கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், தினசரி படி, கூடுதல் ஓய்வூதியம் உயர்வு - 01-04-2023 முதல் நடைமுறை



MPs monthly salary, pension, daily allowance, additional pension increased from 01-04-2023


நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம், ஓய்வூதியம், தினசரி படி, கூடுதல் ஓய்வூதியம் உயர்வு - 01-04-2023 முதல் நடைமுறை


Increase in monthly salary, pension, daily allowance, additional pension for members of Parliament


 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,24,000 ஆக உயர்வு - குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.31,000ஆகவும், தினசரி படி ரூ.2,500-ஆகவும் உயர்வு - பதவியில் இருந்த ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.2500 கூடுதல் ஓய்வூதியம்


எம்.பி.களுக்கு சம்பளம் உயர்வு


* நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஊதியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாகவும், 


* தினசரி படி ரூ.2,000ல் இருந்து ரூ.2,500-ஆகவும், 


* முன்னாள் எம்.பி.களுக்கான ஓய்வூதியம் ரூ.25,000ல் இருந்து ரூ.31,000 ஆகவும் உயர்கிறது.


* இந்த ஊதிய உயர்வு 2023 ஏப்ரல் 1 முன்தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு


MINISTRY OF PARLIAMENTARY AFFAIRS

NOTIFICATION

New Delhi, the 21" March, 2025

G.S.R. 188(E).— In exercise of the powers conferred by sub-section (2) of section 3 and sub-section (1A) of section 8A of the Salary, Allowances and Pension of Members of Parliament Act, 1954 (30 of 1954), the Central Government hereby notifies the increase in the salary, daily allowance, pension and additional pension of Members and Ex-Members of Parliament on the basis of Cost Inflation Index specified under clause (v) of the Explanation to section 48 of the Income-tax Act, 1961(43 of 1961), with effect from the Is April, 2023, as under :-


Existing Rate (X)w.e.f.1.4.2018 - Revised Rate (X)w.e.f.1.4.2023 

Salary : 1.00.000/-per mensem to 1,24,000/- per mensem 

Daily Allowance : 2,000/- to 2,500/-

Pension  : 25,000/-per mensem to 31,000/-per mensem

Additional Pension for every year service in excess of five years : 2,000/- per mensem to 2,500/- per mensem


[F.No.4/3/2022-ME]Dr. SATYA PRAKASH, Addl. Secy.



நடிகர் மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார்



 நடிகர் மனோஜ் பாரதிராஜா இயற்கை எய்தினார்


பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக காலமானார்.


தாஜ்மஹால், சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகர் மனோஜ் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜாவின் ஒரே மகன். தேனி மாவட்டம், கம்பத்தில் 1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்த மனோஜ், திரைத்துறையில் நடிப்பதில் மட்டுமின்றி, இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், தனது தந்தை பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.


இவர் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார். அந்த வகையில், பாரதிராஜா தான் இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் மனோஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து, சமுத்திரம், மாநாடு, அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈஸ்வரன், மாநாடு, விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு இவர் இயக்கிய முதல் திரைப்படமான 'மார்கழி திங்கள்' வெளியானது. 


இவர் ஈரநிலம் என்ற படத்தில் நடித்தபோது அதில் கதாநாயகியாக நடித்து நடிகை நந்திதா உடன் காதல் ஏற்பட்டது. மனோஜ் - நந்திதா ஜோடிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.


ஒரு மாதத்திற்கு முன்பு, சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மனோஜ் பாரதிராஜாவிற்கு ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதன் பிறகு, வீட்டில் இருந்தவாறு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இரண்டு, மூன்று தினங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என கூறப்படுகிறது. 



SDATன் கீழ் செயல்பட்டு வரும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு



கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வரும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள்  - மாணவர் சேர்க்கை - செய்தி வெளியீடு எண்: 639, நாள் : 22-03-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வரலாறு, வணிகவியல் உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய 3வது பாடப்பிரிவு (2704 - Third Group) அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் - இணை இயக்குநர் செயல்முறைகள்

 

வரலாறு, வணிகவியல் உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கிய 3வது பாடப்பிரிவு (2704 - Third Group) அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்


Details of schools approved for the 3rd Group (2704 - Third Group) which includes subjects including History, Commerce - Joint Director of School Education Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


NMMS 2025 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு

 

NMMS 2025 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு


NMMS 2025 தேர்வு முடிவுகள்  15-04-2025 அன்று பிற்பகல் 1 மணியளவில்  வெளியிடப்படும்


Tamil Nadu NMMS Result 2025 Name List: Tamil Nadu Directorate Of Government Examinations NMMS exam result for class 6th & 8th class out now on 15 April 2025. The result can be checked through https://apply1.tndge.org/nts-result-change-2025. The roll number and date of birth is required to check the TN NMMS result 2025.


The Directorate of Government Examinations (DGE) in Tamil Nadu will announce the NMMS 2025 results in April 2025. The results will be available on the official website, dge.tn.gov.in. 


How to check the results

Visit the official website, dge.tn.gov.in 

Enter the 10-digit roll number and date of birth 

The result PDF or merit list of selected candidates will be available 


NMMS Exam details

The NMMS exam was conducted on February 22, 2025 

The exam was based on the syllabi of Classes 7 and 8 

The exam was divided into two sections: the Mental Ability Test (MAT) and the Scholastic Abilities Test (SAT) 

Each section consisted of 90 multiple-choice questions (MCQs) and had a duration of 90 minutes 


NMMS Scholarship

Selected candidates will be eligible to receive financial assistance of INR 12,000/- yearly for pursuing their studies 

The National Means-Cum-Merit Scholarship (NMMS) is a scheme by the union government 


7535 Vacancies - Annual Planner 2025 - Released by TRB




 7535 காலிப் பணியிடங்கள் - ஆண்டு திட்டமிடல் 2025 - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


7535 Vacancies - Annual Planner 2025 - Released by TRB


TEACHER’S RECRUITMENT BOARD - TENTATIVE ANNUAL PLANNER – 2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-03-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-03-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: பண்புடைமை

குறள் எண்:997

அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

பொருள்:
அரம் போன்ற கூறிய அறிவுடையவராக இருந்தாலும் மனிதத் தன்மை இல்லாதவர் மரத்திற்கு ஒப்பாவார்.


பழமொழி :
சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.

The spinning world makes every thing rotate.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன்.

2. என்னை விட வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.


பொன்மொழி :

கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு  மனிதரும்  அவரது இலட்சியத்தை அடைய முடியாது. -- காமராஜர்


பொது அறிவு :

1. மண்பானையில் உள்ள நீரை குடித்தால் எவ்வகை நோய் குணமாகும்?

விடை :  இரத்த அழுத்தம்.         

2. உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்கு உள்ளது?

விடை : சீனா


English words & meanings :

Blood pressure      -   இரத்த அழுத்தம

Blood test     -    இரத்த பரிசோதனை


வேளாண்மையும் வாழ்வும் :

* மறக்காமல் குடிநீர்க் குழாயை பயன்படுத்தியதும்  நிறுத்துங்கள்.


மார்ச் 25

வில்லியம் கோல்கேட் அவர்களின் நினைவுநாள்

வில்லியம் கோல்கேட் (William Damian "Will" Colgate: ஜனவரி 25, 1783 – மார்ச்சு 25, 1857) இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த தொழிலதிபர்; அமெரிக்காவைச் சேர்ந்த கோல்கேட் என்ற (தற்போது இது புராக்டர் அன்ட் கேம்பல்) பற்பசைத் தயாரிப்பு நிறுவனத்தை 1806-ல் தொடங்கியவர்.


நீதிக்கதை

வானத்தில் வீடு

அக்பர் ஒருநாள் பீர்பாலிடம், "என்னோட பண்ணையில் ஒரு வீடு கட்டணும் ,ஆனா அந்த வீடு தரையில் கட்ட கூடாது உன்னால் முடியுமா?"என்று கேட்டார்.

பீர்பால்,அதற்கு நிறைய பணமும் ,மூன்று மாதம் அவகாசமும் வேண்டும், என்றார்.

,உடனே அக்பர் அவருக்கு ஆயிரம் தங்க நாணயங்களும் நேரமும் கொடுத்தார்

வீட்டிற்கு போன பீர்பால்

வேட்டைகாரர்களிடம்,"எனக்கு 100 பச்சை கிளிகள் வேண்டும் அதை பிடித்துக் கொண்டு வாங்க" என்றார்.

உடனே எல்லா வேட்டைக்காரர்களும் காட்டுக்கு சென்று அதிக பச்சை கிளிகளை பிடித்துக் கொண்டு வந்தனர்.

அவற்றை தன்னுடைய மகளிடம்  ஒப்படைத்த பீர்பால் ,இந்த கிளிகளுக்கு எல்லாம் பேச கற்றுக் கொடுக்க கூறினார்.

சிறிது நாட்கள் கழித்து,

எல்லா கிளிகளும் பேச ஆரம்பித்தது.உடனே பீர்பால் கட்டடம் கட்டணும் ,கல் எடுத்துட்டு வாங்க  என்று கட்டடம் கட்டும் போது பேசும் எல்லாம்  வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க சொன்னார்.

மூன்று மாதம் கழித்து வீடு கட்ட ஆரம்பித்தாயிற்று வந்து பாருங்க என்று அக்பரை பண்ணைக்கு அழைத்து சென்றார் பீர்பால்.

அங்கு வந்து பார்த்தால் நிறைய கிளிகள் இருந்தன.அவை கட்டடம் கட்டணும் ,மண்ணைபோடுங்க ,

தண்ணீர் ஊற்றுங்க என்று பேசிக் கொண்டே இருந்தன.

இதைப் பார்த்த அக்பருக்கு ஆச்சர்யமாக இருந்தது. "என்ன பீர்பால் இந்த கிளிகளா எனக்கு வீடு கட்டி தர போகுது?" கேட்டார்.

அதற்கு பீர்பால், "ஆமாம் அரசே! காற்றில் வீடுகட்ட ,காற்றில் பறக்கும் பறவைகளால் தான் முடியும்," என்று கூறினார்.

தன்னை பீர்பால் தோற்கடித்து விட்டார்  என்பதை புரிந்து கொண்டார் அரசர்.


இன்றைய செய்திகள்

25.03.2025

* ‘8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184.74 கோடியில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி, 35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் உள்ளிட்ட அறிவிப்புகளை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

* வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

* ஒடிசாவில் தங்க படிமம் கண்டுபிடிப்பு: முதல் முறையாக படிமங்களை தோண்டி எடுக்க தங்க சுரங்கங்களுக்கு ஏலம் விடப்பட உள்ளது.

* திபெத்தில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* பார்முலா1 கார்பந்தயம்: 2-வது சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்.

* மியாமி ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்.


Today's Headlines

* Construction of dams in 9 locations across 8 districts at a cost of ₹184.74 crore. Renovation, restoration, and reconstruction of 149 damaged irrigation systems in 35 districts announced byWater Resources Department Minister Duraimurugan

   * Government and private hospitals are instructed to investigate sudden deaths due to increased heat impact and report the details to the government.

   * Gold deposits discovered in Odisha: Gold mines will be auctioned for the first time for excavation.

   * The National Center for Seismology reported a 4.5 magnitude earthquake in Tibet.

   * Formula 1 car race: Australian driver Oscar Piastri topped the second round.

   * Miami Open Tennis: Serbian player Djokovic advanced to the 4th round.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி

தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த முதலாளி பெங்களூரு: Ok Credit என்ற நிற...