கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்



கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்


பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் - கடலூர் தனியார் பள்ளிக்கு, பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்


கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடலூர் தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.



கடலூர் செம்மப்பம் பகுதியில பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு மாணவர், ஒரு மாணவி உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த அந்த பள்ளி வேன் குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பள்ளி வேனில் 4 மாணவ, மாணவிகளும் ஒரு ஓட்டுநர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளி வாகனங்களில் ஓட்டுநருடன் கட்டாயம் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்திற்கு உதவியாளர் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவியாளர் இல்லாதது குறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 



விபத்தில் நடந்தது எப்படி? 


இன்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் செம்மாங்குப்பம் ரயில்வே கேட் அருகே சென்றபோது தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கிராஸ் செய்து விபத்து ஏற்பட்டது. ரயில்வே கேட் மூடாதால் ரயில் வரவில்லை என பள்ளி வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்கி சென்றுள்ளார். இந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் பள்ளி வேன் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நசுங்கி உள்ளது.


அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்டோர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற 12 வயது மாணவன் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாருமதி என்ற 16 வயது மாணவியும், செழியன் என்ற 15 வயது மாணவனும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சின்னகாட்டுசாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவரது மகன் மற்றும் மகள் ஆவர். 


தற்போது  விஷ்வேஸ் என்ற மாணவன்,   பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் (47), ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



8 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

 

அரசாணை (நிலை) எண் 83, நாள் : 08-07-2025


G.O.(Ms).No.83, Dated 08.07.2025


8 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு


Government Order G.O. (Ms) No. 83, Dated: 08-07-2025 - Government Order issued to upgrade 8 tribal boarding schools



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-07-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-07-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 92:

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்            

விளக்கம் : முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.


பழமொழி :
A journey of a thousand miles begins with a single step.

ஆயிரம் மலை பயணம் ஒரு அடியில் தான் தொடங்குகிறது.


இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

ஒருவரது பேச்சு அவரது நடத்தையை எடுத்துக் காட்டும் ஒரு கோணமாகும். - ஜேம்ஸ் பார்ஸன்.


பொது அறிவு :

01.தமிழ்நாட்டில் மாமல்லபுரம் நகரை உருவாக்கிய மன்னன் யார்?

முதலாம்  நரசிம்மவர்ம பல்லவன்(Narasimhavarma pallava I)

02. இந்தியாவில் நறுமணப் பொருட்களின் தொட்டில் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?            

       கேரளா( Kerala)


English words :

Riddle – a difficult question which has a clever or amusing answer. புதிர்


Grammar Tips:

The radius of both the circles are equal

In this sentence radius should be replaced by radii.



அறிவியல் களஞ்சியம் :

மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது. 


ஜூலை 09

9 ஜூலை 1875 - இந்தியாவின் முதல் பங்குச் சந்தையான மும்பை பங்குச் சந்தை இந்த நாளில் நிறுவப்பட்டது.



நீதிக்கதை

பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது.

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்திகள்

09.07.2025

⭐தமிழகத்தின் கிராம பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⭐ ஜப்பானிலிருந்து வாகனங்கள் மற்றும் அரிசியை அதிகளவில் இறக்குமதி செய்து வரும் அமெரிக்கா ஜப்பானிய பொருள்களுக்கு 35 சதவீதம் வரை வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.

⭐தமிழகத்தில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

⭐கடலூர் தனியார் பள்ளி வாகனம் மீது ரெயில் மோதி மாணவர்கள் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀எகிறிய ஐபிஎல் பிராண்ட் மதிப்பு.. சிஎஸ்கே அணியை பின்னுக்கு தள்ளிய RCB, MI

🏀குரோஷியா சர்வதேச செஸ் போட்டி: நார்வே வீரர் கார்ல்சென் 'சாம்பியன்'.


Today's Headlines

✏️The Tamil Nadu government has issued an order allocating Rs. 505 crore for the construction of 100 high-level bridges on panchayat and panchayat union roads in rural areas of Tamil Nadu.

✏️The Tamil Nadu government has ordered the immediate filling of 2,299 vacant village assistant posts in Tamil Nadu.

✏️ Students killed after train hits the private school vehicle in Cuddalore.

✏️The United States, which imports a large amount of vehicles and rice from Japan, has announced that it will impose a tax of up to 35 percent on Japanese goods.

*SPORTS NEWS*

🏀 IPL brand value soars.. RCB, MI overtake CSK

🏀 Croatia International Chess Tournament: Norwegian Carlsen 'champion'.

Covai women ICT_போதிமரம்


EMIS தகவல் - Transfer பெற்று புதிய பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பெயர் புதிய பள்ளியில் சேர்க்க செய்ய வேண்டியது

 

EMIS தகவல் - பணியிடமாறுதல் பெற்று புதிய பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பெயர் புதிய பள்ளியில் சேர்க்க செய்ய வேண்டியது


தற்போது பணிமாறுதல் பெற்று புதிய பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது பெயர் புதிய பள்ளியில் சேர்க்க தங்களது Individual ID and Password கொண்டு EMIS வலைதளத்தில் உள்ளே சென்று Change School / Office  Request பயன்படுத்தி  புதிய பள்ளியில் தங்களது பெயரை சேர்க்கலாம்.




இன்றைய / முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் போட்டிகள்

 


இன்றைய / முன்னாள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் போட்டிகள்


என் பள்ளி! என் பெருமை!!


செய்தி வெளியீடு எண் : 1551, நாள்: 08-07-2025


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றி வரும் அரும் தொண்டுகளையும், செயல்படுத்தி வரும் சிறப்பான நலத்திட்டங்களையும் மாணவர் சமுதாயம் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் பல்வேறு கலைப் போட்டிகளை நடத்துகிறது. இப்போட்டிகளில் இன்றைய மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்கள் / மாணவர்களுக்கு கலைப் போட்டிகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு



>>> செய்தி வெளியீடு எண் : 1551, நாள்: 08-07-2025 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகள், முதியோருக்கான நேரடி நுழைவு சலுகை



10-07-2025 பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் குழந்தைகள், முதியோருக்கான நேரடி நுழைவு சலுகை


Om Arunachaleswara

Arulmigu Arunachaleswarar & ApithaKuchambika Temple

Tiruvannamalai District, Tamilnadu -606601[TM020343]

PRESS RELEASE

07-07-2025

Tiruvannamalai

SRI ARULMIGU ARUNACHALESWARAR TEMPLE, TIRUVANNAMALAI

On the auspicious occasion of Guru Pournami falling on Thursday, 10th July 2025, Sri Arulmigu Arunachaleswarar Temple, Tiruvannamalai, has made special arrangements for the convenience of devotees:


Special Entry Arrangements.

Senior Citizens (above 60 years) and parents with children below 6 years are allowed direct entry through the North Gate (Ammani Amman Gopuram) from:

• Morning-10:00 AM to 12:00 PM

 Evening- 3:00 PM to 5:00 PM

Entry during this period will be direct, without diversion or delay.

Entry for Physically Disabled Devotees (Wheelchair Assistance):

Devotees requiring wheelchair assistance must enter only through West Gate (Peyi Gopuram).

Allowed timings:

 Morning: 10:00 AM to 12:00 PM

Evening: 4:00 PM to 6:00 PM

Battery Car Facility is available for aged and specially-abled persons inside the temple premises.

. For assistance batter car please contact: +919487555441

Emergency Medical Support:

In case of health emergencies, First Aid and Ambulance services are availabfe

Contact: Medical team

+91-8072619454.,+91 9791556353


THIRAN - Baseline Assessment வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை



 💁‍♂️THIRAN - Baseline Assessment வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை


💁‍♂️THIRAN - BASELINE ASSESSMENT Question Paper DOWNLOAD Procedure 


THIRAN - Targeted Help for Improving Remediation & Academic Nurturing



💁‍♂️தேர்வு நடைபெறும் நாட்கள்


💁‍♂️08-07-2025 - தமிழ் 

09-07-2025  ஆங்கிலம்

10-07-2025 - கணிதம்


💁‍♂️தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


💁‍♂️வினாத்தாள் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி


Website address to download question paper for 6th, 7th & 8th Standard



https://exam.tnschools.gov.in/#/


1. வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்வதற்கு https://exam.tnschools.gov.in என்னும் இணைய முகவரியை அணுக வேண்டும்.

2. பள்ளியின் தலைமையாசிரியர் / ஆசிரியரின் EMIS பதிவெண்ணையும் கடவுச்சொல்லையும் கொண்டு உள்நுழைய வேண்டும். பள்ளியின் UDISE எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.

3. உள்நுழைந்தவுடன் காணப்படும் Descriptive பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.

4. அங்குள்ள Download Question Paper பகுதியில்   6, 7 & 8ஆம் வகுப்புகளுக்கு  வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 6 புதிய அறிவிப்புகள்

    திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ▪️ திருவாரூர் நகர்ப் பகுதியில் நவீன வச...