பனையான சிந்தனைகளால் புதுமைகளை உருவாக்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : ஆதரவான நாள்.
அஸ்தம் : பொறுப்புகள் குறையும்.
சித்திரை : புதுமையான நாள்.
---------------------------------------
துலாம்
பிப்ரவரி 19, 2023
கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். நண்பர்களின் மூலம் வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். வேலை நிமிர்த்தமான எண்ணங்கள் கைகூடும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். புகழ் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : தொடர்புகள் கிடைக்கும்.
விசாகம் : லாபகரமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
பிப்ரவரி 19, 2023
செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சமூக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வழக்குகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மதிப்புகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
தனுசு
பிப்ரவரி 19, 2023
எதிர்பாராத தனவரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் நீங்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : வரவு மேம்படும்.
பூராடம் : மாற்றமான நாள்.
உத்திராடம் : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
மகரம்
பிப்ரவரி 19, 2023
நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உயர் அதிகாரிகளால் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : முதலீடுகளை தவிர்க்கவும்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
பிப்ரவரி 19, 2023
எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். மறைமுக போட்டிகளை சாதுர்யமாக வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பொறுப்புகள் குறையும்.
---------------------------------------
மீனம்
பிப்ரவரி 19, 2023
மறைமுகமாக இருந்துவந்த போட்டிகள் விலகும். சகோதரர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். வியாபார பணிகளில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : போட்டிகள் விலகும்.
உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...