கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-02-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 74:


அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பு என்னும் நாடாச் சிறப்பு.


விளக்கம்:


அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்..



பழமொழி : 


The mills of God grind slow but sure.


அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்



பொன்மொழி:


 “This too shall pass.” 


இது கூட கடந்துபோகும்.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்

மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி

அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்

இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்

பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Extend - நீட்டித்தல் 

Faint - மயக்கம்

Faith - விசுவாசம்

Famous - பிரபலமான 

Fast - வேகமான 


ஆரோக்கியம்


கற்றாழை: சிறிய புண்கள், வெட்டுக் காயங்கள், தோல் எரிச்சல் இவற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 28


1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.


2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


அமைதி நினைவு நாள் (சீனக் குடியரசு)

கலேவலா நாள், (பின்லாந்து)

தேசிய அறிவியல் நாள்

ஆசிரியர் நாள் (அரபு நாடுகள்)



நீதிக்கதை


பேசும் குகை 


வெகு காலத்துக்கு முன்பு மிருகங்களின் ராஜாவாகிய சிங்கம் ஒரு காட்டில் வசித்து வந்தது. அங்கு இருந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தை பார்த்து பயந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சிங்கம் இரையைத் தேடி காட்டில் அலையும் போது ஒரு குகையை கண்டது.


உள்ளே சென்று பார்க்கும் போது அங்கே யாரும் இல்லை. “நிச்சயமாக இங்கே யாரோ வசித்து வருகிறார்கள், அவர்கள் வரும் வரை இங்கே இருந்தால் நிச்சயமாக பெரிய விருந்து இன்றைக்கு உண்டு” என்று சிங்கம் தனக்குத்தானே பேசிக்கொண்டு, அங்கே ராஜா போல் அமர்ந்து இருந்தது. 



மாலை நேரத்தில் அங்கு வசித்து வந்த குள்ள நரி திரும்பி வந்து பார்க்கும்போது வெளியே சிங்கத்தின் கால்தடங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தது. “இப்போது நான் உள்ளே சென்றால் நானே அபாயத்தை ஏற்படுத்தியது போல் இருக்கும்” என்று குள்ளநரி எண்ணியது.


“ஆனால் குகைக்குள் சிங்கம் இருக்கிறதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது” புத்திசாலியான குள்ளநரி மனதில் ஒரு திட்டமிட்டது. “ஓ.. குகையே” என்று பெரிய சத்தத்தில் நரி கத்தியது.  இதைக் கேட்டு சிங்கம் சந்தோஷப்பட்டாலும் சத்தமிடாமல் பதுங்கி இருந்தது. மீண்டும் குள்ள நரி சத்தமாக,” ஓ குகையே நீ ஏன் இன்று மௌனமாக இருக்கிறாய்” என்று கேட்டது.


நரி குகையிடம் பேசுவது அதிசயமாக இருந்தாலும் சிங்கம் அமைதியாகவே இருந்தது. மீண்டும் குள்ளநரி, “ஓ குகையே உனக்கு என்ன ஆயிற்று. எல்லா நாளும் நான் திரும்பி வந்த உடனே எனக்கு வணக்கம் சொல்லுவாய், இன்று ஏன் பேசாமல் இருக்கிறாய்? என் மேல் ஏதாவது கோபமா? நான் திரும்பி செல்கிறேன்” என்று சொன்னது.


“அடக்கடவுளே.. இப்போது நான் எதுவும் செய்யாமல் இருந்தால், எனக்கு உணவு ஆக வேண்டிய அந்த நரி நிச்சயமாக தப்பித்து செல்லும். ஒருவேளை என்னை கண்டு பயந்து தான் இந்த குகை பேசாமல் இருக்கிறதோ” என்று எண்ணியது அந்த சிங்கம். உடனே  தன் கர்ஜிக்கும் குரலால் வணக்கம் சொல்லியது.


அதைக் கேட்ட உடன் நரி பயந்து ஓடியது. தன்னுடைய புத்திசாலித்தனத்தினால்  நரி தன்னுடைய உயிரைக் காப்பாற்றியது.


நீதி : சிந்தித்து செயல்பட வேண்டும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


28-02-2024 


சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வார காலமாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்...


ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.. ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார்...


ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி...


கர்ப்பிணியாக இருப்பதால் வேலை மறுக்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது : உயர்நீதிமன்றம் அதிரடி...


பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு...


4 ஆண்டுகளுக்குப் பின் குறைந்தது பயணிகள் ரயில் டிக்கெட் கட்டணம்: பயணிகள் மகிழ்ச்சி...



Today's Headlines:

28-02-2024


School Education Minister Anbil Mahesh Poiyamozhi appealed to the teachers who have been protesting continuously for a week demanding equal pay for equal work... 


Chief Minister M.K.Stalin praised the Tenkasi couple who prevented the train accident.. announced a reward of Rs.5 lakh... 


Prime Minister Modi introduced 4 astronauts who will go to space under Gaganyaan project...


Being denied a job because of pregnancy is unconstitutional: High Court takes action... 


Family heirs of government doctors who died during service will now be given government jobs: Tamilnadu government notification... 


Passenger rail ticket fares lowest after 4 years: Passengers happy...

இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் - செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024...

 


 இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் - செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024...


தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

.

இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக்கூட்டங்களை நடத்தியுள்ளது.மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. 


அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...



>>> செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர். தேர்வு காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பள்ளிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்...


NMMS FEBRUARY - 2024 தேர்வு முடிவுகள் - இணையதள முகவரி வெளியீடு...



 NMMS FEBRUARY - 2024 தேர்வு முடிவுகள் - இணையதள முகவரி வெளியீடு...



NMMS FEBRUARY - 2024 Examination Results - Website Address Published...



Click Here to Know Results...


தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்...


தமிழ்நாட்டு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடித்தம் செய்யும் வசதி மார்ச்சில் அறிமுகம்!

 _✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


வழக்கமாக தனக்கான வருமான வரியை ஊழியரே தோராயமாக முடிவு செய்து மாதந்தோறும் பிடித்தம் செய்ய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலரிடம் தெரிவிப்பர். பலர் பிடித்தமே செய்யாது டிசம்பர், ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் மட்டும் பிடித்தம் செய்வர். சிலர் ஊதியத்திற்குமேல் வரி வரும் சூழலில் தனியாக Online / வங்கி செலான் மூலம் பிப்ரவரியில் வரி செலுத்துவர்.


ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு காலாண்டிலும் முறையாக வருமான வரியை வசூலித்துக் கட்டவும், இறுதி நேரத்தில் ஊழியர் தனியாக Online / வங்கி செலான் மூலம் கட்டுவதைத் தவிர்க்கவும் வேண்டுமென கண்டிப்பான முறையில் வருமானவரித்துறை கருவூலகங்களை அறிவுறுத்தி வருகிறது. இதைப் பின்பற்றாத ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அபராதம் விதிப்பதும் கடுமையாக்கப்பட்டுள்ளது.


இத்தகைய சிக்கல்களை முழுமையாகத் தவிர்க்கும் பொருட்டு, வரும் வரியாண்டு முதல் ஊதியத்திற்கு ஏற்ப வருமானவரியானது மாதாந்திர தவணை அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும் வசதி தமிழ்நாடு அரசின் IFHRMS (களஞ்சியம்)ல் நடைமுறைக்கு வர உள்ளது.


இதன்படி, வரும் ஆண்டிற்கான ஆண்டு மொத்த ஊதியத்தை வைத்து ஊழியருக்கான வருமான வரி எவ்வளவு என்பதைத் தோராயமாக IFHRMS (களஞ்சியம்) மென்பொருளே கணக்கீடு செய்து அதிலிருந்து மாதாந்திரத் தவணையை மதிப்பிட்டு மாதந்தோறும் தானாகவே பிடித்தம் செய்துவிடும். ஊதிய உயர்வு & அகவிலைப்படி உயர்வின் போதும் அதற்கேற்ப வரியில் மாற்றம் ஏற்படும்.


அதன் முதல்படியாக, ஊழியர்கள் தாங்கள் எம்முறையில் (OLD / NEW) வரிக் கணக்கீடு செய்ய உள்ளனர் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து தங்களது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்குத் தெரியப்படுத்தி உரிய தரவுகளை மார்ச் 10ஆம் தேதிக்குள் IFHRMSல் பதிவேற்ற வேண்டும் என்று கருவூலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எந்தமுறையில் என்று தெரிவிக்கவில்லை எனில், தானாகவே New Regime முறையில் வரி கணக்கிடப்படும்.


டிசம்பர் மாதத்தில் இதில் வரித் திருத்தங்களில் மாற்றம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, பழைய வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்ய விரும்புவோர் தங்களது வரித்தளர்வு தொடர்பான சேமிப்புகளை இந்த வாரத்திலேயே (தோராயமாகக்) கணக்கிட்டு முடிவு செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தற்போது ஒரு வரிவிதிப்பு முறையைத் தேர்வு செய்துவிட்டு பின்னர் மற்றொரு வரிவிதிப்பு முறைக்கு மாறிக்கொள்ளும் வசதி உள்ளதா என்பதும், இறுதி மாதங்களில் வரித்தளர்வுகளில் தேவையான கூடுதல் திருத்தங்களைச் செய்து கொள்ளும் வசதி உள்ளதா என்பதும் இத்திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தபின்னர்தான் தெரியவரும்.


வங்கிகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக இந்நடைமுறைதான் உள்ளது. வரி விதிப்பு முறையை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. அதேநேரம் டிசம்பர் மாதத்திலேயே சேமிப்புகள் / கடன்கள் / கல்விச் செலவுகள் தொடர்பான அனைத்து ரசீதுகளையும் சமர்ப்பித்தாக வேண்டிய நிலையும் அங்கு உள்ளது. அவர்களுக்குத் தனியே IT படிவம் தயார் செய்து அளிக்க வேண்டிய தேவையுமில்லை. அந்த மென்பொருள் மூலமே Form 16A & 16B என அனைத்தையும் வங்கி ஊழியர்கள் தமது Login மூலம் இருந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.


இத்தகைய முழுமையான வசதி IFHRMS (களஞ்சியம்)ல் இருக்குமா என்பது திட்ட செயலாக்கத்திற்குப் பின்பே தெரியவரும். இவையெல்லாம் இருக்குமெனில், Audit Consultancy மூலம் TDS & Form16 பணியை மேற்கொள்ள ஊழியர்களிடமிருந்து தனியே பணம் வசூல் செய்யப்படுவது முற்றுப்பெறும்.


நினைவில் கொள்க.

Form 16Aல் மாதந்தோறும் & காலாண்டு வாரியாகப் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரி தொடர்பான விபரங்கள் இருக்கும்.

Form 16Bல் ஓராண்டிற்கான ஊதியத்திற்கு எவ்வாறு வரி கணக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற முழுமையான விபரம் இருக்கும். அதாவது நாமளிக்கு IT படிவத்தின் அனைத்துத் தரவுகளும் இதில் இருக்கும்.


நாம் தயாரித்து அலுவலகத்தில் அளிக்கும் IT படிவம் என்பது ஒரு மாதிரி தான். அது நமது ஊதியம் பெற்று வழங்கும் அலுவலகத்தைத் தவிர்த்து வேறெங்கும் எந்தவகையிலும் பயன்படாது / பொருட்படுத்தப்படாது. இப்படிவத்தை அடிப்படையாக வைத்து IT Web Pageல் TDS செய்யும் போது, TRACES எனப்படும் இந்திய வருமான வரித்துறையின் TDS Reconciliation Analysis and Correction Enabling System மூலம் தரவிறக்கப்பட்டு வழங்கப்படும் Form 16B தான் அதிகாரப்பூர்வ IT படிவம். வங்கிகளில் கடன் கோரும்போதும், வருமான வரி தொடர்பான இதர பயன்பாடுகளுக்கும் இந்த Form 16Bயைத்தான் கேட்பர்.



>>> வருமான வரியினை தானாக பிடித்தம் செய்யவுள்ள IFHRMS மென்பொருள் - ஊதியம் மற்றும் கணக்கு அலுவலர் சுற்றறிக்கை...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-02-2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27-02-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 73:


அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.


விளக்கம்:


உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.



பழமொழி : 


The law-maker showld not be a law breaker.


வேலியே பயிரை மேய்ந்தால், விளைவதெப்படி?



பொன்மொழி:


 “In the middle of every difficulty lies opportunity.”


 ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் வாய்ப்பு உள்ளது.



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்

டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்

முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்

நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்

ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Except - தவிர 

Expand - விரிவாக்கு

Excuse - மன்னித்து விடு 

Expenses - செலவு 

Explain - விளக்கு 


ஆரோக்கியம்


வெற்றிலை: இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துகிறது. நரம்புத் தளர்ச்சி, தலைவலி, தொண்டை அழற்சி, தீப்புண் இவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.



இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 27


1951 – ஐக்கிய அமெரிக்காவில் அரசுத்தலைவர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.


1964 – பீசாவின் சாய்ந்த கோபுரம் மேலும் சரிவதைத் தடுக்க இத்தாலிய அரசு உதவி கோரியது.



பிறந்த நாள் 

-


நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


தேசிய மருத்துவர்கள் நாள் (வியட்நாம்)

மராட்டி மொழி நாள் (மகாராட்டிரம்)

விடுதலை நாள் (டொமினிக்கன் குடியரசு, எயிட்டியிடம் இருந்து 1844)

பன்னாட்டு அரசு சார்பற்ற அமைப்புகளின் நாள்




நீதிக்கதை



சிங்கமும் தந்திரமான முயலும் 


முன்னொரு காலத்தில், காட்டுக்குள்ளே எல்லா விலங்குகளும் ஒன்று கூடி சிங்கராஜா பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதில் கரடி சொல்லிச்சு, “நம்ம எல்லாரும் இங்கே எதுக்காக ஒன்று கூடி இருக்கோம்னா, சிங்கராஜாவை எப்படி  காட்டில் இருந்து விரட்டி அடிக்கலாம் என்று யோசிக்க தான்”. “அவர் நமக்கு நிறையவே பிரச்சனையை கொடுக்குறாரு, அவருக்கு பசி எடுக்கும் போதெல்லாம் நம் உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து சாப்பிடுகிறார்”.


அதற்கு முயல் சொல்லுச்சாம் நம்ம, “நம்மளோட நண்பர்களை அடிக்கடி இழந்திட்டே வரோம். அதனால எப்படியாச்சும் இந்த சிங்கத்தை காட்டை விட்டு விரட்டி ஆகணும், ஆனால் அது எப்படி நம்மளால முடியும்”.


முயல் ஒரு திட்டம் போட்டிச்சு, எல்லோர் கிட்டயும் தன் திட்டத்தை சொல்லிச்சு. தங்களோட திட்டப்படியே சிங்க ராஜாவை எல்லோரும் சந்திக்க போனாங்க. அந்த சிங்கமோ மகாராஜா அரியணையில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தது. மற்ற எல்லா விலங்குகளும் தலையைத் தாழ்த்தியபடி அந்த சிங்கத்துக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்தாங்க.



“எதுக்காக எல்லாரும் சேர்ந்து இங்கே என்ன பார்க்க வந்திருக்கீங்க” அப்படி சிங்கம் கேட்டது. அதற்கு கரடி சொன்னது “நாங்க எல்லாரும் ஒரு திட்டம் போட்டிருக்கிறோம் அதன்படி நீங்க எப்பவுமே இங்கு அமர்ந்து இருந்தா போதும், உங்களுக்கு தேவையான உணவை நாங்களே கொண்டு வருவோம்” என்று சொன்னது. சிங்கராஜா ரொம்பவே சந்தோஷமா அந்தத் திட்டத்தை ஏத்துகிட்டாரு.



மறுநாள் அவங்க திட்டப்படி முயல் அந்த சிங்கத்துக்கு உணவாக போச்சு. முயல் ரொம்பவே தாமதமாக  சென்றது. அந்த சிங்கம் முயலிடம் மிகவும் கடினமாக நடந்து கொண்டது, “ஏன் இவ்வளவு தாமதம், அதுமட்டுமல்ல உன்னை  மட்டும் உண்பதால் என்னுடைய பசி எப்படி தீரும்” என்று அந்த சிங்கம் மிகவும் கோபமாக கேட்டது. 


அதற்கு முயல் சொன்னது, “என்னை மன்னித்துவிடுங்கள் சிங்கராஜா நானும் என் குடும்பத்தாரும் மொத்தம் பத்து பேர்தான் உங்களுக்கு உணவாக வந்து கொண்டிருந்தோம், ஆனால் வரும் வழியில் இன்னொரு பெரிய சிங்கம் என் குடும்பத்தார் அனைவரையும் கொன்று சாப்பிட்டது, நான் மட்டும் எப்படியோ தப்பித்து இங்கே உங்களுக்கு உணவாக வந்தேன்” என்றது. 



அதைக் கேட்ட சிங்கம் மிகவும் கோபம் பட்டது, “என்ன… என்னை விட வலிமையான வேறு சிங்கம் இங்கே எப்படி இருக்கமுடியும், அவன் எங்கே?”என்று கேட்டது. அதற்கு முயல், “நான் உங்களுக்கு அவனை காட்டித் தருகிறேன்” என்று சிங்க ராஜாவைப் கூட்டிக்கொண்டு ஒரு கிணற்றுக்கு அருகே சென்றது. 


“கிணற்றுக்குள்ளே அந்த வலிமையான சிங்கம் இருப்பதாக முயல் சொன்னது”. அதைக்கேட்ட சிங்கராஜா கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது தன்னுடைய உருவம் அங்கே தெரிந்ததை பார்த்து ஏமாந்து போன சிங்கராஜா அந்த கிணற்றுக்குள்ளே இருக்கும் இன்னொரு சிங்கத்தை தாக்கப் போவதாக சொல்லி அந்த கிணற்றுக்குள்ளே குதித்தது. சிங்கராஜா கிணற்றில் இருந்து வெளியே வர முடியாமல் உள்ளே தண்ணீரில் மூழ்கி விட்டது.



முயல் சந்தோஷத்தில் மிகவும் சத்தமாக கத்த தொடங்கியது. மற்ற எல்லா விலங்குகளும் ஓடிவந்து சிங்கராஜா தண்ணிக்குள் மூழ்கியதைக் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.


நீதி : உடல் வலிமையை விட அறிவுதான் வலிமையானது.




இன்றைய முக்கிய செய்திகள் 


27-02-2024 


பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.10,417.22 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...


பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதையொட்டி காலை முதல் மாலை வரை கோவை மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...


குப்பை கிடங்கில் உள்ள திடக்கழிவுகளை உயிரி அகழாய்வு முறையில் அகற்ற அனுமதி: நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை...


25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநருக்கு 04 கிராம் தங்க நாணயம் வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்...


மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தையும் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...


446 ஊர்ப்புற நூலகர்களுக்கு மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு...


இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி; 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி: தொடரையும் கைப்பற்றியது...





Today's Headlines:

27-02-2024


Chief Minister M. K. Stalin will inaugurate projects worth Rs. 10,417.22 crore on behalf of various departments today... 


Traffic change in Coimbatore district from morning to evening due to Prime Minister Modi's visit to Tamil Nadu today: Coimbatore Superintendent of Police... 


Permission to dispose of solid waste in landfill by bio-excavation method: Municipal Administration and Water Supply Department...


Minister Sivashankar presented a 04 gram gold coin to a driver who worked for more than 25 years without an accident... 


Chief Minister M.K.Stalin inaugurated the renovated Anna Memorial and the Kalaignar memorial on a grand scale at Marina Beach... 


Promulgation of ordinance promoting 446 village librarians to third level librarians... 


4th Test against England; Indian team won by 5 wickets: also won the series...


'ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் 19-20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் பெறுகிறார்கள், அவர்கள் எப்படி வாழ்வார்கள்? - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...



 'ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் 19-20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஓய்வூதியம் பெறுகிறார்கள், அவர்கள் எப்படி வாழ்வார்கள்? : சுப்ரீம் கோர்ட் ஏஜியின் உதவியை நாடுகிறது... 


நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வூதியத் திட்டம் தொடர்பான வழக்கை இன்று (பிப்ரவரி 26) விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்போதைய ஓய்வூதியக் கொள்கைகள் மூலம் போதிய நிதியுதவியைப் பெறாத ஓய்வு பெற்ற மாவட்ட நீதித்துறை அதிகாரிகளின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளது. 


நீதிக்கான காரணத்திற்காக கணிசமான பங்களிப்பை வழங்கிய அதிகாரிகளுக்கு 'நியாயமான தீர்வை' கண்டுபிடிக்க நீதிமன்றம் யூனியனை வலியுறுத்தியது. 


தலைமை நீதிபதி DY சந்திரசூட், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் எதிர்கொள்ளும் மோசமான நிதி நிலைமைகளை கவனத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர்கள் 19,000-20,000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுகிறார்கள் என்பதை வலியுறுத்தினார். செயலில் சட்ட நடைமுறையில் ஈடுபட முடியாத வயதில் மற்ற வழிகளுக்கு மாறுவதில் உள்ள சவால்களை அவர் சுட்டிக்காட்டினார். 


தலைமை நீதிபதி, "ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் 19000-20000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்கள் ... நீண்ட சேவைக்குப் பிறகு அவர்கள் எப்படி வாழ்வார்கள்? நீங்கள்  61-62 வயதில் வழக்கறிஞர் பணியைத் தொடங்குங்கள் என்று எவ்வாறு கூறுவது" என இந்த விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் (ஏஜி) திரு ஆர் வெங்கடரமணியிடம், இதுபோன்ற விகிதாச்சாரமற்ற ஓய்வூதியக் கொள்கையின் பின்னடைவை எதிர்கொள்ளும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகளுக்கு "நியாயமான தீர்வை" வழங்க உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார். 


"இதற்கு நியாயமான தீர்வை நாங்கள் விரும்புகிறோம். மாவட்ட நீதிபதிகள் உண்மையிலேயே கஷ்டப்படுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்." இதைத் தீவிரமாகக் கவனித்த ஏஜி, இந்தப் பிரச்னையை நிச்சயம் கவனிப்பதாகப் பதிலளித்தார். 


சில உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மாவட்ட நீதித்துறையில் இருந்து உயர்த்தப்பட்ட பிறகு, புதிய ஜிபிஎஃப் கணக்குகள் அவர்களுக்கு ஒதுக்கப்படாததால், சம்பளம் வழங்காதது குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகியதையும் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். 


நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது. இதில், இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று நீதிபதிகளின் ஊதியம் மற்றும் சேவை நிலைமைகள் தொடர்பான உத்தரவுகளை நீதிமன்றம் முன்பு பிறப்பித்துள்ளது. பரிந்துரைகள். கடந்த மாதம், பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் SNJPC நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு மாநிலங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இன்று நடந்த சுருக்கமான விசாரணையில், சில மாநிலங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் மூலம் இந்த வழக்கில் அமிகஸ் கியூரி வழக்கறிஞர் கே பரமேஷ்வர் அமர்வு முன் வந்தது. "மாநிலங்களில் இருந்து அனைத்து பிரமாணப் பத்திரங்களையும் தொகுத்துள்ளேன்.... கணிசமான கடும் நிதிச்சுமை ஏற்படும் என்று மாநிலம் வாதிடுகிறது... இந்திய ஒன்றியம் இது ஒரு பெரிய நிதி நடவடிக்கையின் ஒரு பகுதி என்று கூறுகிறது, நாம் ஓய்வூதிய சுமையை குறைக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதத்திற்கு மாறாக... அது அவர்களின் வாதம். 


ஓய்வூதிய நிதிக்கு யூனியன் பங்களிப்பிற்கு உட்பட்டு இதைச் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்று மாநிலங்கள் கூறுகின்றன, பின்னர் நீதிபதிகள் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும், "என்று அவர் சமர்ப்பித்தார். 


"இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டிற்கு கணிசமான 20-30 ஆண்டுகள் வழங்கிய நீதித்துறை அதிகாரி, உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற முடியாவிட்டால், உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும் தனது சக ஊழியரை விட குறைவான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்" என்று பரமேஷ்வர் சுட்டிக்காட்டினார். 


ஒரு அதிகாரியின் நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்த போதுமான ஓய்வூதியமும் அவசியம் என்று பரமேஷ்வர் கூறினார். பெஞ்ச் வரும் திங்கட்கிழமை விசாரணையை தொடரும். 


வழக்கு விவரங்கள் : அகில இந்திய நீதிபதிகள் சங்கம் எதிராக இந்திய யூனியன் W.P.(C) எண். 001022 / 1989


'Retired District Judges Getting Pension Of Only Rs 19-20K, How Do They Survive? : Supreme Court Seeks AG's Assistance...


The Supreme Court today (February 26) while hearing the matter of the pension scheme for judicial officers, flagged concerns on the plight of the retired district judicial officers who were getting inadequate financial support through the present pension policies. The Court urged the Union to find a 'Just Solution' for the officers who have substantially contributed to the cause of Justice


The CJI DY Chandrachud brought attention to the dire financial conditions faced by retired district judges, emphasizing that they were receiving pensions as low as Rs 19,000-20,000 after years of dedicated service. He pointed out the challenges of transitioning to other avenues at an age when they are physically unable to engage in active legal practice


CJI expressed "The retired District judges are clocking a pension of Rs 19000-20000 ...after a long service, how do they survive? This is the kind of office where you are completely disabled, you cannot suddenly jump into practice and go to the High Court at the age of 61-62 years and start practising"


He requested the Attorney General (AG) Mr R Venkataramani who was representing the Union in the matter to provide assistance in coming up with a "just Solution" for the retired judicial officers facing the setbacks of such a disproportionate pension policy.


" We want a just solution to this. The district judges are really suffering you know."


The AG taking serious note of the same, replied that he would certainly look into the issue. The CJI also pointed out that judges of some High Courts have approached the Supreme Court over the non-release of salary since new GPF accounts were not allotted to them after their elevation from the district judiciary.


The bench, also comprising Justices JB Pardiwala and Manoj Misra, was hearing the All India Judges Association matter, in which the Court has earlier issued directions relating to the pay and service conditions of the judges, accepting the recommendations of the Second National Judicial Pay Commission's recommendations. Last month, the Court directed the states to clear the SNJPC arrears by February 29 and asked the High Courts to constitute committees to oversee the implementation.


In the brief hearing today, Advocate K Parameshwar, the amicus curiae in the matter, took the bench through the affidavits filed by some of the states.


"I have compiled all affidavits from the states ....state argues that there will be a heavy financial burden that is the substantial opposition...Union of India says this is part of a larger fiscal move , we must reduce the pension burden in contrast to the ratio of the GDP...that's their argument. States say that we are willing to do this subject to Union contributing to the pension finances, then mylords may have to relook the judgement," he submitted.


"Under the scheme, the judicial officer who has given a substantial 20-30 years to the country if is unable to be promoted as a HC judge draws way less pension than his colleague who would make it to the HC," Parameshwar pointed out.


Parameshwar said that an adequate pension is also necessary to ensure the judicial independence of an officer. The bench will continue the hearing next Monday.


Case Details : ALL INDIA JUDGES ASSOCIATION vs. UNION OF INDIA W.P.(C) No. 001022 / 1989



கலைஞர் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குரலில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புக் காணொளி...


 'கலைஞர் என்றாலே போராட்டம்தான்!'


கலைஞர் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் குரலில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புக் காணொளி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS Model QP regarding - State SLAS team information

 மாநில அடைவு தேர்வு மாதிரி வினாத்தாள் தொடர்பாக மாநில SLAS குழுவின் தகவல்  SLAS  Model  Question Paper regarding - State SLAS team informatio...