கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணியிட மாறுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணியிட மாறுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


Misuse of power to please a few is unacceptable - High Court reprimands officials


 அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை நேர்மையான, உண்மையான, உரிய காரணங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அந்த அதிகாரத்தை யாரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிபவர் நீலநாராயணன். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி நீலநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 


இதனை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு : மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது, சில ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில் தவறு இருப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

 

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மனுதாரர் கூறியது உறுதி செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மோசடியில் தொடர்புடைய ஆசிரியர்கள் மனுதாரருக்கு பல்வேறு பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்றதும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.


இந்தப்புகாரை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் விசாரிக்காமல் மனுதாரரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் எந்த விவரங்களும் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில், “மனுதாரருக்கு எதிராகக் குற்றம் சுமத்திய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிர்வாகத்தை சுமூகமாக்கும் நோக்கில் மனுதாரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், யாரை திருப்திப்படுத்த பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் அவசரமாக பணியிட மாற்ற உத்தரவைப் பிறப்பித்தார் என்பதையும், அதற்கான அவசரத் தேவை என்ன? என்பதையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆசிரியர்களோடு இணக்கமான உறவை மேற்கொள்ளவில்லை என்பதற்காக பணியிட மாற்றம் செய்யும் உத்தரவு மிகவும் விசித்திரமாக உள்ளது.


நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுடன் மனுதாரரால் இணக்கமான உறவைப் பேண இயலவில்லை எனில் திருப்பத்தூர் மாவட்ட ஆசிரியர்களுடன் மட்டும் அது எப்படி சாத்தியமாகும்? உரிய காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்தை நேர்மையாக, உண்மையான, உரிய காரணத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தை யாரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் அது ஏற்கத்தக்கது அல்ல.


எந்த ஊழியரையும் நீதியின்றி காயப்படுத்தக் கூடாது. அது அவரை மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரையும் காயப்படுத்தும். ஊழல், தவறான நோக்கத்தில் செயல்படும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க எந்த தயக்கமும் தேவையில்லை. சில ஊழியர்களை துன்புறுத்தும் நோக்கில் பணியிட மாறுதல் அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது. இந்த வழக்கில் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு நீதியற்றது.


ஊழியர்கள் அல்லது சங்கங்களால் அளிக்கப்படும் புகார்கள் அல்லது அவர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் முழு விவரத்தையும் விரிவாக ஆராயாமல் இடமாறுதல் வழங்கியதாக கூறப்படும் காரணங்களை ஏற்க இயலாது. இதுபோன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டால், எந்த அரசு ஊழியரும் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற முடியாது. எனவே, பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் மனுதாரரை பணியிட மாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்


57 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.0768-அ1-இ1-2024, நாள் : 20-08-2024 - DEO's Transfer Order...


 57 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.0768-அ1-இ1-2024, நாள் :  20-08-2024 - DEO's Transfer Order pdf...


 Transfer of 57 District Education Officers - Director of School Education Proceedings Rc No.0768-A1-S1-2024 DEO's Transfer Order.pdf...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் ஓட்டுநர்களுக்கு மாறுதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 19-08-2024...

 

 ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பதிவறை எழுத்தர் மற்றும் ஓட்டுநர்களுக்கு மாறுதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 19-08-2024...


Transfer of Record Clerks and Drivers who have been working at the same place for more than three years - Proceedings of the Joint Director of School Education, Dated: 19-08-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - அரசாணை (நிலை) எண் 195, நாள்: 20-08-2024 வெளியீடு...

 


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - அரசாணை (நிலை) எண் 195, நாள்: 20-08-2024 வெளியீடு...


CEO Transfer & DEO to CEO Promotion - G.O. Ms. No. 195, Dated: 20-08-2024 Released...



>>> அரசாணை (நிலை) எண் 195, நாள்: 20-08-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களுக்கு PA பணியிட மாறுதல் - இணை இயக்குநரின் செயல்முறைகள்...

 

மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களுக்கு PA பணியிட மாறுதல் - இணை இயக்குநரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023 - 2024ஆம் ஆண்டு - உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முறை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023 (Announcement of General Transfer Counselling for Physical Education Teachers - Procedure for Uploading Applications - Proceedings of Director of School Education Rc.No: 69185/ M/ EE/ 2023, Dated: 28-11-2023)...


2023 - 2024ஆம் ஆண்டு - உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முறை -  பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023 (Announcement of General Transfer Counselling for Physical Education Teachers - Procedure for Uploading Applications - Proceedings of Director of School Education Rc.No: 69185/ M/ EE/ 2023, Dated: 28-11-2023)...



>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 69185/ எம்/ இ3/ 2023, நாள்: 28-11-2023...



தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 004905/ அ1/ இ1/ 2023, நாள்: 02-08-2023 (TamilNadu School Education - Proceedings of the Director of School Education regarding the Administrative transfer of the District Education Officer and the officer working in the same post Rc.No.: 004905/ A1/ E1/ 2023, Date: 02-08-2023)...

 

>>> தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 004905/ அ1/ இ1/ 2023, நாள்: 02-08-2023 (TamilNadu School Education - Proceedings of the Director of School Education regarding the Administrative transfer of the District Education Officer and the officer working in the same post Rc.No.: 004905/ A1/ E1/ 2023, Date: 02-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை NEP அமல்படுத்துமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் Supreme Co...