கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2023 - School Morning Prayer Activities...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.08.2023 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :230


சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.


விளக்கம்:


.சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.


பழமொழி :

April showers bring forth May flowers


யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே



இரண்டொழுக்க பண்புகள் :


1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 


2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை


பொன்மொழி :


ஒரு நண்பர் என்பவர் நீங்கள் நீங்களாகவே இருக்க முழு சுதந்திரத்தை அளிக்கும் ஒருவர். --ஜிம் மோரிசன்


பொது அறிவு :


1. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?


 விடை: வில்லியம் பென்டிக் பிரபு


2. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

விடை: லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன்


English words & meanings :


 compensation - reparation இழப்பீடு; 

ancient - out moded பழமையான


ஆரோக்ய வாழ்வு :


சோம்பு : அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்


நீதிக்கதை


முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.


இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே.. இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.


அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..


ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.


அதற்கு முனிவர், “மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.


“நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.


அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.



மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. “என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன .அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.


இன்றைய செய்திகள்


03.08. 2023


*மேகதாது அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் தொடக்கம் - 60 நாட்களில் முடிக்க கர்நாடக அரசு தீவிரம்.


*பொது பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது - அமைச்சர் பொன்முடி.


*35 முறை தோல்வி.... கடைசியில் வெற்றி .....மனம் தளராத முயற்சியால் ஐஏஎஸ் அதிகாரி ஆனார் ஹரியானாவை சேர்ந்த விஜய் வரதன். 


*அறநிலையத்துறை வேலைக்கு நேர்முகத் தேர்வு மூலம் எடுக்கப்படுபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்- அமைச்சர் அறிவிப்பு.


*சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி இன்று 3ஆம் தேதி தொடக்கம். அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு.


*ஒரு நாள் கிரிக்கெட்டில் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த உனத்கட்.


Today's Headlines


*Karnataka govt keen to start land surveying work for the construction of Meghadadu Dam - complete in 60 days.


 *Higher Education Department has the power to change the general curriculum - Minister Ponmudi.


 * Failed 35 times…. Success at last.....Vijay Varathan from Haryana became an IAS officer through relentless efforts.


 *Those who are selected through the interview for the Charitable Endowment Department will be made permanent - Minister notification.


 *Asia Cup Hockey will start today in Chennai.  Govt school students are arranged to visit free of cost


 *Unathkat broke the 27-year-old record in ODI cricket.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப. அவர்களுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது (Former School Education Secretary Mr. Pradeep Yadav I.A.S., who did not fulfill the court order. They have been sentenced to 2 weeks in jail)...

 

>>> நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத முன்னாள் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திரு.பிரதீப் யாதவ் இ.ஆ.ப. அவர்களுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது (Former School Education Secretary Mr. Pradeep Yadav I.A.S., who did not fulfill the court order. They have been sentenced to 2 weeks in jail)...



>>> நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு...



கல்வித்துறை சார்ந்த பணப்பலன் கோரி நெல்லையை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கடந்த 2019-ல் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அப்போதைய கல்வித்துறை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - பள்ளிக் கல்வித் துறை முன்னாள் முதன்மைச் செயலாளர் ( தற்போதைய நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர்  / கூடுதல் தலைமைச் செயலாளர்) பிரதீப் யாதவ்  IAS, ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் முத்து பழனிச்சாமி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாபுலா ஆண்டோ ஆகியோருக்கு இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - வரும் 9ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் சரணடைய உத்தரவு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை - ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் (Clarification on giving annual increment to Teachers / Government Employees who retire within one year of promotion - Ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter - Letter from Personnel and Administrative Reforms Department Secretary to Government)...


>>> பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை - ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் (Clarification on giving annual increment to Teachers / Government Employees who retire within one year of promotion - Ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter - Letter from Personnel and Administrative Reforms Department Secretary to Government)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Personnel and Administrative Reforms (FR-I) Department, Secretariat, Chennai — 600 009.  ,

Letter No.784/FR-I/2019 - 1, dated 04.03.2019  

From 

Tmt.S. Swarna, I.A.S., 

Secretary to Government. 

To 

All Secretaries to Government, Chennai — 600 009. 

All Departments of Secretariat, Chennai — 600 009. 

All Heads of Departments including District Collectors / District Judges. 

The Secretary, Tamil Nadu Public Service Commission, Chennai — 600 003. 

The Accountant General (I/II), Chennai — 600 018. The Accountant General, Chennai — 600 009/35. 

The Director of Treasuries & Accounts, Chennai — 600 035. 

The Pay and Accounts Officer. Secretariat, Chennai — 600 009. 

The Pay and Accounts Officer (North/East/South), Chennai

The Registrar, High Court. Chennai — 600 104. 

Sir, 

Sub: Fundamental Rules — Rulings 13 (ix) under Fundamental Rules 26 (a) as amended in G.O.Ms.No.148, Personnel and Administrative Reforms (FR-II) Department, dated 31.10.2018 — Clarification — Issued. 

Ref: G.O.Ms.No.148, Personnel and Administrative Reforms (FR-II) Department, dated 31.10.2018. 

In the Government Order cited, amendment has been issued to ruling 13 (ix) under Fundamental Rules 26 (a) that the increment of a Government Servant which falls due in a quarter may be sanctioned on the first day of that quarter even though he retires from services or expires prior to the actual date of accrual of increment. 

2) In this connection, the following Clarification is issued to the Government Order cited above:-The above ruling 13 (ix) is applicable only for the Government Servants who have been promoted on the verge of their retirement. As per this ruling 13 (ix) of Fundamental Rules 26(a), increment of a Government Servant which falls in a particular quarter may be advanced to the first day of that quarter even though he has not completed one year of qualifying service and retires / expires from service in the said quarter and not in the earlier quarter.  

Example:- 
 Date of Promotion / appointment to higher post - 14 06 2015 
First day of quarter of next annual increment - 01 04 2016 
Date of completion of one year qualifying service - 14 06 2016 
Date of superannuation / death - 30 04 2016 

In the above said case, the individual has not completed one year qualifying service in the higher post and retired from service on 30.04.2016 due to superannuation / expired, as the case may be. However, he retired from the service / expired in the quarter in which the annual increment due falls. Hence, the annual increment is to be advanced to the first day of the quarter and sanctioned to the individual if he, otherwise. satisfies the provisions in Fundamental Rules 26. 

3. I am, therefore, to request you to take action to eligible cases, as detailed above. 

Yours faithfully, 
for Secretary to Government. 

Copy to
 Personnel and Administrative Reforms (AR-II) Department, Secretariat, Chennai - 600 009 (for uploading in website). 
All Officers/ All Sections in Personnel and Administrative Reforms Department. Chennai — 600 009. 
Stock File / Spare copy 

நான் முதல்வன் - தமிழ்நாடு அரசின் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் - 2024 (Naan Mudhalvan - Incentive Scheme for Tamilnadu Government UPSC Primary Exam - 2024)...




>>> நான் முதல்வன் - தமிழ்நாடு அரசின் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் - 2024 (Naan Mudhalvan - Incentive Scheme for Tamilnadu Government UPSC Primary Exam - 2024)...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.08.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :229


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.


விளக்கம்:


பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.


பழமொழி :

Appearance is deceitful


உருவத்தை கண்டு ஏமாறாதே.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 


2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை


பொன்மொழி :


உங்கள் வயதை நண்பர்களை வைத்துக் கணக்கீடுங்கள், வருடங்களை வைத்து அல்ல. உங்கள் வாழ்க்கையை புன்னகையை வைத்துக் கணக்கீடுங்கள், கண்ணீரை வைத்து அல்ல. --ஜான் லெனான்.


பொது அறிவு :


1. சிந்து மக்கள் முதலில் பயன்படுத்திய உலோகம் எது?


விடை: தாமிரம்



2. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?


விடை: சமுத்திரகுப்தன்


English words & meanings :


 haphazard - accident எதிர்பாராத நிகழ்ச்சி idiosyncrasy - an odd way of thinking சிந்தனை முரண்பாடு


ஆரோக்ய வாழ்வு :


சோம்பு: சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்


ஆகஸ்ட் 02



ஆபிரகாம் பண்டிதர்    அவர்களின் பிறந்தநாள்


ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) ஆகஸ்ட் 2, 1859 - 1919 ) புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. அக்கால இந்திய இசை வல்லுநர்களிலேயே நன்கு அறியப்பட்ட பண்டிதர், மற்ற இசை வடிவங்களிலேயும் ஆர்வம் கொண்டிருந்தார். தனது இசையுலகத் தொடர்புகளை நன்கு பயன்படுத்திய ஆபிரகாம் பண்டிதர், முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டைத் தஞ்சாவூரில் நடத்தினார்.[4] அதனைத் தொடர்ந்து ஆறு மாநாடுகளை அவர் கூட்டினார். பல்லாண்டு தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை 1917-இல் பெரும் இசை நூலாகக் கருணாமிர்த சாகரம் என்ற பெயரில் வெளியிட்டார்.இந்நூல் 1395 பக்கங்கள் உடையது. இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கு இதுவே மூலநூலாக விளங்கி வருகிறது.


பிரபுல்லா சந்திர ராய்  அவர்களின் பிறந்தநாள்



பிரபுல்லா சந்திர ராய் (Acharya Prafulla Chandra Ray -  ஆகத்து 2, 1861 - சூன் 16, 1944) ஒரு வங்கக் கல்வியாளர், வேதியியலாளர், வணிகர். சமூக சேவையாளர், ஆயுர்வேத மருத்துவம் பற்றி ஆய்வுகள் செய்தவர். லண்டனில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர். இந்திய வேதியியல் கழகத்தைத் தொடங்கியவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவர். பாதரச நைட்ரைட்டு என்ற அதிக நிலைத்தன்மை கொண்ட சேர்மத்தைக் கண்டு பிடித்தவர். இந்திய வேதியல் வளர்ச்சிக்காக மிகக் கடுமையாக உழைத்த பிரபுல்ல சந்திர ரே யின் சேவையை மதித்து, 1989-ல் இருந்து அவர் பெயரில் "பி. சி. ராய் விருது" என்ற விருது இந்தியாவில் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தால் வழங்கிச் சிறப்பு செய்யப்படுகிறது.


பிங்கலி வெங்கைய்யா அவர்களின் பிறந்தநாள்


பிங்கலி வெங்கைய்யா(Pingali Venkayya) (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் (2 ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரராவார். மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரான இவர், இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தார்.[1] வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மச்சிலிப்பட்டணத்தின் பத்லபெனுமரு என்னும் ஊரில் பிறந்தார்.


நீதிக்கதை


ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு ,உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.


தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்து சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி ,அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு ,கழுதைய சும்மாதான நடத்துவது ,உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாருஉடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி.


கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு ,அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு


உடனே விவசாயி தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு ,


கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் ,ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .


உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு ,அப்ப அங்க வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு.


உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு ,இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க ,இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு ,ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க .


அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு ,ஆத்த கடக்கறப்ப கழுத பயத்துல துள்ளி குதிச்சது ,உடனே பிடிய விட்டான் அந்த பையன் ,அப்ப அந்த கழுத ஆத்தோட போயிருச்சுஅடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்டா அவங்களுக்கு ,கழுதையும் போயிருச்சு ,அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு.


நீதி :- சொல் புத்தியை விட சுய புத்தியே சிறந்தது.


இன்றைய செய்திகள்


02.08. 2023


*தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1705 பேர் உறுப்பு தானம் செய்துள்ளதாக அமைச்சர் 

மா. சுப்பிரமணியன் தகவல். 


*11 நிமிட சார்ஜில் 100கி.மீ.  ரேஞ்ச்....வேற லெவல் எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்த ஹோண்டா.


*மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளியில் அம்மோனியா எரிவாயு தொட்டி வெடித்து விபத்து-       9 மாணவர்கள்  மற்றும் ஒரு ஆசிரியருக்கு உடல் நலக்குறைவு.


*வரலாறு காணாத வெப்பம்- ஈரானில் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு. 


*பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து வியட்நாம் அணியை 7-0 என்ற கணக்கில் வீழ்த்தியது நெதர்லாந்து. 


*செஸ் போட்டியில் கலக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன்   கவிரூபன் " சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது லட்சியம்"  என்கிறார்.


Today's Headlines


*1705 people have donated organs in 15 years in Tamil Nadu information by Health Minister

 Ma.  Subramanian 


 * In 11 minute charge travelling space of 100 km Range...Honda introduced marvelous electric car.


 *Ammonia gas tank exploded in school in West Bengal - 9 students and one teacher was wounded.


 *Unprecedented heat- two days holiday announced in Iran.


 *Netherland beat Vietnam 7-0 in Women's World Cup Football.


 *Kaviruban, a second standard student who competes  in chess, says, "The ambition is to participate in international competitions."






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து CEOs & DEOs ஆய்வுக் கூட்டம் 02.08.2023 & 03.08.2023ல் நடைபெறுதல் - கூட்டப்பொருள் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (All CEOs & DEOs Review Meeting to be held on 02.08.2023 & 03.08.2023 - Meeting Agenda - Proceedings of Director of School Education)...


>>> அனைத்து CEOs & DEOs ஆய்வுக் கூட்டம்  02.08.2023 & 03.08.2023ல் நடைபெறுதல் -  கூட்டப்பொருள் -  பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (All CEOs & DEOs Review Meeting to be held on 02.08.2023 & 03.08.2023 - Meeting Agenda - Proceedings of Director of School Education)...


2023-2024ஆம் கல்வியாண்டின் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் - வட்டார, மாவட்ட & மாநில அளவிலான நிகழ்வுகள் - அறிவுரைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 019528/எம்/இ1/2022, நாள். 26.07.2023 (Academic year 2023-2024 - Co-curricular activities and Extra-curricular activities - Block, district & state level events - issuance of instructions - Proceedings of the Director of School Education Rc.No. 019528/M/E1/2022, Dated. 26.07.2023)...

 

>>> 2023-2024ஆம் கல்வியாண்டின் கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் - வட்டார, மாவட்ட & மாநில அளவிலான நிகழ்வுகள் - அறிவுரைகள் வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 019528/எம்/இ1/2022, நாள். 26.07.2023 (Academic year 2023-2024 - Co-curricular activities and Extra-curricular activities - Block, district & state level events - issuance of instructions - Proceedings of the Director of School Education Rc.No. 019528/M/E1/2022, dt. 26.07.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...