கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு அலுவலகங்கள் முழுவதும் தொடர்பு கொள்ள தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் - தொழில்துறை, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு...

 


தமிழகத்தில் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முழுவதும் தொடர்பு கொள்ள தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


சென்னையில் தமிழ் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,


தமிழகத்தில் அரசு கோப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அரசாங்க கோப்புகளை மொழிபெயர்ப்பதை உறுதி செய்ய தலைமை செயலாளர் அறிவுறுத்தியதை தொடர்ந்து, இந்த செயல்முறைக்காக புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் இந்த செயல்முறையில் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க  நோடல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் - சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ் (CIET) இன் கீழ், முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை வழங்குவதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து இரு முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த அமைப்பை தொடர தவறிவிட்டது. ஆனால் தற்போது, திமுக அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், தமிழ் அறிஞர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்குவதை மீண்டும் தொடங்கவுள்ளது.


இதில் விருது பெற தகுதியுள்ள அறிஞர்களின் பெயர்களை பரிந்துரைக்க ஒரு குழு அமைப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும், தமிழ் அறிஞர்களுக்கு தாமதமின்றி உதவி வழங்குவது மற்றும் தமிழ் அறிஞர்களின் சிலைகளை முறையாக பராமரிப்பது போன்றவை குறித்து முதல்வருடன் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.


மேலும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் (CICT), ஒரு தன்னாட்சி நிறுவனமாக தொடர்ந்து இயங்கும். என்றும் 'தரமணியில் CICTயின் தற்போதைய இடம் சரியான நிலையில் இல்லை என்பதால், பெரும்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், கட்டுமானப் பணிகள் முடிந்ததும், நிறுவனம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் கூறியுள்ளார்.


கற்போம் எழுதுவோம் இயக்கம் - மதிப்பீட்டு முகாம் குறித்த கேள்வி பதில்கள்...

 


கற்போம் எழுதுவோம் இயக்கம்,  விருதுநகர் மாவட்டம் - மதிப்பீட்டு முகாம் குறித்த கேள்வி பதில்கள்...


1.   *மதிப்பீட்டு முகாம்* என்றால் என்ன?


 கற்போர் களின் குறைந்தபட்ச கற்றல் அளவை கற்போரின் கற்ற நிலைக்கு ஏற்றவாறு மதிப்பிடும் நிகழ்வாகும். இது அடைவுத்தேர்வு அல்ல.


2.  மதிப்பீட்டு முகாம் *எப்பொழுது* நடத்தப்பட வேண்டும்?


 29. 7 2021 முதல் 31. 7 2021 வரை.


3.  மதிப்பீட்டு முகாம் *மையத்தில் மட்டும்தான்* நடத்தப்பட வேண்டுமா?


 இல்லை. கற்போருக்கு ஏதுவாக  மையம் இல்லத்தில், அவர்கள் பணியாற்றும் இடங்களில், குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்படலாம். 


4.  மதிப்பீட்டு முகாமை *அடைவுத்தேர்வு எனக்* கூறலாமா?


 கூறுதல் கூடாது.


5.  மதிப்பீட்டு முகாமை நடத்துவதற்கு  *முன்னாயத்த*  பணிகளாக எவற்றை மேற்கொள்ள வேண்டும்?


 மையத்தில் பயிலும் கற்போரை மதிப்பீட்டு முகாம் நடக்கும் நாட்களில் எந்த நாட்களில் அவர்களை மதிப்பீடு செய்வது,  எந்த இடத்தில் மதிப்பீடு செய்வது என கற்போர்  வசதிக்கு ஏற்றவாறு  மையத் தலைமை ஆசிரியரால்  மதிப்பீட்டு முகாம் நடப்பதற்கு முன்னரே  பட்டியல் தயார்  செய்ய வேண்டும். 


 6.பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள *வினா-விடை* கையேட்டை  மதிப்பீட்டு படிவமாக பயன்படுத்தலாமா?


 மதிப்பீட்டுப் படிவம் ஆக பயன்படுத்தலாம்.


7. ஒன்றிய அளவில் *கூட்டங்கள் நடத்தப்பட* வேண்டுமா?


கொரோனா தொற்று பரவல் சார்ந்த  உரிய  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி  மைய  தலைமை ஆசிரியர்கள் மற்றும்  தன் ஆர்வலர்களுக்கு நடத்தப்படலாம்.


8. கற்போரை  மதிப்பீடு  செய்யும் பொழுதே *திறன்கள் வாரியாக* மதிப்பெண் வழங்கப்பட வேண்டுமா?


ஆம்


9. கற்போருக்கு மதிப்பீட்டு முகாம் நடைபெறுவதை *தெரிவிக்கலாமா* ?


 முன்னரே தெரிவிக்க வேண்டும்.


 10.கற்போருக்கு  *திருப்புதல்* செயல்பாடுகள் மேற்கொள்ளலாமா?


 மேற்கொள்ளலாம் அவரவர் வீட்டு அளவில்


.11.  மையத்தில் சேராமல் இம் மதிப்பீட்டு முகாமில் *நேரடியாக பங்கேற்க*  கற்போர் விரும்பினால் அனுமதிக்கலாமா?


 அனுமதிக்கலாம்.


12.  மையத்திலுள்ள *கற்போர்* *எண்ணிக்கைக்கு* ஏற்றவாறு மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட வேண்டுமா?


 ஆம்


13.  மதிப்பீட்டு படிவங்களை மைய தலைமையாசிரியர்கள் *எப்பொழுது* பெற்றுக் கொள்வது?


 26. 7. 2021 முதல் 27. 7. 2021 க்குள்  வட்டார கல்வி அலுவலரின் மேற்பார்வையில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் இடம் பெற்றுக்கொள்ளலாம்.



14.  கற்போரின் எவ்வகையான *திறன்களை* மதிப்பீடு செய்ய  வேண்டும்?


 எழுதுதல், வாசித்தல் ,  எண்கள் அறிதல் திறன்.


 15.கற்போரை மதிப்பீடு செய்வது யார்?


 *தன்னார்வலர்* .


 16.மதிப்பீட்டு முகாம்  சிறப்பாக நடத்துவதற்கு  யார் யாரெல்லாம் *ஒருங்கிணைந்து*  செயல்பட வேண்டும்?


 வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர், மைய ஆசிரியர் பயிற்றுனர், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் தன்னார்வலர்


 17.கற்போரின் *ஒட்டுமொத்த சராசரி* மதிப்பெண் பட்டியல் எப்பொழுது தயார் செய்ய வேண்டும்?


 2.8. 2021 க்குள்  தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்


18.  கற்போர் மதிப்பெண் TN *EMIS*  Web portal   இல் விவரங்களை பதிவு செய்ய வேண்டுமா?


 ஆம். ஆசிரிய  பயிற்றுநர்கள் வட்டார அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


19.  மதிப்பீட்டு முகாம் நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும்  பூர்த்தி செய்யப்பட்ட மதிப்பீட்டு படிவங்களை மைய தலைமையாசிரியரிடம் தன்னார்வலர் ஒப்படைக்க வேண்டுமா?


 ஆம்


20. ஒட்டுமொத்த சராசரி மதிப்பீடு *33* சதவீதத்திற்கும் குறைவாக பெற்ற கற்போருக்கு ஏதாவது ஒரு திறனில் ஐந்து மதிப்பெண் *கருணை*  மதிப்பெண்ணாக வழங்கலாமா?


 வழங்கலாம்.



21. மதிப்பீட்டு முகாம் நடத்துவதற்கு ஏதுவாக வட்டார அளவில் செயல் திட்டம் தயாரிக்கப் பட வேண்டுமா? 


ஆம். வட்டார அளவில் செயல் திட்டம் தயாரித்து அதன் அடிப்படையில் திட்டமிட்டு இயங்குதல் வேண்டும்.


22. கற்போர் பெற்ற மதிப்பெண்களை எத்தனை நாட்களுக்குள் ஆசிரியர் பயிற்றுனர்கள் TN EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்? 


03.08.21 முதல் 10.08.21 க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


23. இந்த மதிப்பீட்டு முறையில் ஒவ்வொரு திறனுக்கும் எத்தனை மதிப்பெண் வழங்கப்படும்?


ஒரு திறனுக்கு 50 மதிப்பெண் என்ற அளவில் மூன்று திறன்களை சோதித்து அறிய மொத்தம் 150 மதிப்பெண் வழங்கப்படும்.


24. கல்வி தன்னார்வலர்களை  தவிர்த்து விருப்பமுள்ள மற்ற தன்னார்வலர்களை  மதிப்பீடு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாமா? 


பயன்படுத்தி கொள்ளலாம். தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.


25. மதிப்பீட்டு முகாம் நடைபெறும் ஒவ்வொரு நாட்களிலும் கலந்து கொண்ட  கற்போர் களின் எண்ணிக்கையை  Emis  web portal இல் பதிவு செய்ய வேண்டுமா?


  ஒவ்வொரு நாளிலும் பதிவு செய்ய வேண்டும்


26.

26.7.21&27.7.21 ஆகிய நாட்களில் மைய தலைமையாசிரியர்கள் மதிப்பீட்டு படிவத்தை பெற்றுக்கொண்ட விவரத்தை TN EMIS web portal  இல் பதிவு செய்ய வேண்டுமா?


 ஆம்  பெறப்பட்ட மதிப்பீட்டு படிவங்கள் இன் எண்ணிக்கையை பதிவு செய்ய வேண்டும்

 

27. கருணை மதிப்பெண் வழங்கி   33% பெற்று   கற்போரை வெற்றிகரமாக முடித்தவர் என சான்றிதழ் வழங்கலாமா?


 சான்றிதழ் வழங்கலாம்


28. கருணை மதிப்பெண் வழங்கியும் 33% பெற இயலாத கற்போருக்கு சான்றிதழில் எவ்வகையான அளவீடு தேவைப்படும்?


 முன்னேற்றம் தேவை என்ற அளவீடு தேவைப்படும்


 மாவட்ட திட்ட அலுவலகம் 

விருதுநகர்.



பள்ளிக் கல்வி ஆணையரகத்தில் சீரமைப்புப் பணி - அலுவலர்கள் மற்றும் பிரிவுகள் செயல்படும் அறைகளை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலக ஆணை ந.க.எண்: 000701/அ2/இ3/2021, நாள்: 23-07-2021...



 பள்ளிக் கல்வி ஆணையரகத்தில் சீரமைப்புப் பணி - அலுவலர்கள் மற்றும் பிரிவுகள் செயல்படும் அறைகளை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


>>> பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலக ஆணை ந.க.எண்: 000701/அ2/இ3/2021, நாள்: 23-07-2021...


புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ரங்கசாமி உத்தரவு...

 புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு - அகவிலைப்படி17%ல் இருந்து 28%ஆக உயர்வு...



இன்றைய (23-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 23, 2021



பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பரணி : அறிமுகம் உண்டாகும்.


கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 23, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. தாய்வழி உறவினர்களிடம் மனவருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.


ரோகிணி : கவனம் தேவை.


மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 23, 2021



வாகனத்தை சீர் செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிர்வாக திறமைகள் வெளிப்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மிருகசீரிஷம் : நெருக்கம் உண்டாகும்.


திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 23, 2021



புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் தனவரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தடைபட்ட சில பொறுப்புகள் மற்றும் உரிமைகள் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூசம் : தனவரவுகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 23, 2021



குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


பூரம் : மனம் மகிழ்வீர்கள்.


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------




கன்னி

ஜூலை 23, 2021



உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தொழிலில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.


சித்திரை : செலவுகள் ஏற்படும்.

---------------------------------------




துலாம்

ஜூலை 23, 2021



எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறிய தடைகளுக்கு பின் முன்னேற்றம் உண்டாகும். புதிய முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.


சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.


விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 23, 2021



செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வேற்றுமதத்தவரின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வகையில் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



விசாகம் : துரிதம் உண்டாகும்.


அனுஷம் : லாபம் அதிகரிக்கும்.


கேட்டை : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 23, 2021



உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் மனவருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : மேன்மை உண்டாகும்.


பூராடம் : அனுபவம் கிடைக்கும்.


உத்திராடம் : போட்டிகள் குறையும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 23, 2021



பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.


திருவோணம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


அவிட்டம் : தைரியமான நாள்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 23, 2021



குடும்பத்தாரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சதயம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


பூரட்டாதி : லாபம் மேம்படும்.

---------------------------------------




மீனம்

ஜூலை 23, 2021



எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். பழைய சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ப பாராட்டு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : தனவரவுகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : சிக்கல்கள் குறையும்.


ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------


01.01.2006 க்கு முன்னர் & 01.01.2006 முதல் 31.05.2009- முடிய உள்ள காலங்களில் தேர்வு நிலை எய்தியவர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம்-2009ன் படி ரூ.4200/- தர ஊதியம் வழங்கி புதிய ஊதிய நிர்ணயம் செய்து வழங்கலாம் - நிதி தணிக்கை இயக்ககத்தின் கடிதம்...



 01.01.2006 க்கு முன்னர் & 01.01.2006 முதல் 31.05.2009- முடிய உள்ள காலங்களில் தேர்வு நிலை எய்தியவர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம்-2009ன் படி ரூ.4200/- தர ஊதியம் வழங்கி புதிய ஊதிய நிர்ணயம் செய்து வழங்கலாம் - நிதி தணிக்கை இயக்ககத்தின் கடிதம்...


>>> உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குனர் கடிதம்...


>>> ஓட்டுனர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி - தெளிவுரை...


பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு தமிழில் பாடபுத்தகங்கள் – பாடநூல் கழக தலைவர் தகவல்...

 


தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயா்கல்விக்கான பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் அச்சிடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவா் ஐ.லியோனி தெரிவித்துள்ளார்.


தமிழில் உயர்கல்வி பாடநூல்கள் :

தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாடநூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன. இதனால் தமிழ் வழியில் கல்வி பயின்று கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 12ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்து விட்டு கல்லூரியில் முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதால் அவர்களால் கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிவதில்லை, இதனால் கற்றலில் பாதிப்பு ஏற்படுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.


இதனால் பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உயர்கல்வி பாட திட்டங்களை தமிழில் மொழி பெயர்க்க தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது. ஆங்கில வழியில் மருத்துவம், பொறியியல் படிக்கும் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்கும் நோக்கில், தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் பாடங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


இதனால் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி விரைவில் தொடங்க இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவா் ஐ.லியோனி தெரிவித்து உள்ளார். இதன் மூலம் தமிழ் வழியில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி எளிதாக இருக்கும் என கழகத் தலைவர் தெரிவித்துள்ளார். வரும் கல்வியாண்டில் உயர் கல்விக்கான பாடபுத்தகங்கள் தமிழில் இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...