கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குறித்த காலத்திற்குள் வளரறி மதிப்பீடு (FA) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக் கல்வி அலுவலர் குறிப்பாணை (Thanjavur Rural Block Education Officer Memorandum to explain to the class teachers who have not completed the FA within the stipulated time)...

 


குறித்த காலத்திற்குள் வளரறி மதிப்பீடு (FA) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக்  கல்வி அலுவலர் குறிப்பாணை (Thanjavur Rural Block Education Officer Memorandum to explain to the class teachers who have not completed the FA within the stipulated time)...


அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் 4,5 வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் அதற்கான காரணத்தினை தலைமையாசிரியர் வழியாக அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.



>>> தஞ்சாவூர் ஊரகம் வட்டாரக்  கல்வி அலுவலர் குறிப்பாணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? - பின்னணி என்ன? (Sudden shortage of Rs 5 stamps - Students to blame? - What is the background?)...

 


5 ரூபாய் அஞ்சல் தலைகளுக்கு திடீர் தட்டுப்பாடு - காரணம் மாணவர்களா? - பின்னணி என்ன? (Sudden shortage of Rs 5 stamps - Students to blame? - What is the background?)...


அதன்படி நாங்கள் மாணவர்கள் கொடுக்கும் ஸ்டாம்புகளை விண்ணப்பத்துடன் இணைத்து, சாதாரண தபாலில் அனுப்புகிறோம். மேலும் விவரங்களுக்கு 93194 85303 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘sub code M2A5R004’ என்று குறிப்பிட்டு தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றிய விவரங்களுக்கு www.pcoi.org.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவேண்டும்” என்று தெரிவித்தனர். அவர்கள் குறிப்பிடும் அந்த விண்ணப்பத்தில், மாணவரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், தந்தையின் தொழில் உள்ளிட்டவைகளுடன் 10 ஐந்து ரூபாய் அஞ்சல் தலைகளை இணைக்கச் சொல்லி குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆனால், தனியார் பள்ளி நிர்வாகம் குறிப்பிடும் தொலை பேசி எண்ணை தொடர்பு கொண்டால், தொடர்பு செல்லவில்லை. அவர்கள் குறிப்பிடும் இணையதள முகவரியும் தவறாகவே இருந்தது. மாணவர்களிடையே தேவையற்ற ஒரு ஆசையைத் தூண்டி, அவர்களை அலைக்கழிப்பதாகவே இதை உணர முடிந்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனிடம் இதுபற்றி கேட்ட போது, “தனியார் பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலரை விட்டு உடனே விசாரிக்க சொல்கிறேன்’‘ என்று தெரிவித்தார்.


கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே இந்த 5 ரூபாய் அஞ்சல் தலை மோகம் இருந்து வரும் நிலையில், இவர்கள் குறிப்பிடுவது போல் எந்த ஒரு மாணவரும் ‘டேப்லெட் பிசி’ பெற்றதாக இதுவரையில் தகவல் இல்லை. 



மொத்தத்தில், ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடையே ஆசை காட்டி, அவர்கள் சார்ந்த தொலைபேசி எண்கள் உள்ளிட்ட புள்ளி விவரங்களை ஏதோ ஓரு அமைப்பு திரட்டி வருவது உறுதியாகிறது. இந்த புள்ளி விவரங்களைக் கொண்டு, குறிப்பிட்ட இணையவழி கல்வியில் சேர ஆசை காட்டலாம். அடுத்த உயர்கல்விக்கு அணுகும் ஏஜென்சிகள் மாணவர்களின் இந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.



தனியார் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பப்படிவ மாதிரி.



கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படத்தில், பொதுமக்களின் முழு விவரங்கள் திரட்டப்பட்டு, எப்படி வணிக நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு பணமாக்கப்படுகிறது என்பது விவரிக்கப்பட்டு இருக்கும். அதுபோலவே மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். “எல்லாம் சரி.. தரமான தனியார் பள்ளிகள் இதற்கு ஏன் உடன்பட வேண்டும்? இதுபோல மாணவர்கள் தன்னிச்சையாக செய்வதை அறிந்தால், பள்ளிகளே ‘இது தவறு’ என்று சுட்டிக்காட்டி மாணவர்களை நல்ல முறையில வழி நடத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக அவர்களே இதை ஏன் ஊக்குவிக்குகின்றனர்?” என்று பெற்றோர் தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர்.


ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டி மிரட்டிய வட்டார கல்வி அலுவலர் - முதன்மை கல்வி அலுவலரிடம் பரபரப்பு புகார் (Complaint to Chief Education Officer - Block Education Officer who verbally insulted and threatened the teacher at the place of inspection)...

 ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டி மிரட்டிய வட்டார கல்வி அலுவலர் - முதன்மை கல்வி அலுவலரிடம் பரபரப்பு புகார் (Complaint to Chief Education Officer - Block Education Officer who verbally insulted and threatened the teacher at the place of inspection)...


கிருஷ்ணகிரி அருகே ஆய்வுக்கு வந்த இடத்தில் , ஒருமையில் திட்டி மிரட்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் மீது , ஆசிரியர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


கிருஷ்ணகிரி, நவ.29 கிருஷ்ணகிரி அருகே ஆய்வுக்கு வந்த இடத்தில்‌, ஒருமையில் திட்டி மிரட்டியதாக வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ மீது. ஆசிரியர்‌ புகார்‌ தெரிவித்துள்ள சம்பவம்‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம்‌, காவேரிப்‌பட்டணம்‌ ஒன்றியம்‌ அங்கினாம்பட்டியில்‌ உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்‌ பள்ளியில்‌ பணியாற்றி வரும்‌ ஆசிரியர்‌லட்சுமிபதி மற்றும்‌ ஆசிரியர்கள்‌, மாவட்டமுதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ மகேஸ்வரியிடம்‌ புகார்‌ மனு ஒன்றை அளித்தனர். 



தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது - சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை (Curtailing the unauthorised use of POLICE stickers on private vehicles both two wheelers and four wheelers - instructions issued - Memorandum of Additional Director General of Police)...



 தனிப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் POLICE ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது - சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சுற்றறிக்கை (Curtailing the unauthorised use of POLICE stickers on private vehicles both two wheelers and four wheelers - instructions issued - Memorandum of Additional Director General of Police)...



>>> Click Here to Download Memorandum of Additional Director General of Police...


ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் (Ways to prevent the spread of flu)...



 ஃப்ளூ காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் (Ways to prevent the spread of flu)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு (Tamil Nadu Chief Minister Talent Search Exam 2023 - Directorate of Government Examinations Press Release on Result Release)...

 

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 2023 - தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு (Tamil Nadu Chief Minister Talent Search Exam 2023 - Directorate of Government Examinations Press Release on Result Release)...



>>> அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.11.2023 - School Morning Prayer Activities...

    

திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:309


உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்.


விளக்கம்:


உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.


பழமொழி :

Habit is a second nature


தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்



இரண்டொழுக்க பண்புகள் :


1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.


2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.


பொன்மொழி :


உழைப்பின் சக்தியே

உலகிலே உயர்ந்த சக்தி..

அதை வெற்றி கொள்ளும்

ஆற்றல் வேறெந்த

சக்திக்கும் கிடையாது.



பொது அறிவு :


1. ஆஸ்கார் விருதை வென்ற முதல் இந்தியர் யார்?


விடை: பானு அத்தையா


2. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர்?

விடை: ஜவகர்லால் நேரு



English words & meanings :


 Additional Assistance - கூடுதல் உதவி, 


Adventure Sports - சாகச விளையாட்டு



ஆரோக்ய வாழ்வு : 


பூசணிப் பூ: பூசணி பூவில் உள்ள வைட்டமின் C சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, இதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.



நீதிக்கதை


 ஒன்றென்று உணர்ந்தால் நன்று


ஒருமுறை உடம்பின் உறுப்புகள் எல்லாம் வயிற்றின் மேல் பொறாமை கொண்டன. உணவு எங்கே இருக்கிறது? என்று கண்டு பிடிப்பவன் நான் என்றது மூக்கு. அந்த உணவை எடுப்பவன், ஆக்குபவன் நான் என்றது கை. அதை வயிற்றுக்கு அனுப்புபவன் நான் என்றது வாய். அதை அரைத்துக் கொடுப்பவர்கள் நாங்கள் என்றன பற்களும் நாக்கும். இந்த வயிற்றுக்காக நாம் இப்படிப் பாடுபடுகிற பொழுது இந்த வயிறு என்ன செய்கிறது? சுகபோகமாக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே இனி நாம் எதுவும் செய்யக் கூடாது, என வயிறு தவிர மற்ற உறுப்புகள் போராட்டத்தில் இறங்கின. உணவு இல்லை என்றால், அந்த உறுப்புகள் என்ன ஆகும்? கண்கள் பஞ்சடைந்தன. கால்கள் வலுவிழந்தன. கைகள் சோர்ந்தன. பாதங்கள் நடுங்கின. மூக்கில் மூச்சு திணறியது. இப்படி ஆனபிறகு தான் அந்த உறுப்புகளுக்கு "தாங்கள் வயிற்றுக்கு அனுப்பும் உணவில் பயன் பெறுவது வயிறு அல்ல, தாங்கள் தான்" என்ற உண்மை புரிந்தது. தங்களது அறியாமையை எண்ணி அவை வருந்தின.


நீதி : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு



இன்றைய செய்திகள்


29.11.2023


*பராமரிப்பு காரணமாக கடற்கரை தாம்பரம் இரவு ரயில் நாளை முதல் ரத்து.


* மயானங்களில் அடக்கம் செய்வதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்த முடிவு.


* 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரண்டாம் தேதி புயலாக மாறுகிறது.


* நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும்; அண்ணாதுரை பேட்டி.


* முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.


* மும்பை இந்தியன்ஸ் unfollow செய்த பும்ரா; சிஎஸ்கே அணிக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி.


Today's Headlines


*Chennai Beach to Tambaram night train canceled from tomorrow due to maintenance.


* Government decided to relax norms for burial in cemeteries.


* Chance of heavy rain in 10 districts. The depression becomes a storm on 2nd December 


*We have to Establish an International Space Station on the Moon:  Annadurai during an interview.


* The first choice for investors is Tamil Nadu, Chief Minister M.K. Stalin.


* Bumrah unfollowed the Mumbai Indians; Fans are happy with the news that he is going to join CSK.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...