கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதிதிராவிடர் நலத்துறை - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு (Adi Dravidar Welfare Department - Director's order to send subject-wise provisional seniority list and panel list for promotion of Graduate Teacher, Custodian as on 01.03.2022)...


ஆதிதிராவிடர் நலத்துறை (ADW) - 01.03.2022 அன்றைய நிலையில் பட்டதாரி ஆசிரியர், காப்பாளர் பதவி உயர்வு வழங்க பாட வாரியான தற்காலிக பணிமூப்பு பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு (Adi Dravidar Welfare Department - Director's order to send subject-wise provisional seniority list and panel list for promotion of Graduate Teacher, Custodian as on 01.03.2022)...



>>> இயக்குநர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கலைத் திருவிழா போட்டிகள் - மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் பெயர்ப் பட்டியல் (Kalai Thiruvizha (Art Festival) Competitions - State Level Winners Name List)...

 


கலைத் திருவிழா வெற்றியாளர்கள்

6-8 ஆம் வகுப்பு - கலைத் திருவிழா போட்டிகள் - மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் பெயர்ப் பட்டியல் (6th to 8th Standard - Kalai Thiruvizha (Art Festival) Competitions - State Level Winners Name List)...





27.11.2023 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைப்பு (Postponement of Deployment Counselling Scheduled on 27.11.2023 for Graduate Teachers and Post Graduate Teachers without specifying date)...

 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு என தகவல்...


வரும் 27ஆம் தேதி நடைபெற இருந்த கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு என தகவல்...



27.11.2023 திங்கட்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப் படாமல் ஒத்திவைக்கப்படுகிறது (Postponement of Deployment Counselling Scheduled on 27.11.2023 for Graduate Teachers and Post Graduate Teachers without specifying date)...




100க்கு 8 மதிப்பெண் - பள்ளி மாணவியைக் கண்டித்த ஆசிரியர் - ஆசிரியருக்கு மூன்று முறை அறை கொடுத்த மாணவியின் தந்தை - கண்டுகொள்ளாத கல்வித் துறை மற்றும் ஆசிரியர் சங்கங்கள் - நாளிதழ் செய்தி (8 out of 100 - Teacher reprimands schoolgirl - Girl's father spanks teacher three times - Education department and teachers unions ignore - Daily news)...

 


100க்கு 8 மதிப்பெண் - பள்ளி மாணவியைக் கண்டித்த ஆசிரியர் - ஆசிரியருக்கு மூன்று முறை அறை கொடுத்த மாணவியின் தந்தை - கண்டுகொள்ளாத கல்வித் துறை மற்றும் ஆசிரியர் சங்கங்கள் - நாளிதழ் செய்தி (8 out of 100 - Teacher reprimands schoolgirl - Girl's father spanks teacher three times - Education department and teachers federations ignore - Daily news)...


திருப்பத்தூர், நவ.25-

திருப்பத்தூர்‌ அடுத்த விசமங்கலம்‌ பனந்தோப்பு பகுதியில்‌ அரசு மேல்‌நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 575 மாணவர்கள்‌ படித்து வருகின்றனர்‌. 25 ஆசிரியர்கள்‌ பணியாற்றி வருகின்றனர்‌. இங்கு ஆசிரியராக இருப்‌பவர்‌ மகேஷ்வரன்‌.


2 நாட்களுக்கு முன்னர்‌ பள்ளியில்‌ ஆங்கில விடைத்தாள்‌ வழங்கப்பட்‌டுள்ளது. அப்போது கோடியூரைச்‌ சேர்ந்த 8ம்‌ வகுப்பு மாணவி ஒருவர்‌ 100 மார்க்‌குக்கு 8 மார்க்‌ மட்டும்‌ எடுத்துள்ளார்‌. இதனால்‌ ஆசிரியர்‌ மகேஷ்வரன்‌, அந்த மாணவியிடம்‌, “படிக்‌காமல்‌ இருந்தால்‌ வாழ்வில்‌ எப்படி முன்னேறுவது?” என அறிவுரை வழங்கி லேசாக கண்டித்துள்ளார்‌.


அதில்‌ மாணவியின்‌ விரலில்‌ லேசாக வீக்கம்‌ ஏற்பட்டுள்ளது. இதைத்‌ தொடர்ந்து அந்த மாணவி அழுது கொண்டே வீட்‌டுக்குச்‌ சென்றுள்ளார்‌.


அதன்‌ பின்னர்‌ அன்று மாலை, ஆசிரியர்‌ மகேஷ்‌வரன்‌, மாலை நேர வகுப்‌பில்‌, மாணவர்களுக்கு பாடம்‌ சொல்லிக்‌ கொடுத்‌துக்கொண்டிருந்த போது,அந்த மாணவியின் தந்தை, அங்கு வந்து, ஆசிரியரை தகாத வார்த்தைகளால்‌ திட்டி, கன்னத்தில்‌ 3 முறை அடித்துள்ளார்‌. இதனால்‌ அந்த ஆசிரியர்‌ நிலைகுலைந்து போயுள்ளார்‌.


அதன்‌ பின்னரும்‌  விடாத அந்த தந்தை, மீண்‌டும்‌ ஆபாச வார்த்தைகளால்‌ திட்டியபடியே பள்ளியில் இருந்து கிளம்பியுள் ளார்.. இது திருப்பத்தூர்‌ மாவட்டத்தில்‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து சம்பந்தப்‌பட்ட ஆசிரியர்‌ மகேஷ்வரனிடம்‌ கேட்ட போது,


“அந்த மாணவி மிகவும்‌ குறைவான மதிப்பெண்‌  எடுத்திருந்தார்‌. அதற்காகதான்‌ கண்டித்தேன்‌. அதற்கு பள்ளிக்குள்‌ வந்து, மாணவர்கள்‌ முன்னிலையில்‌ என்னை தகாத வார்த்தைகளால்‌ தட்டி, கன்னத்தில்‌ அடித்தது என்ன நியாயம்‌? என்னால்‌ எப்படி மீண்‌டும்‌ பள்ளியில்‌ மாணவர்‌களை சந்தித்து பாடம்‌ எடுக்க முடியும்‌? இதனால்‌தான்‌ விடுப்பு எடுத்து, வீட்டில்‌ இருக்கிறேன்‌' என்றார்‌.

தலைமை ஆசிரியர்‌ பழனிசாமியிடம்‌ கேட்டபோது, “ஆசிரியர்‌ கண்டித்‌ததும்‌ தவறு. அதற்காக அவர்கள்‌ ஆசிரியரை அடித்‌ததும்‌ தவறு. எங்கள்‌ துறை உயர்‌ அதிகாரிகள்‌ மற்றும்‌ டி.எஸ்பியிடம்‌ இது குறித்து பேசியுள்ளேன்‌' என்றார்‌.


மாணவர்கள்‌ படிக்காவிட்டால்‌, என்ன செய்து, அவர்களை படிக்க வைக்க முடியும்‌? எனத்‌ தெரியவில்லை... அதே நேரம்‌, எதற்கெல்லாமோ கொடி பிடிக்கும்‌ ஆசிரியர்‌ சங்கங்‌கள்‌ இந்தப்‌ பிரச்னையில்‌ மவுனமாக இருப்பதன்‌ காரணம்‌ தெரியவில்லை.


மாவட்ட கல்வித்துறை உயர்‌அதிகாரிகளும்‌ இந்தப்‌பிரச்சனையை அடக்கி வாசிக்கும்படி சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு வாய்‌மொழி உத்தரவு பிறப்பித்‌துள்ளதாகவும்‌ கூறப்படுகிறது,


இதே நிலை தொடர்ந்‌தால்‌, மாவட்ட பொதுத்‌தேர்வு முடிவுகளைப்‌ பார்த்து மற்றவர்கள்‌ கைகொட்டி சிரிக்கும்‌ நிலை ஏற்படும்‌.


இது குறித்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ முனிசுப்ராயனிடம்‌ கேட்ட போது அந்த பள்ளி ஆசிரியர்‌, தலைமை ஆசிரியர்‌ ஆகியோர்‌ வாய்‌மொழியாகவே என்னிடம்‌ தெரிவித்துள்ளனர்‌. அவர்‌கள்‌ எழுத்துப்‌ பூர்வமாக என்னிடம்‌ புகார்‌ அளித்‌தால்‌ நடவடிக்கை எடுக்‌கப்‌படும்‌' என்றார்‌.




மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)...



 மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தொடக்கம் -  மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (A new program called "Ungalai Thedi, Ungal Ooril (Looking for you, in your town)" where the government machinery will come to the field to find people, listen to people's grievances and solve them immediately - Honorable Chief Minister Mr.M.K.Stalin's announcement)...



>>> செய்தி வெளியீடு எண் : 2328, நாள்: 23-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது - தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் (Special camps to be held on 25.11.2023 and 26.11.2023 to add name to voter list - Returning Officer and District Collector Information)...

 

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது - தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் (Special camps to be held on 25.11.2023 and 26.11.2023 to add name to voter list - Returning Officer and District Collector Information)...


 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்...



செய்யக்கூடாத விசயங்கள் - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை (Don'ts - Cybercrime Warning)...



 மக்களே உஷார்.!! இவற்றை மட்டும் செய்துவிடாதீர்கள் - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை...


செய்யக்கூடாதவை - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை (Don'ts - Cybercrime Warning)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations

  மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...