கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் திரு.சைலேந்திரபாபு அவர்களது எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை - காணொளி (Tamil Nadu Police DGP Mr.Sylendrababu has given cautious advice to Government School Students)...


அரசு பள்ளி மாணவர்களுக்கு: பள்ளிக்கூடம்தான் நமது வாழ்வாதாரம், ஆசிரியர்கள் நமது ஆதரவாளர்கள். கடவுளுக்கும் மேலான அவர்களிடமா இந்த வன்முறை? Government school students : School is your Capital. The teachers are your well wishes, they are the Gods. Why are you showing aggression to them.


>>> அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் திரு.சைலேந்திரபாபு அவர்களது எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை - காணொளி (Tamil Nadu Police DGP Mr.Sylendrababu has given cautious advice to Government School Students)...




ராஜஸ்தான் மாநில அரசு தனது பணியாளர்களுக்கு 01-04-2022 முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துகிறது - ஒரு மனிதாபிமான, வரலாற்று முடிவு - தமிழாக்கம் (Rajasthan implements Old Pension Scheme - A Historic, Humane Decision)...

 


ராஜஸ்தான் மாநில அரசு தனது பணியாளர்களுக்கு 01-04-2022 முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துகிறது - ஒரு மனிதாபிமான, வரலாற்று  முடிவு - தமிழாக்கம் (Rajasthan implements Old Pension Scheme - A Historic, Humane Decision)...


```RAJASTHAN State's implementation of OLD PENSION SCHEME : A HISTORIC HUMANE DECISION```


வணக்கம்.


இராஜஸ்தான் மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது தொடர்பாக அம்மாநில 'தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை' நாடு முழுவதிலும் வெளியாகும் ஆங்கில தினசரி நாளிதழ்களில் *'ஒரு வரலாற்றுப்பூர்வ மனிதநேய முடிவு'* எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கை ஆங்கில தினசரி நாளிதழ்களின் முதல் பக்கத்தை முழுமையாக அலங்கரித்துள்ளது.


இது வெற்று விளம்பரமாக இல்லாமல், பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டி நாடு முழுவதும் போராடி வரும் ஊழியர்களுக்கும் அவர்கள் பணியாற்றும் அரசு நிருவாகத்திற்கும் இடையேயான 'கோரிக்கையை வலுப்படுத்தும் பாலமாகவே' அமைந்துள்ளது எனலாம். ஏனெனில், அவ்விளம்பரம் ஒரு அரசின் சாதனை விளம்பரமாக இல்லாமல், ஊழியர்களின் & பொதுமக்களின் நிலையில் நின்று அவர்களுக்கான உரிமையின் நியாயத்தைப் பேசுவதாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு சேமநல அரசிற்கான பார்வையில் அவ்விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.


எனவே, தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், ஆட்சியாளர்களும், அரசியல் கட்சியினரும் குறிப்பாகப் பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில், CPS ஒழிப்பு இயக்கம் பொறுப்புணர்வுடன் அவ்விளம்பரத்தைத் தமிழ்ப்படுத்தி இங்கே வெளியிடுகிறது.


👇👇👇👇👇👇👇👇


👉 இராஜஸ்தான் அரசு தனது 2022-23 நிதிநிலை அறிக்கையில் 1.1.2004-ற்குப் பிறகு பணியேற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தது.


👉 இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை (Gratuity), ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதால் அவர்களின் சமூகப் பொருளாதாரம் வலுவடையும்.


👉 தற்போது பிடித்தம் செய்யப்பட்டு வரும் 10% பிடித்தம் உடனடியாக நிறுத்தப்படுவதால் 1.4.2022 முதல் அவர்களின் ஊதியம் உயரும்.


👉 கூடுதலாக இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கும் GPF வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு அவர்களின் பணி ஓய்வின் போது வழங்கப்படும்.


--- ----- ---- ----


NPS-ஐ நடைமுறைப்படுத்தியதால் நேர்ந்தது என்ன?


★ ஓய்வூதியத்திற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாமல் போனது.


★ ஊழியர்கள் 10% பங்களிப்பு செய்ய வேண்டியது கட்டாயமானது.


★ ஊழியர்களை மனித உரிமை மீறலில் இருந்து பாதுகாக்க வேண்டி, இந்திய ஒன்றிய அரசிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் NPS-ஐ மறு ஆய்வு செய்யும் குழுவை அமைக்கும்படி கேட்டுக் கொண்டது.


★ இரண்டாவது நீதித்துறை ஊதிய ஆணையம் நீதித்துறையினருக்கு NPS திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என பரிந்துரைத்தது.


★ கேரளா, ஆந்திரா, இமாச்சல் & பஞ்சாப் மாநில அரசுகள் NPS-ஐ மறு ஆய்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளன.


★ படைவீரர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதிலிருந்து அவர்களுக்குப் போதுமான சமூகப் பாதுகாப்பை பழைய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே வழங்கும் என்பது தெள்ளத்தெளிவாகிறது.


--- ----- ---- ----


NPS-ஐ திட்டமிடுதல், நடைமுறைப்படுத்தல் & பார்வையிடலில் மத்திய தணிக்கை ஆணையம் (CAG) வெளியிட்ட அதிர்ச்சிகரமான உண்மைகள் :


★ NPS நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதற்கான பணிசார் விதிகள் / NPS-ல் பணியேற்ற ஊழியர்களுக்கான ஓய்வுக்காலப் பலன்கள் குறித்து தற்போது வரை இறுதி முடிவுகள் ஏதும் எடுக்கப்படாது கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.


★ இத்திட்டம் செயல்பட்டுவரும் விதம்  குறித்த வழக்கமான மதிப்பீடுகளை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை  மேற்கொள்ளுதல் சார்ந்தோ அல்லது வேறு ஏதாகிலும் தொழில்நுட்பத்தைச் சேர்த்து இத்திட்ட நடைமுறை சார்ந்த நம்பகத்தன்மையை அறியவோ எவ்விதக் குறியீட்டுமுறைமையும் இதில் இல்லை.


★ இத்திட்டத்தில் தகுதியானோருக்கான 100%  வரையறைகளை உறுதி செய்வதில் இன்னமும் தேக்கமே உள்ளது.


--- ----- ---- ----

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் :


★ ஊழியருக்கான ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி மாத ஊதியத்தின் 50%-ஐ ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் பெறுவர்.


★ பணவீக்கத்தில் இருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான பஞ்ச நிவாரணமாக இது இருக்கும்.


★ ஊழியர் எந்தவித பங்களிப்பும் அளிக்கத் தேவையில்லை.


★ 33% வரையிலான ஓய்வூதியத் திரண்ட தொகை (Commutation) கிடைக்கக்கூடும்.


--- ----- ---- ----


பழைய ஓய்வூதியத் திட்டத்தால் மாநில அரசிற்கு ஏற்படும் நேர்மறைப் பலன்கள் :


★ நல்லாட்சி நடக்க உதவியாக ஊழியர்கள் தமது பணியில் அதிக ஊக்கத்தோடு செயல்படுவர்.


★ அறிவார்ந்த மற்றும் திறமைவாய்ந்த இளைஞர்கள் அதிக அளவில் அரசின் புதிய பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பர்.


★ பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மாநில & மாநில மக்கள் நலனுக்கான வளர்ச்சித்திட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயைக்கூட குறைக்க வேண்டிய தேவையிருக்காது.


- தகவல் & பொதுமக்கள் தொடர்புத் துறை, இராஜஸ்தான் அரசு


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி,  மேற்கண்டவாறு அதற்கான காரணத்தையும் ஒரு மாநில அரசே வெளியிட்டுள்ளது உள்ளபடியே மகிழ்வையும் நம்பிக்கையையும் அதிகரிப்பதாகவே உள்ளது.


தமிழ்நாடு CPS ஒழிப்பு இயக்கம் சார்பாக, இராஜஸ்தான் மாநில ஊழியர்களுக்கும் மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடே இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திரு.அசோக் ஹெலாட் அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கோள்கிறோம்.



அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 028875/ 22/ 2021, நாள்: 22-02-2022 & சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல்(Awarding of Best School Shields to Government / Government Aided / Panchayat Union / Municipality / Corporation Primary / Middle Schools for the year 2020-21 - Proceedings of the Director of Elementary Education & Evaluation List for Selecting the Best School)...



>>> அரசு / அரசு உதவிபெறும் / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 028875/ 22/ 2021, நாள்: 22-02-2022 (Awarding of Best School Shields to Government / Government Aided / Panchayat Union / Municipality / Corporation Primary / Middle Schools for the year 2020-21 - Proceedings of the Director of Elementary Education)... 


>>> சிறந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்கான மதிப்பீட்டுப் பட்டியல் (Evaluation List for Selecting the Best School)...

இன்றைய (26-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 26, 2022



செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றமும், அனுபவ அறிவும் வெளிப்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.


பரணி : தெளிவு பிறக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 26, 2022



அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். புதிய பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : இழுபறிகள் மறையும்.


ரோகிணி : பிரச்சனைகள் நீங்கும்.


மிருகசீரிஷம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 26, 2022



உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உண்டாகும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




மிருகசீரிஷம் : நம்பிக்கை ஏற்படும்.


திருவாதிரை : முன்னேற்றமான நாள்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 26, 2022



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். குழந்தைகள் பிடிவாதமாக செயல்படுவார்கள். முக்கியமான முடிவு எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : நிதானம் வேண்டும்.


பூசம் : சிந்தித்து செயல்படவும்.


ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 26, 2022



வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தக பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திரம் : லாபகரமான நாள்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 26, 2022



நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் உள்ள மறைமுக போட்டிகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வாழ்க்கை துணைவருடன் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதாயகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மேன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




உத்திரம் : தெளிவு பிறக்கும்.


அஸ்தம் : வெற்றிகரமான நாள்.


சித்திரை : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------





துலாம்

ஏப்ரல் 26, 2022



சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  


சுவாதி : வெற்றி கிடைக்கும்.


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 26, 2022



விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் சேமிப்பு குறையும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.


அனுஷம் : சேமிப்பு குறையும்.


கேட்டை : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 26, 2022



புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.  இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். மதிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : முடிவு கிடைக்கும்.


பூராடம் : மேன்மையான நாள்.


உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.

---------------------------------------





மகரம்

ஏப்ரல் 26, 2022



புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் அகலும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : எண்ணங்கள் மேம்படும்.


திருவோணம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


அவிட்டம் : இழுபறிகள் அகலும்.

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 26, 2022



உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.


சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரட்டாதி : ஆதரவான நாள்.

---------------------------------------





மீனம்

ஏப்ரல் 26, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். மேன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




பூரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


உத்திரட்டாதி : புதுமையான நாள்.


ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


நூற்றாண்டுகள் கொண்டாட உள்ள பள்ளிகள், பெருந்தலைவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மற்றும் தொல்லியல் துறை புராதன கட்டிடங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education seeking details of schools to celebrate the Centuries, schools where National Leaders were educated and where the ancient buildings of the Department of Archeology are located) ந.க.எண்: 029550 (1), (2), (3)/ என்2/ இ1/ 2022, நாள்: 22-04-2022...



>>> நூற்றாண்டுகள் கொண்டாட உள்ள பள்ளிகள், பெருந்தலைவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மற்றும் தொல்லியல் துறை புராதன கட்டிடங்கள் அமைந்துள்ள பள்ளிகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education seeking details of schools to celebrate the Centuries, schools where National Leaders were educated and where the ancient buildings of the Department of Archeology are located) ந.க.எண்: 029550 (1), (2), (3)/ என்2/ இ1/ 2022, நாள்: 22-04-2022...

கணினியில் வைரஸ் தாக்குதலை தடுக்க Anti Virus Software Install செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் (Ransomeware Attack - Installation of Antivirus / OS in Desktops regarding - Letter from the Director of Elementary Education R.C.No.: 000973/ K2/ 2022, Dated: 22-02-2022)...

 


>>> கணினியில் வைரஸ் தாக்குதலை தடுக்க Anti Virus Software Install செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் கடிதம் (Ransomeware Attack - Installation of Antivirus / OS in Desktops regarding - Letter from the Director of Elementary Education R.C.No.: 000973/ K2/ 2022, Dated: 22-02-2022)...

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) 2021 - கூடுதலாக 56 மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு (New Health Insurance Scheme 2021 - Approval to 56 Additional Hospitals - G.O.Ms.No.71, Dated: 21-03-2022)...



>>> புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) 2021 - கூடுதலாக 56 மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு (New Health Insurance Scheme 2021 - Approval to 56 Additional Hospitals - G.O.Ms.No.71, Dated: 21-03-2022)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...