>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இன்றைய (12-03-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மார்ச் 12, 2023
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். கூட்டாளிகளிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : சோர்வு நீங்கும்.
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 12, 2023
வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். நட்புகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : முடிவு கிடைக்கும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 12, 2023
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். கமிஷன் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும்.
திருவாதிரை : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
மார்ச் 12, 2023
தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர்கள் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : எதிர்ப்புகள் குறையும்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 12, 2023
குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். காப்பீடு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 12, 2023
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.
அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 12, 2023
தோற்றப்பொலிவில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். எதிர்பார்த்த சில முடிவு தாமதமாக கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
சித்திரை : மாற்றங்கள் பிறக்கும்.
சுவாதி : அனுபவம் ஏற்படும்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 12, 2023
குடும்ப உறுப்பினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : வாய்ப்புகள் அமையும்.
கேட்டை : இலக்குகள் பிறக்கும்.
---------------------------------------
தனுசு
மார்ச் 12, 2023
மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சமூக பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
மார்ச் 12, 2023
அரசு தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் எண்ணிய முடிவு கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நிறைவான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : சுதந்திரம் மேம்படும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 12, 2023
சிலருக்கு திருத்தல பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பணிகளில் அலைச்சலும், புதிய அனுபவமும் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதுவிதமான சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------
மீனம்
மார்ச் 12, 2023
வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : நெருக்கடியான நாள்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான் - சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் Even words or acti...