கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூலை 2021ல் அகவிலைப்படி (DA) எத்தனை சதவீதம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது..?



 மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நிலுவையில் உள்ள 3 தவணை அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டு, வரும் ஜுலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


விளக்கம்


ஏற்கனவே வழங்கப்பட்டது:

ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை 17% DA வழங்கப்பட்டது.


நமக்கு வழங்க வேண்டிய DA:

(தோராயமாக)

01.01.2020 - 4% (மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டு பின்னர் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.)

குறைந்தபட்சம்

01.07.2020 - 2%

01.01.2021 - 2%

என தோராயமாக வைத்துக்கொள்வோம்.

ஆனால் இந்த 8% DA கோவிட் காரணமாக பணப்பலன் நிறுத்திவைக்கப்பட்டது.


இனிமேல்

தற்போது 01-07-2021 முதல் DA உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தோராயமாக 01.07 2021 அன்று குறைந்தது 2% DA உயர்வு என வைத்துக்கொள்வோம்.


மொத்தம் 27% DA

கோவிட் காரணமாக நிறுதிவைக்கப்பட்ட 6% DA மற்றும் ஜூலை 2021 2% DA என

மொத்தம் 10% உயர்த்தி ஜூலை 2021 முதல் 27% DA கணக்கிடப்பட்டு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

தேர்தல் நாளன்று வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை...



 கொரோனா பரவலை தடுக்க, தேர்தல் அன்று ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், கையுறை வழங்கப்படும். வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.


அவர் அளித்த பேட்டி:

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நடக்க உள்ளது. சட்டசபை தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும், வரும், 12ம் தேதி மனு தாக்கல் துவங்குகிறது; 19ம் தேதி நிறைவடையும். கொரோனா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு புதிய விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இருவர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில், ஜனவரி, 20 வரை, 68 ஆயிரத்து, 324 ஓட்டுச்சாவடிகள் இருந்தன.


கொரோனா பரவல் காரணமாக, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 88 ஆயிரத்து, 937ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தம், நான்கு லட்சத்து, 79 ஆயிரத்து, 892 பேர், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை, 76 மையங்களில், மே, 2ல் நடக்க உள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உட்பட, 50 சதவீத ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க, வாகன சோதனை நடத்த, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அந்த வாகனங்கள் எங்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள், அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி., கோடு எண்ணுடன், '1950'ல் தொடர்பு கொள்ளலாம். இந்த தொலைபேசி எண், 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும். அனைத்து தொலைபேசி பேச்சுகளும், பதிவு செய்யப்படும். யார் புகார் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், 1800 4252 1950 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இந்த எண்ணும், 24 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.


புகார்களை பெற, 25 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். ஓட்டுப்போட வரும் அனைவரும், முக கவசம் அணிந்து வர வேண்டும். ஓட்டுப்போட வரும் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும். அதை அணிந்து தான் ஓட்டளிக்க வேண்டும். வாக்காளர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல் இருந்தால், அவர்கள் மருத்துவர் சான்றிதழ் பெற்ற பின், கடைசி ஒரு மணி நேரம், உரிய பாதுகாப்பு உடைகள் அணிந்து, ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு உடைகளை, தேர்தல் கமிஷன் வழங்கும். இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.


ரூ.23.75 கோடி பறிமுதல்

தமிழகத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நேற்றுமுன்தினம் வரை, மொத்தம், 32.03 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 23.75 கோடி ரூபாய் ரொக்கம். மேலும், 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்; 77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 129 கிலோ வெள்ளி; 21.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 

தமிழில், 'சி விஜில்' 

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'CVIGIL' என்ற மொபைல் செயலியை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியை, ஆங்கிலம், ஹிந்தி தெரிந்தோர் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. ஓரிரு நாளில், தமிழிலும் பயன்படுத்த வழி வகை செய்யப்படும் என, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கியுள்ள முக்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்...

 



தேர்தல் பணியில் ஆசிரியர்களுக்கு முறைப்படி தபால் வாக்குகள் வழங்கவேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு...

தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலை பள்ளி பட்டதாரி  ஆசிரியர் கழகம் சார்பில் முனைவர் அ.மாயவன் அவர்கள் கடந்த 30/1/2021 அன்று தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அரசு ஊழியர்க்கும் தபால் வாக்குகள் வழங்குவதில் அந்த  மாவட்ட ஆட்சியர்களால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் இவர்கள் அனைவருக்கும்  மின்னனனு இயந்திரம் மூலம் தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பாக சிறப்பு வாக்கு  பதிவு மையம் ஒன்றின் மூலம் அந்தந்த RO அலுவலுகத்தில் வாக்கு  பதிவு செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துருந்தார் . தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கை மனு மீது  நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் கழகம் சார்பாக தொடுத்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை, இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சீவ் பானெர்ஜி மற்றும் செந்தில்குமார் அவர்களின் முன் வந்தது .

இந்த வழக்கை வி.அருண் வழக்கறிஞர் சார்பாக , மூத்த வழக்கறிஞர் ரா .விடுதலை ஆஜராகி தேர்தல் ஆணையம் ஆசிரியர்களுக்கான தபால் வாக்குகளுக்கு வழிகாட்டுதலை பின்பற்றுதல் , தகுதியுள்ள தேர்தல் பணி வாக்காளர்கள் பெருமளவில்  தங்கள் அடிப்படை உரிமையான, ஜனநாயக கடைமையான வாக்கு செலுத்துவதில் தேர்தல் ஆணையமே தவறு செய்வதால் மற்றும் இந்த தவறினை தேர்தல் ஆணையம் கடந்த தேர்தலில் செய்தது  போல் இந்த தேர்தலில் செய்யக்கூடாது என்றும், ஆசிரியரகளுக்கான தபால் வாக்கினை முழுமையாக வழங்கவேண்டும் , மேலும் தபால் வாக்காளர்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே பூர்திசெய்த படிவம் 12 னை தேர்தல் ஆணைய வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதாவது முதல் பயிற்சி வகுப்பான 18/3/2021 க்குள் கொடுக்கவேண்டும் எனவும் கையெழுத்திட்ட படிவம் 12 ஐ உடனே பெற்று இரண்டாவது பயிற்சி வகுப்பில் 26/3/2021-ல்  தபால் வாக்குகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று வாதாடினார்.  மேலும் அவர்கள் தேர்தல் 6/4/2021 அன்று முடிந்தாலும் 1/5/2021 வரை தேர்தல் பணி ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்த உரிமையுள்ளது . ஆகவே தேர்தல் ஆணையமே தகுதியுள்ள வாக்காளர், வாக்கு செலுத்துவதை தடுக்கக்கூடாது என்று வாதிட்டார் . இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர் , அரசு ஊழியர்கள் தங்கள் தபால் வாக்குகளை 1/5/2021 வரை தபாலில் செலுத்தலாம் என்றும் , தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை தபால் வாக்குகளை எண்ணிக்கைக்கு எடுத்து கொள்ளலாம் என்றும் தபால் வாக்குகளை வழங்குவதில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நடைமுறைகளை முழுமையாக கடைபிடிக்கும்   என்று பதிலளித்தார் .

இருதரப்பினரையும்  கேட்ட பிறகு தலைமை நீதியரசர் சஞ்சீவ் பானர்ஜி வாக்காளர் வாக்களிப்பது ஜனநாயக அடிப்படை உரிமை என்றும் , மனுதாரர் கோரியபடி தற்சமயம் EVM- ல் வாக்கு  அளிக்க முடியாவிட்டாலும் , எதிர்காலத்தில் மனுதாரர் கூறியுள்ள நல்ல ஆலோசனைகளை தேர்தல் ஆணையம் நினைவில் கொண்டு எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவேண்டும் .

தேர்தல் பணி அரசு ஊழியர்கள் மிக முக்கிய தேர்தல் பணியாற்றுவதால் , அவர்கள் ஓவ்வொருவருக்கும் நல்ல கௌரவமான  ஊதியம் வழங்கி அவர்களின் அடிப்படை உரிமைகளான  வாக்களிப்பதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு , தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்களில்    கூறப்பட்டுள்ள நடைமுறைப்படி தேர்தல் பணி ஆசிரியர்கள் / ஊழியர்கள் முழுமையாக தபால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், வாக்களிக்க தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இன்றைய செய்திகள் தொகுப்பு... 11.03.2021 (வியாழன்)...

 


🌹வாழ்க்கையில் விட்டுட்டு போன பொய்யான உறவுகள் மீண்டும் தொடரும் நிலை வந்தால் வேண்டாம் என்று முடிவு எடுங்கள். ஏனெனில்

வார்த்தைகளில் தான் மாற்றம் இருக்கும் மனதில் அதே அழுக்குதான் இருக்கும்.!

🌹🌹மரத்தோடு இருக்கும் வரை தான் இலைக்கு மதிப்பு.

அதுபோல பணத்தோடு இருக்கும் வரை தான் மனிதனுக்கு மதிப்பு.!!

🌹🌹🌹ஆயிரம் காரணம் கூறி ஒரு உறவை முறித்துக் கொள்ளலாம்.

ஆனால் லட்சம் காரணம் சொன்னாலும் பிரிந்த உறவை மீண்டும் பழைய உறவாக கொண்டு வர முடியாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘EMIS ஆன்லைன் பதிவில் மாணவர்களின் மதம், சாதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயப் பட்டியலில் இருந்து நீக்க (To Remove Mandatory Condition) உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் உத்தரவு.

📕📘தமிழகத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம் -தொழில்நுட்ப கல்வி இயக்ககம்.

📕📘ஒரு நபர் குழுவின் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றப்படவில்லை - கண்டன அறிக்கை வெளியீடு.

📕📘 பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையத்தில் வெளியீடு.

📕📘 தேர்தல் அன்று அரசுப்பள்ளிகளின் சுவர்களை அசிங்கப்படுத்தாதீங்க - தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை.

📕📘விருப்ப மனு கொடுத்த ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய பட்டியல் தயாரிப்பு.

📕📘10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் மாதிரி தேர்வு - அட்டவணை வெளியீடு.

📕📘பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறையில் 531 இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தேர்வு: ஏப்ரல் 4ம் தேதி விண்ணப்பிக்கலாம்: TNPSC அறிவிப்பு

📕📘10 % ஒதுக்கீடு வழங்கி குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? - அண்ணா பல்கலைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.

📕📘தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணைய அடையாள அட்டை - புகைப்படம் எடுத்து வழங்க உத்தரவு.                                                     

📕📘பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் சரிய வாய்ப்பு

📕📘தொலைதூரம், திறந்தவெளி, இணையவழி மேலாண் படிப்பு தொடங்க புதிய நெறிமுறை: AICTE வெளியீடு

📕📘கொரோனா நோய்த் தொற்று காரணமாக  பாதுகாப்பாக வாக்களிக்க ஏதுவாக வாக்குப் பதிவின்போது வாக்காளர்களுக்கு கையுறை அளிக்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு.

📕📘தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல்  தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் - தொழில்நுட்பக்கல்வித் துறை அறிவிப்பு. (விவரங்களுக்கு : www.tndte.gov.in/site)

📕📘ஊரடங்கு காலத்தில் low-cost material மூலம் சில அறிவியல் கண்டுபிடிப்புகளை  அறிவியல் அரட்டை என்னும் YouTube channel ல் பதிவேற்றம் செய்த அரசுப்பள்ளி மாணவனை அழைத்து பாராட்டி சிறப்பித்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்.

📕📘2017 - 2018ம் ஆண்டு படித்தவர்களுக்கு லேப்டாப் வழங்க கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

📕📘சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 35 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்

📕📘வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றம் முற்றுகையிட தயாராக இருப்பதாக டெல்லியில் போராடும் விவசாயிகள் மத்திய அரசுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

📕📘நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை கிடையாது – இந்த வாரம் தேதி வெளியாகும் என தகவல்.                                                                 📕📘106-வது நாளாக தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்:

சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பஞ்சாப் விவசாயி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழப்பு.

📕📘திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:-

👉1.சாத்தூர்

👉2.கோவை வடக்கு

👉3.மதுரை தெற்கு

👉4.அரியலூர்

👉5.வாசுதேவநல்லூர் (தனி)

👉6.மதுராந்தகம் (தனி)

📕📘தேமுதிக தனித்து போட்டியிட்டால் வேட்பாளராக களமிறங்க தயாரா என்று விருப்பமனு அளித்தவர்களிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே நேர்காணலுக்கு வந்தவர்களை ஆய்வு செய்து தேமுதிக தலைமை உத்தேச பட்டியலை தயாரித்துள்ளது.           

📕📘தேர்தல் பிரச்சாரம் பொதுமக்களை சரக்கு வாகனங்களில் அழைத்துச் சென்றால்

கடும் நடவடிக்கை போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை                                           

 📕📘தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் பார்த்திபன், ரங்கசாமி, அரூர் முருகன், பழனியப்பனுக்கு சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.*

அமமுக சார்பில் போட்டியிடும் முதல் 15 வேட்பாளர்கள் பெயரை டிடிவி.தினகரன் வெளியிட்டார்.

📕📘சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து , ரூ.33,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.4,215-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.71.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

📕📘தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" ஆறாம் கட்ட சுற்றுப்பயணம் ரத்து.

📕📘புதுச்சேரியில் பாஜகவுக்கு 10 தொகுதிகள், அதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு என புதுவை பாஜக மேலிட  பொறுப்பாளர் சுரானா அறிவிப்பு

📕📘தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்க போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

📕📘கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியை தவிர்த்து கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் அதிமுக களமிறங்குகிறது. அரவக்குறிச்சி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளது.

📕📘சாதி மதம் பார்க்காத கட்சி மக்கள் நீதி மய்யம்.

எங்கள் விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பு என்ற பகுதியே கிடையாது.

- கமல்ஹாசன்

📕📘தமிழக சட்டசபைத் தேர்தலில் 

👉திமுக 173 தொகுதிகளிலும் 

👉அதிமுக போட்டி 177 தொகுதிகளிலும்  போட்டியிடுகிறது.

📕📘2016 தேர்தலில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் எ.வ.வேலு(தி.மு.க) வென்ற திருவண்ணாமலை தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கீடு.

📕📘அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் 

புதிய முகங்களுக்கு வாய்ப்பு மறுப்பு

📕📘தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மை, எப்போது வேண்டுமானாலும் கூட்டணி உறுதி செய்யப்படலாம் - டிடிவி தினகரன்

📕📘சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என புதிய நீதி கட்சி தலைவர் ஏ சி சண்முகம் அறிவிப்பு.

கேட்கப்பட்ட தொகுதிகள் தரப்படாததால் போட்டியிடவில்லை என விளக்கம்.

📕📘வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 500மீ அளவுக்கு ஜாமர் கருவி பொருத்த திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை.

📕📘மநீம தலைமையிலான கூட்டணிக்கு, முதல் கூட்டணி என பெயர் அறிவிப்பு: தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கமல்ஹாசன், சரத்குமார், ரவி பச்சமுத்து கையெழுத்து.

📕📘 திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் தமிழகம் முழுவதும் வரும் 14ம் தேதி முதல் தீவிர பரப்புரை மேற்கொள்ள திட்டம்.

📕📘 நேபாளத்தின் இரு முக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகளை மீண்டும் இணைக்க அவற்றின் தலைவா்கள் விரும்பினால், ஒருங்கிணைந்த கட்சியை புதிய பெயா் மற்றும் சின்னத்துடன் பதிவு செய்துகொள்ளலாம் என்று அந்த நாட்டு தோதல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

📕📘 ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வரைவு ஒப்பந்தத்தை அங்கு சண்டையிட்டு வரும் குழுக்களிடம் அமெரிக்கா அளித்துள்ளது.

📕📘அதிமுக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 3 அமைச்சர்கள் உட்பட சில எம்எல்ஏ.,க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

👉அதிமுக.,வின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் ஏற்கனவே எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலானோர்களுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், செ.தாமோதரன், நத்தம் விசுவநாதன், கு.ப.கிருஷ்ணன், பரஞ்ஜோதி, வைகைச்செல்வன், இசக்கி சுப்பையா, பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, கோகுல இந்திரா, பா.வளர்மதி, சின்னய்யா, வி.சோமசுந்தரம், கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.வி.ராமலிங்கம், ஏ.கே.செல்வராஜூ ஆகியோருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோருக்கு சட்டசபையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிலோபர் கபில், பாஸ்கரன், வளர்மதி ஆகிய 3 அமைச்சர்கள், மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை உள்பட சில எம்.எல்.ஏ.,க்களுக்கு தற்போதைய பட்டியலில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்றைய (11-03-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

மேஷம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். தேவையற்ற செலவுகளை குறைத்து சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : புரிதல் மேம்படும்.


பரணி : நம்பிக்கை அதிகரிக்கும்.


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். தம்பதியர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் புரிதல் மேலோங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


ரோகிணி : முதலீடுகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : சாதகமான நாள். 

---------------------------------------




மிதுனம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.


திருவாதிரை : தாமதங்கள் அகலும்.


புனர்பூசம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




கடகம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

முக்கியமான பணிகளை மற்றவர்களை நம்பி இருக்காமல் நீங்களே மேற்கொள்வது நல்லது. மனதில் தோன்றும் எண்ணங்களை மற்றவர்களின் மனம் வருந்தும்படி பகிர்வதை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.


பூசம் : ஆலோசனைகள் தேவை.


ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைபட்டு போன செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகத்தில் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூரம் : இன்னல்கள் குறையும்.


உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கன்னி

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். உத்தியோகம் தொடர்பான பணிகளை விரைந்து முடிப்பதற்கான துரிதம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : வெற்றி கிடைக்கும்.


அஸ்தம் : அனுசரித்து செல்லவும்.


சித்திரை : துரிதமான நாள். 

---------------------------------------




துலாம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் தனவரவுகள் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் மற்றும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் புதுவிதமான கற்பனைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும்.


விசாகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




விருச்சகம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணைவர் ஆதரவாக செயல்படுவார்கள். பிரியமானவர்களுக்காக சில உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் உள்ள சூழ்ச்சிகளை அறிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் விலகும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் பாசன வசதிகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : காரியசித்தி உண்டாகும்.


அனுஷம் : மனம் மகிழ்வீர்கள்.


கேட்டை : வசதிகள் மேம்படும்.

---------------------------------------




தனுசு

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

குழந்தைகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பிற மொழி மற்றும் மதத்தினரிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி எண்ணிய இலக்கை அடைவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : எண்ணங்களை அறிவீர்கள்.


பூராடம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திராடம் : தாமதங்கள் நீங்கும்.

---------------------------------------




மகரம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான எண்ணங்களால் லாபம் மேம்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய வியூகங்களின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவோணம் : லாபம் மேம்படும்.


அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் அமையும். உடனிருப்பவர்கள் பற்றிய விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். தொழில் தொடர்பான விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நன்மையை ஏற்படுத்தும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : நெருக்கடியான நாள்.


சதயம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : அனுகூலமான நாள்.

---------------------------------------




மீனம்

மார்ச் 11, 2021


மாசி 27 - வியாழன்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின் மூலம் தனவரவுகள் மேம்படும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுபவம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அறிமுகம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : தனவரவுகள் மேம்படும்.


உத்திரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.


ரேவதி : புரிதல் ஏற்படும்.

---------------------------------------


தேர்தல் பணியில் ஈடுபடும் ZONAL OFFICER PRO, PO1, PO2, PO3 அலுவலர்களுக்கு 13 பக்கங்களில் 126 கேள்வி பதில்கள்...


>>> தேர்தல் பணியில் ஈடுபடும் ZONAL OFFICER PRO, PO1, PO2, PO3 அலுவலர்களுக்கு  13 பக்கங்களில் 126 கேள்வி பதில்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக் கல்வி - EMIS ஆன்லைன் பதிவில் மாணவர்களின் மதம், சாதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயப் பட்டியலில் இருந்து நீக்க (To Remove Mandatory Condition) உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் உத்தரவு...

 


பள்ளிக் கல்வி - EMIS ஆன்லைன் பதிவில் மாணவர்களின் மதம், சாதி மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கட்டாயப் பட்டியலில் இருந்து நீக்க (To Remove Mandatory Condition) உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர்  செயல்முறைகள் Letter No.20506/ SE5(1)/ 2020-1, Dated: 29-12-2020...

JUDGEMENT OF THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT, DATED: 16.10.2020 , W.P.(MD) No.4317 of 2019 and W.M.P(MD).No.3422 of 2019...

CORAM :

THE HON'BLE MR.A.P.SAHI, CHIEF JUSTICE & THE HON'BLE MR.JUSTICE SENTHILKUMAR RAMAMOORTHY

>>> Click here to Download School Education Deputy Secretary Letter No.20506/ SE5(1)/ 2020-1, Dated: 29-12-2020 & High Court Judgement...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...