கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (09-03-2023) ராசி பலன்கள், நட் சத்திர பலன்கள்...


 

 

இன்றைய (09-03-2023) ராசி பலன்கள், நட் சத்திர பலன்கள்...


மேஷம்

மார்ச் 09, 2023



எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தால் காரிய அனுகூலம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதிரடியாக செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : வரவுகள் உண்டாகும்.


பரணி : ஆதாயம் ஏற்படும். 


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 09, 2023



உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் புதுமையான சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.


மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------



மிதுனம்

மார்ச் 09, 2023



உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்பு உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.


திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------



கடகம்

மார்ச் 09, 2023



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் அலங்கரிப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்வான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : தெளிவு பிறக்கும். 


பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


ஆயில்யம் : இழுபறிகள் விலகும்.

---------------------------------------



சிம்மம்

மார்ச் 09, 2023



குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். அரசு பணிகளில் இருந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். நண்பர்களுடன் இணைந்து பயணங்கள் சென்று வருவீர்கள். இழுபறிகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




மகம் : நெருக்கடிகள் குறையும்.


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------



கன்னி

மார்ச் 09, 2023



எண்ணியதை நிறைவேற்றி கொள்வதில் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். குழந்தைகளின் கல்வியில் கவனம் வேண்டும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 




உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படும்.


அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 09, 2023



தொழில் நிமிர்த்தமான விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். மறைமுக போட்டிகள் குறையும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மற்றவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக எண்ணிய பயணங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : போட்டிகள் குறையும். 


சுவாதி : பிரச்சனைகள் நீங்கும்.


விசாகம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 09, 2023



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் கைகூடும். வேலையில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகளால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் தாராளமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு திருப்தியை ஏற்படுத்தும். சமூக பணிகளில் உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். தாமதம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : அங்கீகாரங்கள் கிடைக்கும். 

---------------------------------------



தனுசு

மார்ச் 09, 2023



விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வாக்கு சாதுரியத்தால் அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் லாபம் ஏற்படும். நிர்வாக பணிகளில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மூலம் : அனுகூலமான நாள்.


பூராடம் : விவேகம் வேண்டும்.


உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 09, 2023



வெளியூர் செல்வது தொடர்பான எண்ணங்கள் பிறக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொது காரியங்களில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : எண்ணங்கள் பிறக்கும். 


திருவோணம் : நன்மை உண்டாகும். 


அவிட்டம் : தடைகள் விலகும். 

---------------------------------------



கும்பம்

மார்ச் 09, 2023



நகைச்சுவையான பேச்சுக்களை தவிர்க்கவும். உடைமைகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எண்ணிய உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பழைய நினைவுகளால் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அவிட்டம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.


சதயம் : குழப்பமான நாள்.


பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 09, 2023



சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மாற்றமான அனுபவம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.


உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும். 


ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.03.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: பொறை உடைமை


குறள் எண்: 151

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


பொருள்:

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்


பழமொழி :

An old mans sayings are seldom untrue.


முதியோர் வாக்கு பொய்ப்பது அரிது.


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 


2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.


பொன்மொழி :


முட்டாள்களின் மிகவும் கெட்ட குணமாக இருப்பது தன் குறையை மறந்து விட்டு பிறர் குறையை காண்பதே.


பொது அறிவு :


1. சித்தன்னவாசல் ஓவியங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது ? 


 புதுக்கோட்டை. 


 2. நமது உடலில் ஒரு நாள் பொட்டாசியத் தேவை எவ்வளவு ? 


 4 கிராம்.


English words & meanings :


Fenugreek - a plant it's seeds are used in Indian kitchen for flavours the food. noun.வெந்தயம். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


சளி பிடிக்கும் போது தொண்டை வலியை குணப்படுத்த தொண்டையை ஈரப்படுத்தி தற்காலிக நிவாரணம் அளிக்க வாய் கொப்புளிப்பது நன்மை தரும். 8 அவுன்ஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் உப்பு கரைத்து தினமும் நான்கு முறை வாய் கொப்புளிக்கவும்.



நீதிக்கதை


வைத்திய செலவு


ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. ஆனால் வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் சேட்டை அணுகினான். சேட்டும் பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய் என்று கேட்டான். 


என் உடல் நலம் தேறியதும், என்னுடைய உயர் ஜாதி அரேபியக் குதிரையை நல்ல விலைக்கு விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் சிகிச்சையை ஆரம்பித்தார். 


பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. அதனால் சேட் தெனாலிராமனை சந்தித்தார். அவரிடம், உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே! இன்னும் தரவில்லையே என்றார். 


ஆனால் யோசித்த ராமன், அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என, சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா என்று அவரையும் அழைத்துக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டனர். 


போகும் போது குதிரையின் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் ஒருவன், தெனாலிராமனைப் பார்த்து உன் குதிரையின் விலை என்ன? என்றார். 


குதிரையின் விலை 1 பவுன்தான். ஆனால் இந்த பூனையின் விலை 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இந்த குதிரையைக் கொடுப்பேன் என்றார். அதன்பின் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றார். 


பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தார். ஆனால் ஒரு பவுனை வாங்க மறுத்து விட்ட சேட். குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். என்றார். 


அதற்கு தெனாலிராமன் ஐயா குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொன்னேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே... இது என்ன நியாயம் என்றான். 


இறுதியில் இவர்கள் வழக்கு மன்னரிடம் சென்றது. மன்னர் இவ்வழக்கை நன்கு விசாரித்து. பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் வழங்கினார். 


நீதி :

அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.


இன்றைய செய்திகள்


09.03. 2023


* "வீடு - வணிகம் - சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


* ஆசிய பசிபிக் நாடுகளில் சிறந்த விமானநிலையமாக திருச்சி விமானநிலையம் தேர்வு: சர்வதேச விமானநிலைய கவுன்சில் அறிவிப்பு.


* பயிற்சி போர் விமானம், கப்பல்கள் வாங்க எச்ஏஎல், எல்&டி நிறுவனங்களுடன் ரூ.9,900 கோடிக்கு மத்திய அரசு ஒப்பந்தம்.


* தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி.


* வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள 7 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


* பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: இந்திய வீரர் ஜடேஜா பெயர் பரிந்துரை.


Today's Headlines


* Tamil Nadu Chief Minister M. K. Stalin has said that in the list of women taking loans for various business ventures in the categories of home - business - property, Tamil Nadu women are second and first in personal loans.


 * Trichy Airport selected as the best airport in Asia Pacific: Airports Council International announcement.


 * The central government signed an agreement with HAL, L&D for Rs 9,900 crore to buy training fighter jets and ships.


 * Surface-to-air missile test-fired successfully 


* 14 people died in an explosion in a 7-storey building in Dhaka, the capital of Bangladesh.  More than 100 people were injured.


 * Player of the Month Award for February: Indian player Jadeja had been nominated.

 


புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில், 5 ஐபிஎஸ் அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் செயல்முறைகள் (Vigilance Committee Consisting of 5 IPS Officers - Tamil Nadu DGP Sylendra Babu's Proceedings in the Migrant Workers Safety and Security Rumours)...



>>> புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில், 5 ஐபிஎஸ் அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைப்பு - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் செயல்முறைகள் (Vigilance Committee Consisting of 5 IPS Officers - Tamil Nadu DGP Sylendra Babu's Proceedings in the Migrant Workers Safety and Security Rumours)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


கனவு ஆசிரியர் போட்டியின் வழிமுறைகள் (Kanavu Aasiriyar Contest (Dream Teacher) - Instructions)...



>>> கனவு ஆசிரியர் போட்டியின் வழிமுறைகள் (Kanavu Aasiriyar Contest (Dream Teacher) - Instructions)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



கனவு ஆசிரியர் போட்டியின் வழிமுறைகள்

  

காலஅளவு மற்றும் செயல்படுத்தும் முறை

தேர்வின் காலஅளவு - 40 நிமிடங்கள்

இணையவழித் தேர்வு

தேர்வர்கள், தாங்கள் விரும்பும் எந்த இடத்திலிருந்தும் தேர்வை எழுதலாம்..

அடிப்படைத் தேவைகள்

பயன்படுத்தும் கருவி : வெப்கேம் கொண்ட மேசைச்கணினி / மடிக்கணினி அல்லது முன்பக்கக் கேமராவைக் கொண்ட திறன்பேசியைப் (Android phone) பயன்படுத்தலாம். ஐபோனைப் பயன்படுத்தக் கூடாது.

இணைய வேகம் : குறைந்தபட்சம் 2 Mbps தேவை. (இணைய வேகம் மெதுவாக இருந்தால், தேர்வுகளை நிறைவு செய்ய அதிக நேரம் ஆகும்).

இணைய உலாவிகள் (Browsers) : மேசைக்கணினி / மடிக்கணினியில் தேர்வு எழுதினால், கூகிள் குரோம் / மைக்ரோ சாப்ட் எட்ஜ் / மொஸில்லாஎ பயர்பாக்ஸ் உலாவியின்(Browser) தற்போதைய பதிப்பு தேவைப்படுகிறது திறன்பேசியில் எடுத்தால், குரோம் உலாவி (Browser) தேவை. தேர்வு நேரம் முழுவதும் வெப்கேம் மற்றும் மைக்ரோஃபோன் இயக்கப்படவேண்டும்.

சுற்றியுள்ள சூழல் : தேர்வு நடக்கும் உங்கள் அறையில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும்; சிறு சிறு தொந்தரவுகளைத் தவிர்க்க நீங்கள் தனி அறையில் இருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க நாள்கள்

விண்ணப்பப்பதிவு தொடங்கும் நாள்- மார்ச்8, 2023

விண்ணப்பப் பதிவு முடிவடையும் நாள் - மார்ச்18, 2023

தேர்வு நடைபெறும் நாள் - ஏப்ரல்1, 2023

தேர்வு சார்ந்த ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள், தேர்வு நாளின் 48 மணிநேரத்திற்கு முன்பு பகிரப்படும்.


பாடத்திட்டம்:

தலைமைப் பண்புகள்

திறனாய்வுப் பார்வை

குழுவாக சேர்ந்து பணியாற்றும் திறன்

மொழி ஆளுமைக்கான தகவல்தொடர்ப்புத் திறன்

விரிவான தகவல்களைக் கொண்ட பாடத்திட்டம், தேர்வு அமைப்பு, மாதிரி வினாக்கள் போன்றவற்றை மார்ச் 18, 2023அன்று இந்த இணைப்பின்வழியாக (www.emis.tnschools.gov.in) கனவு ஆசிரியர் 2023 menu- வின் வாயிலாக நீங்கள் பெறமுடியும்.


நீங்கள் கனவு ஆசிரியர் 2023-ள் பங்கேற்க தயாரா?


Kannavu Aasiriyar Contest Guidelines

Duration and Mode

Duration of the test - 40 minutes

Online test (also proctored online)

Test can be taken from any location of the candidates' choice

Requirements

Device: The test can be taken on a webcam-enabled desktop/ laptop OR on an android mobile device with a front camera. It is not possible to use an iPhone.

Internet Speed: Minimum continuous 2 Mbps is needed. (if speed is slow, test will take time to load).

Browsers: If taken on a desktop/ Laptop, the latest version of Google Chrome/ Microsoft Edge/ Mozilla Firefox browser is needed. If taken on an Android phone, a Chrome browser is required.; Webcam and Microphone should be enabled throughout the test.

Surrounding Environment: The room from where the test is being attempted should be well-lit; It is highly recommended that you place yourself in a separate room to avoid disturbance.

Important dates

Registration begins - March 8th, 2023

Registration ends - March 18th, 2023

Date of test - April 1st, 2023

Test credentials and other instructions will be shared 48 hours prior to the test date.

Syllabus

Leadership Quality

Critical Thinking

Team work

Communication skills

From 18th March 2023 - detailed syllabus, structure of the test, and sample questions, can be found in the ‘Kanavu Aasiriyar 2023’ menu featured on this webpage (www.emis.tnschools.gov.in).


Are you ready to participate in Kanavu Aasiriyar 2023?



கலந்து கொள்ளும் ஆசிரியர்கள், பதவி, பாடம் & மொழி...


Middle School Tamil

Middle School Maths (Tamil medium)

Middle School Science (Tamil medium)

Middle School Social Studies (Tamil medium)

Secondary School Tamil

Secondary School Maths (Tamil Medium)

Secondary School Physics (Tamil Medium)

Secondary School Chemistry (Tamil Medium)

Secondary School Biology (Tamil Medium)

Secondary School History (Tamil Medium)

Secondary School Geography (Tamil Medium)


கோழியைப் போல் வாழும் கழுகு - இன்றைய சிறுகதை (An eagle that lives like a chicken - Today's Short Story)...


கோழியைப் போல் வாழும் கழுகு - இன்றைய சிறுகதை (An eagle that lives like a chicken - Today's Short Story)...


ஒரு கழுகு ஒன்று மரத்தின் உச்சியில் உள்ள ஒரு கிளையில் முட்டையிட்டு அதனை அடைகாத்து வந்தது.

 

ஒருநாள் உணவுக்காக அது கூட்டை விட்டு வெளியே பறந்த சமயத்தில் அடைகாத்து வைத்திருந்த முட்டைகளில் ஒன்று பலமாக வீசியக் காற்றின் காரணமாக மரத்திலிருந்து கீழே விழுந்தது.

 

அதிஷ்டவசமாக அந்த முட்டை உடையவில்லை. ஏனென்றால் அந்த மரத்தின் அடியில் ஒரு கோழியும் அடைகாத்து வந்திருக்கிறது. இந்தக் கழுகு முட்டை கோழி முட்டைகள் இருந்த இடத்திற்கு அருகே விழுந்தது ஆனால் முட்டைக்கு எந்தச் சேதாரமும் ஏற்படவில்லை. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த கோழி மரத்தில் இருந்து விழுந்த முட்டையையும் தன் முட்டை என்று நினைத்து மற்ற முட்டைகளோடு சேர்த்து பக்குவமாக பாதுகாத்தது.

 

சில நாட்களுக்குப் பிறகு மரத்தின் உச்சியில் இருந்த கழுகு தன்னுடைய குஞ்சுகளை அழைத்துக் கொண்டு வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்குப் பறந்து விட்டது. அதே சமயம் மரத்தின் அடியில் அடைகாத்தக் கோழியும் தன் குஞ்சுகளை அழைத்துக் கொண்டு குப்பைகள் நிறைந்த ஒரு பகுதிக்கு சென்று குப்பையைக் கிளறி அங்கிருந்த இரையைக் கொத்தி தின்றுக் கொண்டிருந்தது.

கூட்டத்தில் இருந்த கழுகும் மற்றக் கோழிகளை போலவே குப்பையைக் கீறிக் கொண்டிருந்தது.

 

ஒருநாள் வானத்தில் பறந்துக் கொண்டிருந்த மற்றக் கழுகுகளைப் பார்த்து கோழிகளோடு இருந்த கழுகு இன்னோரு கோழியைப் பார்த்து கேட்டதாம்

 

"நம்மளால அவுங்க மாதிரி வானத்துல பறக்க முடியாதா?"

 

அதற்கு கோழி சொன்னதாம் "ஆண்டவன் அவுங்களுக்கு பறக்கின்ற திறமையைக் கொடுத்திருக்கான் நம்மளால அவ்வளவு உயரத்தில் பறப்பதற்கு வாய்ப்பே இல்ல "

 

அதற்கு கழுகு கேட்டதாம் "நான் வேணும்னா முயற்சி பண்ணி பார்க்கவா "

என்றுக் கழுகு கேட்க அதற்கு கோழி "உன்னாலயும் என்னாலயும் எப்பவுமே அவுங்கள மாதிரி பறக்க முடியாது.

 

நாம வாழ்க்கை முழுவதும் உணவுக்காக இந்த மாதிரி குப்பையை தான் கீறிக்கிட்டே இருக்கணும் " என்று சொல்லி விட்டு நகர்ந்தது.

 

கோழி சொன்னது அனைத்தையும் உண்மை என்று நம்பிய கழுகு அதன் பிறகு பறப்பதற்கு முயற்சியே செய்யாமல் தன் வாழ்நாள் முழுவதும் கோழியைப் போலவே வாழ்ந்ததாம்.

 

 கதையின் நீதி:

 

நம்மில் பலரும் கழுகைப் போல பறக்கும் திறமைக் கொண்டவர்களாக இருக்கின்றோம் ஆனால் உரிய சந்தர்ப்பத்தில் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யாமல் இருந்தோமேயானால் கடைசி வரை நம் வாழ்வும் இந்தக் கதையில் வரும் "கோழியைப் போல் வாழும் கழுகு" போன்று ஆகிவிடும்.


முயற்சி திருவினையாக்கும்...



வருகின்ற நிதிநிலை அறிக்கையில் (Budget) பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் அவர்கள் தகவல் (In the upcoming financial statement, the announcement about giving 1000 rupees per month entitlement to women - Chief Minister's message on International Women's Day)...


>>> வருகின்ற நிதிநிலை அறிக்கையில் (Budget) பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியீடு - உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் அவர்கள் தகவல் (In the upcoming financial statement, the announcement about giving 1000 rupees per month entitlement to women - Chief Minister's message on International Women's Day)...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



25.02.2023 அன்று நடைபெற்ற NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) www.dge.tn.gov.in வலைதளத்தில் வெளியீடு - மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Tentative Key Answer for NMMS exam held on 25.02.2023 published on website www.dge.tn.gov.in - Any change may be reported by 14.03.2023 - Directorate of Government Examinations)...


>>> 25.02.2023 அன்று நடைபெற்ற NMMS தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு (Tentative Key Answer) www.dge.tn.gov.in வலைதளத்தில் வெளியீடு - மாற்றம் இருப்பின் 14.03.2023க்குள் தெரிவிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Tentative Key Answer for NMMS exam held on 25.02.2023 published on website www.dge.tn.gov.in - Any change may be reported by 14.03.2023 - Directorate of Government Examinations)...



>>> NMMS Official Key Answer 2023 - Released by DGE...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Centennial Schools - District wise

  நூற்றாண்டு பள்ளிகளின் பட்டியல் - மாவட்ட வாரியாக  List of Centennial Schools - District wise  >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவு...