கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொலைதூரக் கல்வி மூலம் உயர் கல்வி பயில அனுமதி பெறுவது(Permission to Higher Education through Distance Education) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஓ.மு.எண்:19094/அ4/இ3/2020, நாள்:20-07-2021...



வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் தொலைதூரக் கல்வி மூலம் உயர் கல்வி பயில அனுமதி பெறுவது தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஓ.மு.எண்:19094/அ4/இ3/2020, நாள்:20-07-2021...


>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஓ.மு.எண்:19094/அ4/இ3/2020, நாள்:20-07-2021...


அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க உத்தரவு...

கரூர்‌ மாவட்டம்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2021-22 - EER பதிவேடு பராமரித்தல்‌ மற்றும்‌ பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்‌ (OSC) மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகள்‌ (Differently Abled Children) கண்டறிதல்‌ - கள ஆய்வு மேற்கொள்ளுதல்‌ - மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.170/பசெகு/ஒபக/2021-22, நாள்‌: 05.08.2021...



 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - கரூர்‌ மாவட்டம்‌

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

பிறப்பிப்பவர்‌ : திருமதி. கே.பி மகேஸ்வரி, 

எம்‌. ஏ., பி.எட்‌.,

ந.க.எண்‌.170/பசெகு/ஒபக/2021-22, நாள்‌: 05.08.2021


பொருள்‌ : கரூர்‌ மாவட்டம்‌ - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 2021-22 -  EER பதிவேடு பராமரித்தல்‌ மற்றும்‌ பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகள்‌ கண்டறிதல்‌ - கள ஆய்வு மேற்கொள்ளுதல்‌ - சார்பு.

பார்வை: மாநில திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை - 6, அவர்களின்‌ செயல்முறைகள்‌  ந.க.எண்‌:6834/ஆ 1/பசெகு/ஒபக/2021 நாள்‌: 29.07.21.


>>> மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌...


பார்வையில்‌ காணும்‌ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர்‌, அவர்களின்‌ கடிதத்தில்‌, ஆரம்பக்கல்வி பதிவேடு (EER) புதுப்பித்தல்‌ சார்ந்த தெளிவுரைகளும்‌, 6 முதல்‌ 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்‌(1ம்‌ வகுப்பு முதல்‌ 12ம்‌ வகுப்பு வரை) மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளைக்‌ கண்டறியும்‌ பணியினை 10.08.2021 முதல்‌ 31.08.2021 வரை மேற்கொள்வதற்கான தெளிவுரைகளும்‌ வழங்கப்பட்டுள்ளன.


பார்வைக்கடிதத்தின்படி,


1. EER பதிவேடுகள்‌ பராமரித்தல்‌:


EER பதிவேடுகள்‌ பள்ளிகளில்‌ புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ பயிற்றுநர்களும்‌ உறுதி செய்யவேண்டும்‌. சென்ற ஆண்டு வரை, இப்பதிவேடு 6 - 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ( 8 ம்‌ வகுப்பு வரை) தொடக்க மற்றும்‌ நடுநிலைப்பள்ளிகளில்‌ பராமரிக்கப்பட்டு வந்தது.


மத்திய கல்வி அமைச்சகத்தின்‌ அறிவுறுத்தலின்படி, 2021-22 ம்‌ ஆண்டு முதல்‌ 19 வயது வரையுள்ள மாணாக்கர்களுக்கும்‌ பராமரிக்க வேண்டும்‌.


குடியிருப்பு வாரியாக ஒவ்வொரு மாணாக்கரும்‌ ஒன்று முதல்‌ 12ம்‌ வகுப்பு வரை கற்பதை EER பதிவேட்டில்‌ பதிவு செய்யவேண்டும்‌. இதற்கான தரவுகளை குடியிருப்பு பகுதிகள்‌ மற்றும்‌ அருகாமையிலுள்ள உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து பெற்று ஆரம்பக்கல்வி பதிவேட்டில்‌ தொடக்க மற்றும்‌ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ பதிவு செய்து பராமரிக்க வேண்டும்‌.


உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌. ஆரம்பக்கல்வி பதிவேட்டில்‌ பதிவு மேற்கொள்ளுதல்‌ தொடர்பாக, தொடக்க மற்றும்‌ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ வேண்டும்‌.


ஆய்வு அலுவலரான வட்டாரக்கல்வி அலுவலர்‌ பள்ளியினை ஆய்வு செய்யும்போது, ஆரம்ப கல்வி பதிவேடு (EER) புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்படுவதை உறுதி செய்து அப்பதிவேட்டில்‌ மேலொப்பமிட வேண்டும்‌.


EER விவரங்களை, பள்ளி வாரியாக குறுவளமைய அளவில்‌ தொகுத்து, வட்டார வளமையத்தில் ‌தொகுப்பினை வைத்திருத்தல்‌ வேண்டும்‌. அத்தொகுப்பிலும்‌ வட்டாரக்கல்வி அலுவலரின்‌ கையொப்பம்‌ பெற்று பராமரிக்க வேண்டும்‌.


EER பதிவேடுகள்‌ மூலம்‌ கல்வியை தொடராத மாணாக்கர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும்‌ பள்ளியில்‌ சேர்த்து கல்விகற்பதை உறுதி செய்ய வேண்டும்‌.



2. பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகள்‌ கணக்கெடுப்பு:


10.08.21 முதல்‌ 31.08.2021 வரை 6 முதல்‌ 19 வயது வரை உள்ள அனைத்து பள்ளி செல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறியும்‌ கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. இப்பணியில்‌, அனைத்து ஒன்றியங்களிலும்‌ வீடு வீடாக சென்று மிகச்‌ சரியாக, எந்த ஒரு குழந்தையும்‌ விடுபடாமல்‌ கண்டறிதல்‌ வேண்டும்‌.


அதன்‌  முதற்கட்டமாக ஒன்று முதல்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்புவரை உள்ள மாணாக்கர்களில்‌ இதுநாள்வரை பாடப்புத்தகங்களை பெற பள்ளிக்கு வராத மாணாக்கர்களின்‌ பட்டியல்‌ சேகரிக்க வேண்டும்‌.  (ஜூன்‌ 2021 முதல்‌ ஆகஸ்டு 2021 வரை. அம்மாணவர்களை பள்ளி செல்லா குழந்தைகள்‌ கணக்கெடுப்பின்‌ போது கண்டறிந்து பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.


புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களின்‌/ குடும்பங்களின்‌ குழந்தைகளில்‌ பள்ளிகளில்‌ சேர்க்கப்படாமல்‌ உள்ள குழந்தைகளை மிகச்‌ சரியாக, எந்த ஒரு குழந்தையும்‌ விடுபடாமல்‌ கண்டறிதல்‌ வேண்டும்‌. அவர்களை பள்ளிகளில்‌ சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.


இக்கணக்கெடுப்பில்‌  அனைத்து தொடக்க / நடுநிலை! உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்களும்‌ ஈடுபடவேண்டும்‌.


சம்மந்தப்பட்ட  வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்‌(பொ) மற்றும்‌ ஆசிரியர்பயிற்றுநர்கள்‌ கணக்கெடுப்பு நடைபெறும்‌ பகுதி, நாள்‌ மற்றும்‌ நேரம்‌ குறித்த விபரங்களை (Tentative List) வட்டாரக்கல்வி அலுவலர்கள்‌, தலைமை ஆசிரியர்கள்‌, ஆசிரியர்கள்‌, அங்கன்வாடி பணியாளர்கள்‌, பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள்‌ ஆகியோருக்கு தெரிவித்து அவர்களுடன்‌ இணைந்து கணக்கெடுப்பு பணியினை சிறப்பாகவும்‌, எந்தவித புகாருக்கு இடமளிக்காவண்ணமும்‌ நடத்திட வேண்டும்‌.


அனைத்து  தொடக்க / நடுநிலை! உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌, வட்டாரக்கல்வி அலுவலர்கள்‌, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்‌(பொ) ஆகியோர்‌ மேற்குறிப்பிட்ட அனைத்து தெளிவுரைகளையும்‌ சிறப்பாக பின்பற்றி EER பதிவேடுகள்‌ பராமரித்தல்‌ பணியினையும்‌ மற்றும்‌ பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகள்‌ கணக்கெடுப்பு பணியினையும்‌ சிறப்பாக நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


குறிப்பு: COVID-19 தொடர்பாக அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.


கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்‌

ஒருங்கிணைந்த கல்வி,

கரூர்‌.

பெறுநர்‌: 

அனைத்து தொடக்க / நடுநிலை/ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ ஆசிரியர்கள்‌

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்‌

அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்‌(பொ)

நகல்‌:

மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌, கரூர்‌ மற்றும்‌ குளித்தலை.


>>> மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌...


இன்றைய (06-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்....



மேஷம்

ஆகஸ்ட் 06, 2021



புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டு தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அஸ்வினி : வெற்றி கிடைக்கும்.


பரணி : மாற்றமான நாள்.


கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 06, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



கிருத்திகை : மனவருத்தங்கள் நீங்கும்.


ரோகிணி : சாதகமான நாள்.


மிருகசீரிஷம் : மனம் மகிழ்வீர்கள்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 06, 2021



தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.


திருவாதிரை : அறிமுகம் ஏற்படும்.


புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 06, 2021



எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சுயதொழிலில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : தனவரவுகள் உண்டாகும்.


பூசம் : புதுவிதமான நாள்.


ஆயில்யம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 06, 2021



வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கை துணைவரின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : உதவிகள் சாதகமாகும்.


பூரம் : ஆதரவு கிடைக்கும்.


உத்திரம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 06, 2021



உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.


சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 06, 2021



புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



சித்திரை : தாமதங்கள் குறையும்.


சுவாதி : தன்னம்பிக்கை மேம்படும்.


விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 06, 2021



மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகள் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



விசாகம் : பொறுமை வேண்டும்.


அனுஷம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 06, 2021



நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : எண்ணங்களை அறிவீர்கள்.


உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 06, 2021



மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்



உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.


அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 06, 2021



எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.


பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 06, 2021



கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



பூரட்டாதி : லாபம் மேம்படும்.


உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரேவதி : ஆசைகள் உண்டாகும்.

---------------------------------------


பள்ளிக் கல்வி - ராதாகிருஷ்ணன் (மாநில நல்லாசிரியர்) விருது(Radhakrishnan Award) வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை(Proposals) அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - இணைப்பு: அரசாணை...


பள்ளிக் கல்வி – டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது – 2020–2021 ஆம் கல்வியாண்டு முதல் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்...


◆பள்ளிக் கல்வி (பொது –II ) த் துறை அரசாணை (1டி) எண். 122, நாள் : 03 .08.2021. 

◆டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - விண்ணப்பப் படிவம் மாதிரி...

◆ பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 29000/ஐ/இ1/2020, 04-08-2021...


தமிழகத்தில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.


விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து கல்வித்துறை உத்தரவு.


அரசுப்பள்ளி, தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் சிறப்பாசிரியர்களும் விருதுக்கு தகுதி உடையவர்கள்.


5 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக எவ்வித புகாருக்கும் இடம்தராமல் கல்விப்பணி ஆற்றிவருவோருக்கு விருது.


>>> பள்ளிக் கல்வி (பொது –II ) த் துறை அரசாணை (1டி) எண். 122, நாள் : 03.08.2021. மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - விண்ணப்பப் படிவம் மாதிரி...


>>> பள்ளிக் கல்வி - ராதாகிருஷ்ணன் (மாநில நல்லாசிரியர்) விருது வழங்கும் பொருட்டு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்கள் சார்பான கருத்துருக்களை அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 29000/ஐ/இ1/2020, 04-08-2021...



Tokyo Olympic - ஆடவர் Hockey போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது...

 டோக்கியோ ஒலிம்பிக் - ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது...



கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை(PG Posts) உறுதி செய்து முதன்மைக் கல்வி அலுவலர்(CEO) உத்தரவு...



>>> கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக வழங்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...