மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் 04-04-2025
Maruthamalai Murugan Temple Kumbabhishekam 04-04-2025
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் 04-04-2025
Maruthamalai Murugan Temple Kumbabhishekam 04-04-2025
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை
Tamil Nadu State Transport Corporation - Issuance of tickets through Digital / Card / QR Code Payment - Incentive prize for conductors who carry out more cashless transactions - Managing Director's Circular
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - தொடர்பாக - சுற்றறிக்கை
TNSTC - Digital / Card / QR Code Payment மூலம் பயணச்சீட்டு வழங்குதல் - அதிக பணமில்லா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் நடத்துநர்களுக்கு ஊக்கப் பரிசு - மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி ஆண்டு விழாவில் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய நிகழ்வுகள் - மீறும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 02-04-2025
DSE Proceedings - School Annual Day Instructions
Events to be avoided during the school annual day function - Action under the Civil Services Act against violating HeadMasters and Teachers - Proceedings of the Director of School Education, Date: 02-04-2025
பள்ளி ஆண்டு விழாவில் திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புவது மற்றும் சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் - இதை மீறும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் கடிதம், நாள் : 01-04-2025
Tasks to be completed by Headmasters and teachers within one week of the completion of the examinations - Letter from the Director of School Education, Date: 01-04-2025
Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வெழுதும் உதவியாளர் : TNPSCக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்காக தேர்வெழுதும் உதவியாளரை, அவர்களே தேர்வு செய்து அழைத்து செல்ல அனுமதி வழங்க உத்தரவிட கோரிய மனு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
100 Days Challenge - மாணவர்களின் அடைவுத் திறனை மதிப்பீடு செய்யும் பணி - மாநிலத் திட்ட இயக்குநரின் SPD செயல்முறைகள், நாள் : 03-04-2025
100 Days Challenge - Student Achievement Assessment Task - State Project Director's Proceedings
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
100 Days Challenge - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக்கல்வித்துறையின் 100 நாள் சவால் - கற்றல் திறன் சோதனை நடைபெறும் பள்ளிகளின் பட்டியல்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-04-2025 - School Morning Prayer Activities
திருக்குறள்:
பால்: பொருட்பால்
இயல்:குடியியல்
குறள் எண்:1005
பாம்பின் கால் பாம்பறியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. 'தர்மம் தலைகாக்கும்' என்பதை அறிவேன், எனவே, என்னால் இயன்ற அளவு தான தர்மம் செய்வேன்.
2. வசதி வாய்ப்புகள் பெருகுவதால் கர்வம் கொள்ள மாட்டேன்.
பொன்மொழி :
எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஒருநாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். -- ஆபிரகாம் லிங்கன்
பொது அறிவு :
1. நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் எது?
விடை: ஆடுதுறை
2. மனித மூளையானது எத்தனை சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது?
விடை : 65%
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
கைகழுவும் போது மடமடவென தண்ணீரை திறந்து விட்டு வீணாக்காதீர்கள்.
ஏப்ரல் 04
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்களின் பிறந்தநாள்
மார்டின் லூதர் கிங் அவர்களின் நினைவுநாள்
மார்டின் லூதர் கிங், இளையவர் (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 - ஏப்ரல் 4, 1968) ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவராவார். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார். பாப்திசுதப் போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1955 இல் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். 1955 இல் தெற்குக் கிழக்காசியத் தலைவர்கள் மாநாடு நிகழவும் உதவினார். அம்மாநாட்டின் முதல் தலைவராகவும் ஆனார். இவ்வமைப்பு கிங் தலைமையில் ஜார்ஜியாவில் அல்பேனி எனுமிடத்தில் 1957 இல் நிறப்பாகுபாட்டிற்கு எதிராக நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது. 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் 'வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி' என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற 'எனக்கொரு கனவு' என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நாயின் தந்திரம்
ஒரு அரசர் ஓய்வுக்காக காட்டுக்குச் சென்ற போது, தன்னுடைய நாயையும் அழைத்துச் சென்றார். அவர் தனது வேட்டையில் மும்முரமாக இருந்த பொழுது நாய் அங்கும் இங்கும் பாய்ந்து பாய்ந்து வண்ணத்துப்பூச்சியை பிடித்துக் கொண்டு காட்டில் வெகு தூரம் சென்று விட்டது.
சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதை நாய் கண்டது. அது தன்னைத்தான் வேட்டையாட வருகிறது என்பதை அறிந்து கொண்ட நாய் எப்படி தப்பிப்பது என்று யோசித்தது.
தூரத்தில் சில எலும்பு துண்டுகள் கீழே கிடந்ததை பார்த்தது. சட்டென்று நாய்க்கு ஒரு யோசனை தோன்ற, புலிக்கு முதுகை காட்டியபடி எலும்பு துண்டுகளுக்கு அருகில் உட்கார்ந்தது.
புலி அருகில் வந்ததும் நாய்,"ஆஹா புலியின் மாமிசம் எவ்வளவு சுவையாக இருக்கிறது. இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்கும்" என்றது.
இதனை கேட்ட புலிக்கு பயம் வந்தது. நாயை, புலி வேறு ஏதோ புதிய மிருகம் என எண்ணிக் கொண்டது.நல்ல வேலை இந்த மிருகத்திடம் நாம் அகப்பட்டுக் கொள்ளவில்லை என்று நினைத்தது.
கீழே நடந்ததை மரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று கவனித்துக் கொண்டிருந்தது.
நாய், புலியை ஏமாற்றியதை புலியிடம் சென்று கூறி அதன் மூலம் தனக்கு பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்று எண்ணி புலியிடம், "அது பெரிய மிருகம் ஒன்றும் இல்லை வெறும் நாய் தான்"என்று விளக்கிக் கூறியது
உடனே புலி," அந்த நாய்க்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்கின்றேன்" என்று திரும்பி நாய் இருந்த இடத்தை நோக்கி வந்தது.
குரங்குடன் புலியும் சேர்ந்து வருவதை பார்த்த நாய் ஏதோ தவறாக நடக்கப் போவதை யூகித்தது. எனவே முன்பு அமர்ந்ததைப் போலவே அமர்ந்துகொண்டு, " என்ன இது!அந்த குரங்கு சென்று எவ்வளவு நேரம் ஆனது,புலியை ஏமாற்றி அழைத்துக் கொண்டு வருவதாய் சென்ற குரங்கை இன்னும் காணவில்லையே" என்று கூறியது.
அதனை கேட்ட புலி, தன்னை ஏமாற்றியது குரங்கு என்று எண்ணி,குரங்கை ஒரே அடி அடித்து விட்டு தன் உயிர் பிழைக்க ஓட்டமாய் காட்டுக்குள் ஓடியது.
நீதி : சமயோசிதமாக செயலாற்றுங்கள். வெற்றி நிச்சயம்
இன்றைய செய்திகள்
04.04.2025
* ரூ. 45 இலட்சத்தில் சென்னை, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று இடங்களில் மீன் கழிவு மறுசுழற்சி ஆலைகள் நிறுவப்படும் என தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் தகவல்.
* கோயம்புத்தூர் மாநகராட்சியில் செம்மொழிப்பூங்கா கட்டுமானப் பணி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
* கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
* அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
* தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டியில் தமிழக வீராங்கனை எஸ்.எஸ். மதுநிஷா 2 பதக்கம் வென்றுள்ளார்.
* ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. வெற்றி.
Today's Headlines
* The Tamil Nadu Fisheries Development Corporation has announced that fish waste recycling plants will be established in Chennai, Ramanathapuram, and Thoothukudi at a cost of ₹4.5 million.
Covai women ICT_போதிமரம்
டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒர...