கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2021 - 22ஆம் கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக பொதுத்தேர்வு - CBSE- திட்டம்...

 


கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020 - 21 கல்வியாண்டில் பெரும்பாலான நாட்கள் மாணவர்களுக்கு பள்ளி பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடந்தது. அதே நேரத்தில் இரண்டாவது அலையின் தாக்கத்தினால் சிபிஎஸ்இ உட்பட பெரும்பாலான மாநிலங்களில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.


இந்நிலையில் 2021 - 22 கல்வியாண்டில் இரண்டு பருவங்களாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக பிரத்யேக திட்டத்தை சிபிஎஸ்இ ம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி இரண்டு பருவங்களாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நவம்பர் - டிசம்பரில் முதல் பருவமும், மார்ச் - ஏப்ரலில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டத்தை இரண்டு பருவங்களுக்கு 50 - 50 சதவிகிதமாக பிரித்து வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்வை நடத்துவதற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தவே இந்த ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.


CPS ரத்து - பென்சனுடன் பழைய ஓய்வூதியத்திட்டம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

 


கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக்கோரி  பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.  


    மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் கோரிக்கைக்கு உரிய மரியாதை வழங்கி நிபுணர் குழு அமைத்தார். அந்தக்குழுவும் காலம் கடத்தும் பணியை மட்டுமே செய்து வந்ததாக விமர்சனமும் எழுந்தது.  


அதனைத்தொடர்ந்து வந்த அதிமுக அரசும் சசிகலாவின் ஆசியால் முதல்வரான முன்னாள் முதல்வர் பழனிச்சாமியும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.  அது போதாது என பென்சன் கேட்கிறார்கள் என நாகரிகமற்ற வார்த்தைகளால் காயப்படுத்தியதோடு நடவடிக்கை எடுத்து தேர்தல் யுக்தியாக பொய்ப் பிரச்சாரமாகவும் அதனைப் பயன்படுத்தியது.  


  அப்போதைய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் அரசூழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.  முக்கியமாக பழைய ஓய்வூதியத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தது. 


   கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றது.  அதில் அரசூழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக பேசப்பட்டது. 


    தற்போது  CPS ரத்து குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில்  . தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் தலைமைச்செயலக உயர்மட்ட அதிகாரிகள் தரப்பின்  தகவல் படி  தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் பணிகள் அதிகாரப்பூர்வமாக நடைபெறுவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி உள்ளது. 


      தற்போது நடைமுறையில் உள்ள  பழைய ஓய்வூதிய திட்டத்தில்  பணி ஓய்வுக்குப்பின் இறுதி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது .


வரும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர்...

 


தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், கடந்த ஆண்டு முதல் கல்வி டிவி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயில அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


இதேபோன்று, தனியார் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வருகை புரிந்து, மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஏனெனில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.


இந்த சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால், 70 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். 35% கட்டணத்தை பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் வசூல் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...Proceedings of the Commissioner of School Education Rc.No.32673/ G2/ 2021, Dated: 05-07-2021...



தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தியில்,


கரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மீண்டும் மூடப்பட்டது. மேலும், 2021-22 கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் தொடர்பாக புகார்கள் வந்து கொண்டுள்ளன.


பெருந்தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். முதற்கட்டமாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீதமும், பள்ளிகள் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தையும் வசூலித்துக் கொள்ளலாம்.


மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை பெருந்தொற்றை கருத்தில் கொண்டு வசூலிப்பது குறித்து பின்பு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.


>>> Click here to Download Proceedings of the Commissioner of School Education Rc.No.32673/ G2/ 2021, Dated: 05-07-2021...


நூதனமாய் ஏமாற்றிய மாணவன் - செய்வதறியாது தவிக்கும் கல்வித்துறை அதிகாரிகள்...

 


சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன், மதிப்பெண் சான்றிதழை திருத்தி வழங்கி அரசுப்பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 வரை முடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண் 50 சதவீதம், பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண் 20 சதவீதம், பிளஸ் 2 அகமதிப்பீட்டு மதிப்பெண் 30 சதவீதம் என கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களின் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களும் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.


இதனிடையே, சேலம் மாவட்டம் எடப்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில், 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவன், மதிப்பெண் சான்றிதழை திருத்தி, பிளஸ் 1 சேர்க்கை பெற்றுள்ளார். தற்போது அந்த மாணவன் பிளஸ் 2 முடித்துள்ள நிலையில், சான்றிதழ் பதிவேற்றத்தின் போது இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.  இத்தகவல் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம், இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என தெரியாமல் கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, எடப்பாடி  பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், கடந்த 2018-19ம் கல்வியாண்டில் அங்குள்ள ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினான். இதில் ஆங்கிலம் உள்பட 2 பாடத்தில் தோல்வியடைந்தான். தொடர்ந்து, சிறப்பு தேர்வெழுதிய மாணவன், மீண்டும் ஆங்கிலத்தில் 31 மதிப்பெண் பெற்று தோல்வியடைந்தான். பின்னர், ஆன்லைன் மூலம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்த மாணவன், அதில் 31 என்ற மதிப்பெண்ணை 35 ஆக மாற்றியுள்ளான். அத்துடன் பெயில் என இருந்த F-ஐ, பாஸானது போல P என மாற்றியுள்ளான்.


அதேசமயம், சான்றிதழில் மதிப்பெண் எழுத்தால் எழுதப்பட்டிருந்ததை மாற்றவில்லை. தொடர்ந்து மாணவன் அதே பள்ளிக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த ஆசிரியர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை சரிவர கவனிக்காமல், மாணவனுக்கு கலைப்பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை வழங்கினர். சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால், அசல் மதிப்பெண் சான்றிதழ் வர தாமதமாகும் என மாணவன் தெரிவித்துள்ளான். இதனால், ஆசிரியர்களும் அப்போது அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன் பின்னர், வகுப்பு ஆசிரியர் பலமுறை கேட்டும், அந்த மாணவன் மட்டும் அசல் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை.

 

இந்நிலையில் தற்போது, பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிட, மாணவர்களின் 10ம் வகுப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட மாணவனின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சரிபார்த்த போது, அதில் எண்ணால் உள்ள மதிப்பெண்ணுக்கும், எழுத்தால் உள்ள மதிப்பெண்ணுக்கும் வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவனிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெறாத நிலையில், மதிப்பெண் சான்றிதழை திருத்தி பிளஸ் 1 சேர்க்கை பெற்றது உறுதி செய்யப்பட்டது. மேலும், மாணவனின் உறவினர் ஒருவர், மதிப்பெண் சான்றிதழை திருத்தி வழங்கியதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சம்பந்தப்பட்ட மாணவன் அரசியல் பிரமுகரின் நெருங்கிய உறவினர் என்பதால், மேலும் சிக்கல் எழுந்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் சேலம் மாவட்ட கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கல்வித் தொலைக்காட்சி வழிக் கற்றல்; சந்தேகங்களை செல்போன் மூலம் தீர்க்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்...



 கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்கள் கற்றலை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, செல்போன்  வாயிலாக ஆசிரியர்கள் போக்க வேண்டும் என்று புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர்  த.விஜயலட்சுமி தெரிவித்தார்.


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், பூலாம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியிலும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  த.விஜயலட்சுமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, புதிய மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் வருகை, புதியதாகச் சேர்க்கப்பட்ட மாணவர்களை உடனுக்குடன் கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் (EMIS) பதிவேற்றம் செய்தல், மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கல் உள்ளிட்ட விவரங்களை, பதிவேடுகளை வாங்கிப் பார்த்து ஆய்வு செய்தார்.

 

மேலும் பள்ளி வளாகத் தூய்மை, கழிவறைத் தூய்மை ஆகியவற்றையும் பார்வையிட்டு அவர் கூறும்போது, ''பள்ளி முழுவதையும் சுகாதாரமான முறையில் ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். குறிப்பாகக் கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்கள் கற்றலை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் தூண்டுகோலாக இருக்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக மாணவர்கள் கற்றலை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, செல்போன்  வாயிலாக ஆசிரியர்கள் போக்க வேண்டும்'' என்று முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தெரிவித்தார்.


ஆய்வின்போது பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.


கரோனா பரவலால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் சென்று மாணவர் சேர்க்கை, வளாகப் பராமரிப்பு போன்ற பணிகளை கவனிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் முறையாக நடைபெறுகின்றனவா என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  அவ்வப்போது திடீர் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய (07-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்....



மேஷம்

ஜூலை 07, 2021



மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



அஸ்வினி : மேன்மையான நாள்.


பரணி : அறிமுகம் ஏற்படும்.


கிருத்திகை : இலக்குகள் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 07, 2021



செயல்பாடுகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தாய் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். முயற்சிக்கேற்ப மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்கள் கூறும் கருத்துக்களில் உண்மையை அறிந்து முடிவெடுப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : எண்ணங்கள் அதிகரிக்கும்.


ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.


மிருகசீரிஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 07, 2021



வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சிலருக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து செயல்களில் ஈடுபடுவது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


திருவாதிரை : இடமாற்றம் உண்டாகும்.


புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 07, 2021



மனதில் இருக்கும் கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 07, 2021



நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனைவி வழி உறவினர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மகம் : தெளிவு பிறக்கும்.


பூரம் : தாமதங்கள் குறையும்.


உத்திரம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 07, 2021



மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு தொடர்பான பணிகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறைந்து சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


சித்திரை : சேமிப்புகள் மேம்படும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 07, 2021



அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களிடம் கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது. அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தையிடம் தேவையற்ற கருத்து பரிமாற்றங்களை குறைத்துக்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



சித்திரை : கவனம் வேண்டும்.


சுவாதி : குழப்பங்கள் ஏற்படும்.


விசாகம் : மந்தமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 07, 2021



நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விவாதங்களின் மூலம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தான, தர்ம காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : பிரச்சனைகள் குறையும்.


அனுஷம் : அனுகூலமான நாள்.


கேட்டை : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 07, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பழக்கவழக்கங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற வித்தியாசமான புதுவிதமான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். உடல் உழைப்பிற்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : தாமதங்கள் குறையும்.


பூராடம் : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 07, 2021



செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.


திருவோணம் : ஆர்வம் ஏற்படும்.


அவிட்டம் : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 07, 2021



மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். கால்நடைகள் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்கவும். உறவினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.


சதயம் : கவனம் வேண்டும்.


பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 07, 2021



திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு மற்றும் குறு வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.


ரேவதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள...