வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதி வழங்கி சுகாதாரத்துறை உத்தரவு...
>>> Click here to Download G.O.Ms.No.254, Dated: 24-05-2021...
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற அனுமதி வழங்கி சுகாதாரத்துறை உத்தரவு...
>>> Click here to Download G.O.Ms.No.254, Dated: 24-05-2021...
மேஷம்
மே 26, 2021
மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும். செய்யும் செயல்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : குழப்பங்கள் உண்டாகும்.
பரணி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
மே 26, 2021
உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
மே 26, 2021
கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் எதிர்பாராத ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பங்காளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
கடகம்
மே 26, 2021
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாரிசுகளின் செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : சேமிப்புகள் குறையும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
சிம்மம்
மே 26, 2021
உயர்கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். வீடு பராமரிப்பு செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------
கன்னி
மே 26, 2021
சிறு தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
மே 26, 2021
குழந்தைகளுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : அறிமுகம் ஏற்படும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
விருச்சகம்
மே 26, 2021
உத்தியோகம் தொடர்பான பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் எண்ணிய எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாகனம் தொடர்பான பழுதுகளை சரி செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
அனுஷம் : முயற்சிகள் மேம்படும்.
கேட்டை : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
தனுசு
மே 26, 2021
நண்பர்களிடம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உங்களின் மீது இருந்த அவப்பெயர்கள் படிப்படியாக குறையும். செய்யும் முயற்சிக்கேற்ப லாபமும், முன்னேற்றமும் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------
மகரம்
மே 26, 2021
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் பேச்சிற்கு மதிப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதுவிதமான விதிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கையும், செல்வாக்கும் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : புதுவிதமான நாள்.
அவிட்டம் : செல்வாக்கு மேம்படும்.
---------------------------------------
கும்பம்
மே 26, 2021
உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத செய்திகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வீர்கள். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
சதயம் : விருப்பங்களை அறிவீர்கள்.
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
மே 26, 2021
சூழ்நிலைக்கேற்ப பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. இழுபறியான செயல்களை செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
ரேவதி : இழுபறிகள் அகலும்.
---------------------------------------
தலைமை செயலக துறைச் செயலாளர்களுக்கான செய்திக்குறிப்பு. ப.ம.நி.சீ.துறை.நாள் :25.05.21...
அவசியமாக தேவைப்படும் பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்கப்படல் வேண்டும்
பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
நோய்தொற்று தடுப்பதற்கான உரிய முறையான வழிமுறைகள் பின்பற்றுதல் வேண்டும்.
G.O.No.2138 - பள்ளிக்கல்வி துறை முதன்மைசெயலாளர் தீரஜ்குமார் மாற்றம் - புதிய முதன்மைச்செயலாளராக காகர்லா உஷா நியமனம்...
>>> Click here to Download G.O.Rt.No.2138, Dated: 25-05-2021...
கொரோனா நிவாரண நிதி 2 வது தவணை மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் வரும் ஜூன் 3 ஆம் தேதி முதல்வர் துவக்கி வைக்கிறார்...
இன்றைய (25.05.2021) கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் 34,285 - Media Bulletin...
சென்னையின் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி-யில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அரைகுறை ஆடையுடன் ஆன்லைன் வகுப்புக்கு வந்ததாகவும், ஆபாசமாகப் பேசியதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பள்ளியின் டீனுக்கு புகார் அனுப்பப்பட்டது. எனினும் பள்ளி தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற தகவல் வெளியானது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த விவகாரம்.
இந்தநிலையில், ஆசிரியர் ராஜகோபாலனை தமிழக காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதனிடையே ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே ஆன்லைன் வகுப்புகளை நெறிப்படுத்துவது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்திக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ``ஆன்லைன் வகுப்புக்கு என்று தனியாக நெறிமுறைகள் இருக்கிறது. இப்போது அது பின்பற்றப்படுவதாக் தெரியவில்லை. தொடர்ந்து அனைத்து நெறிமுறைகளை பின்பற்றுவது உறுதி செய்யப்படும். புதிய நெறிமுறைகளும் வெளியிடப்படும். போலீஸார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு என்று தனிக்குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. நல்ல ஆசிரியர்களுக்கு களங்கம் வராத வகையில் இந்த குழு அமையும். ஆன்லைன் வகுப்புகளில் இப்படி ஒரு விஷயம் நடக்கும்னு யாரும் எதிர்பார்க்கவில்லை.. இது எங்களுக்கும் ஒரு பாடம் தான். இனி வரும் காலங்களில் அது மாதிரியான தவறுகள் நடக்காமல் பார்த்து கொள்வோம்” என்றார்.
இதனிடையே, இந்த பாலியல் புகார் விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்ப போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். மாணவர்கள் புகார் தெரிவித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...