கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

4 & 5th Standard - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...

 

எண்ணும் எழுத்தும் -  4 & 5 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & விடைகள்...



Class 4 & 5 - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...



>>> 51 வினாக்களும் விடைகளும் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து நாளை காலை முடிவு...

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? நாளை காலை முடிவு...


சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்து இரவு பெய்யக்கூடிய மழையின் அளவைப் பொறுத்து நாளை காலை முடிவு...




Vaasippu Iyakkam - Quiz Questions & Answers

 


வாசிப்பு இயக்கம் - வினாடி வினா வினாக்கள் & விடைகள் 


Vaasippu Iyakkam - Quiz Questions & Answers 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



வினா எண் : 16 முதல் உள்ளவை பயிற்சி குறித்த தனியரது கருத்துகள் ஆகும். ஆகவே தங்களது கருததுகளை விடையாக அளிக்கலாம்.


DA 3% Hiked for central government Employees


மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: 01-07-2024 முதல் முன் தேதியிட்டு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...


இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% இலிருந்து 53% ஆக அகவிலைப்படி இருக்கும்...


DA 3% Hiked for central government Employees...


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 முதல் 3 % அகவிலைப்படி உயர்வு....



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Cabinet approves additional instalment of three percent of Dearness Allowance to Central Government employees and Dearness Relief to Pensioners


Posted On: 16 OCT 2024 3:20PM by PIB Delhi


The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved an additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners w.e.f. 01.07.2024 representing an increase of three percent (3%) over the existing rate of 50% of the Basic Pay/Pension, to compensate against price rise.

This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7 Central Pay Commission.  The combined impact on the exchequer on account of both DA and DR would be Rs.9,448.35 crore per annum.

This will benefit about 49.18 lakh central government employees and 64.89 lakh


DEE Proceedings - Seeking explanation from the BEOs who conducted less School Visit & Annual Inspection, Dated : 09-10-2024...


 குறைவாக பள்ளிப் பார்வை & ஆண்டாய்வு மேற்கொண்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள், நாள் : 09-10-2024...


தொடக்க கல்வி - வட்டாரக் கல்வி அலுவலர் பள்ளிகள் பார்வை மற்றும் ஆண்டாய்வு மேற்கொள்ளுதல் - தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாத வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...


Proceedings of the Director of Elementary Education seeking explanation from the Block Education Officers who conducted less School Visit & Annual Inspection, Dated : 09-10-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்‌ 27 பணியிடங்கள் - ரூ.60,000 வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகள்

 

Job Notification...

 National Health Mission - மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்‌ 27 பணியிடங்கள் - ரூ.60,000 வரையிலான ஊதியத்தில் வேலைவாய்ப்புகள்...


27 Job Vacancies in District Health Society with salary up to Rs.60,000...



>>> அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>>  விண்ணப்ப படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




🟣 மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்‌ வேலை வாய்ப்புகள்...


1. மருத்துவ அலுவலர் ( MBBS ) சம்பளம் : 60,000

2.ஆடியோலஜிஸ்ட் : ( பேச்சு மற்றும் மொழி நோயியல் இளங்கலைப் பட்டம்) - 23,000

3. தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் - MCA / B E / B.Tech ( 21,000 )

4. தரவு மேலாளர் : ( இளங்கலை பிசியோதெரபி - ( 20,000 )

5. தாய்சேய் நல அலுவலர் - ( B.Sc / M.Sc Nursing) ( 19,000)

6. செவிலியர் - ( GNM - B.Sc Nursing - 18,000)

7.கணக்கு உதவியாளர் - B.Com - 16,000)

8. வட்டார கணக்கு உதவியாளர் - B.Com - 16,000)

9. பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்- ( 10th , +2 ( 14,000 )

10. ஓட்டுநர் - 8th pass - ஓட்டுநர் உரிமம் - 13,500

11. வட்டார புள்ளி விபர பதிவாளர் - கணிதத்தில் இளங்கலைப் பட்டம் - 13,500

12. மருத்துவமனை பணியாளர் - 8th pass - 10,000

13. கிளீனர் - 8th pass - 8,500

14. துப்புரவு பணியாளர் - 8th pass - 8,500

15. பாதுகாப்பு காவலர் - 8th pass - 8,500



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-10-2024



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-10-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்:பழைமை

குறள் எண்:802

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு
உப்புஆதல் சான்றோர் கடன்.

பொருள்:நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின் கடமையாகும்.


பழமொழி :
Anger is sworn enemy .

தீராக் கோபம் போராய் முடியும்.


இரண்டொழுக்க பண்புகள் : 

* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன். 

* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.


பொன்மொழி :

சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே!  இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் ..!  ---- விவேகானந்தர்


பொது அறிவு :

1. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது ?   

விடை :  உருளைக்கிழங்கு.   

2. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?  

விடை :  ரோமானியர்கள்


English words & meanings :

Knife-கத்தி,

Plate-தட்டு


வேளாண்மையும் வாழ்வும் :

ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு ஓடை  வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்.


அக்டோபர் 16

உலக உணவு நாள் (World Food Day)

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.


நீதிக்கதை

யார் சிறந்தவன்?

டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார்.

அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த சிலைகளில் எழுதி திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் விஜயநகர அரசின் அறிவை நாங்கள் மதிப்போம் !” என்று தனது தூதர்களிடம் சொல்லி அனுப்பினார்.

ஒரேமாதிரியான மூன்று சிலைகளையும் கவனித்து ராயர் வியப்படைந்து அச்சிலைகளை தம் சபையில் வைத்து அவற்றின் குணாதிசயங்களை சோதித்துக் கூறும்படி கட்டளையிட்டார்.

மூன்று சிலைகளும் ஒரு சிறிதும் உருவ வேறுபாடின்றி ஒன்று போலவே இருந்தமையால் முடிவு சொல்ல முடியாமல் சபையினர் திண்டாடினர்.

கடைசியில் அப்பாஜி அம்மூன்று சிலைகளையும் கூர்ந்து கவனித்த போது மூன்று சிலைகளின் காதுகளிலும் துவாரமிருப்பது அவருக்கு தெரிந்தது. உடனே மெல்லிய ஈர்க்குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு முதல் சிலையில் உள்ள காது துவாரத்தில் நுழைந்தார். அந்தக் குச்சி வாய்வழியாக வந்து வெளிப்பட்டது. திருப்தி அடைந்த அப்பாஜி, அடுத்த சிலையில் அதே குச்சியை ஒரு காதுக்குள் நுழைத்த போது அது மற்றொரு காது வழியாக வந்து வெளிப்பட்டது. கடைசியாக மூன்றாவது சிலையின் காதுக்குள் விடப்பட்ட குச்சி வெளியே வரவில்லை உள்ளுக் குள்ளே தங்கி விட்டது. உடனே அப்பாஜி புன்னகையுடன் விவரித்தார்.

ஒரு காதில் வாங்கி தன் இரகசியங்களை வாயால் வெளிப்படுத்துபவன் அதமன் ! அந்த இரகசியத்தை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதின் வழியாக விட்டு விடுபவன் மத்திமன் ! மற்றவர் சொன்ன இரகசியத்தை வெளியே விடாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கி வைப்பவன் தான் உத்தமன் !”  அவனே சிறந்தவன் என்று மூன்று சிலைகளின் கீழ் முறையே ” அதமன், மத்திமன், உத்தமன் ! ” என்று எழுதி அனுப்பினார்.

அதைக் கண்ட டில்லி பாதுஷா அப்பாஜியினது அறிவாற்றலை எண்ணி அசந்து போனார்.

நீதி: அறிவுகூர்மையுடன் யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்


இன்றைய செய்திகள்

16.10.2024

* தொடங்கியது வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை மிக கனமழை வாய்ப்பு.

* திருவள்ளூரில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

* பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் நிதி உதவியுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பயிற்சி பெறுவதற்காக 24 மணி நேரத்தில் 1.55 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.

* டென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நேற்று தொடங்கியது.

* 31-வது ஆடவர் தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.


Today's Headlines

* North East Monsoon has started: Heavy rain is expected in 12 districts of Tamil Nadu tomorrow.

* Heavy rains in Tiruvallur: Increase in water supply to 5 lakes supplying drinking water to Chennai.

* Within 24 hours, 1.55 lakh people have applied for internships in reputed companies with financial assistance under the Prime Minister's Internship Scheme.

* The Denmark Open International Badminton Tournament started yesterday in Odense.

* Tamil Nadu team won the champion title in the men's category of the 31st Men's National Adya Padya Tournament.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Disciplinary action against panchayat union middle school teacher engaged in political party work

அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை... அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட சேலம் அரியா...