கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அரசாணை வெளியீடு...

 


பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள அரசாணை (1டி) எண்: 152, நாள்: 25-06-2021 வெளியீடு...


G.O.NO : 152, Dated : 25.06.2021


9-ஆம் வகுப்பு மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும்.தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுமதி வழங்கி, உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு


ஆணை:


 2021-2022 - ஆம் கல்வியாண்டில் Covid - 19 பெருந்தொற்றினை கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை பதிவை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கி . மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை பெறப்பட்டதாகவும் , 10 - ஆம் வகுப்பு கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணாக்கர் சேர்க்கை செய்யப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் , AICTE 2021-2022 - ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறை Appendix 1 உட்பிரிவு 1.1 - ல் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.


>>> அரசாணை (1டி) எண்: 152, நாள்: 25-06-2021...


RTE-மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் குறித்த தகவல்கள் 09-08-2021அன்று வெளியிடப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அறிவிப்பு...

 


RTE-மாணவர் சேர்க்கை - தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் - அறிவிப்பு...


தனியார் பள்ளிகளில் இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை - ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent  இணையதளத்தில் நடைபெறும்.


💢தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி இணையதளத்திலும், பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும்.


- மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிவிப்பு


மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோருவோர் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு...

TANGEDCO - Request Transfer Applications - July 2021


 மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோருவோர் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு...



கொரோனா நிவாரண தொகை வழங்க விடுமுறை நாட்களில் பணிபுரிந்த நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...

 கொரோனா வைரஸ் நிவாரண தொகை வழங்க கடந்த 2 மாதங்களில் விடுமுறை நாட்களில் நியாயவிலை கடை செயல்பட்டதால், பணிபுரிந்த விடுமுறை நாட்களுக்கு ஈடுசெய் விடுப்பு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு...



G.O.No.94 - மாற்றுத்திறனாளி பணியாளர்கள் 04-07-2021 வரை அலுவலகத்திற்கு வருகை புரிய விலக்கு அளித்து அரசாணை வெளியீடு...



மாற்றுத்திறனாளி பணியாளர்கள் 04-07-2021 வரை அலுவலகத்திற்கு வருகை புரிய விலக்கு அளித்து அரசாணை (வாலாயம்) எண்:94, நாள்: 02-07-2021 வெளியீடு...


>>> அரசாணை (வாலாயம்) எண்:94, நாள்: 02-07-2021...




காவலர் தேர்வு-2020க்கான உடற் தகுதித் தேர்வு 26-07-2021 முதல் நடைபெறவுள்ளது...



 காவலர் தேர்வு-2020க்கான உடற் தகுதித் தேர்வு 26-07-2021 முதல் நடைபெறவுள்ளது...





பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் LKG வகுப்பு சேர்க்கை - விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு...

 


தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச எல்.கே.ஜி.வகுப்பு சேர்க்கை தொடங்கியுள்ளது. பொதுமக்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க அரசு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. அதன் படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இதற்கான முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது. ஆண்டுதோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெறுகின்றனர். 1 முதல் 8ம் வகுப்பு வரை ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கலாம்.


2020-21 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்வி பெற விரும்பும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.


இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, பிறப்பு சான்று, சாதி சான்று போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மாணவரின் இருப்பிடம், சேர விரும்பும் தனியார் பள்ளிக்கு 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் எனவும் மாணவர் சேர்க்கை வரை அனைத்து விதமான செயல்பாடுகளும் பெற்றோர் அறியும் வகையில் கல்வி இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...