கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Ennum Ezhuthum Training - Proceedings of SCERT Director

 

எண்ணும் எழுத்தும் பயிற்சி - வட்டார அளவிலான பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 04-06-2025


EE : 1-5 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒன்றிய அளவிலான பயிற்சி சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் (SCERT) செயல்முறைகள்


Ennum Ezhuthum Training - Block Level Training - Proceedings of SCERT Director , Dated : 04-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணி நிறைவு பெற்றவர்களுக்கு UEL ஒப்படைப்பு தொடர்பான தகவல்

 

பணி நிறைவு பெற்ற அனைவருக்கும் உரிய செய்தி


 பணி நிறைவுக்கு பின்னர் பெறும் பணபயன்களில் UEL PA (அரை சம்பளவிடுப்பு) மேற்கண்ட லீவை 6 மாதங்கள் எடுத்து கொள்ள இயலும்!! எடுக்காமல் இருப்பின் 3 மாதங்களுக்கு உரிய பணப்பயன் பெற்று கொள்ள இயலும்! 3 மாதங்களுக்கு பணபயன் பெறும் போது 10% IT மற்றும் Cess பிடித்தம் செய்திடுவார்கள்!! இந்த ஆண்டு வருமானவரியில் மாற்றம் செய்து இருப்பதால் மொத்த வருமானம் 12,75,000/- முடிய வரி செலுத்த வேண்டியது இல்லை!! Un Earned Leave on Personal Affairs பில் தயார் செய்வதற்கு முன்னர் 2025-2026 ஆம் ஆண்டுக்கு உரிய வருமானவரியை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தாங்கள் மார்ச் 2025 க்கு பின் பெற்ற ஊதியம் மற்றும் பிற படிகள், ஓய்வூதியம் பிற படிகள் & UEL PA பெறும் தொகை  ஆகியவற்றைபிப்ரவரி 2026 முடிய கணக்கிட்டு அதற்கு வரி வரவில்லை எனில் IT & Cess பிடித்தம் செய்திட வேண்டியது இல்லை!! பில்லுடன் வருமானவரி படிவம் இணைத்து கொடுக்க வேண்டும்!! வரி வந்தால் அவசியம் IT &Cess பிடித்தம் செய்திட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!


Drug Free Tamil Nadu - Anti-Drug Forum Activities - Innovative Training for Students - DSE Proceedings & G.O.



பள்ளிக் கல்வி - போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு - போதை எதிர்ப்பு மன்றச் செயல்பாடுகள் - 2025-26 மாணவர்களுக்கான (9 முதல் 12ஆம் வகுப்பு) புத்தாக்க பயிற்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 03-06-2025 மற்றும் அரசாணை (நிலை) எண்: 52 , நாள் : 14-10-2024


School Education - Drug Free Tamil Nadu - Anti-Drug Forum Activities - 2025-2026 Innovative Training for Students (9th to 12th Standard) Taking Appropriate Action - Proceedings of the Director of School Education, Dated: 03-06-2025 and Government Order G.O. (Ms) No.: 52, Dated: 14-10-2024



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



+2 Answer sheet's scan copy download website

 


+2 Public Exam Answer sheet's scan copy download website


+2 Answer sheet's scan copy is currently available in the following website



https://apply1.tndge.org/scan-copy


Bank Account Aadhar Seeding Status Checking Procedure

 


School Students Bank Account Aadhar Seeding Status Checking Procedure


பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் பதிவு நிலையை சரிபார்க்கும் வழிமுறை




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-06-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

குறள் 396:

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம் : தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.


பழமொழி :
A good reputation is a fair estate.

நற்குணமே சிறந்த சொத்து.


இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.


பொன்மொழி :

சுறுசுறுப்புடனும் ஆர்வத்துடனும் செயல்படுகிறவனுக்குத்தான் இந்த உலகம் சொந்தம். - இரால்ஃப் வால்டோ எமர்சன்.


பொது அறிவு :

"01.இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? எங்கு உள்ளது?

குஞ்சிக்கல் நீர்விழ்ச்சி (கர்நாடகம்)

Kunchikal Falls (Karnataka)

02.  இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

மக்மோகன் எல்லைக்கோடு

Mcmohan Line



English words & Tips :

Event    -    நிகழ்வு.   

pride.    -     பெருமை


TIPS

* The words your and you're are two different words with different meanings.

* Here is your coffee.

* You're looking good.


அறிவியல் களஞ்சியம் :

உலகின் மிக சோம்பேறியான விலங்கு என்று கருதப்படுவது ‘ஸ்லாத்’. தற்போது இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை கிடைத்த இவற்றின் தொல் எச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய யானை அளவு பெரிய ஸ்லாத்கள் வாழ்ந்துள்ளன என்கிறார்கள். இவை சராசரியாக 3.63 டன் எடை கொண்டிருந்தனவாம்.


ஜூன் 04

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள்

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும். இது 1982 ஆகத்து 19 முதல் ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்நாள் 1982 லெபனான் போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மீது கவனம் செலுத்தியது, பின்னர் இதன் நோக்கம் "உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகளுக்கு ஆளான உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் அனுபவிக்கும் வலியை" உணர்ந்துகொள்வதாக விரிவடைந்தது. இந்த நாள் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐநாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது



நீதிக்கதை

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.

கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்


இன்றைய செய்திகள்

04.06.2025

இன்றைய செய்திகள்

⭐ ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.
திண்டுக்கல்
சிறுமலையில் பல்லுயிர் பூங்கா 2 மாதங்களில் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

⭐40 ரஷ்ய விமானங்களை வீழ்த்தியது உக்ரைன். உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 40 ரஷ்ய விமானங்கள் வீழ்த்தப்பட்டன.

⭐2 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு கடலுக்கு அடியில் ரயில் சேவை; 2030-க்குள் தொடங்க திட்டம்!

விளையாட்டுச் செய்திகள்
இந்திய
கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா.

⭐ நார்வே செஸ் தொடரில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய தமிழக செஸ் வீரர் குகேஷக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.



Today's Headlines

*TODAY'S HEADLINES*
✏️The NEET Masters exam, which was scheduled to be held on June 15, has been postponed.

✏️ The Tamil Nadu government has announced that the biodiversity park in Sirumalai, Dindigul district, will be opened in 2 months.

✏️ Ukraine shoots down 40 Russian planes. 40 Russian planes were shot down in a drone attack carried out by Ukraine.

✏️ Under water train service is Planned to start by  2030. The estimated travelling time
from India to Dubai is 2 hours;
*SPORTS NEWS*

🏀 Rajiv Shukla becomes interim president of the Board of Control for Cricket in India.

🏀 Chief Minister M.K. Stalin congratulates Tamil Nadu chess player Kukesha for defeating Magnus Carlsen in the Norway Chess Series.


Covai women ICT_போதிமரம்


Kalanjiyam Appல் May மாத Payslip பதிவிறக்கம் தற்போது செய்துகொள்ளலாம்



களஞ்சியம் Appல் மே மாத Payslip  பதிவிறக்கம் தற்போது செய்துகொள்ளலாம்


Kalanjiyam Appல் May மாத Payslip  பதிவிறக்கம் தற்போது செய்துகொள்ளலாம்



Dear Sir/Madam, To download Pay slip for May-2025 net pay of Rs ******, use Kalanjiyam Mobile App. Please visit https://www.karuvoolam.tn.gov.in/app - TN Treasury


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...