கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய இணை அமைச்சர் அறிவிப்பு...



 நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக இணை அமைச்சர் அறிவித்துள்ளார்.


கால அவகாசம் நீட்டிப்பு: 

நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்திற்காக அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டையுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பலனடையும் ஒருவர் இரு மாநிலங்களில் ரேஷன் அட்டையைப் பெற முடியாது. 


அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களை பெறலாம். தங்களுக்கான ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரேஷன் கார்டுகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 சதவீதம் பேர் மட்டுமே இணைத்துள்ளனர்.


இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அறிவித்துள்ளார். மேலும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2020ல் தமிழகத்திற்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகத்திற்கு ரூ.3,993.80 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. 2021ம் நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.


"விரைவில் ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு" : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்...

 


திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட வகுப்பறையைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார். அப்போது சிலம்பம் சுற்றிக் காண்பித்த மாணவிகளை அமைச்சர் பாராட்டினார்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் காரணமாக எங்கு செல்கிறோமோ அங்குள்ள பள்ளிகளை ஆய்வு செய்கிறோம்.


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறது. ஆசிரியர் பணிகளில் பணி நிரவல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.


கொரோனா காரணமாக மே மாதம் நடைபெறும் பணி மாறுதல் கலந்தாய்வை இந்தாண்டு நடத்த முடியவில்லை. கொரோனா குறைந்து வரும் நிலையில் ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரவழைத்து இருக்கிறோம்.



முதலமைச்சரின் ஆலோசனை பெற்று விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் பிறகு எந்தெந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதோ அது சரி செய்யப்படும். கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


உயர்தர ஆய்வகங்கள் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருக்கிறது. உயர்நிலைப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி ஆய்வகங்கள் கொரோனா காரணமாகப் பள்ளிகள் செயல்படாததால் பயன்பாடு இல்லாமல் மூடப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் கணினிகள் இயங்குகிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து அதுகுறித்து அறிக்கை வந்த பின்பு இயங்காத கணினிகள் மாற்றப்படும்.


கூடுதல் மதிப்பெண் தேவைப்படும் மாணவர்கள் அக்டோபரில் தேர்வெழுதலாம். கொரோனா கட்டுக்குள் வந்தால் மட்டுமே அப்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு அந்த தேர்வும் நடத்தப்படும். அவ்வாறு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முதலமைச்சரிடம் ஆலோசனை பெற்றுச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா சூழலை ஆராய்ந்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பின்பே தனித்தேர்வர்களுக்குத் தேர்வு நடத்த முடிவெடுக்கப்படும்.


பள்ளி இடைநிற்றல் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். அந்த கணக்கெடுப்பு எடுத்த பின்பு ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பள்ளி இடைநிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.



>>> முழுமையான செய்தி - PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு மாற்றாக மருதம் ஒருங்குறி எழுத்துருக்களை (Tamil Unicode Marutham Font) பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 026753/அ2/இ1/2021, நாள்: 15-07-2021...

 


பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்களில் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு மாற்றாக மருதம் ஒருங்குறி எழுத்துருக்களை (Tamil Unicode Marutham Font) பயன்படுத்த வேண்டும்.


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 026753/அ2/இ1/2021, நாள்: 15-07-2021...



இன்றைய (20-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 20, 2021



உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். தூரத்து உறவினர்களின் வழியில் எதிர்பாராத செய்திகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்யும் செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது நல்லது.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : ஏற்ற, இறக்கமான நாள்.


கிருத்திகை : புரிதல் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 20, 2021



இழுபறியாக இருந்துவந்த வியாபாரம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீது ஆசைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.


ரோகிணி : முன்னேற்றமான நாள்.


மிருகசீரிஷம் : ஆசைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 20, 2021



தந்தைவழி உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும்.


புனர்பூசம் : மாற்றமான நாள்.

---------------------------------------




கடகம்

ஜூலை 20, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். இஷ்ட தெய்வங்களின் வழிபாடுகள் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். இசைக்கருவிகள் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



புனர்பூசம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


பூசம் : நம்பிக்கை மேம்படும்.


ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 20, 2021



மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களுக்கிடையே நற்பெயர் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மகம் : ஆர்வம் உண்டாகும்.


பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரம் : நற்பெயர் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

ஜூலை 20, 2021



மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். கடன் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். சிறு தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


சித்திரை : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 20, 2021



வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். கண்பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் தனவரவுகள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் நிபுணத்துவத்தை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவகையான சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



சித்திரை : இழுபறிகள் அகலும்.


சுவாதி : தனவரவுகள் மேம்படும்.


விசாகம் : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 20, 2021



மனதில் புதிய முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனைகள் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். தகவல் தொடர்புத்துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 20, 2021



புதிய பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை வெற்றி கொள்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். தர்க்க விவாதங்களில் சாதுர்யமான கருத்துக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மூலம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூராடம் : புதுமையான நாள்.


உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 20, 2021



வசதி வாய்ப்புகள் மேம்படும். மின்சாரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். நண்பர்களின் வருகைகள் மற்றும் அறிமுகங்களின் மூலம் புதிய வாய்ப்புகளும், தனவரவுகளும் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கலை நுணுக்கமான விஷயங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் : லாபம் உண்டாகும்.


திருவோணம் : தனவரவுகள் ஏற்படும்.


அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 20, 2021



உங்களை பற்றிய பலம், பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மறைவாக இருந்துவந்த சில பொருட்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிக்கும் வழிமுறைகளை கண்டறிவீர்கள். அபிவிருத்திக்கான சிந்தனைகள் மனதில் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அவிட்டம் : புரிதல் ஏற்படும்.


சதயம் : ஆதாயம் உண்டாகும்.


பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 20, 2021



அறக்காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய கலை சார்ந்த முயற்சிகள் மேம்படும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புராணங்களின் மீதான ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் உண்டாகும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : பயணங்கள் சாதகமாகும்.

---------------------------------------


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ் ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் குறித்த அரசாணை (G.O.Ms.No.:104, Dated: 09-07-2021) வெளியீடு...மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1674/இ1/2021, நாள்: 12-07-2021 மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 71/இ1/2021, நாள்: 15-07-2021...



◆இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE Act) கீழ் ஒரு மாணவருக்கு உண்டாகும் செலவினம் குறித்த அரசாணை (G.O.Ms.No.:104, Dated: 09-07-2021) வெளியீடு...

 ◆மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1674/இ1/2021, நாள்: 12-07-2021 மற்றும் 

 ◆மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 71/இ1/2021, நாள்: 15-07-2021...




>>> Click here to Download G.O.Ms.No.:104, Dated: 09-07-2021 & Matriculation Director Proceedings...


ஆசிரியர்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 2927/2021(ஆ2), நாள்: 19.07.2021...



 >>> ஆசிரியர்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 2927/2021(ஆ2), நாள்: 19.07.2021...


பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டி (செய்திக் குறிப்பு எண்: 032, நாள்: 19-07-2021)...



 >>> பள்ளிகள் திறப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டி (செய்திக் குறிப்பு எண்: 032, நாள்: 19-07-2021)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...