கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 20-03-2023 (About Rs.9.22 Crore has been released for the purchase of A4 Sheets required for conducting quizzes in schools State Project Director Proceedings No: ACE/ 343/ A3/ Assessment/ SS/ 2022, Date: 20-03-2023)...

 

>>> பள்ளிகளில் வினாடி வினா நடத்த தேவையான A4 Sheet வாங்குவதற்கு சுமார் ரூ.9.22 கோடி விடுவித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: ACE/ 343/ ஆ3/ மதிப்பீடு/ ஒபக/ 2022, நாள்: 20-03-2023 (About Rs.9.22 Crore has been released for the purchase of A4 Sheets required for conducting quizzes in schools State Project Director Proceedings No: ACE/ 343/ A3/ Assessment/ SS/ 2022, Date: 20-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



LEP Assessment – A4 sheet purchase – Regarding 


மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கநிலை மற்றும் இடைநிலை), வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு,


✳ LEP-Assessment – தலைப்பின் கீழ் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வினாடி வினா (Basic Quiz Programme) நடத்திட பள்ளிகளுக்கு A4 sheet பேப்பர்கள் வாங்குவதற்காக நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. 


✳ விடுவிக்கப்பட்ட மொத்த நிதியினையும் A4 sheet பேப்பர்கள்  வாங்க மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும். பேப்பர்கள் அனைத்தும் வினாடி வினா நிகழ்விற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். வினாடி வினா நிகழ்விற்கு வாங்கப்பட்ட A4 Sheet பேப்பர்கள் பயன்பாடு சார்ந்த தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். 


✳ இப்பணியை ஒரிரு நாட்களில் முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


✳ மேலும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் Printers விரைவில்  வழங்கப்பட உள்ளது. 


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - திருத்திய நிகழ்ச்சி நிரல் - 23-03-2023 அன்று பேரவைத் தலைவர் அறிவித்தபடி (Tamil Nadu Legislative Assembly - Revised Agenda - As announced by Speaker on 23-03-2023)...



>>> தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை - திருத்திய நிகழ்ச்சி நிரல் - 23-03-2023 அன்று பேரவைத் தலைவர் அறிவித்தபடி (Tamil Nadu Legislative Assembly - Revised Agenda - As announced by Speaker on 23-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: அழுக்காறாமை


குறள் எண் : 162

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்


பொருள்:

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை


பழமொழி :


He that asks faintly begs a denial


உரத்துக் கேட்காவிட்டால் ஊர் எதுவும் தராது. 


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


திருப்தியான மனம் ஒன்றே மனிதர்களுக்குகிடைக்கும் மிகப்பெரிய கொடை.


பொது அறிவு :


1. நீரில் வாழும் உயிரினங்களில் ஆறு மாதம் வரை உணவின்றி வாழும் உயிரினம் எது? 


 நீலத்திமிங்கலம். 


 2. கண்களை மூடிக்கொண்டே பறக்கும் ஆற்றல் கொண்ட உயிரினம் எது? 


 வௌவால்.


English words & meanings :


 Jockey –a person who rides horses professionally in races. noun. He is a farmer champion Jockey. குதிரைப் பந்தயத்தில் குதிரை ஓட்டுபவர். பெயர்ச் சொல்


கணினி யுகம்


F6


Cycle through screen elements in a window or on the desktop.


F10


Activate the Menu bar in the active app.



மார்ச் 24



உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)


உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.



நீதிக்கதை


கதிர் செய்த செயல்


கதை :


பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி. 


அவர் தூரமாக வரும்போதே, மாணவன் கதிர், டேய் அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்று விட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது. 


வீட்டில் ஒரே பையன் என்பதால் கதிருக்கு செல்லம் அதிகம். அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தாலும், கதிர் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறையவில்லை. 


ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய கதிர், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். 


பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கதிர் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டிலேயே முடங்கிவிட்டான். 


ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான் கிடைத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டான். 


நீதி :


நாம் மற்றவர்களுக்கு துன்பம் செய்தால் அந்த துன்பம் நமக்கே வந்தடையும்.



இன்றைய செய்திகள்


24.03. 2023



* கல்விச் சுற்றுலா மற்றும் பிற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


* டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சிறு, குறு வியாபாரிகளுக்கு அஞ்சல்துறை சார்பாக க்யூஆர் கோடு அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


* தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அரசம்பட்டி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, விளாத்திகுளம் முண்டு வத்தல் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


* நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.


* உக்ரைன் - ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


* உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 21 வயது இந்திய வீரர் சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்.


* சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி - முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி.


* இந்திய வீராங்கனை நீத்து காங்காஸ்    உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.


Today's Headlines


* The Madras High Court has directed educational institutions organizing educational tours and other programs to take all necessary precautions for the safety of students.


* QR code cards have been introduced by the Department of Posts for small and micro traders to encourage digital payment transactions.


 * In the agriculture budget of the Tamil Nadu government, it has been announced that steps will be taken to get geographical codes for 10 products including Arasambati coconut, Mulanur short drumstick, Vlathikulam mundu wathal this year.  Tamilnadu farmers have welcomed this.


 * As the number of people affected by corona infection in the country has started increasing again, the central health department has advised all the states and union territories to follow 5 tier plans.


 * Ukrainian President Zelensky has said that he has invited China to negotiate for peace in the Ukraine-Russia war.


* Shooting World Cup: 21-year-old Indian player Sarabjot Singh wins gold.


 * Swiss Open International Badminton Tournament - India's PV Sindhu and Srikanth win in the first round.


* India's Neethu Kangas has advanced to the finals of the World Boxing Championship.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - தமிழ் - மூன்றாம் பருவம் - வாசிப்பு பயிற்சி - சொற்கள் (Ennum Ezhuthum - Tamil - Term 3 - Reading Practice - Words)...

 


>>> எண்ணும் எழுத்தும்  - தமிழ் - மூன்றாம் பருவம் - வாசிப்பு பயிற்சி - சொற்கள் (Ennum Ezhuthum - Tamil - Term 3 - Reading Practice - Words) - Colour...

 


>>> எண்ணும் எழுத்தும்  - தமிழ் - மூன்றாம் பருவம் - வாசிப்பு பயிற்சி - சொற்கள் (Ennum Ezhuthum - Tamil - Term 3 - Reading Practice - Words) - B & W...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (SCERT) மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 2411 / எஃப்1 / 2021, நாள்: 20-03-2023 (Ennum Ezhuthum - Joint Proceedings of Director of State Council of Educational Research and Training (SCERT) and Director of Elementary Education regarding provision of training for the first term of the academic year 2023-2024 R.C.No: 2411 / F1 / 2021, Dated: 20-03-2023)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான பயிற்சி வழங்குதல் குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (SCERT) மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்:  2411 / எஃப்1 / 2021, நாள்: 20-03-2023 (Ennum Ezhuthum - Joint Proceedings of Director of State Council of Educational Research and Training (SCERT) and Director of Elementary Education regarding provision of training for the first term of the academic year 2023-2024 R.C.No: 2411 / F1 / 2021, Dated: 20-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எண்ணும் எழுத்தும் பயிற்சி...


ஏப்ரல் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை மாநில அளவில்...


ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கு...


ஏப்ரல் 24 முதல் 26 வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வட்டார அளவில்...


எண்ணும் எழுத்தும்( 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை) ஆசிரியர் கருத்தாளர்களுக்கான பயிற்சி


_மாநில அளவில் 05-04-2023 முதல் 08-04-2023 வரை_


*மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி 10-04-2023 முதல் 12-04-2023 வரை!*


_ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி_


*24-04-2023 முதல் 26-04-2023 வரை (3 நாள்கள்)*



ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை வழங்குதல் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (SCERT) மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 2411 / எஃப்1 / 2021, நாள்: 20-03-2023 (Guidance on Conducting Summative Assessment for Third Semester to Class I to III Students - Joint Proceedings of Director of Council of Education Research and Training and Director of Elementary Education Na.Ka. No: 2411 / F1/ 2021, Dated: 20-03-2023)...

 

>>> ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை வழங்குதல் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (SCERT) மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்:  2411 / எஃப்1 / 2021, நாள்: 20-03-2023 (Guidance on Conducting Summative Assessment for Third Semester to Class I to III Students - Joint Proceedings of Director of Council of Education Research and Training and Director of Elementary Education Na.Ka. No: 2411 / F1/ 2021, Dated: 20-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



✅✅ *எண்ணும் எழுத்தும் 3️⃣ஆம் பருவ மதிப்பீடு செய்வது குறித்த விரிவான விளக்கம்!*


✍🏻✍🏻📱📱 *எண்ணும் எழுத்தும் FA(B)வளரறி மதிப்பீடு அனைத்து கட்டகங்களுக்கும் 13-04-2023 க்குள் online வழியாக TN- attendance-EE ASSESSMENTல் முடிக்க வேண்டும்!*


2️⃣ *FA(A) செயல்பாடுகள் அனைத்தும் online-வழியாக APP ல் 21-04-2023 க்குள் முடிக்க வேண்டும்!*


3️⃣ *மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு SA(60)online வழியாக17-04-2023 முதல் 21-04-2023 வரை மதிப்பீடு செய்து முடிக்க வேண்டும்!*


_ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில்  TN-ATTENDANCE-EE ASSESSMENT ல் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் PDF வடிவில் கொடுக்கப்படும் போது அதனை download செய்து written exam வைத்து கொள்ளலாம்!_❌❌ *இம் மதிப்பீட்டின் மதிப்பெண்கள் online -ல் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை...!!*

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.03.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -  23.03.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: அழுக்காறாமை


குறள் எண் : 161

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்

தழுக்கா றிலாத இயல்பு.


பொருள்:

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்


பழமொழி :

He that serves well need not ask for his wages

ஊக்கத்தோடு உழைத்தால் ஆக்கம் தேடிவரும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஞானமும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.


 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


வெற்றியின் உண்மையான ரகசியம் எடுத்த காரியத்தில் உறுதியாக நிற்பதே.


பொது அறிவு :


1. சிவப்பு வெள்ளை கலந்த நிறம் உடைய வியர்வையை வெளியிடும் விலங்கு எது?


 காண்டாமிருகம் .


 2.யானைக்கு நுகரும் நரம்புகள் எங்கு அமைந்துள்ளன?


வாய்.


English words & meanings :


 jangle - to make noise like metal hitting metal. verb. The baby smiles if you jangle your keys.. கணகணவென்ற ஒலி எழுப்பு. வினைச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


பழங்களின் ராஜாவான மாம்பழம் ஒரு கோடைக்கால பழமாகும். இது சுவையான பழம் மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சத்தான பழமும் கூட. இப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, கண்கள் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான சத்தாகும். மாம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளன. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பல நோய்களை எதிர்த்து பாதுகாப்பளிக்கின்றன.


கணினி யுகம்


F4


Display the address bar list in File Explorer.


F5


Refresh the active window.



மார்ச் 23


உலக வானிலை நாள் (World Meteorological Day);


உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.



பகத் சிங்,  சிவராம் ஹரி ராஜகுரு, சுக்தேவ் தபார், 


இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்


பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.


இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது. பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.


நீதிக்கதை


கடவுளின் சிறப்பு


கதை :


ராகவன் ஒரு பட்டதாரி. பள்ளியிலும், கல்லூரியிலும் சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற அறிவாளி. ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் செல்கையில், அவன் பயணம் செய்த பேருந்து பழுதாகி ஒரு கிராமத்துக்கு அருகே நின்று விட்டது. இரவு நேரமாகி விட்டதால் மாற்று பேருந்துகள் மறுநாள் காலையில் தான் வரும் என்றும், அதுவரை பேருந்திலேயே ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் பயணிகளிடம் நடத்துனர் கூறினார். 


ராகவனுக்கு அதிகமாக பசியெடுத்ததால், உறக்கம் வரவில்லை. உணவு ஏதாவது கிடைக்குமா என அருகிலிருந்த கிராமத்தை நோக்கி நடந்த ராகவனை வழிமறித்த விவசாயி ஒருவர், விவரத்தைக் கேட்டறிந்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவனுக்கு அன்புடன் உணவு படைத்த விவசாயி, சார், உணவருந்துவதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்வது எங்கள் வழக்கம். நீங்களும் நன்றி கூறி விட்டு சாப்பிடத் தொடங்குங்கள் என்றார். 


ஆனால் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ராகவன், இறைவணக்கம் செய்ய மறுத்ததுடன் நிலத்தில் பாடுபட்டது நீ, நெல் விளைவித்தது நீ, என்னை உணவருந்த அழைத்தது நீ, அப்படியானால் நான் உனக்குத் தான் நன்றி கூற வேண்டும். இறைவனுக்கு நன்றி தேவையில்லை என்றான். 


விவசாயி வியப்புடன் ராகவனை பார்த்துக்கொண்டே, நெல் விளைந்த நிலம் இறைவன் படைத்தது. நெல் வளர மழை பெய்யச் செய்தது இறைவன் தான். மலர்ந்து, காய்த்து, கனிந்து, முற்றி தானியமானது அவன் செயலே. நான் ஒரு கருவியாக மட்டுமே செயல்பட்டுள்ளேன். நீங்கள் அருந்தும் குடிநீர் அவன் தந்தது. அத்தகைய இறைவனுக்கு நன்றி கூற மறுத்தால், உங்களுக்கு மனிதநேயமே இல்லை எனப் பொருள். இதை நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், படித்து என்ன பயன்? என்று கூறினார். 


இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்த ராகவனின் கைகள் தாமாகவே குவிந்து, இறைவனுக்கு நன்றி கூறின. 


நீதி :

அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.



இன்றைய செய்திகள்


23.03. 2023


* ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.


* ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படும் ஒன்வெப் நிறுவனத்தின் 36 இணைய சேவை செயற்கைக்கோள்கள்  26-ம் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.


* ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தமிழ், கிரந்தம், தெலுங்கு, தேவநாகரி மொழிகளில் எழுதப்பட்ட பழமையான 308 ஒலைச்சுவடிக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் 25,543 ஏடுகள் உள்ளன.


* டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.


* காலநிலை மாற்றம் காரணமாகவும், அதிகரித்து வரும் நுகர்வு கலாச்சாரத்தினாலும் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் ஆபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


* இந்த ஆண்டு ஐசிசி உலக கோப்பை  கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது.


* சென்னையில் 25-ந் தேதி பெண்களுக்கான தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.


* பெண்கள் உலக குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மனிஷா கால்இறுதிக்கு தகுதி.


Today's Headlines


* The Online Gambling Prohibition Bill is to be tabled again in the Assembly today.


 * 36 internet service satellites of OneWeb will be launched by GSLV Mark-3 rocket on 26th at 9 am.


 * In the Rameswaram Ramanatha Swamy temple, 308 ancient paim script written in Tamil, Granth, Telugu and Devanagari languages ​​have been found.  It has 25,543 scripts.


* It has been reported that the earthquake was felt in the northern states of India including Delhi, UP, Punjab, Haryana and Kashmir.


* The United Nations has warned that there is a risk of a global water crisis due to climate change and a growing culture of consumption.


 * This year the ICC Cricket World Cup will be held in India.


 * The Women's Athletics League Championship will be held in Chennai on 25th.


* India's Manisha Qualifies for Quarter Finals in Women's World Boxing Championship.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Time restriction for minors below 16 years of age to watch movies - Telengana High Court orders

16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் திரைப்படம் பார்க்க நேரக் கட்டுப்பாடு - தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு Time restriction for minors below 16 y...