கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RTI - ஜூலை31(31-07)க்குள் 5 வயது நிறைவடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது - தொடக்கக்கல்வி (இணை) இயக்குனர் நிர்வாகம் அவர்களின் (RTI )பதில்...

 


RTI - ஜூலை31(31-07)க்குள் 5 வயது நிறைவடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது - தொடக்கக்கல்வி (இணை) இயக்குனர் நிர்வாகம் மற்றும் பொது தகவல் அளிக்கும் அலுவலர் அவர்களின் (RTI )பதில் செயல்முறைகள் ந.க.எண்: 17486/ ஜே2/ 2013, நாள்: 01-08-2013...


>>> தொடக்கக்கல்வி (இணை) இயக்குனர் நிர்வாகம் செயல்முறைகள் ந.க.எண்: 17486/ ஜே2/ 2013, நாள்: 01-08-2013...





திருமணத்திற்கு செலவிட திட்டமிட்ட தொகையில் மீதமான ரூ.37 லட்சத்தை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கிய மணமக்கள்...


திருப்பூரைச் சேர்ந்த ஒரு புதுமணத் தம்பதியினர், தங்கள் திருமணத்திற்கு செலவழிக்க திட்டமிட்ட தொகையிலிருந்து கூடுதல் சேமிப்பான ரூ.37 லட்சத்தை கோவிட் நிவாரணத்திற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.


 ஆரம்பத்தில் ரூ.50 லட்சம் பட்ஜெட்டில் முடிவு செய்த அனு மற்றும் அருள் பிரனேஷ் ஆகியோரின் திருமணத்தை ஜூன் 14 அன்று ரூ.13 லட்சம் செலவில் செய்ய முடிந்தது. 


பின்னர் இந்த மணமக்கள் பட்ஜெட்டில் மீதமுள்ள பணத்தை மாநிலத்தில் உள்ள பல அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராட வழங்கினர்.


 மேற்கு தமிழ்நாட்டில் கோவிட் நோய் பெருகத் தொடங்கியதால், அழைப்பாளர்களில் பலர் பயணிப்பதை தவிர்த்து விட்டனர் என பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் தனது குடும்ப வியாபாரத்தை நடத்தி வரும் அருள் பிரணேஷ் தெரிவித்தார்.


 "திருமண மண்டப உரிமையாளர் கூட எங்கள் வாடகை திரும்ப அளித்தார்," 


 "இருப்பினும், திருமணத்தை ஒத்திவைக்க வேண்டாம் என்று குடும்ப பெரியோர் முடிவு செய்ததால், உள்ளூர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்ற பின்னர் குறைந்த வருகையுடன் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டோம்."என்று அவர் கூறினார்.



 திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப்பில் உறுப்பினர்களாக உள்ள இந்த குடும்பத்தினர் அந்த அமைப்பால் நடத்தப்படும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.


எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக  நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்♥️


திருப்பூரை சேர்ந்த அருள்செல்வத்தின், 2வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியினர் மகள் அனு என்பவருக்கும், காங்கயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது. 


திருமணத்தை எளிமையாக நடத்தியதால், மீதமான பணத்தை நற்பணிகளுக்கு தர முடிவு செய்து திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு - 5 லட்சம்,


 பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு - 11 லட்சம், 


புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு - 2 லட்சம் ரூபாய்.


திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க, 7.66 லட்சம்,


 மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு, 7 லட்சம் என, 


மொத்தமாக, 37.66 லட்சம் ரூபாயை வழங்கினர்.

 மக்கள் சார்பில் அவர்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


கொரோனா வெருவிப் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான மருத்துவ முறைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ICMR...

 


கொரோனா வெருவிப் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான மருத்துவ முறைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ICMR...


*5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை..!


*6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, உடல்நிலை அடிப்படையில் முகக்கவசம் அணிவிக்கலாம்.


*12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.


*- ஐ.சி.எம்.ஆர்



>>> Click here to Download Guidelines for Management of COVID-19 in Children (below 18 years) Ministry of Health & Family Welfare Government of India...



1959ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் வேங்காம்பட்டி பள்ளியில் எழுதிய பார்வைக் குறிப்பினை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர்...

 1959ல் எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர் வேங்காம்பட்டி பள்ளியில் எழுதிய பார்வைக் குறிப்பினை ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர்...


கரூர் மாவட்ட ஆட்சியர்  பிரபுசங்கர் கிருஷ்ணராயபுரம் வட்டாரம்,  வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்து இருக்கிறார்.


 இந்த  பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை டிவிட்டரில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார். 









2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை வழங்கி, கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்...


கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். 


1 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. 


2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.






அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி கல்வி தொலைக்காட்சியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்...





12 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் - அரசு ஊதியம் - தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...

 


12 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் - அரசு ஊதியம் - தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...


>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




மேல்நிலைப் பள்ளி - நிரந்தரக் காவலர் பணியிடம் - 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 07-07-2021...



 மேல்நிலைப் பள்ளி - நிரந்தரக் காவலர் பணியிடம் - 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 07-07-2021...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...