கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Guidelines for Approval of Appointment of Teacher Posts in Government Aided Elementary and Middle Schools - Government Secretary's Letter

 

அரசு நிதி உதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌  ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நியமன ஒப்புதல்‌ வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்‌ - பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர்‌ செயல்முறைகள் கடிதம், நாள்: 10-05-2024


Guidelines for Approval of Appointment of Teaching Posts in Government Aided Primary and Middle Schools - Education Department Government Secretary's Proceedings Letter, Dated: 10-05-2024


 அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024-ல் அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமன ஒப்புதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வருத்து ஆணையிடப்பட்டுள்ளது. இதில், சிறுபான்மைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் நியமனங்களுக்கும் பதவி உயர்வுகளுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.


பள்ளிக்கல்வித்துறை

தலைமைச் செயலகம்

சென்னை 9


Efile கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024


அனுப்புநர்‌
திரு. ஜெ.குமரகுருபரன்‌, இ.ஆ.ப....
அரசு செயலாளர்‌.

பெறுநர்‌

தொடக்கக்கல்வி இயக்குநர்‌.
சென்னை -6.

அய்யா,

பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - உதவி பெறும்‌ பள்ளிகள்‌ - அரசு நிதியுதவி பெறும்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள தலைமை ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நியமன ஒப்புதல்‌ அளிக்க அறிவுரைகள்‌ வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏனைய பிற ஆசிரியர்‌ நியமனங்களுக்கும்‌ - நியமன ஒப்புதல்‌ வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்‌ வெளியிடுதல்‌ - தொடர்பாக.


பார்வை. 1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு WA(MD)No.76 of 2019etc. batches. இடைக்கால தீர்ப்பாணை நாள்‌.09.04.20%9.

2. அரசாணை (நிலை) எண்‌ 185.பள்ளிக்‌ கல்வித்துறை, நாள்‌.17.09.2019

3. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளை வழக்கு, WA(MD)No.76 of 2019etc, batches, தீர்ப்பாணை நாள்‌.3103.2021.

4. மாண்பமை புதுதில்லி உச்சநீதிமன்ற சிறப்பு அனுமதி மனு SLP (c) No.15702of 2021, தீர்ப்பாணை நாள்‌.16.02.2024.

5. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகள்‌ WA(MD) Nos. 320 of 2023 and 689of 2022 தீர்ப்பாணை நாள்‌.20:11.2023.

6. பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ இணை செயல்முறைகள்‌ ந.க. எண்‌. 34116/ டி1/ இ4/ 2013, நாள்‌.29-03-2023.

7. தொடக்கக்கல்வி இயக்குநரின்‌ கடித நக.எண்‌. 004126/எச்/ஜி/2024, நாள்‌ 08.05.2024.


பார்வை 7ல்‌ காணும்‌ கடிதத்தில்‌ தொடக்ககல்வி இயக்குநர்‌, தூத்துக்குடி மாவட்டம்‌, கோவில்பட்டி சரகம்‌, வெங்கடாசலபுரம்‌, புனித ஜார்ஜ்‌ இனிகோ தொடக்கப்பள்ளியின்‌ இடைநிலை ஆசிரியை திருமதி 1, இருதய அமலி என்பவரின்‌ நியமனம்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலரால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படாத நிலையில்‌, மேற்படி ஆசிரியர்‌ தணது. நியமனத்திற்கு ஒப்புதல்‌ கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ தொடரப்பட்ட வழக்கு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பாணையில்‌, கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> அரசுக் கடிதம் எண் 4132/தொ.க.2(1)/2024, பள்ளிக்கல்வித்துறை நாள்: 10.05.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Jallikattu - Guidelines Released



ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


Jallikattu Competition - Guidelines Released 


ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றவை.


இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,


1). மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.


2). ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.


3). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.


4). ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.


5). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


6). அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது. 


7). ஜல்லிக்கட்டு போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.

- 

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு கடிதம்


ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த சூழலில், 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன் விபரம் பின்வறுமாறு:

* காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் கொடுமையைத் தவிர்த்து பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

* மாவட்ட கலெக்டர் இடம், முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

* போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக்கூடாது.

* ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் போட்டி நடக்கும் இடத்தில் ஏற்பாடு செய்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Video of young birds feeding and protecting older birds



வயதான பறவைகளுக்கு உணவூட்டி பாதுகாக்கும் இளம் பறவைகளின் காணொளி


Video of young birds feeding and protecting older birds


 வயது முதிர்ந்த பறவைகளுக்கு என்று முதியோர் இல்லங்கள் இல்லை.


தங்கள் இளமை பருவத்தில், தங்களைப் பாதுகாத்து வளர்த்த, இரை தேட முடியாத முதுமையடைந்த பறவைகளுக்கு (பெற்றோருக்கு) குழந்தைகளே உணவு தேடிக் கொண்டு வந்து ஊட்டி விடும் நெகிழ்ச்சியான காட்சி...


இந்த இளம் பறவைகளின் பெற்றோர் இவைகளுக்கு செலவு செய்து பள்ளியில் சேர்க்கவும் இல்லை..


இவைகள் பள்ளியில் சென்று இதனைக் கற்றுக்கொள்ளவில்லை. 


ஆனாலும் இந்த இளம் பறவைகள் தங்கள்  பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன ‼️❤️🥰 


இவைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல பண்பு இது...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Call மற்றும் SMSக்கு மட்டும் தனியே Recharge - TRAI உத்தரவு

 


Call மற்றும் SMSக்கு மட்டும் தனியே Recharge - TRAI  உத்தரவு


Call மற்றும் SMSக்கு மட்டும் தனியே ரீசார்ஜ் வவுச்சரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்


தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI  உத்தரவு


ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் டேட்டா ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இனி இருக்காது


கால் மற்றும் எஸ்.எம்.எஸ்க்கு மட்டும் தனியே ரீசார்ஜ் வவுச்சரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும்...

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவு


தற்போதைய சிக்கல்கள் என்ன..?


பல பயனர்கள் ஒரே மொபைலில் 2 சிம்கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதில் ஒரு சிம் மட்டுமே முழுமையாக செயல்படுகிறது. மற்றொரு சிம் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இதனால், இரண்டாவது சிம் மட்டுமே குரல் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு பயன்படுத்தப்பட்டாலும், முழு தொகுப்பிற்கு (Combo Plan) பணம் செலுத்த வேண்டியுள்ளது.


மொபைல் எண்கள் அரசின் சொத்து என்பதால், அவை தொலைத்தொடர்பு நிறுவனங்களால் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். பயனர்கள் தேவையற்ற சேவைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என்பதற்காக டிராய் தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் (TRAI) என்று அழைக்கப்படுகிற இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமானது (Telecom Regulatory Authority of India) புது விதிகளை கொண்டுவருகிறது. இந்த விதிகள் மூலம் ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களிடையே நேரடி மாற்றம் ஏற்பட இருக்கிறது. டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் என்று மூன்றுக்கும் கிடைத்த ரீசார்ஜ் திட்டங்கள், இனிமேல் தனித்தனியாக கிடைக்க போகிறது. இதனால், கஸ்டமர்களுக்கு என்ன நடக்கும்? இந்த விதிகள் என்ன சொல்கிறது? விவரம் இதோ.


இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும். மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஏற்கனவே வாய்ஸ் கால்களுக்கு தனியாக திட்டங்கள் இருக்கின்றன. இதனால், மலிவான விலையில் பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைக்கிறது. ஆனால், ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்களில் அப்படி கிடையாது.


இதனால், முன்னணி நிறுவனங்களின் கஸ்டமர்கள் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆகிய மூன்றையும் சேர்த்து கொடுக்கப்படும் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே, வாய்ஸ் கால்கள் மட்டும்போதும் என்றாலும்கூட டேட்டா இருக்கும் திட்டத்தை மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடிகிறது. ஒரு சில திட்டங்களில் லம்ப்-சம் டேட்டா கிடைக்கின்றன.


ஆனால், அதிலும் வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ்கள் (SMS) தனித்தனியாக கிடைப்பதில்லை. ஆகவே, டேட்டா தேவைப்படாத கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொடுக்கக்கூடிய ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர்கள் (Special Tariff Vouchers) ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று டிராய் அதிரடி உத்தரவை கொடுத்துள்ளது.அதே நேரத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமானது, அதிகபட்சமாக 90 நாட்கள் வேலிடிட்டியில் மட்டுமே கிடைத்துவந்த சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களின் (Special Recharge Coupons) வரம்பை 365 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு மட்டுமே தனியாக கிடைக்கும் திட்டங்கள் வருடம் முழுவதும் கிடைக்கப் போகிறது.


டிராய் உத்தரவின்படி, ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு திட்டத்தையாவது, இப்படி வைத்திருக்க வேண்டும். அதாவது, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்களுக்கு தனியாக திட்டத்தை கட்டாயமாக கொடுக்க வேண்டும். இந்த ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர்களின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேல் செல்லக்கூடாது.டெலிகாம் கஸ்டமர்கள், அவர்களுக்கு எந்த சேவை வேண்டுமோ அதற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்து அதற்காக தொகையை கொடுக்க வேண்டும். இதையே இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவில் விளக்கி இருக்கிறது. ஆகவே, விரைவில் டேட்டாவுக்கு மட்டுமே வவுச்சர்கள் கிடைப்பதை போல, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு வவுச்சர்கள் கிடைக்க இருக்கிறது.


தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தபோது, டிராய் அதை மறுத்தது. ஆனால், அதே நேரத்தில், ரீசார்ஜ் செலவை குறைக்கும்படி டேட்டா தேவையில்லாத கஸ்டமர்களுக்கு வாய்ஸ் கால்களை மட்டும் மலிவான விலைக்கு கொடுக்க தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட திட்டமிட்டது.


இதனால், கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்யும் செலவு மிச்சமாகும். ஏனென்றால், குறைந்தபட்சம் ரூ.200 ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இப்போது சிம் கார்டு ஆக்டிவ் கிடைக்கிறது. அதுவும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்காது. இதனாலேயே 2 சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செலவே அதிகமாக இருக்கிறது. இதை குறைக்க டிராய் இந்த உத்தரவை கொடுத்துள்ளது.


இனிமேல் பிஎஸ்என்எல்லில் கிடைப்பதை போல மலிவான விலைக்கு தனியார் நிறுவனங்களிலும் திட்டங்கள் கிடைக்கும். ஆனால், டேட்டா சேவை அதில் எதிர்பார்க்க முடியாது. சிம் ஆக்டிவ் மட்டும் மலிவான விலைக்கு கிடைப்பதை இது உறுதி செய்ய இருக்கிறது. இது கஸ்டமர்களுக்கு லாபத்தை கொடுக்கும்





Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation



குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்


Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explained 


மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் ஆண்டுகள் குறித்த தகவல்கள்


 குடியரசு தினத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி


அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது, சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது


2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026ஆம் ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும்


- தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்


>>> மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் ஆண்டுகள் குறித்த தகவல்கள்...



குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிப்பா? - இபிஎஸ் கண்டனமும் அரசின் விளக்கமும்


குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இது வதந்தி என நிராகரித்துள்ளது. வதந்திகளை நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டு அது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது.



முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைதளப் பக்கத்தில், “குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு, ஆனால் திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன், ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.


இதனையடுத்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகத்தின் எக்ஸ் பக்கத்தில், “குடியரசு தினம் : தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி 2025-ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல்.



2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது. டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.


அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது.” என்று விளக்கமளித்துள்ளது.


Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation



1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம்


Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation 


ஆல்பாஸ் திட்டதால் இந்தியாவில் தொடக்கக் கல்வி தரம் குறைவாகி வருவதால் ஆல்பாஸ் தேர்ச்சி முறை ரத்து.


RTE சட்டத்தின் படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும், தேர்வு எழுதாவிட்டாலும் ஆல் பாஸ் தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது - அரசு இதழில் வெளியீடு.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தமிழாக்கம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




The Gazette of India

CG-DL-E-21122024-259577

EXTRAORDINARY

PART II—Section 3—Sub-section (i)

PUBLISHED BY AUTHORITY

Gazette No. 715, NEW DELHI, SATURDAY, DECEMBER 21, 2024


கல்வி அமைச்சகம் 

(பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை) 

அறிவிப்பு 

புது தில்லி, டிசம்பர் 16, 2024 

ஜி.எஸ்.ஆர். 777(E).- பிரிவு 38ன் துணைப்பிரிவு (2) இன் ஷரத்து (fa) மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 (35 இன் 2009), மத்திய அரசு 


இதன்மூலம் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை விதிகள், 2010ஐ மேலும் திருத்த பின்வரும் விதிகள், 

அதாவது:- 

1. (1) இந்த விதிகளை இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை (திருத்தம்) விதிகள், 2024 என்று அழைக்கலாம். 

(2) அவை அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியில் நடைமுறைக்கு வரும். 


2. இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை விதிகள், 2010, பகுதி V க்குப் பிறகு, பின்வரும் பகுதி செருகப்படும், அதாவது: - “பகுதி VA- தேர்வு மற்றும் சில சந்தர்ப்பங்களில் பின்வாங்குதல் 16A. ஒரு குழந்தை தடுத்து நிறுத்தப்படும் விதம் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. - 

(1) ஒவ்வொரு கல்வியாண்டின் முடிவிலும் ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் வழக்கமான தேர்வு இருக்கும். 

(2) துணை விதி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கமான தேர்வை நடத்திய பிறகு, ஒரு குழந்தை தேர்ச்சி பெறத் தவறினால் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட அளவுகோல்கள், அவருக்கு கூடுதல் அறிவுறுத்தல் மற்றும் மறு-வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தேர்வு. 

(3) துணை விதி (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள மறுதேர்வில் தோன்றும் குழந்தை மீண்டும் தேர்ச்சி நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால், ஐந்தாம் வகுப்பிலோ அல்லது எட்டாம் வகுப்பிலோ அவர் மீண்டும் நிறுத்தப்படுவார்.

(4) குழந்தையைத் தடுத்து நிறுத்தும் போது, ​​வகுப்பு ஆசிரியர் குழந்தைக்கும், குழந்தையின் பெற்றோருக்கும் வழிகாட்ட வேண்டும். அவசியமானது மற்றும் மதிப்பீட்டின் பல்வேறு நிலைகளில் கற்றல் இடைவெளிகளைக் கண்டறிந்த பிறகு சிறப்பு உள்ளீடுகளை வழங்குதல். 

(5) பள்ளித் தலைவர் பின்தங்கிய குழந்தைகளின் பட்டியலைப் பராமரிக்க வேண்டும் மற்றும் விதிகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும் அத்தகைய குழந்தைகளுக்கு சிறப்பு உள்ளீடுகள் மற்றும் கண்டறியப்பட்ட கற்றல் இடைவெளிகளைப் பொறுத்து அவர்களின் முன்னேற்றம். 

(6) பரீட்சை மற்றும் மறுபரிசீலனை ஆகியவை முழுமையை அடைவதற்கான திறன் அடிப்படையிலான தேர்வுகளாகும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மனப்பாடம் மற்றும் நடைமுறை திறன்களின் அடிப்படையில் இருக்கக்கூடாது. 

(7) எந்தக் குழந்தையும் ஆரம்பக் கல்வியை முடிக்கும் வரை எந்தப் பள்ளியிலிருந்தும் வெளியேற்றப்படக்கூடாது. [எஃப். எண். 1-3/2017-EE-4/IS-3] 

அனில் குமார் சிங்கால், 

கூடுதல் செயலாளர் 


குறிப்பு.- முதன்மை விதிகள் அறிவிப்பு எண் ஜி.எஸ்.ஆர். 301(E), தேதியிட்ட 8 ஏப்ரல், 2010 இல் இந்திய அரசிதழ், பகுதி II, பிரிவு 3, துணைப் பிரிவு (i), ஏப்ரல் 9, 2010 தேதியிட்டது மற்றும் கடைசியாக திருத்தப்பட்டது அறிவிப்பு எண் ஜி.எஸ்.ஆர். 1302(E), அக்டோபர் 17, 2017 தேதியிட்டது மற்றும் இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது, பகுதி II, பிரிவு 3, துணைப் பிரிவு (i), 17 அக்டோபர், 2017 தேதியிட்டது.


The Gazette of India

CG-DL-E-21122024-259577

EXTRAORDINARY

भाग II—खण् ड 3—उप-खण् ड (i) 

PART II—Section 3—Sub-section (i)

प्राजधकार से प्रकाजित 

PUBLISHED BY AUTHORITY

No. 715] NEW DELHI, SATURDAY, DECEMBER 21, 2024/AGRAHAYANA 30, 1946


MINISTRY OF EDUCATION
(Department of School Education and Literacy)
NOTIFICATION
New Delhi, the 16th December, 2024

G.S.R. 777(E).— In exercise of the powers conferred by clause (fa) of sub-section (2) of section 38 of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 (35 of 2009), the Central Government hereby makes the following rules further to amend the Right of Children to Free and Compulsory Education Rules, 2010, namely :—

1. (1) These rules may be called the Right of Children to Free and Compulsory Education (Amendment) Rules, 2024.

(2) They shall come into force on the date of their publication in the Official Gazette.

2. In the Right of Children to Free and Compulsory Education Rules, 2010, after Part V, the following Part shall be inserted, namely: -

“PART VA- EXAMINATION AND HOLDING BACK IN CERTAIN CASES

16A. Manner and conditions subject to which a child may be held back . — 

(1)There shall be regular examination in the fifth class and in the eighth class at the end of every academic year.

(2) After the conduct of regular examination, referred to in sub- rule (1), if a child fails to fulfil the promotion criteria, as notified from time to time, he shall be given additional instruction and opportunity for re-examination within a period of two months from the date of declaration of results.

(3) If the child appearing in the re-examination referred in sub -rule (2), fails to fulfil the promotion criteria again, he shall be held back in fifth class or eighth class, as the case may be.

(4) During the holding back of the child, the class teacher shall guide the child as well as the parents of the child, if necessary, and provide specialised inputs after identifying the learning gaps at various stages of assessment.

(5) The Head of the school shall maintain a list of children who are held back and personally monitor the provisions provided for specialised inputs to such children and their progress with respect to the identified learning gaps.

(6) The examination and re-examination shall be competency-based examinations to achieve the holistic development of the child and not be based on memorisation and procedural skills.

(7) No child shall be expelled from any school till he completes elementary education.”.
[F. No. 1-3/2017-EE-4/IS-3]

ANIL KUMAR SINGHAL, 
Addl. Secy.

Note.— The principal rules were published vide notification number G.S.R. 301(E), dated the 8th April, 2010 in the Gazette of India, Part II, Section 3, Sub-section (i), dated the 9th April, 2010 and lastly amended vide notification number G.S.R. 1302(E), dated the 17th October, 2017 and published in the Gazette of India, Part II, Section 3, Sub-section (i), dated the 17th October, 2017.



जिक्षा मंत्रालय
(स्ट्कू ल जिक्षा और साक्षरता जिभाग)
अजधसूचना
नई दिल्ली, 16 दिसम् बर, 2024
सा.का.जन. 777(अ).— के न्द्रीय सरकार, जन:िुल् क और अजनिायय बाल जिक्षा का अजधकार अजधजनयम, 2009
(2009 का 35) की धारा 38 की उपधारा (2) के खंड (च क) द्वारा प्रित् त िज‍ तयों का प्रयोग करते हुए, जन:िुल् क और
अजनिायय बाल जिक्षा का अजधकार जनयम, 2010 का और संिोधन करने के जलए जनम् नजलजखत जनयम बनाती है, अर्ायत्:-

1. (1) इन जनयमों का संजक्षप्त नाम जनिःिुल्क और अजनिायय बाल जिक्षा का अजधकार (संिोधन) जनयम, 2024 है।


(2) ये सरकारी रािपत्र में उनके प्रकािन की तारीख को लागू होंगे।

2. जनिःिुल्क और अजनिायय बाल जिक्षा का अजधकार जनयम, 2010 में, भाग 5 के पश्चात जनम्नजलजखत भाग


अंतिःस्ट्र्ाजपत दकया िाएगा, अर्ायत्:-
“भाग 5 क- कजतपय मामलों में परीक्षा और रोका िाना
16 क. रीजत और ितें जिनके अध् यधीन दकसी बालक को रोका िा सकता है- (1) प्रत्येक िैक्षजणक िर्य के अंत पर पांचिीं
कक्षा और आठिीं कक्षा में जनयजमत परीक्षा होगी।

(2) उप-जनयम (1) में जनर्ियष्ट, जनयजमत परीक्षा के संचालन के पश्चात्, यदि कोई बालक समय-समय पर यर्ा अजधसूजचत,
प्रोन्नजत मानिण्ड को पूरा करने में असफल रहता है, तो उसे पररणाम घोजर्त होने की तारीख से िो मास की अिजध
के भीतर पुनिः परीक्षा के जलए अजतररक्त अनुिेि तर्ा अिसर दिया िाएगा।
(3) यदि उप-जनयम (2) में जनर्ियष्ट पुन: परीक्षा में उपजस्ट्र्त होने िाला बालक, प्रोन्नजत के मानिण्ड को पूरा करने मेंपुनिः
असफल रहता है, यताजस्ट्र्जत, पांचिीं कक्षा या आठिीं कक्षा में रोक दिया िाएगा।
(4) बालक को रोके रखने के िौरान, कक्षा जिक्षक बालक के सार्-सार्, यदि आिश्यक हो तो, बालक के माता-जपता का
भी मागयिियन करेगा तर्ा जनधायरण के जिजभन्न चरणों पर अजधगम के अंतरालों की पहचान करने के पश्चात्जििेर्ज्ञीय
इनपुट प्रिान करेगा।
(5) स्ट्कू ल का प्रमुख उन बालकों की सूची बनाएगा िो रोके गए हैं तर्ा ऐसे बालकों को जििेर्ज्ञीय इनपुट के जलए प्रिान
दकए गए उपबंधों तर्ा पहचाने गए अजधगम के अंतरालों के संबंध में उनकी प्रगजत पर व्यजक्तगत रूप से मॉनीटरी
करेगा।
(6) बालक के समग्र जिकास को पाने के जलए परीक्षा और पुन: परीक्षा सक्षमता-आधाररत परीक्षाएं होंगी तर्ा न दक याि
करने और प्रदियात्मक कौिल पर आधाररत होंगी।
(7) दकसी भी बालक को तब तक दकसी स्ट्कू ल से नहीं जनकाला िाएगा िब तक िह प्रारंजभक जिक्षा पूरी नहीं कर लेता।”

[फा. सं. 1-3/2017-ईई-4/आईएस-3]
अजनल कु मार ससंघल, अपर सजचि
रटप्पण.— मूल जनयम, भारत केरािपत्र, भाग-II, खंड-3, उपखंड (i), तारीख 9 अप्रैल, 2010 मेंअजधसूचना संखयांक
सा.का.जन. 301(अ) तारीख 8 अप्रैल, 2010, द्वारा प्रकाजित दकए गए र्ेतर्ा अंजतम बार अजधसूचना संखयांक
सा.का.जन. 1302(अ), तारीख 17 अ‍ तूबर, 2017 द्वारा संिोजधत दकए गए र्ेऔर भारत केरािपत्र, भाग-II,
खंड-3, उपखंड (i), तारीख 17 अ‍ तूबर , 2017 को प्रकाजित हुए र्े।



Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order



பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் - நிதி விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு


Internet Service Charges for Schools - Releasing Funds - State Project Director's Order



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...