கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

”உயிரிழந்த கொரோனா நோயாளியின் சிகிச்சை, வழங்கப்படும் நிதியுதவிக்கு வரிச்சலுகை பெறலாம்” - அரசு அறிவிப்பு...



 ”உயிரிழந்த நோயாளியின் கொரோனா சிகிச்சைக்கு வரிச்சலுகை பெறலாம்” - அரசு அறிவிப்பு...


கொரோனாவால்‌ உயிரிழந்தவரின்‌ சிகிச்சைக்கு செலுத்திய பணத்திற்கு வரிச்சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.


கோவிட்‌ 19க்கான சிகிச்சை பெற பலர்‌ தனியார்‌ மருத்துவமனைகளில்‌ பல லட்சம்‌ ரூபாய்‌ வரை செலவு செய்ய நேரிடுகிறது. அவ்வாறு அலுவலகத்தில்‌ ஒரு ஊழியர்‌ பெறும்‌ தொகையின்‌ மீது உரிமையாளருக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்‌.


சிகிச்சைக்கு பணம்‌ கொடுப்போருக்கும்‌ அந்தச்‌ சலுகை அளிக்கப்படும்‌ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இதே போல்‌ ஒருவர்‌ கொரோனாவால்‌ இறந்துவிட்டால்‌ அவர்‌ குடும்பத்தினருக்கு அவருடைய உரிமையாளர்‌ நிதியுதவி அளித்தால்‌ அதற்கும்‌ வரிவிலக்கு பெறலாம்‌. இதற்கான வரம்பு 10லட்சம்‌ ரூபாய்‌ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

"கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" -சுகாதார அமைச்சகம் அறிவிப்பு...



 "கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" -சுகாதார அமைச்சகம் அறிவிப்பு...


இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கிடைக்கின்றன. இந்த இரண்டுமே கர்ப்பிணி பெண்களிடம் ட்ரையல் பார்க்கப்படவில்லை என்பதால் மத்திய அரசு இவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை பரிந்துரை செய்யாமல் இருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பூசி போடுவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

 

அப்போது பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் டாக்டர் பலராம் பார்கவா, கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பதாகவும், இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் எனவும் கூறினார். மேலும் அவர், குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி குறித்து பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பரில் பரிசோதனை முடிவுகள் தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

 

நாடு முழுவதும் 25.37 கோடி பேருக்கு முதல் டோஸும், 5.42 கோடி பேருக்கு 2-வது டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.


நடப்பு கல்வியாண்டு (2021-2022) முதல் M.Phil., படிப்பை நிறுத்துவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு...

University of Madras announces Discontinuation of M.Phil., Admissions From the current academic year (2021-2022) ...

 நடப்பு கல்வியாண்டு (2021-2022) முதல் M.Phil., படிப்பை நிறுத்துவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு...



PAN உடன் AADHAR இணைக்கும் கால அவகாசம் மேலும்3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

 


PAN உடன் AADHAR இணைக்கும் கால அவகாசம் மேலும்3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் (PAN - Aadhar Link) கால அவகாசம் நீட்டிப்பு .
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு 2019 மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதாரிடன் பான் கார்டை இணைப்பது அவசிமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் ஜூலை 1 ஆம் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. மேலும், ஜூன் 30க்குல் பான் - ஆதார் இணைக்கவில்லை என்றால் முதலீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதை இணைக்கத் தவறினால் மியூச்சுவல் பண்ட் எஸ்பிஐ பாதிக்கும் எனவும், ஃபிக்ஸ்ட் டெபாசிஸ் போட்டிருப்பவர்களுக்கு 10%குப் பதில் 20% டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15G, 15H படிவங்களை சமர்பிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில். பான் எண்ணுடன் ஆதார் இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 30 ஆம் தேதியுடன் இந்த அவகாசம் முடியவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மேலும் 3 மாதம் அவகாசம் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்...

 


54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 18,120 இடங்களில் சேர tngptc.in என்ற இணையதளத்தில் ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்.


Important Dates (அறிவிப்பு தேதிகள்)

Commencement of On-line Submission of Application Form (விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தல் ) - 25/06/2021


Last date for Submitting Application (விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி) - 12/07/2021


தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மூலமாக பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பிற்கு என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 


Diploma சேர்க்கை : 

முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை 

பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பு


டிப்ளமோ கல்வித்தகுதி : 

முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கை – பத்தாம் வகுப்பு (SSLC/ Matriculation) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பகுதி நேர டிப்ளமோ பட்டயபடிப்பு – 10 + ITI தேர்ச்சி அல்லது 10 + 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 


பதிவு கட்டணம் : 

மாணவர்கள் அனைவரும் பதிவு கட்டணமாக ரூ.150/- செலுத்த வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.



விண்ணப்பிக்கும் முறை : 

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.06.2021 அன்று முதல் 12.07.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 


>>> TNDTE Official Notification PDF... 


>>> Diploma Admission Notice 2021 PDF...


கல்வித்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...

 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு முறை மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை.



இன்றைய (26-06-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 26, 2021



மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விவாதங்களின் மூலம் சாதுர்யமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : தன்னம்பிக்கையான நாள்.


பரணி : பிரச்சனைகள் குறையும். 


கிருத்திகை : துரிதம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூன் 26, 2021



திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் லாபம் பெறுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட  திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



கிருத்திகை : எண்ணங்கள் நிறைவேறும்.


ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : லாபம் மேம்படும். 

---------------------------------------




மிதுனம்

ஜூன் 26, 2021



எதிலும் வேகமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட  திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஜூன் 26, 2021



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திறமையான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி உண்டாகும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பிற்கு நன்மையளிக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.



அதிர்ஷ்ட  திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


பூசம் : சேமிப்புகள் மேம்படும்.


ஆயில்யம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




சிம்மம்

ஜூன் 26, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்வழி உறவுகளிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட  திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூரம் : ஒத்துழைப்பு ஏற்படும்.


உத்திரம் : கவலைகள் நீங்கும்.

---------------------------------------




கன்னி

ஜூன் 26, 2021



தொழில் தொடர்பான முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். புதிய ஒப்பந்தம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக நிறைவேறும். எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட  திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.


அஸ்தம் : உற்சாகமான நாள்.


சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

ஜூன் 26, 2021



மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.



அதிர்ஷ்ட  திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


சுவாதி : திருப்தியான நாள்.


விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூன் 26, 2021



கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. சமூகப்பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது கவனத்துடன் செயல்படவும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்களை பகிர்வதை தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.



அதிர்ஷ்ட  திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : கவனம் வேண்டும்.


அனுஷம் : லாபம் மேம்படும்.


கேட்டை : விவகாரங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




தனுசு

ஜூன் 26, 2021



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய பொறுப்புகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும்.



அதிர்ஷ்ட  திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : ஆதரவு கிடைக்கும்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




மகரம்

ஜூன் 26, 2021



பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டங்களின் மூலம் புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட  திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : இழுபறிகள் அகலும்.


திருவோணம் : புரிதல் மேம்படும்.


அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஜூன் 26, 2021



உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட  திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : ஆதரவான நாள்.


சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.


பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

ஜூன் 26, 2021



வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கூட்டாளிகளிடம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட  திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.


உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...