கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS ஜூன் 3-ல் ரத்தா? சங்கங்களின் வாட்ஸ்அப் செய்தியால் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மகிழ்ச்சி...

 கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 ம் தேதி சி.பி.எஸ் . ரத்து செய்யப்ப டும் அறிவிப்பு வெளியாக உள்ளதாக , அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.




இந்த தகவல் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தி.மு.க. , தேர்தல் அறிக்கையில் தி.மு.க. , ஆட்சிக்கு வந்தால் சி.பி.எஸ் . திட்டம் ரத்து செய்யப்பட்டு , பழைய ஓய்வூதியம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.




கடந்த 2003 ம் ஆண்டுக்கு பின்னர் சி.பி.எஸ் . திட்டம் இருப்பதால் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராட்டத்தில் பிரதான கோரிக்கையாக , இந்த கோரிக்கைதான் இடம் பெற்று வந்தது.




இந்நிலையில் , தி.மு.க. , தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றவுடன் தேர்தல் அறிக்கையில் உள்ள கோரிக்கைகள் ஐந்தினை நிறைவேற்ற , முதல் உத்தரவில் கையெழுத்திட்டார். அதில் ஒரு திட்டமான , அரசு டவுன்பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நேற்று அமலுக்கு வந்து , மகளிர் மத்தியில் கடும் வரவேற்பைப் பெற்றது. 




இந்நிலையில் , நேற்று அனைத்து அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் சங்கங்களின் வாட்ஸ் ஆப்பில் பிரதான செய்தியாக அடுத்த மாதம் ( ஜூன் ) 3 ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சி.பி.எஸ். திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்கிற அறிவிப்பினை , முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தகவல் பரவி வருகிறது . மிகவும் நம்பத்தகுந்த தகவலின்படி இந்த செய்தி வெளியாகி இருப்பதாக அதில் உறுதி தெரிவிக்கப் பட்டுள்ளது . இந்த செய்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் மத்தியில் கடும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...