கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.0.91 - Updated on 14-11-2023 - Ennum Ezhuthum, OOSC & Staff Grievance Module Changes, Counselling Tracking Module Added & Bug Fixes & Performance Improvements...

 


TNSED schools App


What's is new..?


*🎯  Ennum Ezhuthum, OOSC & Staff Grievance Module Changes.


*🎯  Counselling Tracking Module Added..


*🎯 Bug Fixing and Performance Improvements...


*_UPDATED ON  14 NOVEMBER 2023


*_Version: Now 0.0.91


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis




தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் (The low pressure area that has formed over Southeast Bay of Bengal will strengthen into a low pressure zone today)...



 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் (The low pressure area that has formed over Southeast Bay of Bengal will strengthen into a low pressure zone today)...


 "வரும் 16ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரையை நோக்கி நகர கூடும்"


வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல்...


* தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஏற்கனவே ஒரு  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.


இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


 நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை, அக்டோபர் 1 முதல் தற்போதுவரை 27 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 23 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது என தகவல்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.11.2023 - School Morning Prayer Activities...

    

திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வாய்மை


குறள் :297


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.


விளக்கம்:


பொய்மையை பொய்யாக்கி வாழ்ந்தால் மற்ற அறச்செயல்கள் செய்யாமலேயே நன்மை தரும்.



பழமொழி :

Failures are stepping stones to success


தோல்வியே வெற்றிக்கு முதற்படி.



இரண்டொழுக்க பண்புகள் :


1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.


2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.



பொன்மொழி :


முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடி வரும் - ஜவஹர்லால் நேரு 


பொது அறிவு :


1. பீகாரின் சோகம் என்று அழைக்கப்படும் நதி எது?


விடை: கோசி நதி


2. தென்னிந்திய ஆறிலும் மிக நீளமானது எது?

விடை: கோதாவரி



English words & meanings :


robust –strong and healthy. பலமான, ஆரோக்கியமுள்ள

resilient–able to withstand or recover quickly from difficult conditions. மறுபடியும் வேகமாக பழைய நிலைக்கு திரும்பும் தன்மை


ஆரோக்ய வாழ்வு : 


தாமரைப் பூ : தாமரையின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து, பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால், உடல் சூடு தணியும்; பிபித்தம் குறையும். காய்ச்சலுக்கும் இதை கொடுத்து வந்தால், படிப்படியாக குறையும்...


நவம்பர் 15


கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


சானியா மிர்சா அவர்களின் பிறந்தநாள்


சானியா மிர்சா (Sania Mirza ˈˈsaːnɪja ˈmɪrza; பிறப்பு 15 நவம்பர் 1986) ஓர் முன்னாள் இந்திய தொழில்முறை டென்னிசு வீராங்கனை ஆவார். இரட்டையர் பிரிவில் உலக அளவில் முதல் இடம் பிடித்திருந்தார். ஆறுமுறை பெருவெற்றித் தொடர் பட்டம் பெற்றுள்ளார். மூன்று முறை பெண் இரட்டையர் பிரிவிலும் மூன்று முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் பட்டம் பெற்றுள்ளார்.[3][4] மகளிர் டென்னிசு சங்க தகவலின்படி 2003 ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெரும் வரை இந்திய ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.


நீதிக்கதை


 ஒரு அடர்ந்த காட்டில் இரண்டு தூக்கணாங்குருவிகள் மரத்தின் மீது ஒரு கூடு கட்டி வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே சென்றிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது. சிறிது நேரத்திற்குள் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, 'குருவி அக்கா எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே... தயவுசெய்து வெளியே போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. 'போடி போ... உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டு போகமாட்டேன்” என்று குருவி மறுத்துவிட்டது. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து 'அப்படிப்போடு... அப்படிப்போடு” என்று ஜாலியாக பாடி கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது. முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, பிறகு தலை, கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து அடைத்து பூசிவிட்டு பறந்து போயின. அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி... என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.


இன்றைய செய்திகள்


15.11.2023


*குடிநீர் வளங்கள் கழிவு நீர் அகற்றுதல் தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு.


* தொடர் மழை எதிரொலி சென்னையில் இருந்து நேற்று புறப்பட வேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து.


*கனமழை எச்சரிக்கை: பேரிடர்களை தவிர்க்க உஷாராக இருக்குமாறு 27 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு.


*இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


*சென்னை - நெல்லை "வந்தே பாரத்" சிறப்பு ரயில் வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும். 


*இறுதிப் போட்டிக்கு நுழைவது யார்? இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று பலப்பரீட்சை.


Today's Headlines


*Notification of telephone numbers to lodge complaints regarding drinking water resources waste water disposal.


 * Two flights scheduled to depart yesterday from Chennai were canceled due to continuous rain.


 *Heavy rain warning: Collectors of 27 districts have been instructed to be vigilant to avoid disaster.


 * A powerful earthquake of 6.2 Richter occurred in Sri Lanka.


 *Chennai - Nellai "Vande Bharat" special train will run every Thursday.


 *Who will enter the finals?  Today there will be a strong competition between India and New Zealand to show their strength.

 

சிறார் திரைப்படம் மன்றப் பதிவேடு - மாதிரி (Children Films Forum Register - Model)...



சிறார் திரைப்படம் மன்றப் பதிவேடு - மாதிரி (Children Films Forum Register - Model)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் கவனத்திற்கு, NHIS 2022 திட்டம் குறித்த அறிவிப்பு (Notice of NHIS 2022 scheme for the attention of Contributory Pension Scheme retirees)...



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் கவனத்திற்கு, NHIS 2022 திட்டம் குறித்த அறிவிப்பு (Notice of NHIS 2022 scheme for the attention of Contributory Pension Scheme retirees)...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் கவனத்திற்கு - ஓய்வூதியம் பெறுவோருக்கான புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) 2022 இன் பலன்களை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அவர்கள் ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்பெறலாம் (For the attention of the Contributory Pension Scheme Retirees - The benefits of the Pensioners New Health Insurance Scheme 2022 can be availed by the contributory Pension Scheme Retirees by opting for the scheme before at least one month of their retirement)...




அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் (D.Co-op) பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் தொடக்கம் - செய்தி வெளியீடு, தகுதிகள் & தகவல் கையேடு (Postal Mode / Part Time D.Co-op (Co-operative) Training - Online Mode of Application - Press Release, Eligibility & Prospectus)...


அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் (D.Co-op) பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் தொடக்கம் - செய்தி வெளியீடு, தகுதிகள் & தகவல் கையேடு (Postal Mode / Part Time D.Co-op (Co-operative) Training - Online Mode of Application - Press Release, Eligibility & Prospectus)...



>>> அஞ்சல் வழி / பகுதி நேர D.Co-op பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் தொடக்கம் - செய்தி வெளியீடு...



>>> அஞ்சல் வழி / பகுதி நேர D.Co-op பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம்  - தகுதிகள்...



>>> அஞ்சல் வழி / பகுதி நேர D.Co-op பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் - தகவல் கையேடு...


மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் கடிதம் - ஆண்டு 2018 (Letter No.30354 / SE5(2)/ 2018-1, Dated: 28-11-2018 - Guidelines to be followed while declaration of Holidays for schools on account of rain - Principal Secretary School Education Department letter to all District Collectors - Year 2018)...

 

 மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் கடிதம் - ஆண்டு 2018 (Letter No.30354 / SE5(2)/ 2018-1, Dated: 28-11-2018  - Guidelines to be followed while declaration of Holidays for schools on account of  rain - Principal Secretary School Education Department letter to all District Collectors - Year 2018)...



>>> பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் கடிதம் - Letter No.30354 / SE5(2)/ 2018-1, Dated: 28-11-2018 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

100% No Govt Servant & Teachers Will Accept Tamil Nadu Govt's Evasion Words to instead of Old Pension Scheme - Tamil Nadu Chief Secretariat Association Condemns Report

  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு அரசின் பசப்பு வார்த்தைகளை 100% எந்த அரசு ஊழியரும், ஆசிரியர்களும் ஏற்க மாட்டார்கள் - தமிழ்...