கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பணியே கடினமானது - ஆய்வில் தகவல்...

 பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 



எதிர்காலத் தலைவர்களை /தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கைவிட ஆசிரியர்களின் பங்கு அதிகமானது. சிறு வயதில் குழந்தைகளை செதுக்கி அவர்களின் திறனுக்கேற்ப வடிவமைக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வி சிறந்ததாக இருந்தால் அந்நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற பொதுவான கருத்தும் உண்டு. அத்தகைய ஆசிரியர்களின் பணி குறித்து யு.சி.எல். பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஆக்ஸ்போர்டு ரிவியூ ஆஃப் எஜுகேஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 


 


இதில் பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்று ஆய்வுகள், கணக்கெடுப்புகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ல் 9 பங்கு உழைப்பினை கொடுக்க வேண்டியுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாக 54% என்ற அளவில் இருந்த உழைப்பு தற்போது 94% ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியர்களை அடுத்து சுகாதாரப் பணியாளர்களும், சட்ட வல்லுநர்களும் அதிகம் உழைக்கின்றனர். இதில் உழைப்பு என்பது பணியிடத்தில் மட்டுமின்றி அவர்களின் பணி சார்ந்த மற்ற வேலைகளும் அடங்கும்.


யு.சி.எல் இன்ஸ்டிடியூட் ஆப் எஜுகேஷன் பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்சிஸ் கிரீன் கூறுகையில், 'ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில் அவர்களின் நல்வாழ்வு குறைந்துவிட்டது. சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பில்லை. அவர்களின் செல்வாக்கு குறைந்துவிட்டது. எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்கும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை  களைய வேண்டியது நம் கடமையாகும். பிற தொழில்களோடு ஒப்பிடும்போது, ​​ஆசிரியர்கள் மிகவும் தீவிரமாக வேலை செய்வது எதிர்பாராத அளவுக்கு உயர்ந்துள்ளது. 


கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் ஆசிரியர்களின் பணி சவாலானதாகவே இருக்கும். அதேநேரத்தில் இந்த ஆய்வின் முடிவுகள், ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, பள்ளிகளுக்கும், கற்பித்தல் தரத்தை அதிகம் நம்பியுள்ள மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்' என்று தெரிவித்தார். 


நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என்பது பொதுவாக பணி நேரமாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பள்ளிகளில் குறைவான நேரம் பணியில் இருந்தாலும் அதற்கு பின்னால் அவர்களின் கடின உழைப்பு இருக்கிறது என்று கூறுகிறது இந்த ஆய்வு. 


பள்ளி ஆசிரியர்கள் எம்மாதிரியான பணிகளை எல்லாம் மேற்கொள்கிறார்கள்? அவர்களின் திறன்கள், பணியில் திருப்தி, மாணவர்களின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 20 முதல் 60 வயது வரையிலான 857 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இதில் பெரும்பான்மையானவர்கள் பெண் ஆசிரியர்கள். 


ஆசிரியர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, மற்ற தொழில் செய்பவர்களைவிட ஆசிரியர்கள் இரு மடங்கு மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதேநேரத்தில் அவர்கள் தங்கள் திறனை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்கின்றனர்

 என்று கூறப்பட்டுள்ளது.


நன்றி  - தினமணி.

தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி...

 தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கணக்கெடுத்து குறித்துக் கொள்வார். வீட்டில் வைத்திருக்கும் அட்டையிலும் எழுதிக் கொடுப்பார். அதனடிப்படையில் நுகர்வோர் மின்கட்டணத்தை நேராக அலுவலகத்தில் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்துவார்கள்.


 


மே மாதம் கணக்கீடு செய்ய அதிகாரிகள் வரவில்லை என்றால் 2019-ம் ஆண்டு மே மாதம் செலுத்திய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும், ஒருவேளை 2019 மே மாதத்திற்குப் பிறகு மின் இணைப்பு பெற்றிருந்தால் கடந்த மார்ச் மாதத்திற்கான தொகையை கட்டலாம் என்றும் தமிழக மின்வாரியம் தெரிவித்திருந்தது.


 


இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிடலாம். மின்மீட்டரில் உள்ள அளவை போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலம் அனுப்பி, ஆன்லைனில் பணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.




வரி செலுத்துவோர் கவனத்திற்கு, ITR E-Filing இனி புதிய போர்டலில் செய்ய வேண்டும்...

 


இந்தியாவில் வரி செலுத்துவோர் விரைவில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய புதிய வலைத்தளத்தைப் (Web Portal) பெற உள்ளனர். புதிய வலைத்தளத்தில் ஐடிஆர் தாக்கல் செய்வது எளிதாகவும் தொந்தரவில்லாமலும் இருக்கும். புதிய வலைத்தளம் தொடர்பாக வருமான வரித்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.


புதிய ஐடிஆர் போர்டல் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கப்படும்

தற்போதுள்ள வலைத்தளம் ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை இயங்காது என்றும், வரி செலுத்துவோருக்கான (Tax Payers) புதிய வருமான வரி வலைத்தளம் ஜூன் 7 முதல் தொடங்கும் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் பழைய போர்ட்டலான www.incometaxindiaefiling.gov.in இலிருந்து புதிய போர்டலான www.incometax.gov.in க்கு மாறும் பணிகள் நிறைவடையும் என்றும் ஜூன் 7 முதல் புதிய போர்டல் செயல்படும் என்றும் வருமான வரித்துறையின் கணினி பிரிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 முதல் போர்டல் செயல்படும் என்றும் அதன் பிறகு வரி செலுத்துவோர் வருமான வரியைத்  தாக்கல் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 


ஜூன் 1-6 வரை போர்ட்டல் இயங்காது

ஜூன் 1 முதல் ஜூன் 6 வரை, பழைய வலைத்தளமான www.incometaxindiaefiling.gov.in -ல் வரி செலுத்துவோரும் எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்றும், வருமான வரித் துறையும் (Income Tax Department) பணிகளை செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. எந்த விதமான புகார்கள் அல்லது விசாரணைகளின் தீர்வுகளுக்கான தேதியை ஜூன் 10 க்குப் பிறகு நிர்ணயித்துக்கொள்ளுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் அந்த இடைவெளிக்குள் வரி செலுத்துவோர் புதிய முறையை நன்கு புரிந்து கொள்ள முடியும். மேலும், வரி செலுத்துவோர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு இடையே திட்டமிடப்பட்ட எந்தவொரு வேலையும் ஒத்திவைக்கப்படலாம் அல்லது முன்பே தீர்க்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.


வரி தொடர்பான பல பணிகள் ஐ.டி.ஆர் போர்ட்டலில் செய்யப்படுகின்றன

வரி (Tax) செலுத்துவோர் தங்கள் தனிப்பட்ட அல்லது வணிக வகை ஐ.டி.ஆர்களை நிரப்ப மின்-தாக்கல் போர்டல் (E-Filing Portal) பயன்படுத்தப்படுகிறது. பணத்தைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் வரித் துறை தொடர்பான பிற பணிகள் தொடர்பான புகார்களும் இங்கு தீர்க்கப்படுகின்றன. வருமான வரி அதிகாரிகள் அறிவிப்புகளை வழங்கவும், வரி செலுத்துவோரிடமிருந்து பதில்களைப் பெறவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இந்த போர்ட்டலைப் பயன்படுத்துகின்றனர். மதிப்பீடுகள், முறையீடுகள், விலக்கு மற்றும் அபராதம் போன்ற உத்தரவுகளைப் பற்றிய தகவல்களையும் அதிகாரிகள் இந்த போர்டல் மூலம் வழங்குகிறார்கள்.


ரூ .24,792 கோடி ரீஃபண்ட் 

இதற்கிடையில், இந்த நிதியாண்டில் 15 லட்சம் வரி செலுத்துவோருக்கு ஐ.டி துறை 24,792 கோடி ரூபாய் பணத்தை ரீஃபண்ட் செய்துள்ளது (திரும்ப அனுப்பியுள்ளது). இதில், தனிநபர் வருமான வரி ரீஃபண்ட் ரூ.7,458 கோடி, பெருநிறுவன வரி ரீஃபண்ட் ரூ.17,334 கோடியாகும்.



கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு...

 கொரோனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு...


செய்தி வெளியீடு எண்: 117, நாள்: 20-05-2021...




G.O.No: 242 -மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு, விநியோகம் செய்வதை கண்காணிக்க சிறப்பு இணை பணிக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...

 G.O.No: 242 -மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு, விநியோகம் செய்வதை கண்காணிக்க சிறப்பு இணை பணிக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு...


மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு, விநியோகம் செய்யவதை கண்காணிக்க சிறப்பு இணை பணிக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு..


தாரேஸ் அகமது இ.ஆ.ப. தலைமையில் நான்கு நபர்கள் கொண்ட உறுப்பினர்கள் குழு அமைத்து உத்தரவு...








G.O.No.248- கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்...

 G.O.No.248, Dated: 20-05-2021 - கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்...


கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனம்


6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் 2100 மருத்துவ பணியாளர்கள் நியமனத்திற்கு அரசாணை வெளியீடு


ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு






இன்றைய (22-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 22, 2021



உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவுகள் மேம்படும். வாரிசுகளின் செயல்பாடுகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.


பரணி : உறவுகள் மேம்படும்.


கிருத்திகை : சுபச்செலவுகள் ஏற்படும்.

---------------------------------------




ரிஷபம்

மே 22, 2021



தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



கிருத்திகை : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


ரோகிணி : ஆர்வம் ஏற்படும்.


மிருகசீரிஷம் : பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.

---------------------------------------




மிதுனம்

மே 22, 2021



எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக்கொண்டு செயல்களில் ஈடுபடுவது நன்மையளிக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். எதிர்பாராத சில சந்திப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : துணிச்சல் அதிகரிக்கும்.


திருவாதிரை : முதலீடுகள் உண்டாகும்.


புனர்பூசம் : மாற்றமான நாள்.

---------------------------------------




கடகம்

மே 22, 2021



குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புது ஏஜென்சி தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



புனர்பூசம் : வசதிகள் மேம்படும்.


பூசம் : ஆதாயம் உண்டாகும்.


ஆயில்யம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

மே 22, 2021



பழைய சிந்தனைகளின் மூலம் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : ஆதரவு கிடைக்கும்.


பூரம் : விவாதங்கள் நீங்கும்.


உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

மே 22, 2021



இழுபறியான வேலைகளை விரைந்து செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வாக்குவன்மையால் தொழிலில் லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திரம் : துரிதம் உண்டாகும்.


அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.


சித்திரை : லாபம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

மே 22, 2021



வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். சகோதரர்களின் வகையில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை :  மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் :  நீலநிறம்



சித்திரை : நுணுக்கங்களை அறிவீர்கள்.


சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.


விசாகம் : தனவரவுகள் உண்டாகும்.

---------------------------------------




விருச்சகம்

மே 22, 2021



வாகன வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுவீர்கள். செய்யும் முயற்சிகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் :  மெரூன் நிறம்



விசாகம் : வசதிகள் மேம்படும்.


அனுஷம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

மே 22, 2021



சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உங்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மூலம் : தீர்வு கிடைக்கும்.


பூராடம் : திறமைகள் வெளிப்படும்.


உத்திராடம் : சிந்தனைகள் தோன்றும்.

---------------------------------------




மகரம்

மே 22, 2021



வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.


அவிட்டம் : தடைகள் விலகும்.

---------------------------------------




கும்பம்

மே 22, 2021



முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழப்பதற்கான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். எந்த செயல்களிலும் பக்குவமாக செயல்படுவது நன்மையளிக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் காலதாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : கோபத்தை தவிர்க்கவும்.


சதயம் : காலதாமதம் ஏற்படும்.


பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------




மீனம்

மே 22, 2021



உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் பேசுவார்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரட்டாதி : இழுபறிகள் அகலும்.


ரேவதி : புரிதல் மேம்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Thamizh Pudhalvan Scheme - 38 Districts - Total No. Data for Verification - Action Taken - Verification Pending - School Data Updation Pending Report

  தமிழ்ப் புதல்வன் திட்டம் - 38 மாவட்டங்களில் விண்ணப்பித்தோர்,  சரிபார்க்கப்பட்ட & நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எண்ணிக்கை அறிக்கை Tamil...