கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புத்தக வினியோகம் - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு...



 புதிய கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக, அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது.


தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 1 முதல் புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ளது. பள்ளிகளை திறந்து, வகுப்புகளை துவங்குவதற்கான ஆயத்த பணிகளில், பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளின் அலுவலக பணியாளர்கள் வரும், 14ம் தேதி முதல் தினமும் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் சார்பில், புதிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு, ஒவ்வொரு மண்டல அலுவலகங்களிலும், தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.இந்த புத்தகங்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளிகளுக்கு வழங்கும் பணிகள் துவங்கியுள்ளன.


இதற்காக, மாவட்ட வாரியாக போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அதற்கான செலவினங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே வழங்க அனுமதித்தும், தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 006587/ கே1/ 2021 , நாள்: 09-06-2021...



தேவையற்ற, பழுதடைந்த வாகனங்களை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவு- Govt Letter No.: 875...

 தேவையற்ற, பழுதடைந்த வாகனங்களை அகற்ற தலைமை செயலாளர் உத்தரவு- Govt Letter No.: 875...


பழைய வாகனங்களை ஏலம் விட்டு கருவூலத்தில் தொகையை சேருங்கள் - தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு...


அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாடில்லாத வாகனங்களை ஏலம் விட்டு அந்தத் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 


இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், பயன்பாடற்ற வாகனங்களை அகற்றும் பணிக்கான, நடைமுறைகளை துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 


இதன்மூலம், பயன்பாட்டிலுள்ள வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் கிடைக்கும் என்றும், அரசு கருவூலத்துக்கு சிறிது நிதியும் சேரும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.


PUBLIC DEPARTMENT - LETTER NO: 875/ SPECIAL-B/ 2021-2, Dated: 09.06.2021...




தமிழ்நாடு அரசின் நிதித்துறையில் NHIS திடடம் தொடர்பாக இரண்டு புதிய பணியிடங்களை உருவாக்கி நிதித்துறை அலுவலக உத்தரவு வெளியீடு...

 💢 அரசு ஊழியர்களுக்கான சுகாதார காப்பீட்டு திட்டங்களைக் கையாள்வதற்காக நிதித் துறையில் பிரத்யேக பிரிவை உருவாக்கி அரசு உத்தரவு...


💢 அதன்படி, நிதி (பி.ஜி.சி -II) என்ற பிரிவை இரண்டு உதவி பிரிவு அதிகாரிகளுடன் நிதி (சுகாதார காப்பீடு) என்ற புதிய பிரிவு உருவாகிறது...



கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியீடு - இணைப்பு: விண்ணப்பப் படிவம்...



 கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை (G.O.Ms.No.:24, Dated: 11-06-2021) வெளியீடு - இணைப்பு:  விண்ணப்பப் படிவம்...



புதிதாக 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 50சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப அரசாணை வெளியீடு (நாளிதழ் செய்தி)...

 


புதிதாக 1575 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - 50சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50சதவீதம் நேரடி நியமனம் மூலமும் நிரப்ப அரசாணை வெளியீடு  (நாளிதழ் செய்தி)...

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு புதிதாக 1,575 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நான்கு மாதங்களுக்கு முந்தைய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, தாமதமாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர் பதவிகளுக்கு 1,575 புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்கான அரசாணை, தேர்தலுக்கு முன், பிப்.,1ல் கையெழுத்தானது.ஆனால், அதை பள்ளி கல்வி செயலகம், நான்கு மாதங்களாக கோப்பிலேயே வைத்து, நேற்று திடீரென வெளியிட்டுள்ளது.

பிப்., 1 அரசாணையில், பள்ளி கல்வித்துறை முன்னாள் முதன்மை செயலர் தீரஜ்குமார் கையெழுத்திட்டுள்ளார். இந்த அரசாணையின்படி, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிகமாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், தேவைக்கு அதிகமானவை என்ற வகையில், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

அந்த இடங்களை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்க தேவைப்படும் முதுநிலை ஆசிரியர் இடங்களாக தரம் உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த 1,575 இடங்களில் 50 சதவீதமான 787 இடங்கள், தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும், மீதமுள்ள இடங்கள் புதிய பட்டதாரிகள் வழியாகவும் நிரப்பப்படும் என, அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.


 

>>> அரசாணை (நிலை) எண்:18, நாள்: 01-02-2021... ( மாவட்டங்களில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் பாட வாரியாக)...



14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் - அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...

 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பணியமர்த்தினால் 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனையும் 50,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் எச்சரிக்கை...




அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு ( மாவட்டங்களில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் பாட வாரியாக)...



 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை நிலை எண்:18, நாள்: 01-02-2021 வெளியீடு...


>>> அரசாணை நிலை எண்:18, நாள்: 01-02-2021 & மாவட்டங்களில் பணியிடங்கள் ஒப்பளிக்கப்பட்ட அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் (பாட வாரியாக)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Secondary Grade Teachers Vacant List as on 11.7.2025

SG Teachers Final Vacancy List - All Districts 2342 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கான காலிப்பணியிடங்கள் விவரம் Secondary Grade Teache...