கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்தியாவிலேயே முதன் முறையாக அசாம் பெண் டாக்டருக்கு ‘இருவகை’ கொரோனா தொற்று : ICMR மூத்த விஞ்ஞானி தகவல்...



 இந்தியாவிலேயே முதன் முறையாக அசாம் பெண் டாக்டருக்கு ‘இருவகை’ கொரோனா தொற்று : ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானி தகவல்...

அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் உருமாறிய வைரசான டெல்டா, ஆல்பா உள்ளிட்ட வகையான வைரசுகள் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவருக்கு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் பாதித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக இதுபோன்ற பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ஆர்.எம்.ஆர்.சி) மூத்த விஞ்ஞானி டாக்டர் பி.போர்ககோட்டி கூறுகையில், ‘கொரோனா தொற்று எதிர்ப்பு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக் கொண்ட போதிலும், உருமாறிய வைரஸ்களான டெல்டா, ஆல்பா போன்ற தொற்றுகளால் மருத்துவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

கடந்த மே மாதத்தில், ஆர்.எம்.ஆர்.சி.யின் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பெண் மருத்துவ நோயாளிக்கு இரட்டை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பிரிட்டன், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் சிலருக்கு இரட்டை நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது போன்று, இந்தியாவிலும் இந்த இரட்டை நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. இதற்கு முன்னர் இந்தியாவில் இதுபோன்ற பாதிப்பு எவருக்கும் ஏற்படவில்லை. 

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளார். தற்போது இவர் உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் (மருத்துவர்) கொரோனா வைரஸின் ஆல்பா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள், கோவிட் பராமரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தனர். தற்போது அந்த பெண் மருத்துவருக்கு லேசான தொண்டை வலி, உடல் வலி ஆரம்பத்தில் இருந்தது. இருந்தாலும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை’ என்றார்.


UDISE - ஆய்வறிக்கை 2019-2020 குறித்த விவரங்கள்...

 UDISE - ஆய்வறிக்கை 2019-2020 குறித்த விவரங்கள்...





















NCERT - ஆசிரியர்களுக்கு இணைய வழியில் போட்டிகள் அறிவிப்பு: ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் உண்டு...



 இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், மத்தியக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் என்சிஇஆர்டி மற்றும் விபா நிறுவனம் இணைந்து ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவதற்காகத் தேசிய அளவிலான அறிவியல் திறனறித் தேர்வான வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் தேர்வை நடத்தி வருகிறது.


அதன் தொடர்ச்சியாக கரோனா பேரிடர்க் காலகட்டத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கான இணைய வழிக் கருத்தரங்கும், வீடியோ மற்றும் கதை, கவிதை, கட்டுரை, கருத்து வரைபடம் எழுதும் போட்டியையும் அறிவித்துள்ளது.


கருத்தரங்கு மற்றும் போட்டிகளின் நோக்கம்:

பள்ளி ஆசிரியர்களிடையே உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ”ஆகார்கிராந்தி” என்ற தலைப்பில் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


யாரெல்லாம் பங்கேற்கலாம்?

1-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் இந்த கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்கலாம்.


இணையவழிக் கருத்தரங்கு:

இணையவழிக் கருத்தரங்கு ஜூலை 26 முதல் ஆகஸ்டு 23 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும். மொத்தம் ஐந்து கருத்தரங்குகள் நடைபெறும். கருத்தரங்குகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம், வளர் இளம் பெண்களுக்கான சரிவிகித உணவு, பள்ளி மாணாக்கர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் உணவுப் பழக்கவழக்க முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு ஆகிய தலைப்புகளில் இக்கருத்தரங்கம் நடைபெற உள்ளது.


வீடியோ தயாரித்தல் மற்றும் திறனறிப் போட்டிகள்:

இந்தப் போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


போட்டிகளுக்கான தலைப்பு:

Ø நமது உள்ளூர் பழங்கள், காய்கறிகள், சரிவிகித உணவு, இயற்கையான ஊட்டச்சத்துள்ள பொருட்கள், பாரம்பரிய உணவுகள், பாதுகாக்கப்பட்ட உணவு முறைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று முதல் ஐந்து நிமிட வீடியோக்களாக எடுத்து அனுப்பலாம்.


Ø வீடியோவாக அனுப்ப இயலாதவர்கள் கதை, கவிதை, கட்டுரை கருத்து வரைபடம், ஓவியம், ஆகிய ஏதாவது ஒரு முறையில் தங்களின் படைப்புகளை மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் அனுப்பலாம் .


Ø வீடியோக்கள் மற்றும் கதை, கவிதை, கட்டுரை ஆகியவற்றைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எடுத்து அல்லது எழுதி அனுப்பலாம்.


Ø இவை அனைத்தும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மையைத் தூண்டுவதாக அமைய வேண்டும்.


பரிசுகள் மற்றும் முக்கியத் தேதிகள்:

Ø தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆறுதல் பரிசாக 10 ஆசிரியர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசுகளாக வழங்கப்படும்.


Ø இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் இணைய வழிச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


Ø மேலும் தமிழக அளவில் முதல் மூன்று படைப்புகளுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.


Ø கருத்தரங்கு மற்றும் போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்யக் கடைசித் தேதி: 24-07-2021.


Ø கீழ்க்காணும் இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம்


Ø http://shikshashilpi.vvm.org.in/aahaarkranti/


Ø வீடியோ மற்றும் படைப்புகளை அனுப்பக் கடைசித் தேதி - 30.09.2021


Ø போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி - 22.12.2021


மேலும் தகவல்களுக்கு: 8778201926


ATM Card, Credit Card கட்டணம் உயர்வு...

 ஏடிஎம் அட்டை, கடன் அட்டை கட்டணம் உயர்வு...



உங்களது வருமான வரி(Income Tax) விவரங்களை e- filing செய்யும் பொழுது CM Public Relief Fundக்கு நீங்கள் வழங்கிய ஒருநாள் ஊதியத்தை 80G-பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையாகப் பெற இந்த விவரங்கள் தேவைப்படும்...



>>> உங்களது வருமான வரி(Income Tax) விவரங்களை e- filing செய்யும் பொழுது CM Public Relief Fundக்கு நீங்கள் வழங்கிய ஒருநாள் ஊதியத்தை 80G-பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகையாகப் பெற இந்த விவரங்கள் தேவைப்படும்...


இன்றைய (22-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 22, 2021



கணிப்பொறி சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தனம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சேவை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : மாற்றங்கள் உண்டாகும்.


பரணி : திறமைகள் வெளிப்படும்.


கிருத்திகை : நன்மையான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 22, 2021



உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. நண்பர்களிடம் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். செய்கின்ற காரியங்களின் தன்மைகளை அறிந்து செய்வது நம்பிக்கையையும், செல்வாக்கையும் மேம்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



கிருத்திகை : நிதானம் வேண்டும்.


ரோகிணி : சிந்தனைகள் உண்டாகும்.


மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 22, 2021



நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் உடனிருப்பவர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.


திருவாதிரை : தெளிவு ஏற்படும்.


புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 22, 2021



தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



புனர்பூசம் : மரியாதைகள் அதிகரிக்கும்.


பூசம் : சிக்கல்கள் குறையும்.


ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 22, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கன்னி

ஜூலை 22, 2021



விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த செயல்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவுகளும், சேமிப்புகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


அஸ்தம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




துலாம்

ஜூலை 22, 2021



கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் பொறுமை வேண்டும். செய்யும் முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். காதுகள் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : பொறுமை வேண்டும்.


சுவாதி : உபாதைகள் நீங்கும்.


விசாகம் : தாமதங்கள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 22, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



விசாகம் : கலகலப்பான நாள்.


அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.


கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




தனுசு

ஜூலை 22, 2021



மனதிற்கு விரும்பிய செயல்களை செய்து முடிப்பீர்கள். கால் பாதங்கள் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் வைராக்கியமான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்கள் கூறும் பேச்சுக்களை நம்பி முடிவுகளை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : விருப்பங்கள் நிறைவேறும்.


பூராடம் : இன்னல்கள் குறையும்.


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 22, 2021



கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு வருவாய்கள் மேம்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : மாற்றமான நாள்.


திருவோணம் : புரிதல் ஏற்படும்.


அவிட்டம் : வருவாய்கள் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 22, 2021



எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனைவி வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.


சதயம் : கவலைகள் குறையும்.


பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூலை 22, 2021



தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி விடுதலை பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திரட்டாதி : திருப்தியான நாள்.


ரேவதி : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------


Pupil Teacher Ratio Fixation - G.O.Ms.No.231, Dated: 11-08-2010 - மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் - அரசாணை எண். 231, பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2010...


Pupil Teacher Ratio Fixation - G.O.Ms.No.231, Dated: 11-08-2010...

 மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் - அரசாணை எண். 231, பள்ளிக்கல்வி(சி2)த்துறை நாள். 11.08.2010...


>>> Click here to Download G.O.Ms.No.231, Dated: 11-08-2010...


>>> Click here to Download Pupil Teacher Ratio Fixation as per G.O.Ms.No.231, Dated: 11-08-2010...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...