கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.06.2024...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.06.2024 - School Morning Prayer Activities...

 


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: கல்வி

குறள் எண்:397
யாதானும் நாடாமால் ஊராமால் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.

பொருள்:கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும்;ஊராகும்;
ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?



பழமொழி :
A wild goose never laid a tame egg.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது.



இரண்டொழுக்க பண்புகள் :

1.நல்ல ஆரோக்கிய உணவுகள், பழங்கள் உண்டு நன்கு நீரும் அருந்துவேன்.

2.ஆரோக்கியமற்ற துரித உணவுகள், பொரித்த உணவுகள் தவிர்ப்பேன்.



பொன்மொழி :

யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும். - அப்துல் கலாம்



பொது அறிவு :

1.உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது?

விடை: சீனா

2. உலகின் மிகப்பெரிய உப்பு ஏரி எந்த நாட்டில் உள்ளது?

விடை: ரஷ்யா (காஸ்பியன் கடல்)



English words & meanings :

conspire-சதி,

collude- இரகசிய உடன்பாடு



வேளாண்மையும் வாழ்வும் :

விவசாயம் என்பது விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள் மற்றும் உணவு, நார்ச்சத்து, உயிரி எரிபொருள், மருந்துகள் மற்றும் மனித வாழ்க்கையை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்களை வளர்ப்பதாகும்.



ஜூன் 19

ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.



நீதிக்கதை

முயற்சியின் பலன்

ஒரு நாட்டின் அரசர் போட்டி ஒன்றை அறிவித்தார்.   ஒருவராக மட்டும் கோட்டை கதவுகளை கைகளால் திறந்து தள்ள வேண்டும். வென்றால் நாட்டின் ஒரு பகுதி பரிசாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவரின் கைகள் வெட்டப்படும் என்று அறிவித்தார்.

மக்கள் பலவாறு யோசித்து, எவரும் போட்டியில் கலந்து கொள்ள முன் வரவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் பங்கேற்க முன் வந்தார். அவரிடம் மற்றவர்கள் கேட்டனர்,' நீ தோற்றால் உனது உனது கைகள் வெட்டப்படும் உன் எதிர்காலம் என்னவாகும்?".

"வென்றால் அரசு பகுதி கிடைக்கும் தோற்றால் கைகள் தானே போகும் உயிரில்லையே?" முயற்சி செய்து பார்க்கிறேன், என்று கூறிய இளைஞன் தன் முழு பலத்துடன் கோட்டை

கதவுகளை தள்ளினான், என்ன அதிசயம்! கோட்டை

கதவுகள்  மெதுவாக  திறந்தன.ஏனென்றால் கோட்டை கதவுகளுக்கு தாழ்ப்பாள் போடப்படவில்லை.

இளைஞனுக்கு பரிசும் பாராட்டும்  அளிக்கப்பட்டது.

பல பேர் இப்படித்தான் தோற்றுவிடுவோமோ எதையாவது இழந்து விடுவோமோ என்று முயற்சிக்காமலே இருந்து விடுகிறார்கள்.



இன்றைய செய்திகள்

19.06.2024

💥மாணவர்களிடம் சாதிய வன்முறைகளை தவிர்ப்பதற்கான ஒரு நபர் குழு அறிக்கையை ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தமிழக அரசிடம் நேற்று சமர்ப்பித்தார். பள்ளி பெயர்களில் சாதிய அடையாளம் நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

💥கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, வெம்பக்கோட்டை, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, திருமலாபுரம், சென்னானூர், கொங்கல்நகரம் மற்றும் மருங்கூர் ஆகிய எட்டு இடங்களில் அடுத்தகட்ட தொல்லியல் அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

💥தமிழகத்துக்குள் விதிகளை மீறி இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகளை உடனடியாக பறிமுதல் செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

💥உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் பேரிடர் மேலாண்மை பாடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக யுஜிசி அறிவித்துள்ளது.

💥ராணுவத்துக்கான கவச வாகனங்களை இணைந்து தயாரிக்க திட்டம்: இந்தியா - அமெரிக்கா பேச்சில் முன்னேற்றம்.

💥பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகம்: ஸ்வீடன் நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்.

💥ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேபாளம் அணிக்கு எதிராக 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

💥இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டிமாக் நீக்கம்.

💥இந்திய கோல்ப் வீரர் ஷுபாங்கர் சர்மா ஒலிம்பிக்கிற்கு தகுதி.


Today's Headlines

💥Retired Justice Sanduru submitted a one-man committee report to the Tamil Nadu government yesterday to prevent caste violence among students.  It has recommended various aspects including removal of caste identification in school names.

💥Chief Minister Stalin initiated the next phase of archeological excavations at eight places in Keezhadi and its nearby archaeological site Kontakhai, Vembakottai, Keezhnamandi, Porpanaikottai, Tirumalapuram, Chennanur, Kongalnagaram and Marungur.

💥Traffic authorities have been ordered to immediately confiscate other state omnibuses operating in violation of rules within Tamil Nadu.

💥UGC has announced that Disaster Management has been newly included in the NET Eligibility Test for the post of Assistant Professor.

💥 Plan to jointly manufacture armored vehicles for the military: There is Progress in India-US talks.

India Has More Nuclear Weapons Than Pakistan: Swedish Institute Report

💥Bangladesh became the last team to advance to the Super 8 round after winning by 21 runs against Nepal in the ICC T20 Cricket World Cup.

💥Stimag was sacked from his position as head coach of Indian football team.

💥Indian golfer Shubangar Sharma qualifies for Olympics.

Prepared by

Covai women ICT_போதிமரம்


EMIS வலைதளத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களை புதிதாக சேர்க்க தேவையான தகவல்கள்...

 


I Std EMIS Students Admission Details...

EMIS வலைதளத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களை புதிதாக சேர்க்க தேவையான தகவல்கள்...


Information required for new entry of 1st class students in EMIS website...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




19.06.2024 முதல் 21.06.2024 வரை உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகிகள் மற்றும் பயிற்றுனர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி - SPD கடிதம்...

 

 3 days Training for Hi-Tech Lab Administrators cum Instructors from 19.06.2024 to 21.06.2024 - SPD Letter...


19.06.2024 முதல் 21.06.2024 வரை உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகிகள் மற்றும் பயிற்றுனர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி - SPD கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



State Project Directorate, Samagra Shiksha, Tamil Nadu

From

State Project Director,

Samagra Shiksha,

Perasiriyar Anbazhagan Kalvi Valagam,

College Road, Nungambakkam.

Chennai -06.


To

The Chief Educational Officer,

Ofice of the Chief Educational Officer,

All districts.

R.C.No: 3480/A7/New HT Lab/SS/2023, Dated:14.06.2024

Madam,

Sub: 2024-25 — Establishment of Hi-Tech Labs - "Administrator cum Instructor" by KELTRON-Reg.

Ref:

1. Work Order issued to KELTRON, R.C.No: 3480/A7/Ncw HT Lab/SS/2023,02.05.2024

2. Online Mccting conducted for All APOs and DCs (ICT) on 07.06.2024

With reference cited first above, Administrators cum Instructors have been placed in schools by KELTRON. For smooth functioning of Hi-Tech labs, KELTRON is going to provide training for 3 days for their Administrators cum Instructors from 19.06.2024 to 21.06.2024 who have been placed by them.

In this regard, it is informed to select the venues for the above mentioned training in and around the headquarter or as per your convenience and to inform the same to the selccted Administrators cum Instructors once the training venue is confirmed through the Headmasters concerned. The training expenditure will be met out by KELTRON only.

For State Project Director


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.06.2024...

 

   

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.06.2024 - School Morning Prayer Activities...

  

திருக்குறள்: 


பால்:பொருட்பால்


அதிகாரம்: கல்வி


குறள் எண்:396


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.


பொருள்:மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்;அதுபோல்,

மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.



பழமொழி :


Fish and guest stick three days 


விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான்



இரண்டொழுக்க பண்புகள் :


1.நல்ல ஆரோக்கிய உணவுகள், பழங்கள் உண்டு நன்கு நீரும் அருந்துவேன்.


2.ஆரோக்கியமற்ற துரித உணவுகள், பொரித்த உணவுகள் தவிர்ப்பேன்.



பொன்மொழி :


 கல்வியும் நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவன் ஆக்குகின்றன

- அரிஸ்டாட்டில் 



பொது அறிவு : 


1)இந்தியாவில் கடகரேகை எந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது?


விடை: ஜார்கண்ட்


2) இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது?


விடை: அனல்மின்நிலையம்



English words & meanings :


 scold- திட்டுவது,

reprimand- கண்டனம் தெரிவி



வேளாண்மையும் வாழ்வும் : 

உலகப் பொருளாதாரத்தின் இன்றியமையாத பகுதியாக விவசாயம் உள்ளது. இது உணவு, எரிபொருள் மற்றும் தொழில்துறைக்கான மூலப்பொருட்களின் முதன்மை ஆதாரமாக உள்ளது,



ஜூன் 19


மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்


மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.



கக்கன் அவர்களின் பிறந்தநாள்

பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981),[1] விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார். 



நீதிக்கதை


 உயர்ந்த ஆசை


 பணக்கார இளைஞனின் விலை உயர்ந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை ஏழை சிறுவன் ஒருவன் எட்டி நின்று ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.  சிரித்துக் கொண்டே அந்த இளைஞன் சிறுவனை பார்த்து  கூறினார்


" இது  என் அண்ணன் எனக்கு பரிசாக கொடுத்தது". சிறுவன் முகத்தில் வியப்பு. இளைஞன் உடனே கேட்டான், "இப்படி ஒரு அண்ணன் உனக்கும் இருந்திருக்கலாம்  என்று  ஆசைப்படுகிறாயா?.  சிறுவன் பணிவுடன் கூறினான், "இல்லை. நான் அப்படி ஒரு அண்ணனாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்".


 எப்போதும்  எண்ணங்கள் உயர்வானவையாக இருக்கட்டும்



இன்றைய செய்திகள்


18.06.2024


🍁தமிழகத்தில் 6 மாதங்களில் 42,486 பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


🍁விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15 அரசு நகரபேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொறுத்தப்படும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🍁மேற்கு வங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு. 40 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


🍁ஹேக் செய்யப்படும் ஆபத்து மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்க தேர்தல்களில் மின்னணு வாக்குப்பகுதி இயந்திரங்களை அகற்ற வேண்டும் என்று எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.


🍁இத்தாலியில் நடைபெற்று வரும் பெருகியா சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளார்.


🍁யூரோ கோப்பை 2024 கால்பந்துத் தொடரில் செர்பியாவை வீழ்த்தியது இங்கிலாந்து.


🍁டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்.



Today's Headlines


🍁 A study has revealed that 42,486 people have been affected by tuberculosis in 6 months in Tamil Nadu.


 🍁 In Villupuram, at Kallakurichi district, 15 government city buses will be equipped with automatic doors in the first phase, according to the Transport Corporation.


 🍁The death toll in the accident caused by the goods train colliding with the Kanchanchang Express train in West Bengal has been increased.  40 people have been admitted to hospitals with injuries.


 🍁X site owner Elon Musk has urged the removal of electronic voting machines in US elections because the risk of hacking in EVM machine is too high.


 🍁Indian player Sumit Nagal has qualified for the men's singles final of the ongoing Perugia Challenger tennis tournament in Italy.


 🍁England defeated Serbia in Euro Cup 2024 football series.


 🍁England team advances to the Super 8 round of the T20 World Cup cricket tournament.

 

Prepared by

Covai women ICT_போதிமரம்


கனவு மெய்ப்படும்...



கனவு மெய்ப்படும்...


1845ல் எலியாஸ் ஹோவே என்ற பொறியாளர், வழக்கம் போல தன்னுடைய கருவியை வடிவமைத்துக் கொண்டிருந்தார். 95% துல்லியமாக வடிவமைத்துவிட்ட அவருக்கு எஞ்சிய அந்த 5% எப்படி செய்வதென்று தெரியவில்லை.அது முடியாவிட்டால் மொத்தக் கண்டுபிடிப்புமே பயனற்று போய்விடக்கூடும்.என்ன செய்வது என்று சிந்தித்தவாறே உறங்கிப் போனார். ஆழந்து உறங்கியவரின் கனவில் ஒரு அதிபயங்கர நிகழ்வு வந்தது.


ஏதோ ஒரு தீவில், மனித மாமிசம் உண்பவர்களிடம் மாட்டிக் கொள்கிறார் ஹோவே. அவரை அப்படியே தூக்கி கொதிக்கும் வெந்நீரில் போட்டு வேக வைக்குமாறு அந்தக் கூட்டத்தின் தலைவன் ஆணையிடுகிறான்.


ஹோவேயைத் தூக்கி அந்த சுடுகலனில் போடுகிறார்கள்.ஹோவே தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சுகிறார்.கதறுகிறார்.


அதைக் கேட்ட அந்தத் தலைவன்,


"உன்னை விட்டு விடுகிறேன்.ஆனால் அதற்கு நீ ஒரு பணியைச் செய்ய வேண்டும்.அதோ அங்கே ஒரு கருவி உள்ளது.முக்கால்வாசி கருவியை எங்கள் கூட்டத்தவர்கள் வடிவமைத்துவிட்டார்கள்.மீதியை நீ செய்ய வேண்டும்.செய்தால் உனக்கு விடுதலை.இல்லையேல்..." என்று மிரட்ட,


"கண்டிப்பாகச் செய்கிறேன்" என்று ஹோவே கதறுகிறார்.அவரை வெளியே எடுக்கிறார்கள்.


அதோ அங்கே இருக்கிறது அந்தக் கருவி என்று காட்டுகிறார்கள்.அந்தக் கருவி ஒரு துணியால் போர்த்தப்பட்டு மூடிவைக்கப்பட்டுள்ளது.உயிர் மேல் உள்ள பயத்தில் அந்தக் கருவியை நோக்கி ஓடுகிறார் ஹோவே.வேகமாக துணியை எடுக்க, அங்கே அவர் முடிக்க முடியாமல் திணறும் அவருடைய கருவி இருக்கிறது.


"ஆத்தாடி.. இதத்தானே நாமளும் முயற்சிக்கிறோம். இது முடியாதே" என்றெண்ணியபடி ஓடத் துவங்குகிறார்.


அவனைப் பிடியங்கள் என்ற ஆணை பறக்கிறது.ஓடிக் கொண்டிருக்கும் ஹோவே மீது ஈட்டிகள் எறியப்படுகின்றன.அதில் ஒரு ஈட்டி அவரது உடலை துளைக்கிறது.அதை எடுக்கிறார்.எடுத்துப் பார்த்தால் அந்த ஈட்டியின் நுனியில் ஒரு துளை இருக்கிறது.


"கண்டுபிடித்துவிட்டேன்" என்று அலறியபடி அந்த நள்ளிரவில் துள்ளிக் குதித்து எழுகிறார்.தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்திற்கு ஓடுகிறார்.தன் கருவியைப் பார்க்கிறார்.அதில் பொருத்தப்பட்ட ஊசியின் நுனிப் பகுதியில் ஒரு துளையைப் போடுகிறார்.நூலைத் அதில் திணிக்கிறார்.கருவியை ஓட வைக்கிறார்.


தையல் மிஷின் எனும் அந்த கருவி அட்டகாசமாகப் பிறந்தது.


தையல் மிஷின் இந்திய குடும்பங்களில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த கருவி.இது கிராமப்புற பெண்கள் வாழ்க்கையை அப்படியே அலேக்காகப் புரட்டிப் போட்டது.பல லட்சக்கணக்கான தொழில் முனைவோர்களை உருவாக்கியது.


எப்படித்தான் வாழ்வதோ என கலக்கத்தில் இருந்த எத்தனையோ குடும்பங்களை,


"எதைப் பற்றியும் கவலைப்படாதே.என்னை இறுகப் பற்றிக் கொள்.உன்னை காப்பாற்ற வேண்டியது என் கடமை..." 


-- என எப்படியாவது வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையை தந்தது தையல் மிஷின்.


ஒரே ஒரு ஒற்றை தையல் மிஷின் தரும் தன்னம்பிக்கையை கற்றை கற்றையான புத்தகங்கள் கூட கற்றுத் தராது.


இன்றும் கூட பல அரசுப் பள்ளிகளில் தையல் என்பதை ஒரு பாடமாகவே வைத்திருக்கிறார்கள்.தையல் தெரிந்தால் போதும், அது உறுதியாக உயர்த்தி விடும்.


அப்படியான அந்த மகத்தான தையல் மிஷினை பெருமைப்படுத்த ஜூன் 13 தேசிய தையல் இயந்திர நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.


இந்த சமூகத்தை, குறிப்பாக பெண்களை மிக தன்னம்பிக்கை உடன், தைரியமாக, பொருளாதார பலம் பெற வைத்துக் கொண்டிருக்கும் அந்த அற்புத கருவி தையல் மிஷின்...


முதலமைச்சரின் தந்தையர் தின சமூக வலைதளப் பதிவு...


 முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தையர் தின சமூக வலைதளப் பதிவு...




மதியாதார் தலைவாசல் மிதியாதே...

 


மதியாதார் தலைவாசல் மிதியாதே...


ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், 


"மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார். 


அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம்,  இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான். 


தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique   கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.


அவன் போய் கேட்டு விட்டு,  தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.


தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்...


அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்...


தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். 


எனவே,  பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை  மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்...


" உன்னுடைய  மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்...."

" உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "

இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...


#நமக்கு_மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவளிக்காதீர்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...