கல்வி தொலைக்காட்சி (Kalvi TV)- அட்டவணை (2021-22) வகுப்புகள் 1-12
>>> கல்வி தொலைக்காட்சி - அட்டவணை (2021-22) வகுப்புகள் 1-12 (PDF File)...
கல்வி தொலைக்காட்சி (Kalvi TV)- அட்டவணை (2021-22) வகுப்புகள் 1-12
>>> கல்வி தொலைக்காட்சி - அட்டவணை (2021-22) வகுப்புகள் 1-12 (PDF File)...
புதிய வடிவத்தில் கல்வி தொலைக்காட்சி - ஒளிபரப்பில் புதுமை...
*📌IFHRMS ல் E-SR திருத்தங்கள் மேற்கொள்ள மண்டல வாரியாக நாட்கள் ஒதுக்கீடு நீங்கள் இதுவரை திருத்தம் செய்ய வில்லை எனில் இப்போது உங்கள் மண்டலத்திற்கு ஒதுக்கிய நாட்கள் அன்று திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
*📌 திருத்தங்கள் மேற்கொள்ள நாட்கள் வாரியாக அட்டவணை வெளியீடு..
*📌சென்னை,கோயம்புத்தூர்,மதுரை மண்டலங்கள் திங்கள்,புதன்,வெள்ளி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
*📌வேலூர்,திருச்சி,திருநெல்வேலி மண்டலங்கள் செவ்வாய்,வியாழன்,சனி திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
IFHRMS SR Digitization (ESR) Log In Enable Days:
Chennai, Coimbatore, Madurai Region : Monday, Wednesday, Friday (Up to 02.00 p.m.)
Vellore, Trichy, Tirunelveli Region : Tuesday, Thursday, Saturday (Up to 02.00 p.m.)
>>> Click here to Download Region Wise Login URLs and Login enabled Days Details...
28-06-2021வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதியில்லை - அரசாணை (G.O.Ms.No.409, Dated: 20-06-2021) வெளியீடு...
See Serial Number: 48
>>> Click here to Download G.O.Ms.No.409, Dated: 20-06-2021...
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - ஒரே வாரத்தில் 7000 மாணவர்கள் சேர்ந்தனர்: பெற்றோர் ஆர்வம் காட்டுவதாக அதிகாரிகள் தகவல்...
மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஒரே வாரத்தில் 6,879 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம், ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும், அதற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஆரம்பப் பள்ளிகள் 119, நடுநிலைப்பள்ளிகள் 92, உயர்நிலைப்பள்ளிகள் 38, மேல்நிலைப்பள்ளிகள் 32 என 281க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.இந்த பள்ளிகளில் கடந்த 2019-20ம் ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்புகள் வரை 18,605 மாணவர்கள் புதிதாக வந்து சேர்ந்துள்ளனர், அதில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 6,533 பேர் வந்துள்ளனர். இதேபோல் 2020-21ம் ஆண்டில் 27,843 பேர் மாநகராட்சி பள்ளிகளில் வந்து சேர்ந்தனர். அதில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறி 14,763 பேர் சேர்ந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றினால் கடந்த ஒன்றரை வருடங்களாக பொதுமக்கள் வருமானமின்றி கட்டணம் செலுத்த முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனால் நிறைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சான்றிதழை பெற்று அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதேபோன்று, சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளிலும் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் 2021-2022ம் ஆண்டில் கல்வியாண்டிற்க்கு தற்போது சேர்க்கை நடந்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6,897 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதேபோன்று மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுகளில் அதிகமானவர்கள் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து, மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டை விட இந்தாண்டு மாநகராட்சி பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர். அதனால் மாணவர்கள் சேர்க்கையும் வேகமாக நடந்து வருகிறது. அதற்கு காரணம், மாநகராட்சி பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி, கம்ப்யூட்டர் வகுப்புகள், தரமான கல்விகள் என தனியார் பள்ளிகளின் அளவிற்கு கற்பிக்கப்படுகிறது. அதனால் மாநகராட்சி பள்ளிகளின் தரமும் உயர்ந்து காணப்படுகிறது.
மேலும் கொரோனா தொற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானமின்றி இருக்கும் வகையில் கட்டணம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதனால் நிறைய பேர் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கு தகுந்தாற்போல் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என்றனர். ஆங்கில வழிக்கல்வி, கம்ப்யூட்டர் வகுப்புகள், தரமான பயிற்றுமுறை இருப்பதால் தற்போது மாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்ந்து காணப்படுகிறது.
உணவு, மளிகை, பேக்கரி பொருட்களை பார்சல் செய்யும்போது எச்சில் தொட்டு எடுத்தாலோ, வாயால் ஊதி பிரித்தாலோ கொரோனா தொற்று பரவும் அபாயம்: கடை உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை...
உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும்போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும், அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
மார்ச் 2021 முதல் தமிழ்நாட்டில் நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களை அவ்வப்போது கலந்தாலோசித்து அரசு ஊரடங்கினை பல்வேறு கட்டங்களில் அறிவித்து வந்துள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும் சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகளில் ஒன்றாக அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது. உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. மளிகை கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதித்த நிலையில் அந்த கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. உறைகளை எடுக்கும் போது கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு அந்த உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போடுவதற்காக வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும் என்பதால் இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என கருதப்படுகிறது.
சமீபத்தில் இது தொடர்பான ஒரு பொது நல வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றி பெற பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்பது மறுக்க முடியாத கூற்றாகும். உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு எடுத்தல், வாயால் ஊதி பிரித்தல் போன்ற செயல்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதை கடை உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு அவர்களுடைய ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும், அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* உணவக பார்சல் சேவையில் உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது.
* மளிகை, இறைச்சி, மீன் கடைகளிலும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
* கடை ஊழியர்கள் எச்சில் தொட்டு உறைகளை எடுப்பது, பொருட்களை உள்ளே போட ஊதுவது போன்ற கொரோனா தொற்று பரவ வழிவகுக்கும் செயல்பாடுகளை தவிர்க்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
வெளிநாடு செல்பவர்களுக்கு 28 நாட்களில் கோவிஷீல்டு தடுப்பூசி - சுகாதாரத் துறை...
முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் Joint Director Mr. Pon K...