கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்...

 


இந்திய அரசின் விதிகளுக்கு இணங்கிய கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்: தனி அதிகாரியை நியமித்து புகார்களை கையாள சம்மதம்..


மத்திய அரசின் புதிய ஒழுங்குமுறை விதிகளுக்கு கட்டுப்பட கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளன.


விதிகளின்படி புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்கவும் சம்மதம் தெரிவித்திருக்கின்றன.


ஆனால், ட்விட்டர் மட்டும் இதுவரை விதிகளுக்கு கட்டுப்பட ஒப்புதல் தெரிவிக்கவில்லை.


புதிய விதிகளின்படி குறைதீர்ப்பு, ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நீக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை கையாள ஒவ்வொரு சமூகவலைதளமும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், அந்த அதிகாரிகள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு ஊதிய நீட்டிப்பு: அரசாணைகள் வெளியீடு...

 பள்ளிக் கல்வித்துறையில் 6156 தற்காலிக பணியிடங்களுக்கும், ஆசிரியர் பணியில்லா பணியிடங்களில் பணியாற்றும் 5000 பேருக்கும் மே மாத ஊதியம் வழங்க கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கவித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு, நகராட்சி, உதவி பெறும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உள்ள 6156  தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பணியல்லாத பணியிடங்களுக்கு இறுதியாக 2018 முதல் 2020 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



மேற்காணும் இந்த பணியிடங்களில் 1.1.2021 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி  இயக்குநர் அரசுக்கு கருத்துரு  அனுப்பியுள்ளார். மேலும் ஏப்ரல் மாதத்துக்கான ஊதிய கொடுப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.


இந்த பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளார். தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், 6156 பணியிடங்களுக்கு 2021 மே மாதத்துக்கான ஊதியம் பெற்று வழங்க வசதியாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது.  



மேலும்,   பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு 31.12.2020ல் முடிவடைந்த நிலையில் அந்த பணியிடங்களில் பணியாற்றி வரும் 778 துப்புரவாளர்கள், 494 இரவுக்காவலர்கள் என மொத்தம் 1272 பணியாளர்களின் பணியிடங்களுக்கு மட்டும் 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு  ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை ஏற்று  அரசாணை 47ன் தொற்றுவிக்கப்பட்ட 2999 துப்புரவாளர் பணியிடம் மற்றும் 2001 காவலர் பணியிடம் என மொத்தம் 5000 பணியிடங்களில் 1270 பணியாளர்கள் 2021 மே மாதம் ஊதியம் பெறத் தக்க வகையில்  ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



>>> 5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியிடங்களுக்கு (778 துப்புரவாளர் மற்றும்  494 இரவு காவலர்) மே -2021 மாதத்திற்கான  ஊதிய நீட்டிப்பு ஆணை...


>>> 6156 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா தற்காலிகப் பணியிடங்களுக்கான மே-2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை...



தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS Re-Imbursement - CLAIM FORM...



 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான NHIS Re-Imbursement - CLAIM FORM...


கொரானா சிகிச்சை காப்பீடு தொகை திரும்ப பெற கடித மாதிரிகள்...


1 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காப்பீடு தொகை பெறாதவர்களுக்கு முதல் கடிதம்


2  காப்பீட்டு திட்டத்தில் அங்கீகாரம்  இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் காப்பீடு தொகை பெற இரண்டாவது கடிதம்


3) காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று குறைவான தொகை பெற்றவர்கள் கூடுதல் தொகை பெற 3 வது கடிதம்...


இணைக்க வேண்டியவை:

  • NHIS card xerox
  • Estimation xerox copy
  • Bill summary xerox copy
  • Discharge summary xerox copy
  • All Other Bill xerox copy 

இணைத்து அனுப்பி மருத்துவ காப்பீடு தொகை பெறலாம்.


>>> Click here to Download NHIS Reimbursement Model Letter...



>>> G.O.No:391, Dated: 10.12.2018 - NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற்கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்...


+2 & ITI முடித்தவர்களுக்கு CIPET நிறுவனத்தில் பட்டயம் பயில விண்ணப்பிக்கலாம்...




மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் CIPET பிளாஸ்டிக் அச்சு (டிபிஎம்டி), பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் டிப்ளமோ   பயில அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.06.2021


கல்வித் தகுதி: 10 / +2 / ITI


தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில்


கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள PDF LINK👇


https://www.cipet.gov.in/centres/cipet-haldia/downloads/07-05-2021-001/Advertisement.pdf


தமிழகத்தில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு – 3378 காலிப்பணியிடங்கள்- அறிவிப்பு...

 


தமிழகத்தில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு மொத்தம் 3378 பணியிடங்கள் காலியாக உள்ளன. ரயில்வே வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் வேலைகளில் சேரலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 01.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்கலாம்.


>>> முழு விவரங்கள் அறிய இங்கே சொடுக்கவும்...


கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு...

 



கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு...


“வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.


புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.BREAKING: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் - வங்கி வைப்பு நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவு


“வைப்பு தொகையாக வழங்கப்படும் நிதி, 18வது வயதில் முதிர்வுத் தொகையாக பெறலாம்"


கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் இலவச கல்வி அளிக்கவும் உத்தரவு.


தனியார் பள்ளியில் படித்தால் பிஎம் கேர் நிதியில் இருந்து பணம் வழங்கப்படும் எனவும் மோடி உத்தரவு.


புத்தகங்கள், பள்ளி உடைகள் செலவையும் மத்திய அரசே ஏற்கும் எனவும் மோடி உத்தரவு.



கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5லட்சம் வைப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (முழுமையான தகவல்கள்)...

 


கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5லட்சம் வைப்பீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம்  வைப்புத் தொகையாக வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக  வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும் போது அந்த தொகை வட்டியோடு சேர்த்து வழங்கப்படும்.



பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்கும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு விடுதிகளில் தங்க வைக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரனோ தொற்றினால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்...


>>> செய்தி வெளியீடு எண்: 180, நாள்: 29-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...