கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (29-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...






மேஷம்

மே 29, 2021



 

உங்களின் மீதான நம்பிக்கையும், மனதில் புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.


பரணி : மாற்றங்கள் பிறக்கும்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

மே 29, 2021



புதிய முயற்சிகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனம் அமைதி பெறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : கவனம் வேண்டும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

மே 29, 2021



கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மிருகசீரிஷம் : திருப்திகரமான நாள்.


திருவாதிரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

மே 29, 2021



உழைப்பிற்கேற்ற முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த சிறு உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய வியூகங்களை கற்றுக்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.


பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------




சிம்மம்

மே 29, 2021



பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சிலருக்கு சாதகமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மகம் : விருப்பங்கள் நிறைவேறும்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

மே 29, 2021



தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.


அஸ்தம் : பேச்சுவார்த்தைகள் சாதகமாகும்.


சித்திரை : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

மே 29, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் தொடர்பாக இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஆதரவு கிடைக்கும்.


சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : அறிமுகம் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மே 29, 2021



மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் மூலம் மேன்மை ஏற்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : கலகலப்பான நாள்.


அனுஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


கேட்டை : மேன்மையான நாள்.

---------------------------------------




தனுசு

மே 29, 2021



குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமும், நாட்டமும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : பிரச்சனைகள் குறையும்.


உத்திராடம் : ஆசைகள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

மே 29, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் வழியில் லாபம் மேம்படும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசு தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : லாபம் மேம்படும்.


திருவோணம் : திட்டங்கள் நிறைவேறும்.


அவிட்டம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




கும்பம்

மே 29, 2021



தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்க வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம்: தாமதங்கள் அகலும்.


சதயம்: பொறுமை வேண்டும்.


பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

மே 29, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் யாவும் நீங்கி தெளிவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்டு வந்த நெருக்கடிகள் குறையும். மனைவி வழி உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : தெளிவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.


ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------


ஏப்ரல்,மே மற்றும் ஜூன் மாதங்களில் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை -அரசாணை வெளியீடு...



 அரசாணை (நிலை) எண்.G.O.No.256, நாள்: 28-05-2021 - ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு...


>>> அரசாணை (நிலை) எண்.256, நாள்: 28-05-2021...


தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு...

 


தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி காலை 6மணி வரை மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு...


செய்தி வெளியீடு எண்:173, நாள்:28.05.2021


ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களது அறிக்கை...


>>> செய்தி வெளியீடு எண்:173, நாள்:28.05.2021...




COVID - 19 உங்களுக்கு இருப்பதாக நீங்கள் நினைத்தால் என்ன செய்வது? UNICEF வழங்கும் உதவிக்குறிப்புகள்...

What to do if you think you have COVID - 19 

அவசரக் காலப் பராமரிப்பை எப்போது நாடவேண்டும் , வீட்டில் இருந்தபடியே லேசான COVID - 19 பாதிப்புகளை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி UNICEF வழங்கும் உதவிக்குறிப்புகள்.



உங்களுக்கு உடல்நலக் குறைவு என அறிந்தவுடன்,



பொறுமையாக இருங்கள். நினைவில் கொள்ளுங்கள் கோவிட்-19 பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் குணமடைகிறார்கள். மேலும் அவர்கள் மருதுவமைனையில் அனுமதிக்கப்பட தேவையில்லை.  




1. சுய-தனிமைபடுத்திக் கொள்ளுங்கள். கோவிட் பரிசோதனை செய்துகொள்வதற்கோ, பரிசோதனை முடிவிற்கோ காத்திருக்க வேண்டாம்.



2⃣ ஆலோசனைக்கு ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.  



3⃣ ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது அடிக்கடி உங்களின் மூச்சு வேகமாகும் போது உங்களது ஆக்சிஜென் அளவினை பரிசோதியுங்கள்.


📍 ஆக்சிமீட்டரின் ஆக்சிஜென் அளவு 94% க்கும் கீழே காண்பித்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.



4⃣ ஒவ்வொரு 6 மணிநேரத்துக்கும் உங்களது உடல் வெப்பநிலையை கண்காணியுங்கள். உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கண்காணியுங்கள்.


📍 3 நாட்களுக்கு உடல் வெப்பநிலை 101F (38C) தொடர்ந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.




5⃣ இந்த நிகழ்வுகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் ஒரு அவசர மருத்துவ உதவியை நாடுங்கள்.


📍 மோசமான சுவாசக் குறைபாடு ஏற்படும்போது.


📍 உதடு அல்லது முகம் நீல நிறமாகும்போது.


📍 தன்னிலை இழத்தல் எனும் நிலை அதிகரிக்கும்போது.


📍 மார்பு பகுதியில் தொடர் வலி அல்லது அழுத்தம் ஏற்படும்போது.


📍 மந்தமான பேச்சு அல்லது வலிப்புதாக்கங்கள். 


📍 எழுந்திருக்கவோ அல்லது விழித்திருக்கவோ முடியவில்லை என்ற நிலையின்போது.




பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்த கண்ணப்பன் அவர்களுக்கு புதிய பதவி...

 

பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக இருந்து, பொறுப்பில் இருந்து விலகிய திரு.கண்ணப்பன் அவர்களுக்கு புதிய பதவி.



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில கூடுதல் திட்ட இயக்குநராக கண்ணப்பன் அவர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை.


உயர்கல்வித் துறைச் செயலாளராக இரண்டு நாள்கள் மட்டுமே இருந்த திரு.தீரஜ்குமார் இ.ஆ.ப. மாற்றம்...

 


உயர்கல்வித் துறைச் செயலாளராக இரண்டு நாள்கள் மட்டுமே இருந்த திரு. தீரஜ்குமார் மாற்றப்பட்டு, திரு கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். 


திரு. தீரஜ்குமார் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இரண்டு நாளில் மூன்று முறை மாற்றப்பட்டுள்ளனர். இன்றும் மாற்றப்பட்ட அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



டெல்லி அயல்பணியிலிருந்து தமிழக பணிக்கு திரும்பிய அதிகாரி ஷிவ்தாஸ் மீனாவுக்கு முக்கிய துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்ட அதிகாரிகள் பழைய பதவி விவரம்:



1. அயல் பணியில் மத்திய சுற்றுச்சூழல் துறை தலைவராக பதவி வகித்த ஷிவ்தாஸ் மீனா மாநில பணிக்கு திரும்பிய நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



2. உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து தீரஜ்குமார் மாற்றப்பட்டு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.




3. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலர் கார்த்திகேயன் மாற்றப்பட்டு உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.




4. போக்குவரத்து கழக ஆணையர் பதவி வைக்கும் ஜவகர் மாற்றப்பட்டு கால்நடை, பால்வளம், மற்றும் மீன்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப்பதவி கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்த்துக்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.




5. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி வகிக்கும் ஹர்மந்தர் சிங் மாற்றப்பட்டு சர்க்கரை துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையர் அந்தஸ்தில் இருந்த சர்க்கரை துறை கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்திற்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளது.



இவ்வாறு தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


>>> IAS அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...


ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை...

 கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 


இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை : 


அரசு , அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துரிதமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரத்தை அதற்குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை தகவல் முகமை ( எமிஸ் ) தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள் , போடாதவர்கள் எண்ணிக்கையை மாவட்டவாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொகுத்து அதன் விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். அதில் முதல் மற்றும் 2 - ஆவது தவணை தடுப்பூசி விவரங்களை தனியாக குறிப்பிட வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , முதல்வர்களுக்கு உரிய வழிகாட்டு தல்களை வழங்க வேண்டும் . அதனுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...