கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது- முதலமைச்சர் ஸ்டாலின்...

 முழு ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது- முதலமைச்சர் ஸ்டாலின்.


அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.


அதுவும் மக்களாகிய உங்கள் கையில் தான் இருக்கிறது.


கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.




இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு "டெல்டா" & "கப்பா" என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு...

 இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு "டெல்டா" & "கப்பா" என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு...





இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, கப்பா என கிரேக்க எழுத்துகளை உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களாக அறிவித்துள்ளது.


இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.


தென்ஆப்பிரிக்காவின் கொரோனாவுக்கு பீட்டா என்றும் பிரேசில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கு காமா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


உருமாறும் கரோனாவைக் கண்டுபிடிக்கும் நாட்டின் பெயரை சூட்ட எதிர்ப்பு எழுந்தால் உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் முடிவு - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு...

 🔴சிபிஎஸ்இ தேர்வை பொறுத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார்.


🔴சிபிஎஸ்இ அறிவிப்பை பொறுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வருடனான ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் பேட்டியளித்துள்ளார்.


🔴 தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் எழும் புகார்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவே, பள்ளிகளில் எழும் பிற புகார்களையும் விசாரிக்கும்.


- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

 




>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்....



கொரோனா தனிமை மையங்களில் கல்வி அதிகாரிகளுக்கு பணி...

 கொரோனா தனிமை மையங்களில் கல்வி அதிகாரிகளுக்கு பணி...





>>> கொரோனா தடுப்பு பணி - வட்டாரக் கல்வி அலுவலர்கள் நியமனம் : மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...


கோவிட்19 சிகிச்சை குறித்த அரசின் புதிய நெறிமுறைகள் (SpO2 < 90 எனில் மருத்துவமனைகளில் சிகிச்சை) - அரசாணை வெளியீடு...

 


SpO2 > 94 எனில் வீட்டுத் தனிமை, SpO2 90-94 எனில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை, SpO2 < 90 எனில் மருத்துவ கல்லூரி/மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை, அரசாணை (G.O.Ms.No.257, Dated: 31-05-2021) வெளியீடு....


G.O.Ms.No.257, Dated: 31-05-2021 - COVID-19 Pandemic - Treatment protocol for patients with Corona Virus Infection - Ordered - Amandment - Issued...


>>> Click here to Download G.O.Ms.No.257, Dated: 31-05-2021...





மாற்றுத்திறனாளி பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிப்பதை 06-06-2021 வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியீடு...



 மாற்றுத்திறனாளி பணியாளர்கள்  அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளிப்பதை 06-06-2021 வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை (வாலாயம்) எண்: 84, நாள்: 31-05-2021 வெளியீடு...


>>> அரசாணை (வாலாயம்) எண்: 84, நாள்: 31-05-2021...



உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை - பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காண பள்ளிக் கல்வி இயக்கக அளவில் பொறுப்பு அலுவலரை நியமித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...

 


பள்ளிக் கல்வி - உங்கள் தொகுதியில் முதலமைச்சர் - துறை உருவாக்கம் - பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணும் பொருட்டு பள்ளிக் கல்வி இயக்கக அளவில் பொறுப்பு அலுவலரை நியமித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 14838/ அ1/ இ4/ 2021, நாள்: 26-05-2021...


>>>  பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 14838/ அ1/ இ4/ 2021, நாள்: 26-05-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Magizh Mutram - House System Handbook Manual - Tamil Nadu Government School Education Department Released

மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...