கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (03-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 03, 2021



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான எண்ணங்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவின் மூலம் மேன்மை ஏற்படும். பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : பொறுமை வேண்டும்.


பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


கிருத்திகை : மேன்மை ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 03, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை அகலும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



கிருத்திகை : மனவருத்தங்கள் நீங்கும்.


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 03, 2021



பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களில் விவேகம் வேண்டும். சுபகாரிய முயற்சிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



மிருகசீரிஷம் : பொருளாதாரம் மேம்படும்.


திருவாதிரை : முன்னேற்றமான நாள்.


புனர்பூசம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 03, 2021



வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பிரச்சனைகள் சற்று குறையும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.


பூசம் : பிரச்சனைகள் குறையும்.


ஆயில்யம் : திருப்திகரமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 03, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : சாதகமான நாள்.


பூரம் : தெளிவு பிறக்கும்.


உத்திரம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 03, 2021



மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------




துலாம்

ஜூலை 03, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : வாய்ப்புகள் அமையும்.


விசாகம் : ஒற்றுமை ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 03, 2021



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த வழக்கு தொடர்பான பணிகளுக்கு தீர்வு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றியும், உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் மேம்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், தெளிவும் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.


அனுஷம் : தீர்வு கிடைக்கும்.


கேட்டை : புரிதல் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 03, 2021



உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். தொண்டை தொடர்பான வலிகள் படிப்படியாக குறையும். வாகனம் தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : சிந்தனைகள் மேம்படும்.


பூராடம் : எண்ணங்கள் நிறைவேறும்.


உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 03, 2021



தொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய செயல்திட்டங்களை அமைத்து அதை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.


திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.


அவிட்டம் : ஆசைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 03, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும்.


சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூரட்டாதி : குழப்பங்கள் நீங்கும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 03, 2021



நெருக்கமானவர்களின் ஆதரவின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மற்றவர்களுடைய பணியையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Revised Pay Matrix (Cell 45வரை), HRA Slab, DA Percentage அனைத்தும்...


ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Revised Pay Matrix (Cell 45வரை), HRA Slab, DA Percentage அனைத்தும்... 



>>> ஒரே கோப்பில் ஆசிரியர்களுக்கான Revised Pay Matrix (Cell 45வரை), HRA Slab, DA Percentage அனைத்தும் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... 

தமிழ்நாட்டில், 12-07-2021வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 * தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.


*அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி.


*தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து


*அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.


*பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.



*டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி


*அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி


*மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


*அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க  தமிழக அரசு அனுமதி 


*உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள்  அமர்ந்து உண்ண அனுமதி




*பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி


*அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி


*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை 


*நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்




*அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.


*வணிக நிறுவனங்கள் இரவு 8மணிவரை செயல்படஅனுமதி.


 * தேநீர்கடைகள் உணவகங்களில் 50%பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி


>>> செய்தி வெளியீடு எண்: 370, நாள்: 02-07-2021...


12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு அடிப்படையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி...

 உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு...


* 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

 

* ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்






TNPSC - மே2021 துறைத்தேர்வுகள் தேதி அறிவிப்பு...

 TNPSC - Departmental Exam May-2021 Date Announced...



தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணி தட்டச்சர்கள் - தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் பணியமர்த்துதல் - மனித வள மேலாண்மை அரசு செயலாளர் கடிதம்...

 


மனித வள மேலாண்மை அரசு செயலாளர் கடித எண் 18527/யு-சிறப்பு/2021, நாள்: 30-06-2021 - பணியாளர் - தமிழ்நாடு அமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணி தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள் நிலை (III) - தற்காலிக பணி - பணியிடை முறிவு வழங்கி மீண்டும் தற்காலிகமாக பணியமர்த்துதல் - குறித்து கடிதம்...


>>> மனித வள மேலாண்மை அரசு செயலாளர் கடித எண் 18527/யு-சிறப்பு/2021, நாள்: 30-06-2021...


அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...



 அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...


சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எம்.பில் படிப்பு தொடர்ந்து நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர், உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன் இந்த ஆலோசனையில் 13 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறை மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.



இந்நிலையில் மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் குறித்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “துணைவேந்தர் மற்றும் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளிப்படையான தன்மையை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும். அதேபோல் பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும். ஒற்றை சாளர முறையில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலமாக பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆகஸ்ட் 1- முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும். ஆகஸ்ட் 1க்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் எம்.ஃபில். படிப்பை தொடர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.



M.Phil., படிப்பு கூடாது என்ற தேசிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கத்துக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு பயிற்றுவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.



*ஏற்கனவே 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு உள்ளிட்ட உள்ளடக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று அரசு கூறிவரும் நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியீடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...